
சில பதிவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும்,சில சமயம் கொஞ்சம் பொறாமையாகவும் (ஆரோக்கியமானது மட்டுமே) இருக்கும். நாளாந்தம் பதிவு போடுவார்கள்;பலரது பதிவுகளில் பின்னூட்டம் போடுவார்கள் - சிலர் பதிவுகளில் கும்மியும் அடிப்பார்கள்- தங்கள் பதிவுகளுக்கு வருகின்ற பின்னூட்டங்களுக்குப் பொறுமையாக நன்றிகள் பதில்கள் சொல்லியும் இருப்பார்கள்.
எப்படித்தான் முடிகிறதோ????
நான் ஒவ்வொரு நாளும் பதிவு போட ஆசைப்படுபவன். என் தளத்துக்கு வருவோர் ஏமாறக்கூடாது என்று நினைப்பதால்; எனினும் பதிவு போட விஷயமேதும் இல்லாவிட்டால் வலிந்து மொக்கைப்பதிவு போடுவதை அண்மைக்காலம் வரை தவிர்த்தே வந்தேன்! வலிந்து போடப்படும் பதிவுகள் கட்டாயக் கல்லூரிப் பாடங்கள் போல!
முன்பு போரடிக்கும் நாட்களில் போட என்று எங்கேயாவது மின்னஞ்சலில் வந்த சுவாரஸ்யமான படங்கள் தேடியெடுத்த படங்கள் போன்றன இருக்கும். அவை பிரபலமாகி வரவேற்பையும் பெற்றுள்ளன. இப்போ கொஞ்ச நாளா ஒருவிதம் போல படங்கள் போடாமல் எழுதிய வருகிறேன். (படங்கள் மின்னஞ்சல் பெட்டியில் நிறைந்துகிடக்கின்றன.)
கொஞ்சநாள் Alexaவில் நம்ம தளத்தின் நிலை பார்த்து (இப்போது உலகளவில் 186,760) என்னுடைய வரைபைத்(graph) தொடர்ந்து பேணுவதற்காகவே ஒவ்வொரு நாளும் பதிவு போட முனைந்தும் உண்டு.
எனினும் வலைப்பதிவுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ஒரு பிடிவாதத்தோடு வேண்டுமென்றே சிலநாள் பதிவு போடாமல் விடுவதும் உண்டு. இன்னும் சில நாட்களில் பதிவுகள் போட பரபரப்பான விஷயம் ஏதாவது இருந்தும் வேலைப்பளு அல்லது வீட்டு அலுவலகங்கள் காரணமாகப் பதிவுகள் போடமுடியாது போகும்!
அலுவலகத்தில் பொதுவாக வேலைகள் குறைவென்றாலும் எனக்கிருக்கும் 4மணிநேர நிகழ்ச்சி,ஒலிப்பதிவுகள்,கையெழுத்திடல் (ஆமா....பெரீய வேலை), பிரதி எழுதுதல், கூட்டங்கள் (சில நேரம் மகா அறுவை) போன்றவற்றின் மத்தியில் சில நாட்களில் ஆர்வத்துடன் ஏதாவது பதிவு ஒன்றை இடமுன்னரே நாக்குத் தள்ளிவடும்.
வீட்டிலிருந்தே நேரம் கிடைக்கும் போது எழுதிவரும் பிரதிகளை எங்கள் அன்பு அக்கா அருந்ததி(தீ அல்ல..) தட்டச்சித் தருவதால் பதிவராய் பிழைப்பு நடக்கிறது.
வீட்டிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் மின்னஞ்சல் பார்த்து மட்டுறுத்துவதோடு சரி.கொஞ்சம் அதிகநேரம் கணனிக்கு முன் இருந்தால் என் குறும்புக்காரப் பையனுக்கு பிடிக்காது. ஏதாவது குழப்படி செய்து நிறுத்திவிடுவான் எல்லாத்தையும். அவனது குட்டி பிஞ்சு விரலால் சிலவேளை switchஐயே நிறுத்திவிடுவான்.
நான் தொடர்கிற பதிவுகள் பலப்பல. எல்லாவிதமான பதிவுகளும் படிக்கப் பிடிக்கும். நான் எழுதுவது போலவே படிப்பிலும் கலவை ரசனையுடையவன்.
அரசியல்,இலக்கியம்,கலகல,கிளு கிளு,சினிமா,சீரியஸ் என்று எதையும் விடுவதில்லை. பின்னூட்டம் போட மனசும் நேரமும் இடம் கொடுக்காவிட்டாலும் பிரிண்ட் எடுத்தாவது வாசிப்பதுண்டு.
நான் தொடருகின்ற பல பதிவுகளிலேயே நான் பின்னூட்டமிடத் தவறும் வேளையிலும் வாசிக்காமல் விடுவதில்லை.
(யாரோ ஒரு நண்பர் முன்பு பதிவுலகில் எழுதியது போல நான் எழுதுவதை விட அதிகமாக வாசிப்பதால் மோசமான எழுத்தாளன் இல்லை.)
சிலபேரின் தளங்களுக்கு பின்னூட்டமிட்டதில்லையே என்று அவமானமாகக் கூட இருக்கும். அவ்வளவு அழகாக நேர்த்தியாக தரமாக எழுதிவந்திருப்பார்கள். ஏனோ என் பார்வையில் பட்டிருக்காது. அப்படி அண்மையில் வாசித்து நான் பின்னூட்டமிட்டதிலேயே பெருமை கொண்ட பதிவுகள் பலப்பல.
அத்தோடு மற்றவர்கள் மனம் வைத்து எனக்குத் தொடர்ந்து ஒட்டு போடுவது போலவே நானும் ஒரு பதிவு பிடித்திருந்தால், பலருக்கு அந்தப் பதிவு போய்ச் சேருவது நல்லது என்று நான் எண்ணினால் கட்டாயம் வோட்டும் போட்டுவிடுவேன்!
அதுபோல எனக்கு பின்னூட்டமிட்ட பலருக்கும் நன்றி பதில் சொல்லவேண்டும் என்று யோசித்தாலும் நேரப்பற்றாக்குறை(சிலநேரம் படுசோம்பல்) இன்னும் சிலநேரம் புதிய பதிவு ஏதாவது போடவேண்டும் என்று இருக்கிற வேகத்தில் பின்னூட்டங்களை சரியான முறையில் பின்னபற்றுவதில்லை.
என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கை 200ஐ அண்மித்து வரும் நேரத்தில் (இவற்றுள் சிலவற்றை எண்ணிக்கைக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தெரியும்) இனி ஒரு கட்டுக்கோப்புக்குள் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளவேண்டும் என எண்ணியுள்ளேன். பார்க்கலாம்!
அதுசரி பரபர என்று எந்தநேரமும் பதிவுகளும் தந்து பின்னூட்டங்களிலும் கும்மிகளிலும் கூட எந்நேரமும் இருக்கின்ற பதிவர்களே நண்பர்களே உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள!
எப்படி முடிகிறது?
முழுநேரத் தொழிலே இதுவா?(கோபிக்காதீங்க.. உண்மையிலேயே சந்தேகங்க) இல்லை தொழிலுடனும் குடும்பத்துடனும் எப்படி சமாளிக்கிறீர்கள், என்னைப் போலவே மற்றவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்க முடிகிறதா?
சில நண்பர்களுக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் நன்றி பதில் சொல்லி சமாளிக்கிறார்கள் - எப்படி?
பலபேர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களை நேர்த்தியாகப் பேணிப் பராமரித்து வருகிறார்கள். எனக்கோ வல்லாவற்றுக்கும் வசதியான வேலை எழுத்தோடு இணைந்த துறை கிடைத்தும் ஒன்றோடே சமாளிப்பது பெரும்பாடாயுள்ளது.
இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். பல விஷயம் எழுத நினைத்தும் இருக்கும் சூழல் நிலை எழுதவிடாமலே பண்ணிவிடும். அதிலே எழுத நினைக்கிற ஏழு நாட்கள் பற்றிய பதிவொன்றும் உண்டு. (மறக்கமுடியாத மறக்க நினைக்கிற ஏழு நாட்கள் அவை)
இன்னும் பற்பல நிகழ்வுகள் கொடுமைகளும் உண்டு. எனினும் நினைத்தாலும் முடியாது. எழுதினால் அதுவே முடிவுரை.
காத்திருப்போம் காலம் வரும்.. அப்போது எழுதலாம்..
24 comments:
இப்படி மொக்கைன்னு தெரியாம மொக்கை போட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது
//காத்திருப்போம் காலம் வரும்.. அப்போது எழுதலாம்..//
எனக்கு இப்பொழுது பெருமூச்சு மட்டுமே வருகிறது.ம்ம்ம்!
//வலிந்து போடப்படும் பதிவுகள் கட்டாயக் கல்லூரிப் பாடங்கள் போல!//
இந்தியாவுல பொறந்து வளர்ந்த மாதிரி எழுதுறீங்க..
//இந்தியாவுல பொறந்து வளர்ந்த மாதிரி எழுதுறீங்க.. //
உங்க மேலதிகாரியிடம் போட்டு கொடுக்கிறேன்..
//அரசியல்,இலக்கியம்,கலகல,கிளு கிளு,சினிமா,சீரியஸ் என்று எதையும் விடுவதில்லை.//
கிளு கிளு என்று வாக்குமூலம் தர இன்ன பல விடயங்களையும் சேர்த்திருக்கிறீர்கள். அப்படிதானே?
//சில பதிவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும்,சில சமயம் கொஞ்சம் பொறாமையாகவும் (ஆரோக்கியமானது மட்டுமே) இருக்கும். நாளாந்தம் பதிவு போடுவார்கள்;பலரது பதிவுகளில் பின்னூட்டம் போடுவார்கள் - சிலர் பதிவுகளில் கும்மியும் அடிப்பார்கள்- தங்கள் பதிவுகளுக்கு வருகின்ற பின்னூட்டங்களுக்குப் பொறுமையாக நன்றிகள் பதில்கள் சொல்லியும் இருப்பார்கள்.//
அண்ணா, கோபிக்கக்கூடாது, அப்படி நான் பார்த்துப் பொறாமைப்பட்டது உங்களைத்தான்.
இப்படி மொக்கைன்னு தெரியாம மொக்கை போட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது
Hi buddy....pls change ur blog.its not nice ya...earlier one was better than this..lets think abt it or no prob.......
my best wishes.. keep spinning
frm ur
welwisher
ஹாஹா.....:-)))
//சில நண்பர்களுக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் நன்றி பதில் சொல்லி சமாளிக்கிறார்கள் - எப்படி
//
அதுக்கு தான் பெயர் ஆணியாம்...சில பேர் அத கும்மி என்றும் சொல்லுவதுண்டு :-)))))
கடைசி வரை ம்.. ம்.. லோசன் அறிமுகம் முடிந்தவுடன் பதிவை எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையுடனேயே.. வாசித்து ஏமாந்தேன்..
அண்ணே..... 100 % மொக்கை.
மொக்கையன்றால் வேறில்லை.
மொக்கைக்கும் உண்டோ அடைக்கும் தாள்.
Hands off Loshan
Do like this:
Set the alarm for an hr and start writing. if you can finish it on time; then post it. if you cant finish it, just save it and dont use additional sec even to type more. whn u practice like this, u will get a speed to write article in an hr. Also you will get time management.
This is how I study my subjects.
A friend of mine read it somewhere and told us. she is not following but iam following it.
Keep a small box. set ur work for the day & if you are done with it, then treat urself.. how.. write something as "you will go to cinema or get a bracelet (ok this is our range here as we are living in a forest) urself" in a paper and put it in the box. choose one in the end of that week. and do as whatz written on it.
I buy some new movie dvds. I set a goal as i will watch it only if i finish 3 journals. like tat i kept "Che's Movie" for almost 20 days. But, I felt good when I got to watch is as finally I got the speed to read 3 journals per day.
Try smaller things like this. It may sound lame. but it works. i tried "honestly" and it worked. No cheating. if you dont finish ur work dont go to cinema for the entire week. or the following week.
hope tat helps.
Let me know if it works to you. ha ha.. now I have something to write on my blog. how to manage time.. or get things done..
I will be doing it after april 19th only. so dont steal the idea pls.. just kidding...
எப்படியோ ஒரு பதிவு இன்றைக்கு போட்டாச்சு
பதிவு போடமுடியவில்லை என்று ஒரு கதை எழதிவிடுவது. என்னாச்சு? ஆஸ்திரேலியா தோல்வி பற்றி பதிவு போடலாமே
நானும் என் பதிவும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளோம்.. பின்ன, உண்மையாய் உண்மையை சீரியஸா எழுதினாலும் மொக்கை என்று முடிவு பண்ணி மொத்தமா சேர்ந்து மொத்துறாங்களே.
அடுக்குமா?
தாங்க முடியலப்பா..
லோஷன் வெட்டியா இருக்காப்பில இருக்கே... Daily blog எழுதுறார்.. -கொஞ்ச காலம் முதல் என் நண்பன்
லோஷன் வெட்டியா இருக்காப்பில இருக்கே... இப்பவெல்லாம் இரண்டு பதிவு போடுறார்... - 2, 3 நாட்களுக்கு முன் அதே நண்பன்...
(இதுவே போதும்.. இதுக்கு மேல ஆசைப்படாதீங்க..)
எப்பிடி லோஷன் எங்களால முடியுது... - இது நான்
(உண்மையாத் தான் கேட்கிறன்... சொல்லிடுங்க)..
நானும் ஒரு வலைப்பதிவு வைச்சிருக்கன்.. வருஷக்கணக்காக அது தன்பாட்டிற்கு ஏதும் புதுசா எழுதப்படுமோ என்று ஏங்கிட்டு இருக்கு.. :(
எப்பிடி லோஷன்.. எப்பிடி?
இது மொக்கையே அல்ல லோஷன்!
ரொம்ம்ப சுவாரஸ்சியமான பதிவுகள். உங்களுக்குள் எழுந்த கேள்விகள் எனக்கும் ஏற்பட்டது உண்டு. சில பதிவர்கள் தினமும் எழுதுவதை கண்டு ஆச்சிரியப்பட்டுள்ளேன். அந்த ரகசியத்தை நானும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.:)
ஜெய்ஹோ said...
இப்படி மொக்கைன்னு தெரியாம மொக்கை போட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது//
என்ன நடக்குது இங்கே.. ஏதோ ஒரு படத்துல "நான் ரவுடிடா நம்புங்கடா" என்று வடிவேலு சொன்ன மாதிரி இது மொக்கை இல்லப்பா நம்புங்க என்று துண்டு போட்டு தாண்டனுமா? (இல்லை மொக்கை எழுதுவதில் முதுமாணி வாங்கிட்டேனா?)
ராஜ நடராஜன் said...
//காத்திருப்போம் காலம் வரும்.. அப்போது எழுதலாம்..//
எனக்கு இப்பொழுது பெருமூச்சு மட்டுமே வருகிறது.ம்ம்ம்!//
நன்றி வருகைக்கு.. எங்களுக்கு அனல் மூச்சும் சேர்ந்து..
என்ன கொடும சார் said...
//வலிந்து போடப்படும் பதிவுகள் கட்டாயக் கல்லூரிப் பாடங்கள் போல!//
இந்தியாவுல பொறந்து வளர்ந்த மாதிரி எழுதுறீங்க.. //
ஏன் சகோதரா இலங்கையில் கல்லூரிகள் இல்லையா? (eg:-இந்துக் கல்லூரி,றோயல் கல்லூரி...)
//உங்க மேலதிகாரியிடம் போட்டு கொடுக்கிறேன்..//
ஹா ஹா.. (வில்லத்தனமான சிரிப்பு) மேலதிகாரிக்கு? நீங்கள்? ஹா ஹா.. முடிந்தால்.. முடிந்தால் ..:)
கிளு கிளு என்று வாக்குமூலம் தர இன்ன பல விடயங்களையும் சேர்த்திருக்கிறீர்கள். அப்படிதானே?//
நீங்க பிறப்பிலேயே இப்படியா? இல்லை இங்கே வலையுலகம் வந்த பிறகா? ஏன்யா?
Subankan said...
அண்ணா, கோபிக்கக்கூடாது, அப்படி நான் பார்த்துப் பொறாமைப்பட்டது உங்களைத்தான்.//
ஏன் ராஜா??? வேலை நேரத்திலையும் வேட்டியை பதிவு போடுறேன்னா? நான் படுற பாடு எனக்கல்லவோ தெரியும்? ஆண்டவா நன்றி.. என்னை விடவும் பாவமான ஜீவனாக சுபாங்கனை படைத்ததற்கு.. ;)
ஜிம்ஷா said...
இப்படி மொக்கைன்னு தெரியாம மொக்கை போட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது//
ஆகா .. இதுவல்லவோ பெருமை? ஜிம்ஷா வாயாலேயே மொக்கைக்கான பாராட்டா? வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி வாங்கியதற்கு சமானம் இது.. ;)
Anonymous said...
Hi buddy....pls change ur blog.its not nice ya...earlier one was better than this..lets think abt it or no prob.......
my best wishes.. keep spinning
frm ur
welwisher//
Thanx friend, lets wait for some time until i find a better skin. keep in touch with my blog.. :)
’டொன்’ லீ said...
//சில நண்பர்களுக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் நன்றி பதில் சொல்லி சமாளிக்கிறார்கள் - எப்படி
//
அதுக்கு தான் பெயர் ஆணியாம்...சில பேர் அத கும்மி என்றும் சொல்லுவதுண்டு :-)))))//
ஓகோ.. இதுக்குத் தான் ஆணி என்பார்களா? எனக்கும் அப்பா ஒரு தடவையோ,இரு தடவை ஆணி அடித்துள்ளார்கள்.. (என்ன பெருமை..)
சயந்தன் said...
கடைசி வரை ம்.. ம்.. லோசன் அறிமுகம் முடிந்தவுடன் பதிவை எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையுடனேயே.. வாசித்து ஏமாந்தேன்..//
என்னாது?அறிமுகமா? எங்கே? யாருக்கு? ;)
அது சரி உங்கள் பல வருட பதிவுலக வாழ்க்கையிலே இப்பிடி எத்தனை ஏமாற்றம் தாங்கியிருப்பீங்க.. விடுங்க பாஸ்..
//அண்ணே..... 100 % மொக்கை.
மொக்கையன்றால் வேறில்லை.//
நன்றி நன்றி நன்றி..
//மொக்கைக்கும் உண்டோ அடைக்கும் தாள்.//
மொக்கை எனப்படுவது யாதெனில் ஆங்கே சிக்கித் திணறும் பதிவரைத் தக்கையாக்கி தானாக காப்பாற்றும் அதே..(பதிவானந்த சுவாமிகள் அருளியது)
கிகிகிகிகி
நேத்து இந்த பதிவ படிச்சேன் எங்க படிச்சனு நேயபகம் எல்லைமா தேடு தேடு தேடினேன் கெடைக்க வில்லை ...எனிக்கு கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி எப்படி எவளவு ஹிட்ஸ் என்று பார்க்க வான்தளம் நம்ம பதிவு :-) படிச்சன்
ஆமா நீங்க தான் சொல்லணும் எப்படி இப்படி என்று
நாங்களும் உங்களை மாதிரி நண்பர்களை நம்பி பதிவு போடு உள்ளோம் படித்து பிடித்தல் போடுங்க வோட்ட
//சில பதிவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும்,சில சமயம் கொஞ்சம் பொறாமையாகவும் (ஆரோக்கியமானது மட்டுமே) இருக்கும். நாளாந்தம் பதிவு போடுவார்கள்;பலரது பதிவுகளில் பின்னூட்டம் போடுவார்கள் - சிலர் பதிவுகளில் கும்மியும் அடிப்பார்கள்- தங்கள் பதிவுகளுக்கு வருகின்ற பின்னூட்டங்களுக்குப் பொறுமையாக நன்றிகள் பதில்கள் சொல்லியும் இருப்பார்கள்.//
அண்ணா, கோபிக்கக்கூடாது, அப்படி நான் பார்த்துப் பொறாமைப்பட்டது உங்களைத்தான்.
Correct
//முழுநேரத் தொழிலே இதுவா?(//
ஹிஹிஹி...
Hi,
Howzzat?
How are you thinking like that?
Your post is awesome..
லோஷன் அண்ணா,
நேரம் கிடைக்காததால் இன்றுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன். அதிலும் தலைப்பார்த்தவுடன் இதனை முதலாவதாக வாசித்தேன். உங்களுக்கு வந்த சந்தேகம் எனக்கும் ராத்திரி தூங்கிற நேர நேரங்கூட வந்திருக்கு, ஒரு முறை நீங்கள் face book பத்தின பதிவொன்றில் சொன்னீங்களே face book ற்கு அடிமையாவதாக! அதே போல இன்று Bloggers க்கும் நடந்திடுமோ...?
ஆனாலும் சிலர் நீங்க சொல்லுற மாதிரி ரொம்ப பிரமாதமாகதா ப்ளொக்கை பேணிப்பாதுகாத்து வாராங்க.
ஏன் உங்களை பார்த்துக் கூட பொறாமைப்பட்டதும் உண்டு.
எப்படியோ சிலருக்கு விட்டுல, காரியாலயத்துல பிரச்சினை இந்த ப்ளொக்கால இருக்கு,
ஆனாலும் அதல்லாம் கண்டுக்காம பாதுகாத்து வாராங்க, வாழ்க எம்மவரின் Blog பக்தி.....
ANNA mookaiya podduviddu atukku vilakkam vera
enna koduma sir
Post a Comment