March 08, 2009

அப்பாவுக்காக ரிப்பீட்டு..

எனது அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்ஜங்கள் அனைவருக்கும் நன்றிகள்.. மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை அவருக்கு வழங்கியுள்ளீர்கள்..

அவர் என்னோடு பகிர்ந்துகொண்ட விஷயங்களில் முக்கியமான ஒன்று சினிமா.. இன்றுவரை தலைமுறை இடைவெளி பெரிதாக இல்லாமல் நாம் ரசித்த சினிமாக்கள் ஏராளம்.. சிவாஜி ரசிகராக அவர் இருந்தாலும் இன்றும் நல்ல சினிமாக்கள்,புதிய நடிகர்கள்,புதிய பாடல்களை ரசிக்கிறார்.. விமர்சனங்களை என்னோடு ஒரு நண்பராகப் பகிர்ந்து கொள்கிறார்..

ஞாயிறு இன்று பெரிதாக எதுவும் பதிய இல்லாத நேரம், அப்பாவைப் பற்றி நான் ஏற்கெனவே தந்த ஒரு பதிவை மீள் பதிப்பிடுகிறேன்.. (அதாங்க ரிப்பீட்டு..)

இப்படி ரிப்பீட்டு ஒரு தடவையாவது போட்டால் தான் பிரபல பதிவர் வரிசையில் சேர முடியும் என்று சிரேஷ்ட பதிவுலக நண்பர் ஒருவர் சொன்னார்.. ;) அதுக்கான ஒரு முதல் கட்ட முயற்சி.. ஹீ ஹீ.. அத்தோடு அப்பாவுக்கான ஒரு சின்ன பரிசு..

பல நண்பர்களின் சினிமா சம்பந்தமான மலரும் நினைவுகளை வாசித்தபோது ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது. ஒரு சின்ன அறியாமை இருந்ததனாலேயே சிறுபிராயத்திலே எங்களுக்கு சினிமா ருசித்திருக்கிறது என்று!.

என் அப்பா சினிமாவின் தொழிநுட்பங்கள் சம்பந்தமான நிறைய விஷயங்களைப் படம் பார்க்கும்போது சின்ன வயதில் சொல்லித் தந்ததனால் தான் அவற்றின் பின்னணியோடே நானும் சினிமா ரசிகனாகிறேன். பின்னாளில் ஒலிபரப்புத்துறையிலும் அது நிறையவே உதவியுள்ளது. இன்னும் பல சினிமாத் தேடல்களுக்கும் அடிகோலியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் எங்கள் ஊரில் (இணுவில்) நான் நினைவு தெரிந்து இருந்த காலம்.ஆறு வருடங்கள் மட்டுமே என்பதனால் நண்பர்களும் அதிகளவில் இல்லை மணல்வெளி,சனசமூக நிலைய சினிமா,மினி சினிமா வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை.

எனினும் வீட்டில் கசெட் எடுத்துப் பார்க்கும் போதெல்லாம் அப்பா பழைய நல்ல திரைப்படங்களையும் ரசனையிலுயர்ந்த திரைப்படங்களையும் எடுத்துக்காட்டுவார். பார்க்கும் போதே பல விஷயங்கள் பின்னணித் தகவல்லாம் சொல்வார்.(கிசு கிசு,சாதனை,தொழினுட்ப விஷயம் இப்படி எல்லாமே)

அப்படிப் பார்த்த படங்கள் தான் பாசமலர்,பாகப்பிரிவினை,கப்பலேட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன்,வசந்த மாளிகை,முள்ளும் மலரும்,வீடு,சிறை,முதல் மரியாதை,சிந்துபைரவி,சலங்கை ஒலி,மூன்றாம் பிறை,வைதேகி காத்திருந்தாள்,பந்தபாசம்,படித்தால் மட்டும் போதுமா,படகோட்டி,நாடோடி மன்னன் இன்னும் பல.....

இப்படி ஒருநாள்,சுரேஷ் நடித்த ஒருபடம் பார்த்தக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி.. நாயகனும் நாயகியும் நேருக்கு நேர் சைக்கிளில் வந்து மோதுண்டு விழுந்து விடுவார்கள் உடனெ என் தம்பி (அப்போது வயது 5) சொன்னான் "இப்ப பாருங்கோ ரெண்டு பேருக்கும் லவ் வரும். உடனே பாட்டு வரும்." எல்லோரும் ஒரு கணம் திகைத்தோம்;பிறகு சிரித்தோம்.

யாழ்ப்பாணத்தில் நான் இறுதியாகப் பார்த்த படம் ராஜா திரையரங்கில் ராஜாதிராஜா! கொழும்பு வந்த பிறகு முதலில் திரையரங்கில் பார்த்தது புதுப்புது அர்த்தங்கள்.ஈரோஸ் தியேட்டரில்.
இரண்டுமே மனது மறக்காதவை.இப்போது இந்தப்படங்கள் தொலைக்காட்சியில் போனாலும் முன்னர் பார்த்த ஞாபகம் இருந்த ஸீட்டு,குடித்த பானம் அத்தனையும் ஞாபகம் வரும்.

A/L படிக்கும் காலம் வரை - அப்பாவை விட சினிமா அறிவு எனக்கு வந்துவிட்டது என்ற இறுமாப்பு கொஞ்சம் எனக்கு வரும் வரை- எப்போது திரையரங்கு போனாலும் அப்பாவின் பக்கத்திலிருந்து தான் நான் படம் பார்ப்பேன் யாருக்கும் அந்த இருக்கையை விட்டுத் தரமாட்டேன்

(அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு தரமாவது எங்களைத் திரையரங்கு அழைத்துச் செல்வார் அப்பா) பிறகு நானும் தம்பியும் உழைக்கத் தொடங்கிய பின் எப்போதாவது ஓரு தடவை குடும்பமாகப் போவோம்; இப்போது எல்லோருடைய நேர கால அட்டவணைகளும் மாறியுள்ளதால் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

ரோஜா' படம் பார்க்க திரையரங்கு போனநேரம் (1992)அப்பாவின் பக்கத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சித்தப்பா இருந்துவிட்டார் என்பதற்காக அட்ம்பிடித்து,அழுது பின் அந்த இடத்தைப் கைப்பற்றினேன். அவ்வளவு தூரம் நானும் அப்பாவும் பல விஷயங்களை டிஸ்கஸ் பண்ணிக் கொண்டே படம் பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் நான் சிறுவனாக இருக்கும்போதே Sean Conneryயின் James Bond படம் பார்க்க அழைத்துச் சென்று ஆங்கிலப்பட சுவை ஆரம்பித்த விட்டவரும் அப்பாதான் கொழும்பிலும் பின் Jurassic Park பார்த்தோம். அதன் பின் நண்பர்களோடு ரகசியமாகப் பார்த்த ஆங்கிலப்படங்கள் எண்ணிக்கையிலேயே இல்லை.Savoy theatreக்கு போகமட்டும் கொஞ்சம் பயம் காரணம் அங்கு Manager எங்கள் குடும்ப நண்பர். எங்கே வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று பதுங்கிப் பதுங்கி காமசூத்திர,American pie பார்த்தது இன்று வரை thrill தான்.

இப்போது தனித்தனியாக வசித்தாலும் கூட இரவுகளில் சன் டிவியில் 10.30க்கு நல்ல பழைய படங்கள் போடும்போது (இப்போது நிறுத்திவிட்டு பார்த்து அலுத்த நகைச்சுவைகளைப் போட்டு அறுக்கிறார்கள்.) அப்பாவும் நானும் ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொள்வோம். அதேபோல் Cinemax,HBOஇல் நல்ல ஆங்கிலப் படங்கள் போனால் (நானும் தம்பியும் thrillers,action,suspenseபிரியர்கள்) தம்பியும் நானும் பகிர்ந்து கொள்வோம்.

அப்பாவுடன் படம் பார்க்கச் செல்வது குறைந்த பிறகு அல்லது நின்ற பிறகு நல்ல நண்பர்கள் சிலருடன் தொடர்ந்து சென்று வருகிறேன். தாஸ் மற்றும் விமல்.தம்பி செந்தூரன்,பிரதீப் இடை இடையே இணைந்து கொள்வர்.

நாங்கள் பொதுவாக எல்லா விடயத்தையும் பகிர்நது கொள்வதுண்டு; படித்த,பார்த்த சினிமா தகவல்கள் முதல் டிக்கட் பணம் (சிலவேளை எங்களுக்கு complimentary tickets) தியேட்டர் செலவு வரை.

எனக்கிருக்கும் இன்னுமொரு பழக்கம் தான் படித்த சினிமாத் தகவல்கள் பொருந்தி வருகிறதா என படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சஞ்சிகைகளிலே இணையத்தளத்திலே பார்த்த ஸ்டில்கள் படத்திலே வருகிறத, எந்த எந்த இடங்களிலே camera angles,இசை எப்படி என்றெல்லாம் பார்ப்பது பக்கதிலிருப்பவருடன் என் reaction ஒப்பிட்டுப் பார்ப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிலும் கமல் படங்களை முதல் தடவை படமாகவும் இரண்டாவது தடவை கமலின் முக,உடலசைவுகளை மட்டுமே பார்க்கின்ற பாடமாகவும் பார்ப்பதுண்டு.

சில விமர்சனங்கள் கதையை கதையின் முடிவையே சொல்லி படம் பார்க்கும் ஆசையையே கொன்று விடுவதனால் படம் ஒன்றைப் பார்க்கும் வரை விமர்சனஙளை நான் படித்ததில்லை. ஆனால் இப்போது வெற்றி எப் எம்மில் 'சினிமாலை' நிகழ்ச்சியில் விமர்சனம் நான் சொல்வதனால் ;கடனே என்று விமர்சனங்களைப் படித்துத் தொலைப்பதுண்டு.
உண்மையில் பல சஞ்சிகைகளில் (விகடன்,குமுதம்,குங்குமம்) வரும் சில விமர்சனங்களை விடவும் வலைப்பதிவர்கள் பலர் பலமடங்கு மேல்.
குறிப்பாக நான் லக்கிலுக்,அதிஷா,கார்க்கி,இட்லிவடை,டோன்டு,பரிசல்,கேபிள் சங்கர் போன்றவர்களின் சினிமா,விமர்சனங்களின் காதலன்.

இப்போது அப்பா இந்தியாவில் இருக்கும் நிலையிலும், புறப்பட முதல் எந்தெந்த படம் இந்தியாவில் திரையரங்கில் பார்ப்பது நல்லது என்று கேட்டுவிட்டுத் தான் சென்றார். "வாரணம் ஆயிரம் ஓடிக் கொண்டிருந்தால் பாருங்கள்" என்று சொல்லித் தான் அனுப்பிவைத்தேன்..

பார்த்தாரோ தெரியவில்லை.. ஆனால் இன்று காலை தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பொது, "மின்னஞ்சல் பார்த்தேன்.. பார்த்தேன்.. அழுதிட்டேன்" என்றார்.. அவ்வளவும் போதும்.

14 comments:

Sinthu said...

"பார்த்தாரோ தெரியவில்லை.. ஆனால் இன்று காலை தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பொது, "மின்னஞ்சல் பார்த்தேன்.. பார்த்தேன்.. அழுதிட்டேன்" என்றார்.. அவ்வளவும் போதும்."
ஆனாந்தக் கண்ணீரா, எந்தக் கண்ணீர் என்று சொல்லல்லையே..

புல்லட் said...

பயங்கர சென்டிமன்ட் டொப்பிக்... அப்பாவ அழ எல்லாம் வச்சிருக்கீங்க? வெரிகுட்...

எனக்கும் அப்பா ஏதோ ஒரு படம் போட்டுக்காட்டினவர்... பலேபாண்டியாவோ பலான பாண்டியாவோ.. ஏதொ ஒண்டு... முழி பிதுங்கிப்போச்சு எனக்கு... நாலோ அஞ்சு மணித்தியாலம் ஓடிச்சுது அந்த ப்ளக் அன்ட் வைட் படம்... சிவபெருமானே... அண்டயிலருந்து பழையபடப்பக்கமே போறேல்ல..

உந்த யுரசிக் பாக் படம் யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரில வச்சு 15 இஞ்சி டிவில போட்டுக்காட்டினவங்கள்... 92 93 இல எண்டு நெக்கிறன்.. அதுக்கு தியேட்டருக்கு போறோமெண்டு தடல்புடலா வெளிக்கிட்டு போனது... கடைசியா கடைசிவரில இருந்து ஏதோ கர்புர் கத்துற சத்த்தை கேட்டுட்டு எழும்பி வந்ததுதான்... நல்ல காலம் அப்பா மிக்சர் வாங்கி தந்ததால பெரிசா கவலைப்படேல்ல.. :(

தீப்பெட்டி said...

நேற்றே தங்கள் அப்பாவிற்கு வாழ்த்து சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். அடுத்த முறை தொலைபேசியில் பேசும் போது எனது சார்பாகவும் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்து விடவும். இதே போல் 80ஆவது, 100 ஆவது பிறந்த நாள் காணும் போது வந்து வாழ்த்தி அவரின் ஆசிகளை பெறுவேன்

புல்லட் said...

அண்ணோய் மறுபடியும் வந்ததுக்கு மன்னிக்கோணும்...! மடல் அது இது எண்டு தடல்புடலாத்தான் கிடக்கு... ஆனா ஏதாவது பாட்டிய வச்சு சுற்றத்துள்ள உள்ளாக்களுக்கு ஒரு படையலைப்பொட்டா சனமெல்லாம் வாய்நிறைய வாழ்த்துமல்லோ? நானும் ஒரு நன்றிப்பதிவு போடுவன்.. பதிவுச்சுரைக்காய் கறிக்குதவாது.. என்ன நான் சொல்லுறது? ;) (சும்மா ஒரு பகிடிதான் என்ன, உங்கள் தந்தையார் நீடூழி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்..)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//அதன் பின் நண்பர்களோடு ரகசியமாகப் பார்த்த ஆங்கிலப்படங்கள் எண்ணிக்கையிலேயே இல்லை

துங்கிப் பதுங்கி காமசூத்திர,American pie பார்த்தது இன்று வரை thrill தான். //

அப்பா அழுதது இதுக்குத்தான்.. என்ன கொடும சார்

Gajen said...

//அப்பா அழுதது இதுக்குத்தான்.. என்ன கொடும சார்//

கிகிகி...

Cable சங்கர் said...

//வலைப்பதிவர்கள் பலர் பலமடங்கு மேல்.
குறிப்பாக நான் லக்கிலுக்,அதிஷா,கார்க்கி,இட்லிவடை,டோன்டு,பரிசல்,கேபிள் சங்கர் போன்றவர்களின் சினிமா,விமர்சனங்களின் காதலன். //

மிக்க நன்றி லோஷன்..

Anonymous said...

My hearty B'Day wishes to your appa. Do you have 2 brothers? One is Senthooran. Who is the Other one? I didn't hear his voice.

Anonymous said...

Nice "touching" post :)

ARV Loshan said...

//Sinthu said...
ஆனந்தக் கண்ணீரா, எந்தக் கண்ணீர் என்று சொல்லல்லையே..//
கண்ணீர் என்றாலே பெறுமதி வாய்ந்தது தானே...அதுவும் பெற்றோரின் கண்ணீர் விலையற்றது!

புல்லட் பாண்டி said...
பயங்கர சென்டிமன்ட் டொப்பிக்... அப்பாவ அழ எல்லாம் வச்சிருக்கீங்க? வெரிகுட்... //
அடப்பாவி நல்லாயிருக்கா?

//எனக்கும் அப்பா ஏதோ ஒரு படம் போட்டுக்காட்டினவர்... பலேபாண்டியாவோ பலான பாண்டியாவோ.. ஏதொ ஒண்டு... முழி பிதுங்கிப்போச்சு //
புல்லட் பலே பாண்டியா அவ்வளவு மோசமா உங்களுக்கு? அந்தப்படம் தான் 80,90களிலும் 2000 களிலும் வெளிவந்த வரும் அத்தனை ஆள்மாறாட்ட நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்களுக்குமே மூலகர்த்தா. உங்களுக்கு 'உள்ளத்தை அள்ளித்தா'வும் 'காதலா காதலா'வும் பிடிக்கும். ஒரிஜினலான பலே பாண்டியாவுக்கு முழி பிதுங்குமா?

உங்களையெல்லாம் 24மணிநேரமும் ஜே.கே.ரித்திஷ்,ராமராஜன்,விஜயின் வில்லு,அஜித்தின் ஆழ்வார்,பேரரசு படங்களை 24மணிநேரமும் போட்டுக்காட்டி வதைக்கவேணும்.

//நாலோ அஞ்சு மணித்தியாலம் ஓடிச்சுது அந்த ப்ளக் அன்ட் வைட் படம்...//
அதுசரி 4 5 மணித்தியாலயமா? உங்கடை அப்பர் ரீவைன்ட் பண்ணிப் பண்ணி slow motion பார்த்தாரோ?

//உந்த யுரசிக் பாக் படம் யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரில வச்சு 15 இஞ்சி டிவில போட்டுக்காட்டினவங்கள்... 92 93 இல எண்டு நெக்கிறன்.. அதுக்கு தியேட்டருக்கு போறோமெண்டு தடல்புடலா வெளிக்கிட்டு போனது... கடைசியா கடைசிவரில இருந்து ஏதோ கர்புர் கத்துற சத்த்தை கேட்டுட்டு எழும்பி வந்ததுதான்... நல்ல காலம் அப்பா மிக்சர் வாங்கி தந்ததால பெரிசா கவலைப்படேல்ல.. :(//

உங்களுக்கு ஜூரசிக்; பார்க் தான் படம் காட்டியிருக்கு.;) டைனோசரை விட மிக்சர் பெட்டர்தானே? hee hee

ARV Loshan said...

// துளி விஷம் said...
நேற்றே தங்கள் அப்பாவிற்கு வாழ்த்து சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். அடுத்த முறை தொலைபேசியில் பேசும் போது எனது சார்பாகவும் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்து விடவும்.//
நன்றி துளி விஷம் ! பெயர் தான் பயங்கரமாயிருக்கு மனசு நல்லா இருக்கு!

//இதே போல் 80ஆவது, 100 ஆவது பிறந்த நாள் காணும் போது வந்து வாழ்த்தி அவரின் ஆசிகளை பெறுவேன்//
அதுவரை நான் இருந்து பதிவுகளும் போட்டுக்கொண்டிருந்தால்

// புல்லட் பாண்டி said...
அண்ணோய் மறுபடியும் வந்ததுக்கு மன்னிக்கோணும்...! மடல் அது இது எண்டு தடல்புடலாத்தான் கிடக்கு... ஆனா ஏதாவது பாட்டிய வச்சு சுற்றத்துள்ள உள்ளாக்களுக்கு ஒரு படையலைப்பொட்டா சனமெல்லாம் வாய்நிறைய வாழ்த்துமல்லோ? நானும் ஒரு நன்றிப்பதிவு போடுவன்.. பதிவுச்சுரைக்காய் கறிக்குதவாது.. என்ன நான் சொல்லுறது? ;) (சும்மா ஒரு பகிடிதான் என்ன, உங்கள் தந்தையார் நீடூழி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்..)//
பொக்கட்டிலை இருந்தா (லஞ்ச்) பக்கட்டிலை வராதா?
அப்பர் இங்கை இருந்திருந்தால் அவரின்ட செலவில் தடல்புடலா லஞ்சோ டின்னரோ கலக்கி இருக்கலாம் அவர் இப்ப இந்தியாவில அதுதான் பதிவுப் படையல். ;)

// Triumph said...
உங்கள் அப்பாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்....//
நன்றி Triumph.
//உயிரோடு இருக்கும் போதே நிறையப் பேர் அப்பாவிற்கு ஒரு 15 ‍வயது என்டாலும் குறைத்து தான் கணிப்பார்கள்... கிரிக்கட்டும், உதைபந்தாட்டமும் அப்பாவை இளைஞனாக காட்டின. அவரின் பழகும் பாங்கும் அவரின் இளமையை அதிகப் படுத்தின...

அப்பாவுடன குறுந்தூர ஓட்டம் ஓட இளைஞர்களால் முடியவே முடியாது... அவ்வளவு "fit"

ம்ம்ம்ம்ம்ம்..... I miss him//
அப்பா எப்போதுமே ஒவ்வொரு பிள்ளையினதும் குறிப்பாக மகள்மாரின் ஆதர்ச ஹீரோக்கள் தான்!

ARV Loshan said...

//Triumph said...
எனக்கு ஒன்றும் விளங்கலில்லை... வாரணமாயிரம் படத்தில், அப்பா சூர்யா, நல்லா புத்தகம் வாசிக்கிறார், பம்பலாக இருக்கிறார், கடன் வாங்கி சிம்பிளாக நல்லா செலவளி என்டு பிள்ளையிடம் குடுக்கிறார்... பிள்ளையும் வீட்டு கஷ்டத்தை உணராமல் நல்லா வீணாகப்போறார்... இதில என்னா நல்ல கருத்து இருக்கிறது என்டு ஆளாளுக்கு அலம்புறியள்...//
Taste differs..

//மகன் இராணுவத்தில் சேருவாறாம்... அப்பா என்ட ஹீரோ என்டு ஒவ்வொரு நிமிசமும் சொல்லுவாறாம்.. அதை கேட்டு எங்கன்ட ஆட்கள் அடடா ஹீரோ அப்பா என்டு மகனுடன் சேர்ந்து உருகுவினமாம்... எல்லாரும் இப்படி பன்னாடைகளாக இருப்பியள் என்டு கனவிலும் நினைக்கவில்லை...//.
அந்தப்பட அப்பா மகனுடன் பழகுவது நண்பனாக.என் அப்பாவும் கிட்டத்தட்ட அதே! படத்தில பலதும் பத்தும் exaggerate செய்வார்கள்.அதை ரசிப்போமா சுவைப்போமா என்றில்லாமல் அப்பிடிக் காட்பீட்டாங்கள் இப்பிடிக் காட்பீட்டாங்கள்;அப்பாமார் உண்மையாக இப்படித்தான் இருப்பார்களா என்று நீங்கள் பழைய பன்னாடைத் தனமாக கேட்டால் என்ன செய்யமுடியும்! ;)

//எனக்கு அப்பா என்டால் உயிர்... எல்லாரும் எனக்கு அப்பாவின் சாவால் பைத்தியம் பிடிக்கும் என்டு தான் நினைத்தார்கள் என்டால் உங்களுக்கு விளங்கும் அப்பா எவ்வளவு உயிர் என்டு....

பொதுவாக தியட்டருக்குப் போய் நான் படம் பார்ப்பது சரியான குறைவு.. இந்த படத்துக்கு கண்டறியாத விமர்சனங்களைப் பாத்துப்போட்டு போனனான்... கடவுளே... அப்பா சூர்யாவைப் பாக்கப் பாக்க எனக்குப் பத்திக்கொண்டு தான் வந்தது... விமர்சனங்கள் எழுதிய / படம் பாத்து சிபாரிசு செய்த ஆட்களை எல்லாம் கழுவில் பீஸ் பீஸாக வெட்டிப் போட்டிருந்தாலும் என்ட ஆத்திரம் அடங்கி இருக்காது.... இப்ப தான் அந்த கன்றாவியான படத்தப் பார்தத டென்சன் கொஞ்சம் குறைஞ்சு இருந்தது.. அதைப்போய் ஞாபகப்படுத்தின உங்களுக்கு... (_#+$)#$)#*%))Q#+U #(#_)@=_+)

தயவு செய்து உங்கள் அப்பாவின் மேல் உண்மையான அன்பு இருந்தால் அந்த வீணாப்போன படத்துக்குப் போக வேண்டால் என்டு சொல்லுங்கோ... சரியோ....//

உங்கள் அப்பா மீது வைத்திருக்கும் உள்ளன்பு புரிகிறது.
எனினும் வாரணமாயிரம் படம் காட்டிய அப்பா மகன் பாசம் understanding & friendship கொஞ்சம் வித்தியாசமானது – நிறைய பேருக்கு அது பிடித்திருக்கு நான் உட்பட. so leave it as it is.. k?

// என்ன கொடும சார் said...
//அப்பா அழுதது இதுக்குத்தான்.. என்ன கொடும சார்//
தன்னை விட்டிட்டுப் போனதுக்கு என்று நினைத்தீங்களா? எங்க வரலையே எண்டு பார்த்தான் எ.கொ.சா

// தியாகி said...
//அப்பா அழுதது இதுக்குத்தான்.. என்ன கொடும சார்//

கிகிகி...//
:) :)

Cable Sankar said...
//வலைப்பதிவர்கள் பலர் பலமடங்கு மேல்.
குறிப்பாக நான் லக்கிலுக்,அதிஷா,கார்க்கி,இட்லிவடை,டோன்டு,பரிசல்,கேபிள் சங்கர் போன்றவர்களின் சினிமா,விமர்சனங்களின் காதலன். //

மிக்க நன்றி லோஷன்..//
உண்மையைத் தானே சொன்னேன்.. :) யாவரும் நலம்,1977 பார்த்தாச்சா?

// Mathu Krishna said...
Nice "touching" post :)//

Tx Mathu


// Abiman said...
My hearty B'Day wishes to your appa. Do you have 2 brothers? One is Senthooran. Who is the Other one? I didn't hear his voice.//
Thanx.
என்னையா இது? இது என்ன திமுகவா? அல்லது சினிமாவா? அவனாவது தப்பிப்பிழைத்து வாழட்டும். He is an UG @ Colombo UNI.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner