இன்னொன்று எனக்குப் பிடித்த மாதிரி (அது எப்படின்னு எனக்கே தெரியல) ஒரு வார்ப்புருக்களும் அகப்படவுமில்லை.. எனினும் அண்மைக் காலமாக ஹிட்ஸ் கூடி வரும் நிலையில் அமெச்சூர்த் தனமாக வலைத்தளம் இருக்கிறது என்று சில வலையுலக நண்பர்களும்,எனது நண்பர்களும் அடிக்கடி சொல்லி வந்த (கிட்டத்தட்ட நச்சரிக்காத குறை) நிலையில் இன்றைக்கு முதல் எப்படியாவது மாற்றவேண்டும் என்று தீர்மானித்து நேற்று ஒரு மாதிரியாக புதிய ஆடையை எனது வலைத்தளம் என்ற காதலிக்கு கொடுத்து விட்டேன்..
"எவனெவனோ நாள் தோறும் மாத்துறான் (காதலியை அல்ல) நீங்கள் இதுவரைக்கும் மாத்தலேயே.. எத்தனை பேர் ஒவ்வொரு நாளும் உங்க தளத்துக்கு வர்றாங்க. நீங்க எப்படியும் நல்லதொரு டெம்ப்ளேட் மாற்றியே ஆகணும் " என்று விடாப் பிடியா சண்டை பிடித்து எனக்காக நேற்று ஞாயிற்றுக் கிழமை தான் தூங்கும் பகல் நேரத்தையும் தியாகம் செய்து எனது லொள்ளு,கடிகள்,சந்தேகங்களையும் தாங்கிக் கொண்டு இதை வெற்றிகரமாக முடித்துத் தந்த நண்பர்/பதிவர் மது(ஹர்ஷேந்த்ரா)வுக்கு நன்றிகள் ..
இந்தப் புதிய வார்ப்புரு பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..
காரணம் என்னை விட அதிக நேரம் என் வலைத்தளத்திலே உலா வருபவர்கள் நீங்கள் தான்.. இதை விட நல்லா இருக்கக் கூடிய வார்ப்புருக்கள் இருந்தால் எனக்கு அனுப்பி விட்டால் கூட கோடி புண்ணியம்..
-------------
இன்று நடிகர் செந்திலுக்கு பிறந்த நாள் என்று அறிந்தேன்.
பாவம் தான் பட்ட வலிகளால் (எத்தனை வருடம் எத்தனை விஷயத்துக்காக,எத்தனை விதமாக கவுண்டரிடம் அடி வாங்கி இருப்பார் மனுஷன்) எங்களை சிரிக்க வைத்த ஒரு அப்பாவி ஜீவனை கொஞ்சமாவது ஞாபகப் படுத்துவது பிழையாகாது என்று தோன்றியது..

அண்மையில் விடுமுறையில் ஊருக்கு (யாழ்ப்பாணம்) போய் வந்த பின்னர் நண்பர் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கிறார். அடிக்கடி சிரிக்கிறார்..வழக்கத்தை விட அழகாக ஆடைகள் உடுத்திறார்.. போன் பில் அதிகமாகக் கட்டுகிறார்..ஏதோ நல்லா நடந்தால் சரி..
செந்தில் தான் எப்படியும் சாப்பாடு அனுப்பப் போவதில்லை.. நம்ம ரஜினி எப்படியும் தருவார்.. வாழ்க ரஜினி பல்லாண்டு..
அவசரத்துக்கு ரஜினியின் படம் கிடைக்கவில்லை.. அதனால் தான் சூப்பர் ஸ்டார்.. ஹீ ஹீ..
23 comments:
இப்படி ஒரு layout எங்கும் பார்த்ததில்லை.. unaligned 3 column design!
இப்பவும் பெருசா நல்லா இருக்கு என்று சொல்ல முடியாது. தேவையற்ற widget களை நீக்கி விடவும்...
eg live traffic feed
popular pages today
விருந்தாளிகள்
Top Posts
etamil link
ரஜனி??? இது ஒரு கேவலமான அரசியல்...
மகாபாரதத்தில் ஒரு யானைக்கு அசுவத்தாமன் என பெயரிட்டு அதை கொன்று அதன் மூலம் அவன் தந்தையை கொன்று சதி வெற்றி படைத்த கிருஷ்ணன் செய்ததிலும் கேவலமான செயல் ... இப்போது பதிவுலக ஹிட் போரில் தாங்கள் செய்திருக்கும் செயல் ..
ஹிஹி...
உங்களுடைய டெம்ப்லேட்டை மேலும் அழகாக்க ...
உந்த அட்டுகளை நீக்கிவிடுங்கள்... பிச்சைக்காசு எவளவு வந்துவிடும் பேபாலில்?நான் தருகிறேன் அதை.. எரிச்சலைக்கிளப்புகிறன சாடியும் மூடியும்... :(
மேலும் லாகின் செய்வது கடினமாக இருந்தால் ..
நவிகேசன் பாரை அட் பண்ணவும் அதற்கு
.navbar {
visibility:hidden;
display: none;
}
என்றிருப்பதை
.navbar {
visibility:visible;
display: block;
}
என மாற்றி விடவும்...
பிறகு அந்த RSS FEEDஎன்பவற்றை அழித்துவிடவும்... கோட் இல் விரைவாக அவற்றை கண்டு பிடிக்க முடியும்..
மேலும் மொத்தமாக ஒன்பதோ பத்து பார்வையாளர் அவதானிப்பு நிலையங்களை நிறுவியுள்ளீர்கள.. இது நிச்சயமாக குறைந்த வேக இணைப்புடையவர்களை எரிச்சலடையச்செயயும்.. ஏனெனில் உங்களுடைய பக்கத்தை லோட் பண்ணும்போது எத்தனையோ சேவர்களுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுடைய பயர்பாக்ஸிற்கு... இதையும் கவனத்தில் கொள்ளலாம்...
மன்னர் ஒருவர் கேட்டதற்கமைய
Total width: 960 ஆக இருந்தால் content width: 650px; மற்றும்
sidebar இன் width: 258p என மாற்றி விடவும் ..
இதெல்லாம் உங்களிஷடம்..
என்றாலும் முன்னயதை விட பார்க்க மிகவும் அழகாக உள்ளது... :)
பதிவுகள் கலக்கட்டும்... பதிவுலகம் களைகட்டட்டும்...
வாழ்த்துக்கள்..
முட்டாள்கள் தினத்திற்கு இன்னும் நாள் இருக்கும்போது இப்போதே முட்டாளாக்கினால் எப்படி. ஒருவேளை ஒத்திகையா இருக்குமோ
இர்ஷாத் said...
இப்படி ஒரு layout எங்கும் பார்த்ததில்லை.. unaligned 3 column design!
இப்பவும் பெருசா நல்லா இருக்கு என்று சொல்ல முடியாது. //
நன்றி இர்ஷாத்.. எல்லாப் புகழும் மதுவுக்குமே.. ;) (பாராட்ட மனசு வராதே.. ;))
//தேவையற்ற widget களை நீக்கி விடவும்...//
சில விஷயங்கள் தேவைப் படுகின்றன..(என் தளம் பற்றி சில விஷயம் நான் அறியவும்,விருந்தாளிகளுக்கு அறியத் தரவும்.)
தேவையற்ற பலவற்றை அகற்றி விட்டேன்..
புல்லட் பாண்டி said...
ரஜனி??? இது ஒரு கேவலமான அரசியல்...
மகாபாரதத்தில் ஒரு யானைக்கு அசுவத்தாமன் என பெயரிட்டு அதை கொன்று அதன் மூலம் அவன் தந்தையை கொன்று சதி வெற்றி படைத்த கிருஷ்ணன் செய்ததிலும் கேவலமான செயல் ... இப்போது பதிவுலக ஹிட் போரில் தாங்கள் செய்திருக்கும் செயல் ..
ஹிஹி...//
சும்மா.. All is fair in love & war என்பது போல எதையாவது சொல்லி/செய்து விருந்தினரை அழைக்க வேண்டும்.. ;) மொக்கைன்னாலே அப்படித் தானே.. (இதுக்கெல்லாம் போயி அஸ்வத்தாமனையும்,பாரதத்தையும் கூப்பிடலாமா?)
இன்று எனது புது வார்ப்புரு பற்றி விமர்சனங்கள் வேண்டும்.. அதுக்குத் தான் இப்படி..
உங்களுடைய டெம்ப்லேட்டை மேலும் அழகாக்க ...உந்த அட்டுகளை நீக்கிவிடுங்கள்... பிச்சைக்காசு எவளவு வந்துவிடும் பேபாலில்?நான் தருகிறேன் அதை.. எரிச்சலைக்கிளப்புகிறன சாடியும் மூடியும்... :(//
அட இப்படி ஒரு வள்ளல் என் வீட்டுக்கருகிலேயே இருப்பது தெரியாமப் போச்சே..(இன்றே வீடு கடந்து போகும் பொது என் post boxஇல் ஒரு பெரிய தொகை போட்டிட்டு போங்க.. ;))
சாடி கொஞ்சம் கலர்புல்லா இருக்கில்ல.. கொஞ்ச நாள் பார்ப்போம்..
உங்கள் ஆலோசனைகள்,உதவிகளுக்கு நன்றிகள்..எல்லோர் கருத்தும் பெற்று ஜனநாயக அடிப்படியில் மாற்றங்கள் நிகழ்த்துவோம்..(நெனப்புடா இவனுக்கு)
என்றாலும் முன்னயதை விட பார்க்க மிகவும் அழகாக உள்ளது... :)
பதிவுகள் கலக்கட்டும்... பதிவுலகம் களைகட்டட்டும்...
வாழ்த்துக்கள்..//
நன்றி நன்றி..
ஜெய்ஹொ said...
முட்டாள்கள் தினத்திற்கு இன்னும் நாள் இருக்கும்போது இப்போதே முட்டாளாக்கினால் எப்படி. ஒருவேளை ஒத்திகையா இருக்குமோ//
ஹீ ஹீ.. இல்லீங்களே. உண்மையைத் தானே சொன்னேன்..படம் மட்டும் தான் மாறியிருக்கு..;)
(ஒத்திகை எல்லாம் வைக்க நான் என்ன அரசாங்கமா நடத்துறன்?)
இன்னும் நல்ல
வார்ப்புரு ஒன்றை
பதிவிறக்கம் செய்து போட்டிருக்கலாமே
அண்ணா...?
என்ன செய்ய சசீ இது தானே பார்த்தவற்றுள் பிடிட்ச்சிருக்கு..மற்றவர்கள் பயன்படுத்தும் வார்ப்புருக்களை பயன்படுத்தவும் எனக்கு இஷ்டமில்லை.. சோ இப்ப இது இருக்கட்டும்..
நீங்க ஏதாவது நல்ல வார்ப்புரு இருந்தா அனுப்பி விடுங்களேன்..
இந்த widget எல்லாம் அகற்றி google analytics ஐ போடுங்கள்.. அக்கு வேறு ஆணி வேறாக விபரம் தருகிறது..
(பாராட்ட மனசு வராதே.. ;))
பாராட்ட மாதிரி இருந்தா தானே? பழசு இதவிட நல்லா இருந்த மாதிரி.. clear ஆன font color போடவும்
Wonderful template. u may add some picture in ur template. i am seeing ur blog last 4 months and enjoy ur article. i expect more.
(sorry, i don't write in tamil)
by
ithayam
Ithuvum Record break panna pota pathiva??????
உங்களின் போட்டோவை மாற்றவும் லோஷன் மீசை வைத்தது போலிள்ளலாமல் மீசைக்கு லோஷனை வைத்தது போலுள்ளது
இர்ஷாத் said...
இந்த widget எல்லாம் அகற்றி google analytics ஐ போடுங்கள்.. அக்கு வேறு ஆணி வேறாக விபரம் தருகிறது..//
ஆமாம் .. பார்த்தேன்.. பார்க்கலாம்.. :)
//பழசு இதவிட நல்லா இருந்த மாதிரி.. clear ஆன font color போடவும்//
ம்ம் அப்படியா? பிடிக்கல என்று சொன்ன 15ஆவது நபர் நீங்கள்..
Anonymous said...
Wonderful template. u may add some picture in ur template. i am seeing ur blog last 4 months and enjoy ur article. i expect more.//
நன்றி இதயம்.. படங்களா? என்னுடையது இல்லை தானே.. ;)
nimlaesh said...
Ithuvum Record break panna pota pathiva??????//
இல்லை நிமலேஷ்.. அது ஒரு பக்கம் கிடக்கட்டும்,.. இந்த மாதிரி மொக்கை எல்லாம் சாதனைக்கு போதாது.. அதுக்கு வேறு சூர,அசுர மொக்கைகள் தேவை.. ;)
ஜெய்ஹோ said...
உங்களின் போட்டோவை மாற்றவும் லோஷன் மீசை வைத்தது போலிள்ளலாமல் மீசைக்கு லோஷனை வைத்தது போலுள்ளது//
ஹா ஹா.. இது ஆசைக்கான ஒரு மீசை.. சும்மா ஒரு க்கு
பரவாயில்லை இருந்தாலும் எனக்கு பிடிக்கல பழையதுதான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது.
//என்ன செய்ய சசீ இது தானே பார்த்தவற்றுள் பிடிட்ச்சிருக்கு..மற்றவர்கள் பயன்படுத்தும் வார்ப்புருக்களை பயன்படுத்தவும் எனக்கு இஷ்டமில்லை..//
அதிசாவின் வார்ப்புரு போல் இருக்கு இருந்தாலும் உங்கள் நண்பன் மது பட்ட கஷ்டத்திற்காக 3 நாட்களுக்கு பிறகு மாற்றி விடவும்
Risamdeen said...
பரவாயில்லை இருந்தாலும் எனக்கு பிடிக்கல பழையதுதான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது. //
என்னாது? பழசு தான் கண்ணுக்கு குளிர்ச்சியா? அது ரொம்ப கடுமையா இருக்குன்னு தானே இப்படி மாத்தினேன்..
//அதிசாவின் வார்ப்புரு போல் இருக்கு இருந்தாலும் உங்கள் நண்பன் மது பட்ட கஷ்டத்திற்காக 3 நாட்களுக்கு பிறகு மாற்றி விடவும்//
அதிஷாவின் மாதிரியா? இல்லையே.. அவரது இன்னும் அழகாக இருக்குமே..
ஆமாம்.. மூன்று நாட்களோ அதற்கு மேலேயோ.. பார்க்கலாம்
gUYS N FB R BIT CONFUSE REGARDING YOUR TOPIC,,
தலைப்பு போட்டு ஆக்களை வர வைக்க இப்படி எல்லாம் technique இருக்கா மாஸ்டர்??? hehee.. இந்த புது வார்ப்புரு ஓகே. ஆனால் பழசு பாத்து பாத்து பழகின எங்களுக்கு புதுசை ஏற்று கொள்ள சின்ன தயக்கம் . எனினும் காலம் செல்ல ஓகே ஆகிடும் .. மாற்றங்களை மறுப்பதற்கில்லை .
(ஒத்திகை எல்லாம் வைக்க நான் என்ன அரசாங்கமா நடத்துறன்?)
இதுல என்ன நுண்ணரசியல் இருக்கோ? நா வர்ல இந்த விளையாட்டுக்கு
ம்...சட்டை மாறினாலும்...உள்ளம் ஒன்று தானே....
மொக்கையை தவிர்த்து..உங்கள் வழமையான....சரவெடிகளை எடுத்து விடவும்...:-)
தெரியாமல்தான் கேட்கிறேன்,வேரு எந்த மானிலத்தில் நடிகர்கள் குப்பை கொட்டமுடியும்?
பம்பரம் விட தொப்புள் கேட்கிற ஆசாமி.....
அப்பிடியே நம்ம கடை பக்கம் அடிக்கடி வந்துட்டு போங்க லோஷன் அண்ணே...
கொமன்ட் மாடரேஷன் எடுத்து விடலாமே???
புதுக் காரு...புது டெம்பிளேட்...அட...புது மீசை என்று ஒரே கலக்கல் தான்? டெம்பிளேட் நல்லாத்தான் இருக்கு??
என்ன றேடியோவிலை நேர அறிக்கை சொல்லுறதுக்கு விளம்பரம் போட்ட பழக்கம் இன்னும் விட்டுப் போகேல்லைப் போல?? சைட்டெல்லாம் விளம்பர மயம்?? கொஞ்சம் விளம்பரதாரர்களை பார்த்துக் கவனிச்சால் தளம் இன்னும் சிறப்பாக இருக்கும்..
புல்லட் சொன்ன கருத்தை நானும் வழி மொழிகிறேன்...
வாழ்த்துக்கள் அண்ணா...!
Nimalesh said...
gUYS N FB R BIT CONFUSE REGARDING YOUR TOPIC,,//
wat to do Nimalesh.. நுனிப்புல் மேய்ஞ்சா இது தான் பிரச்சினை..
இயற்கையன் said...
தலைப்பு போட்டு ஆக்களை வர வைக்க இப்படி எல்லாம் technique இருக்கா மாஸ்டர்???//
இதை விட அப்பனானதெல்லாம் இருக்கு.. இது சும்மா ஒரு சாம்பிள்.
//hehee.. இந்த புது வார்ப்புரு ஓகே. ஆனால் பழசு பாத்து பாத்து பழகின எங்களுக்கு புதுசை ஏற்று கொள்ள சின்ன தயக்கம் . எனினும் காலம் செல்ல ஓகே ஆகிடும் .. மாற்றங்களை மறுப்பதற்கில்லை //
ம்ம் அப்படித் தான் நினைக்கிறேன்.. இதைவிட நல்லா ஒன்னு வந்தால் மாத்திக் கொள்ளலாம்..
ஜெய்ஹோ said...
(ஒத்திகை எல்லாம் வைக்க நான் என்ன அரசாங்கமா நடத்துறன்?)
இதுல என்ன நுண்ணரசியல் இருக்கோ? நா வர்ல இந்த விளையாட்டுக்கு//
நானும் வரலங்க..
’டொன்’ லீ said...
ம்...சட்டை மாறினாலும்...உள்ளம் ஒன்று தானே....//
ஆமாங்கோவ்.. உள்ளம் என்றும் ஒன்றே.. மாறாது..
//மொக்கையை தவிர்த்து..உங்கள் வழமையான....சரவெடிகளை எடுத்து விடவும்...:-)//
இருந்திட்டு ஒன்னு.. சரவெடியா? ஹீ ஹீ
ttpian said...
தெரியாமல்தான் கேட்கிறேன்,வேரு எந்த மானிலத்தில் நடிகர்கள் குப்பை கொட்டமுடியும்?
பம்பரம் விட தொப்புள் கேட்கிற ஆசாமி.....//
இது இங்கே எங்கேங்க? மாறி வந்துட்டோ????
வேத்தியன் said...
அப்பிடியே நம்ம கடை பக்கம் அடிக்கடி வந்துட்டு போங்க லோஷன் அண்ணே...//
வந்தேனே.. வாரேனே..
கொமன்ட் மாடரேஷன் எடுத்து விடலாமே???
இல்லை வேத்தியன்..இந்தக் கால கட்டம் அப்பிடி.. ;) நானும் முன்பு உங்கள் போல வெள்ளந்தியா தான் இருந்தேன்.. ;)
கமல் said...
புதுக் காரு...புது டெம்பிளேட்...அட...புது மீசை என்று ஒரே கலக்கல் தான்? டெம்பிளேட் நல்லாத்தான் இருக்கு??//
நன்றி நன்றி.. மீசை பழசு தான்.. போட்டோ தான் புத்துசு.. ;)
//என்ன றேடியோவிலை நேர அறிக்கை சொல்லுறதுக்கு விளம்பரம் போட்ட பழக்கம் இன்னும் விட்டுப் போகேல்லைப் போல?? சைட்டெல்லாம் விளம்பர மயம்?? கொஞ்சம் விளம்பரதாரர்களை பார்த்துக் கவனிச்சால் தளம் இன்னும் சிறப்பாக இருக்கும்..//
எதோ கொஞ்சம் போட்டு வைக்கலாம் எண்டு தான்.. ;) நீங்க சொன்ன மாதிரி விளம்பரங்கலோடேயே வாழ்ந்து பழகியாச்சு..
//புல்லட் சொன்ன கருத்தை நானும் வழி மொழிகிறேன்...
வாழ்த்துக்கள் அண்ணா...!//
நன்றி தம்பி..
adapavi...... lect arukkiraan endu kalava blogs padikka vanthaa.... intha aruvai thaanga mudiyavillai... Vendam loshan... thaanga mudiyavillai.. ungalin aruvai :-(
Ungalin Vaarpuru paravayillai ... but Title design il innum sattru menekattirunthal nanrai irunthirukum.........
Post a Comment