March 17, 2009

இளைய தளபதி விஜய் ஒழிக.. ஒரு கண்டனம் + புலம்பல்..


நேற்று முன்தினம் நம்ம இளைய தளபதி விஜய் எதோ ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பாய்ந்து வெடித்ததாக இல் ஒரு வீடியோ வெளியானதை அடுத்து எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு..

ஏதோ உலக மகா புரட்சி நடத்திய மாதிரியோ, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்த மாதிரியும்.. 

என் விஜய் இப்படி செய்தார்? இது பொய்யாக இருக்கும்.. கிராபிக்ஸ்யில் யாரோ செய்த ஏமாற்று வேலை இது.. விஜய்க்கு எதிரான அரசியல் (!) சதி இது.. தலயின் ரசிகர்கள் செய்த சதி இது அப்படி இப்படி என்று ஒரே சல சல.. 

எனக்கு மட்டும் எத்தனையோ தொலைபேசி அழைப்புக்களும்.. வெறுத்துப் போய் எனக்கு மாலை வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு கேட்ட வார்த்தைக்கு அண்மித்த நல்ல வார்த்தையால் ஏசிவிட்டு அடப் பாவிகளா,, முத்துக்குமார் தீக்குளிச்துக்கு கூட இவ்வளவு கவலைப்பட்டு,பர பறக்கவில்லையே என்றேன்..

 இதெல்லாம் ஒரு பக்கம் சீரியசான விஷயங்களாக இருக்க... இது உண்மையா இல்லையா இல்லை இது எந்தக் கூட்டத்தில் நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் நான் ஆராயப்போகவே இல்லை. எனக்கென்ன வேற வேலையே இல்லையா? 

அடுத்தது இது தனிப்பட்ட அலுவலக,அல்லது விஜயும் பிரபுதேவாவும் மட்டும் கலந்து கொண்ட கூட்டமும் இல்லை.. காரணம் பல ஊடக நிறுவனங்களின் மைக்குகள் தெரிகின்றன.. (வீடியோவை நானும் இணைத்தால் ஏராளமான இணையத் தளங்களுக்கும்,வலைத்தளங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காது என்பதால் இணைக்கவில்லை.. ஹீ ஹீ .. இது எப்டி இருக்கு)

எங்கேயாவது தேடிப் பார்த்துக்குங்க.. நீங்கள் இதுவரை அந்த சரித்திரப் பெருமை வாய்ந்த கிளிப்பிங்கைப் பார்க்கவில்லை என்றால்..   

எனினும் தனிப்பட்ட முறையில் விஜயின் இந்த செயல் எனக்கு ஒரு சின்ன பாதிப்பை தந்துள்ளது..

அதுக்காகத் தான் இந்தப் புலம்பல்,கண்டனம்,கவலை சேர்ந்த பதிவு.. 

இளைய தளபதி ஒழிக.. 

எங்கள் அலுவலகத்தில் எனக்கும் சக பதிவர் ஹிஷாமுக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி ஒன்று இருக்கிறது.. ஒவ்வொரு நாளும் பதிவுகள் இடும் வேளையில் யாருக்கு அதிக ஹிட்ஸ் வருகிறது என்பதே அந்தப் போட்டி.. 

ஆரம்பத்தில் ஒரு மஜா பதிவின் மூலமாக ஹிஷாம் வைத்த சாதனை ஹிட்ஸ் மட்டத்தை நான் கமல் பற்றிய எனது பதிவின் மூலமாக முறியடித்து இருந்தேன்.. நான் அனேகமாக ஒவ்வொரு நாளும் பதிவிடுவதால் எனக்கு சராசரியான ஹிட்ஸ் கிடைத்து வந்தது.. (வாடிக்கையான customers இருக்காங்கப்பா ;))

எனது சாதனையும் மூன்று மாதங்களாக முறியடிக்கப் படாமலேயே இருந்து வந்தது..

ஆனால் நம்ம ஹிஷாம் இருக்காரே.. இயக்குனர் ஷங்கர் மாதிரி.. எப்பவாவது பதிவு போடுவார். அது கலக்கல் ஹிட் ஆயிடும்.. இது போலத் தான் நேற்றும் நடந்திருக்கு..

இந்த பாழாய்ப்போன விஜய் விவகாரத்தை நம்ம பதிவுலக ராமசாமி வீடியோவோட பதிவைப் போட, குய்யோ,முறையோ என்று எல்லோரும் ஹிஷாமின் தளத்துக்கு ஓட,என்னோட சாதனை டம்,டமால்,டுமீல்.. 

நான் நமீதாவை தற்செயலாக (உண்மையிலேயே தற்செயலாத் தான்) பதிவுல நேற்று சம்பந்தப் படுத்தியும் முடியல.. விஜய் நமீதாவையே தூக்கி சாப்பிட்டாரு..

இனி மறுபடி விஜயின் படம் ஒன்று தோத்து,அதுக்கு ஒரு மீட்டிங் வச்சு,அதில விஜய் பொங்கி வெடிச்சா தான் நான் சாதனை முறியடிக்கலாம் போல.. (அதை நான் எடுத்து பதிவா போட வேற வேணுமே.. என்ன கொடும லோஷன் இது..)

வேட்டைக்காரன் எப்ப ரிலீசுப்பா? (கெட் அப்பெல்லாம் வேற மாத்துறாராம்.. அப்படின்னா ரொம்ப காலம் காக்க வேண்டிய தேவை இல்லை..)

வாருங்கள் என அன்பர்களே..எனது எதிர்கால வாக்காளர்களே (இப்போதைக்கு ஐடியா இல்லை.. நாளைக்கு என்ன நடக்கும் யார் கண்டார்.. ) வந்து திரளுங்கள் என வலைத்தளத்திலே.. ஹிஷாமின் ஆதிக்க சாதனையை முறியடிப்போம்..

ஹிஷாம் ஒழிக .. இளைய தளபதி ஒழிக .. 

கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேனோ..

its okமா.. இன்னுமொரு பர பர பதிவு போட்டுற மாட்டோம்??எவ்வளவு பண்ணிட்டோம்.. இதைப் பண்ண மாட்டமா? (இங்கேயும் அதே தளபதியா? வேற வழி)


30 comments:

SASee said...

ய்யப்பா பயந்தே போயிட்டேன்........

உண்மையிலே நேற்று தான் ஹிஷாம் அவர்களின் வலைக்கு நீங்க தந்த Link.ன் ஊடாகச் சென்று பின்னூட்டமும் போட்டேன்....

புல்லட் said...

அட உள்ளுக்க இப்பிடியெல்லாம் நடக்குதோ? கிக்கி...! :)

எது எப்பிடியோ நான் என்ட அடுத்த சுப்ப ஹிட் பதிவுக்கு ரெடி..

தலைப்பு ...

” பதிவுலக தோல்வியால் நிலைகுலைந்த லோசன்... ”

அதுக்கப்புறம் உங்கட இந்தப்பதிவுக்கு ஒரு லிங்கு...

பேந்தென்ன எண்ட பதிவு சுப்பஹிட் ஆகிடும் :)

பிறகு ஹிசாம்அழுது புலம்பி
லோசன் ஒழிக... புல்லட் ஒழிக எண்டு பதிவிடுவார்... :)

எப்பிடி வசதி? ;)

Mathu said...

LOL :)I'm here after a long time.
Neenga pulambi eluthinathum nallathan irukku! Good luck for breaking the record :) LOL.

Anonymous said...

ahhhh ungalukullya potiya gud gud,,, all best to your record break...

Anonymous said...

அ ஆ இ ஈ ஹிஷாம் இன் வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களின் ஹிட் இல் ஒரு நாளைக்கு இருபது நான் போடுவது.. எனவே இனி அந்த இருபதை கழித்துதான் போட்டியில் சேர்கவேண்டும் இன்று டக்வேர்த் சொல்கிறார்..

என்ன இருந்தாலும் ஹிஷாமுக்கு எதிராக உங்களை நிலை நாட்ட நமீதா தேவைபட்டிருக்கிறது.. இதுக்கு நமீதாவுக்கு பீஸ் கொடுக்க மாட்டீங்களா? இந்த கோலத்துல சுந்தர் சி ஏன் நமீதாவை எல்லா படங்களிலும் போடுறார் என்று தெரிஞ்சுகிட்டே ஒரு கேள்வி.. நமீதாவின் கிளு கிளுப்பு படம் வேற... எனவே நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்கள்.. நமீதாவிடம் சரணாகதி அடைந்து விட்டதாக வாக்கு மூலம் கொடுத்து விட்டீர்கள்.. தார்மீக ரீதியாக போட்டியில் இருந்து விலகுவது நலம்..

ப்ரியா பக்கங்கள் said...

விஜய் ஒழிப்பு சங்கத்தின் இலங்கை கிளைக்கு உங்களை நியமிக்கலாம் போல கிடக்கு ( நம்ம வீ..................... மாதிரி பிரசாரம் செய்யுற படியால் )

Raju said...

ஓவரா பொங்கீட்டீங்களோ...
ஓ..இதுதான் அநியாயத்தைக் கண்ட பொங்குறதா...?

ARV Loshan said...

SASee said...
ய்யப்பா பயந்தே போயிட்டேன்........//

என் பயந்தீங்க? நான் நடிக்கப் போறதா எதுவுமே சொல்லலியே..

//உண்மையிலே நேற்று தான் ஹிஷாம் அவர்களின் வலைக்கு நீங்க தந்த Link.ன் ஊடாகச் சென்று பின்னூட்டமும் போட்டேன்....//
ஆமாம்..அதனால் அவர் வெற்றியில் எனக்கும் பங்கு உண்டு என்று எனக்கு இன்று ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார்.. (கஞ்சப் பயலே.. ஐஸ் க்ரீம் மட்டும் தானா?)

ARV Loshan said...

புல்லட் பாண்டி said...
எது எப்பிடியோ நான் என்ட அடுத்த சுப்ப ஹிட் பதிவுக்கு ரெடி..

தலைப்பு ...

” பதிவுலக தோல்வியால் நிலைகுலைந்த லோசன்... ”

அதுக்கப்புறம் உங்கட இந்தப்பதிவுக்கு ஒரு லிங்கு...

பேந்தென்ன எண்ட பதிவு சுப்பஹிட் ஆகிடும் :)

பிறகு ஹிசாம்அழுது புலம்பி
லோசன் ஒழிக... புல்லட் ஒழிக எண்டு பதிவிடுவார்... :)

எப்பிடி வசதி? ;)//

அடப் பாவி எத்தனை பேர் என் ஸ்டைலிலேயே கிளம்புவீங்க..
பார்ட்னர், கொஞ்சம் பார்த்து கீத்து ஏதாவது செய்வமே.. ஏன்டா ஹிட்ஸ் கூடுற மாதிரி எதுவும் செய்யுங்க.. (ட்ரவுசரை மட்டும் களட்டாதீங்க.. ;))

Subankan said...

அதுசரி, நீங்களே இனைப்பெல்லாம் குடுத்துட்டு இப்ப‍ அழுதா? இப்ப‍ இந்தப் பதிவால யாருப்பா அது லோசனையே தோற்கடிச்ச‍து எண்டு ஹிற்ஸ் இன்னும் கூடப்போகுது

Anonymous said...

ada idha paarunga modhala.. vijay koobapaduraaram..
http://vinothkumarm.blogspot.com/2009/03/vijay-got-angry-in-interview.html

ARV Loshan said...

Mathu said...
LOL :)I'm here after a long time.
Neenga pulambi eluthinathum nallathan irukku! Good luck for breaking the record :) LOL.//

வருக மீண்டும்.. எங்கே போயிருந்தீங்க?நாங்க புலம்புறது உங்களுக்கு நல்லா இருக்கா? உங்களுக்கே இது அடுக்குமா?
நன்றி வந்து என் துக்கத்தில் பங்கெடுத்ததுக்கு..

Nimalesh said...
ahhhh ungalukullya potiya gud gud,,, all best to your record break...//
நன்றி தோழா, தோள் குடுங்க.. ;)

The Godfather said...

இதப் படியுங்கோ... தட்ஸ் தமிழில் சுட்டது....

-----------------------------------

ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான்.

சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.

சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் புரமோனல் டூர் போனார்கள் அல்லவா...

அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.

குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.

'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.

ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்.

ஹி... ஹி... ஹி... ஹி...

கானா பிரபா said...

நம்ம கில்லியை கிண்டலா அடிக்கிறீங்க, இருங்க இருங்க டாக்டர் விஜய்யை வச்சு உங்க கிட்னியை காலி பண்ணிடுறேன் ;)

Anonymous said...

muthukumar maranathin pothu kuda nee ippadi oru periya pathivu podalayee :-))

Siva

Anonymous said...

ஒரு EXCEL SHEET உள்ளது. அது நாம் ஆங்கிலத்தில் type செய்தால் அது நமக்கு இந்திய மொழிகளின் (தமிழ், இந்தி, மலையாளம் etc.,) உச்சரிப்பை ஆங்கிலத்திலேயே தரும். அந்த EXCEL (.xls) வைத்திருப்போர் தயவு செய்து எனக்கு அனுப்பவும.
my email id: seaqueen5758@yahoo.com

சி தயாளன் said...

நல்ல நுண்ணரசியல்கள்....:-)))

Risamdeen said...

நல்லா கேக்குராங்கய்யா ஓட்டு

இத்தாள் சகலருக்கும் அறிவிப்பதாவது இந்த மொக்கை பதிவினால் லோஷன் அண்ணா பெற்றுக்கொள்ளும் சசல ஓட்டுக்களும் செல்லுபடியற்றதாகும் அத்துடன் இந்தப்பதிவின் மூலம் ஹிஷாமின் சாதனையை முறியடிப்பாரேயானால் அது எமது வெற்றி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது காரணம் இவை அனைத்தும் அணுதாப ஓட்டு அணுதாப ஓட்டு அணுதாப ஓட்டு

Hisham Mohamed - هشام said...

இது முழுக்க முழுக்க உங்க ஹிட்ஸைக்கூட்ட ஆதரவு தேடும் முயற்சி(பதிவு)...
வாழ்த்துக்கள் சாதனையை நெருங்கி விட்டீர்கள் சகா.....

சாதனையை முறியடிச்சா ice cream வாங்கித்தாரதா சொன்னது நீங்க. சரின்னு போனா கூடவே ரெண்டு நல்லவங்கள கூட்டிக்கிட்டு வந்து உனக்கு நான் வாங்கித்தாரேன் சாதனை படைச்சதுக்காக இவங்க 2பேருக்கும் ice cream வாங்கிக்குடுங்கன்னு சொன்னது யாரு... சாதனை படிச்சதுல 3 ice cream நட்டம்.
(இதெல்லாம் பதிவுலகத்துல சகஜமப்பா....)

ஆதிரை said...

அண்ணா.... இதையும் ஒருமுறை பாருங்களேன். :D

http://www.youtube.com/watch?v=WLLkLRkwYFg

King... said...

இப்படித்தான் ஹிட் சேக்கறதோ...;)

kuma36 said...

அடடா நல்ல சாதனை தான்.

Unknown said...

யாருக்கும் எதைபற்றியும் விவாதிக்கவும் கவலைப்படவும் உரிமை உண்டு , முத்துகுமருக்ககவும் கவலை படலாம் நடிகர் விஜக்காகவும் கண்டனம் தெரிவிக்கலாம் இதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் என்று கேட்டுவிட்டு நீங்களே முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள் முரண்பாடாக தெரிகிறது

wellawatta veddy pajal said...

fyf;FuPq;f Nghq;f.................

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
அ ஆ இ ஈ ஹிஷாம் இன் வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களின் ஹிட் இல் ஒரு நாளைக்கு இருபது நான் போடுவது.. எனவே இனி அந்த இருபதை கழித்துதான் போட்டியில் சேர்கவேண்டும் இன்று டக்வேர்த் சொல்கிறார்..//
அதென்ன? ஓ அந்தப்பட ஹீரோ மாதிரி ஹிஷாம் இருக்காரா? பாவம்யா ஹிஷாம் நல்லா தானே இருக்கார்?
அதெல்லாம் சரிப்படாது.. எப்படி சேர்த்தாலும் வாக்கு வாக்கு தான்..

என்ன இருந்தாலும் ஹிஷாமுக்கு எதிராக உங்களை நிலை நாட்ட நமீதா தேவைபட்டிருக்கிறது..//
இரண்டு பெரும் விஜயை அழைத்தோம்.. நான் எக்ஸ்ட்ரா வேயிட்டுக்காக நம்ம நமீசைக் கூப்பிட்டேன்..

இந்த கோலத்துல சுந்தர் சி ஏன் நமீதாவை எல்லா படங்களிலும் போடுறார் என்று தெரிஞ்சுகிட்டே ஒரு கேள்வி.. நமீதாவின் கிளு கிளுப்பு படம் வேற...//
அதான் சொல்லிட்டமுள்ள நமீதா பற்றிய பதிவு முதல்லேயே போட்டதுன்னு.. தெளிவா படிக்கலேயா?

நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்கள்.. நமீதாவிடம் சரணாகதி அடைந்து விட்டதாக வாக்கு மூலம் கொடுத்து விட்டீர்கள்.. //
(நம்ம கஞ்சி பாய் சொன்னார் நமீதாவைக் கூபிடுரதுன்னா எவ்வளவு தன்னம்பிக்கை இருக்கணும்னு.. ;))

Priyan said...
விஜய் ஒழிப்பு சங்கத்தின் இலங்கை கிளைக்கு உங்களை நியமிக்கலாம் போல கிடக்கு ( நம்ம வீ..................... மாதிரி பிரசாரம் செய்யுற படியால் )//
ஏன்யா இப்ப்படி? நான் நல்ல இருக்கிறது பிடிக்கலையா? (அண்மையில் விஜய் பற்றி டிவியில விமர்சிச்ச ஒருத்தர சிநிசிட்டியில வச்சு தாக்கிட்டாங்க சில விஜய் தொண்டர்கள்..) நீங்க வீ.... ன்னு சொல்ற அவரைப் பற்றித் தான் நேற்று பதிவு போட்டனே..

டக்ளஸ்....... said...
ஓவரா பொங்கீட்டீங்களோ...
ஓ..இதுதான் அநியாயத்தைக் கண்ட பொங்குறதா...?//
ஹீ ஹீ.. இது மொக்கைப் பொங்கல்.. அது சரி நீங்கள் டரியல் டக்ளஸா இல்லை சாதா டக்ளஸா? ;)

Anonymous said...

{இளைய தளபதி ஒழிக..}ithu Unga Tholilukku Awwalawa Nalla illa neengal ithanal niraya problem athirnokka wenndiyirukum

Anonymous said...

எப்பிடி லோஷன் அண்ணா உலகத்தில எங்க எது நடந்தாலும் உங்களைத் தான் எல்லாரும் phone பண்ணிக் கேக்கினம்? Dushy

ARV Loshan said...

Subankan said...
அதுசரி, நீங்களே இனைப்பெல்லாம் குடுத்துட்டு இப்ப‍ அழுதா?//
அதெல்லாம் ஆரோக்கியமான போட்டி சகோதரா -

//இப்ப‍ இந்தப் பதிவால யாருப்பா அது லோசனையே தோற்கடிச்ச‍து எண்டு ஹிற்ஸ் இன்னும் கூடப்போகுது//
அதான் மீண்டும் ஜெயிச்சுட்டாரே...


jacob said...
ada idha paarunga modhala.. vijay koobapaduraaram..
http://vinothkumarm.blogspot.com/2009/03/vijay-got-angry-in-interview.html//
பார்த்தோம் நண்பரே..இதவிட அப்பனான ரீமிக்செல்லாம் பார்த்தாச்சு


My Tamil Diary said...
இதப் படியுங்கோ... தட்ஸ் தமிழில் சுட்டது....//
நன்றி


கானா பிரபா said...
நம்ம கில்லியை கிண்டலா அடிக்கிறீங்க, இருங்க இருங்க டாக்டர் விஜய்யை வச்சு உங்க கிட்னியை காலி பண்ணிடுறேன் ;)//
பிரபா அண்ணா இவரா அவரு? கில்லி டாக்டர் தான் கிட்னி டாக்டரா?
ஏன்னா வேணாங்ணா – அதான் மறுபடி வாழ்க சொல்லீட்டமுல்ல..


Anonymous said...
muthukumar maranathin pothu kuda nee ippadi oru periya pathivu podalayee :-))

Siva//
அண்ணே சிவா என்னோட பழைய பதிவுகளைக் கொஞ்சம் பாருங்கண்ணா –

ARV Loshan said...

Anonymous said...
ஒரு EXCEL SHEET உள்ளது. அது நாம் ஆங்கிலத்தில் type செய்தால் அது நமக்கு இந்திய மொழிகளின் (தமிழ், இந்தி, மலையாளம் etc.,) உச்சரிப்பை ஆங்கிலத்திலேயே தரும். அந்த EXCEL (.xls) வைத்திருப்போர் தயவு செய்து எனக்கு அனுப்பவும.
my email id: seaqueen5758@yahoo.com//
கிடைத்தால் அனுப்புகிறேன்


’டொன்’ லீ said...
நல்ல நுண்ணரசியல்கள்....:-)))//
அட அதையா நுண்ணரசியல்னு சொல்றாங்க? ;)


Risamdeen said...
நல்லா கேக்குராங்கய்யா ஓட்டு//
;) heeeeee

//இந்தப்பதிவின் மூலம் ஹிஷாமின் சாதனையை முறியடிப்பாரேயானால் அது எமது வெற்றி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது காரணம் இவை அனைத்தும் அணுதாப ஓட்டு அணுதாப ஓட்டு அணுதாப ஓட்டு//
அனுதாப ஒட்டுதான் ஐயா ஆசியாவின் பிரதான ஒட்டே!
எம் ஜி ஆர் தொடக்கம் மன்மோகன் வரை
இலங்கையின் ஸ்ரீமாவோ தொடக்கம் நாளை ரணில் வரை
ளழஇ போடுங்கய்யா போடுங்கம்மா..

Hisham Mohamed - هشام said...
இது முழுக்க முழுக்க உங்க ஹிட்ஸைக்கூட்ட ஆதரவு தேடும் முயற்சி(பதிவு)...//
Facebookஇல் நிமிடத்துக்கொரு தடவை யாரோ ஆதரவு கேட்டதைவிடவா என்று ராமசாமி கேட்கச் சொன்னாருங்கண்ணா...

//வாழ்த்துக்கள் சாதனையை நெருங்கி விட்டீர்கள் சகா....//
நன்றி நன்றி நன்றி

//சாதனையை முறியடிச்சா ice cream வாங்கித்தாரதா சொன்னது நீங்க. சரின்னு போனா கூடவே ரெண்டு நல்லவங்கள கூட்டிக்கிட்டு வந்து உனக்கு நான் வாங்கித்தாரேன் சாதனை படைச்சதுக்காக இவங்க 2பேருக்கும் ice cream வாங்கிக்குடுங்கன்னு சொன்னது யாரு... சாதனை படிச்சதுல 3 ice cream நட்டம்.//
ஹா ஹா ஹா பேசாமல் Ice cream பதிவரென்று பெயரை மாற்றி விடுங்களேன்.


ஆதிரை said...
அண்ணா.... இதையும் ஒருமுறை பாருங்களேன். :D

http://www.youtube.com/watch?v=WLLkLRkwYFg//
ம்ம்...பார்த்தோம் நன்றி - இதெல்லாம் சகஜமப்பா

ARV Loshan said...

King... said...
இப்படித்தான் ஹிட் சேக்கறதோ...;)//
இப்பிடியும் சேர்க்கலாம்King... said...
இப்படித்தான் ஹிட் சேக்கறதோ...;)//
நல்லதோ என்னவோ நமக்கு ஒரு சின்ன சந்தோஷம்


krishnaaleelai said...
யாருக்கும் எதைபற்றியும் விவாதிக்கவும் கவலைப்படவும் உரிமை உண்டு , முத்துகுமருக்ககவும் கவலை படலாம் நடிகர் விஜக்காகவும் கண்டனம் தெரிவிக்கலாம் இதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் என்று கேட்டுவிட்டு நீங்களே முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள் முரண்பாடாக தெரிகிறது//

என்னய்யா இது நீங்களே சொல்லீட்டு முரண்பாடா என்று கேட்கறீங்க மொக்கையில இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா

-

wellawatta veddy pajal said...
fyf;FuPq;f Nghq;f.................//
நன்றி – பெயர் சூப்பர் - பேசாம கட்சி ஒண்ணு ஆரம்பியுங்களேன.


Anonymous said...
{இளைய தளபதி ஒழிக..}ithu Unga Tholilukku Awwalawa Nalla illa neengal ithanal niraya problem athirnokka wenndiyirukum//
மிரட்டலா? சரிதான் போங்க – எத்தனையப் பார்த்திட்டம்...


Anonymous said...
எப்பிடி லோஷன் அண்ணா உலகத்தில எங்க எது நடந்தாலும் உங்களைத் தான் எல்லாரும் phone பண்ணிக் கேக்கினம்? Dushy//
என்ன செய்ய....அப்படிப்பட்ட தொழில்ல தானே இருக்கிறோம் ..எந்தவொரு விடயத்தினதும் உத்தியோகப் பற்றற்ற பேச்சாளர்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner