
பிரயன் லாரா – மத்தியூ ஹேய்டனிடம் தற்காலிகமாக இழந்து மீண்டும் 400மூலம் பெற்றுக் கொண்ட உலக சாதனைபோல அவுஸ்திரேலியாவில் வைத்து இழந்து ஒரேமாதத்தில் தென் ஆபிரிக்காவில் வைத்து மீட்டெடுத்த அவுஸ்திரேலியப் பெருமைபோல
நண்பர் ஹிஷாமிடம் ஒருநாளுக்கு இழந்திருந்த உன் வலைப்பதிவு ஹிட் சாதனையை நேற்று சரித்திரப் பதிவொன்றின் மூலமாக (சில போலிப்புத்தி ஜீவிகள் சதிகாரர்கள் அதை மொக்கை பதிவு என்று சொல்வார்கள் - பொருட்படுத்தாதீர்கள்) மீண்டும் எதைதாக்கி வெற்றியின் பதிவுலக சாதனையைப் பதிவாக்கியுள்ளேன்.
(உண்மையிலேயே நேற்றுப் போட்ட புலம்பல் பதிவு மூலம் இழந்த சாதனையைப் பெறுவேன் என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை.. )
வந்தவர்,வாசித்தவர்,பின்னூட்டமிட்டு பெருமைப்படுத்தியவர்,மீண்டும் வந்து ஹிட் கூட்டியோர் என்று அத்தனை பேருக்கும் நன்றிங்கோ நன்றி!
அனைவருக்கும் நான் ட்ரீட் கொடுத்ததா நினைச்சு உங்க செலவுல உங்களுக்குப் பிடிச்சதை நான் தந்ததா நினைச்சு குடிச்சோ சாப்பிட்டோ சந்தோஷமா இருங்க!
முக்கியம் இந்த சாதனைகளில் பங்காளிகளான ஹிஷாம்,இளைய தளபதி விஜய் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகளை சொல்லவே வேணும்!
இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா இதெல்லாம் நடந்திருக்குமா?
so, இன்று கோஷம் மாறுகிறது!
இளைய தளபதி வாழ்க! அவரது கோபம் வாழ்க!
ஆனால் நேற்று நள்ளிரவிலேயே நம்ம நட்பு எதிரியான ஹிஷாம் சூட்டோட சூடா ஒரு பதிவு போட்டு நம்ம சாதனையைக் குறி வச்சுட்டார்.. (பேயும் தூங்குற நேரம் முழிச்சிருந்து ஏம்பா இப்பிடி ஒரு வேலை..) போற போக்கில மீண்டும் டாக்டர் விஜயின் பெரும் துணையோடு-இம்முறை ஆச்சியும் வந்திருக்கிறா, இன்றே என் ஹிட்ஸ் சாதனையை முறியடிப்பார் போல இருக்கு..
(நல்ல இருங்கப்பா.. )
மறுபடி ஒழிக கோஷம் போட வேண்டி வருமா?
------------------------------
நேற்று வெளிவந்த சில செய்திகளில் கவனத்தை ஈர்ந்தவை –
இலங்கையின் வீரமிகு மைந்தர்களுள் ஒருவரான விமல் வீரசன்ச பிரகடனப்படுத்திய சூளுரை எச்சரிக்கை!
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கட்டடத்தைக் தானும் தம் ஆதரவாளர்களும் முற்றுகையிடுவார்களாம்!
போஸ்டர் ஒட்டும் அட்டைக்கத்தி வீரரான இவருக்கு - இவரது கட்சியிலே போஸ்டர் ஒட்டக் கூட ஆள் பற்றாக்குறை! இதற்குள் இவருக்கு இப்படி ஒரு வீராப்பு!
--------------------------
தமிழக அம்மா ஜெயலலிதா ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்து சேகரித்த தொகையை செஞ்சிலுவை சங்க அதிகாரியிடம் கொடுத்தாராம்.நல்ல விஷயம்.. இதுல விசேஷம் என்னான்னா அம்மா அவங்களே தனிப்பட்ட முறையில் கொடுத்த பெரிய தொகை..
லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்டா கொடுத்திருக்காங்க.. தேர்தல் வருதில்ல.. இதை விட இன்னமும் செய்வாங்க..
பார்க்கலாம் வேற யார் இனி என்ன செய்யப் போறாங்கன்னு..
-----------------------------------
தமிழகத்தில் இருந்து அறிந்த துயர செய்தி தான் மறுபடி நிகழ்ந்த இன்னொரு தீக்குளிப்பு சம்பவம். இருவர் இறந்த சம்பவம்,,
பரிதாபமான விஷயங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.. நாம் ஈழத்தில் இருப்பவர்கள் தான் துரதிர்ஷ்ட சாலிகள் .. எமது உயிருக்கு மதிப்பில்லாதவர்கள் என்றால்,எங்கள் அன்புக்குரிய தமிழக சகோதரர்களின் உயிர்களும் விலை மதிப்பில்லாமல் போகிறதே..
தயவு செய்து நிறுத்துங்கள்.. போதும் உயிர்ப் பலிகள்.. (பின்னணிகள்,காரணங்கள் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்..) உடனே நிறுத்தப்பட வேண்டியது அர்த்தமற்ற இந்த உயிர்த் தியாகங்கள்..
யார் எங்கே என்ன செய்தாலும் எதுவும் நிறுத்தப்பட மாட்டாது இலங்கையிலே.. எனவே நடப்பது நடந்தே தீரும்..
------------------------------
இன்னுமொரு விஷயம், நேற்று இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்று பதின்மூன்று ஆண்டுகள் பூர்த்தியான தினம்..
முதலில் தேயிலை, பின்னர் யுத்தம் இவற்றுக்குப் பின் இலங்கையை உலக வரைபடத்தில் காட்டிய ஒரு விடயம் இந்த கிரிக்கெட்..
அதைப் பற்றிய கொஞ்சம் வித்தியாசமான பதிவொன்று நாளை இடுவதாக எண்ணியிருக்கிறேன்.. மனமும் நேரமும் ஒத்துழைத்தால்.. (இன்று 1977 பார்க்கப் போகலாம் என்று நினைத்துள்ளேன்.. பலபேரும் பயமுறுத்தறாங்க..பார்த்த பிறகு மன நிலை எப்பிடியிருக்கோ.. ஒரே ஆறுதல் என்ன தான் யார் வந்து பயமுறுத்தினாலும் நம்ம நமீதாவின் அனுக்கிரகத்தில் மீண்டு வருவோம்.. வில்லு,பெருமாள்,சிலம்பாட்டமே பார்த்திட்டோம்.. இதையெல்லாம் பார்க்க மாட்டமா?)
மேலே படத்திலுள்ளது லோஷன் என்ற புண்ணியாத்மாவின் கரம்.. இன்று ஐந்து விடயம் பற்றி கலந்து கட்டிப் பதிவிட்டதால் எனது கையின் ஐந்து விரல் காட்டும் படம்.. ;)
26 comments:
நான் தான் முதலிடம் .
வலது கையைப்போட்டிருந்தாலும் உங்கள் பலன் பார்த்திருக்கலாம் இடது கையைப்போட்டு நீங்கள் மதுரை ஆட்சியில் இருக்கின்றீர்கள் என்பதை சிம்பாளிக்காக காட்டிவிட்டிர்கள். ஹிஹிஹி
Vendam Loshan... Azhuthiduvan intha rate ill neengal ezhuthinaan... now now participate in the marathon... i invited you for my favourite ppl thing.. kavuthidame..
//(இன்று 1977 பார்க்கப் போகலாம் என்று நினைத்துள்ளேன்.. //
லோஷன் வேண்டாம் விவரீதம். நமீதாவுடன் மலேசியாவின் அழகையும் ரசிக்கலாம். மற்றும்படி 1977ல் வந்திருக்கவேண்டிய படம்.
நேத்தே பின்னூட்டம் போட்டு அழித்து விட்டேன். நீங்களுமா சகா?
வேற எதுவும் சொல்ரதுக்கில்ல. நடத்துங்க.
//அனைவருக்கும் நான் ட்ரீட் கொடுத்ததா நினைச்சு உங்க செலவுல உங்களுக்குப் பிடிச்சதை நான் தந்ததா நினைச்சு குடிச்சோ சாப்பிட்டோ சந்தோஷமா இருங்க!
அட... கடன்காரப்பயலே...:)
// மேலே படத்திலுள்ளது லோஷன் என்ற புண்ணியாத்மாவின் கரம்.. இன்று ஐந்து விடயம் பற்றி கலந்து கட்டிப் பதிவிட்டதால் எனது கையின் ஐந்து விரல் காட்டும் படம்.. ;)
பொய்... இது சுத்தப்பொய்.
சின்னவீட்டுக்கு பொருத்தம் பார்க்கிறதுக்கு கைரேகை காட்டி விட்டு இப்படி சமாளிக்கிறான் இவன்.
இங்க தமிழ்நாட்டுல் அவனவன் ஈழத்துக்காக தீக்குளிச்சி செத்துக்கிட்டிருக்கான் அங்க நீயும் உன் பிரென்டும் மொக்கப்பதிவு எழுதுறதும் அதுல போட்டி போடுறதும்... நல்லா இருங்கடே
நான் வலைப் பதிவு பார்க்க வந்த புதியவன் எப்படி அண்ணா நீங்க முறியடிப்பீங்க
ஹிஷாமின் ஹிட் 23
உங்களின் ஹிட் 16
பின்ன எப்படி கொஞ்சம் விளக்கினா உங்களுக்கு புன்னியமா போகே ம் போகும்
என்ன கொடும சார்..
போடாங்...
நான் கூட "கை"க்கு ஓட்டு கேக்குறீங்களோன்னு நினைச்சேன்...
:P
ok ok yenna koduma anna
அண்ணா,
//அனைவருக்கும் நான் ட்ரீட் கொடுத்ததா நினைச்சு உங்க செலவுல உங்களுக்குப் பிடிச்சதை நான் தந்ததா நினைச்சு குடிச்சோ சாப்பிட்டோ சந்தோஷமா இருங்க!//
எப்புடி இப்புடியெல்லாம்......??
//தயவு செய்து நிறுத்துங்கள்.. போதும் உயிர்ப் பலிகள்.. (பின்னணிகள்,காரணங்கள் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்..) உடனே நிறுத்தப்பட வேண்டியது அர்த்தமற்ற இந்த உயிர்த் தியாகங்கள்..//
உண்மையில் உருக்கமான விடயங்கள்.....
எம் தமிழர்களின் உயிர்கள், உயிர்த்தியாகங்கள் அர்த்தமற்றதாய் மாற்றப்படுகின்றது.
எம்மவர்கள் உயிர்த்தியாகம் செய்வதை விட வாழ்ந்தே போராடுவதுதான் எமக்கும் ஊக்கம்.
காரணம்
உயிர்த்தியாகம் செய்வதால் காலமாற்றத்தில் மறக்கப்பட்ட பதிவுகளில் அவை எழுதப்படுகின்றன, எழுதப்பட்டன.
கடைசியில் நடப்பவை நடந்துகொண்டுதான் இருக்கிறது......
சுப்பர் நட்பு எதிரி என்று நகரிகமாக சென்னாலும் அதன் பொருளை துரோகி என்றும் எடுக்கலாமாமே....
வீரவன்ச என்றாலும் அவர் ஒரு விடியா வம்சம் என்பது பலர் அறிந்த உண்மை தானே... பொதுவா விமல் என்று தொடங்கினால் வாய் வீரராகத்தான் இருப்பார்களாம்.நான் பொதுவா சொன்னன்.
//அதைப் பற்றிய கொஞ்சம் வித்தியாசமான பதிவொன்று நாளை இடுவதாக எண்ணியிருக்கிறேன்..//
எதிர் பார்த்திருக்கின்றோம் :)
நிறுத்தனும்..எல்லாத்தையும் நிறுத்தனும்..
இல்லாட்டி என் சார்பில் புல்லட் பாண்டி உண்ணாவிரதம் இருப்பார்....
//இலங்கையின் வீரமிகு மைந்தர்களுள் ஒருவரான விமல் வீரசன்ச....
அந்த விமலா?
//இன்று 1977 பார்க்கப் போகலாம் என்று நினைத்துள்ளேன்
மீண்டு வந்தீர்களா?
எல்லாம் சரியாத்தான் எழுதியிருக்கீங்க...அப்புறம் ஏண்ணே 1977 பார்க்கப்போறேன் முடிவு பண்ணீட்டீங்க? பாப்போம் அண்ணன் சரத் ஏதாவது வீடியோ ரிலீஸ் பண்ணி நம்ம டாக்டர் தம்பியின் சாதனையை முறியடிப்பாரா?
ஒருகணம் விமல் அண்ணா என்று நினைத்துவிட்டேன்.
வாழ்த்துக்கள். கடைசியாக யாரு வெல்லப் போறீங்க (நீங்களா இல்ல ஹிஷாம் அண்ணாவா)?
விஜய. டி.ராஜேந்தர் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்குங்கோவ்..!இங்கே வந்து பாருங்க.!
http://ponmaalai.blogspot.com/
"பொதுவா விமல் என்று தொடங்கினால் வாய் வீரராகத்தான் இருப்பார்களாம்.நான் பொதுவா சொன்னன்"
அண்ணா இதில் ஒரு நுண்ணரசியல் இருக்கே
இப்ப எல்லாம் வானொலியை விட blog ki தன் சுடச்சுட செய்தி போடுறிங்க அண்ணா
//தமிழக அம்மா ஜெயலலிதா ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்து சேகரித்த தொகையை செஞ்சிலுவை சங்க அதிகாரியிடம் கொடுத்தாராம்.நல்ல விஷயம்.. இதுல விசேஷம் என்னான்னா அம்மா அவங்களே தனிப்பட்ட முறையில் கொடுத்த பெரிய தொகை.. //
உங்க மாதிரியே ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படி தான் சொல்ல முடியுது அண்ணா
//உண்மையிலேயே நேற்றுப் போட்ட புலம்பல் பதிவு மூலம் இழந்த சாதனையைப் பெறுவேன் என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை//
பின்ன, அதுதான் சூடா இருந்துதே!ஹிட்ஸ் வராம என்னபண்ணும்?
யார் எங்கே என்ன செய்தாலும் எதுவும் நிறுத்தப்பட மாட்டாது இலங்கையிலே.. எனவே நடப்பது நடந்தே தீரும்..///
இலங்கைல நிறுத்தப் படவேணும் என்று எதிர்பார்க்கிற ஆக்கள் இருக்க கூடாது. முடிவெடுத்துடீங்கள் என்றா நீங்க தான் நிறுத்தனும்... உங்கட கழுத்தை எதிரி நெரிக்கும் போது மற்றவர் மறிக்க வேணும் என்று எதிர் பார்ப்பதா இல்லை நீங்களே இரண்டு கையாலையும் மறிப்பீங்களா?
வந்தியத்தேவன் said...
நான் தான் முதலிடம் . //
:)
வலது கையைப்போட்டிருந்தாலும் உங்கள் பலன் பார்த்திருக்கலாம் இடது கையைப்போட்டு நீங்கள் மதுரை ஆட்சியில் இருக்கின்றீர்கள் என்பதை சிம்பாளிக்காக காட்டிவிட்டிர்கள். ஹிஹிஹி//
நண்பா உங்கள் பிரகாசமான வருங்காலமும் தெரிகிறது.
என் இரு கையிலும் மோதிரம் இருக்கே..
அதுசரி மதுரை ஆட்சி என்று சொல்லி என்னை அஞ்சாநெஞ்சன் (அழகிரி) ஆக்கியதில் ரொம்ப நன்றி! ;)
Triumph said...
Vendam Loshan... Azhuthiduvan intha rate ill neengal ezhuthinaan... //
ஆகா...இதுவேறயா? இது ஆனந்தக் கண்ணீர் தானே?
//now now participate in the marathon... i invited you for my favourite ppl thing.. kavuthidame..//
ஒ கே வருகிறேன்..அழைப்புக்கு நன்றி ...கவிழமாட்டோமே...
வந்தியத்தேவன் said...
//(இன்று 1977 பார்க்கப் போகலாம் என்று நினைத்துள்ளேன்.. //
லோஷன் வேண்டாம் விவரீதம். நமீதாவுடன் மலேசியாவின் அழகையும் ரசிக்கலாம். மற்றும்படி 1977ல் வந்திருக்கவேண்டிய படம்.//
சரியா செர்ன்னீங்க வந்தி – உங்க சொல்லு கேட்காமல் போய் பணத்தையும் நேரத்தையும் பரிதாபமாய்த் தொலைத்து விட்டேன். 1977 பற்றிய பதிவு நாளை வரும்...
கார்க்கி said...
நேத்தே பின்னூட்டம் போட்டு அழித்து விட்டேன்.//
ஏன்? ஏன்? ஏன்?
//நீங்களுமா சகா?//
;)
//வேற எதுவும் சொல்ரதுக்கில்ல. நடத்துங்க//
வில்லுவின் வலது கையே கோபமா? கொதித்தெழ மாட்டீங்கன்னு தெரியும்.
ஆதிரை said...
//அனைவருக்கும் நான் ட்ரீட் கொடுத்ததா நினைச்சு உங்க செலவுல உங்களுக்குப் பிடிச்சதை நான் தந்ததா நினைச்சு குடிச்சோ சாப்பிட்டோ சந்தோஷமா இருங்க!
அட... கடன்காரப்பயலே...:)//
ஹீ ஹீ ஹீ ....திட்டினாலும் தர மாட்டேனே..
//சின்னவீட்டுக்கு பொருத்தம் பார்க்கிறதுக்கு கைரேகை காட்டி விட்டு இப்படி சமாளிக்கிறான் இவன்.//
ஏன்யா? நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா? கடந்த வெள்ளி தானே 'இல்லாத எல்லை' யில் கண்டீங்க..
எழவுப்பாட்டு said...
இங்க தமிழ்நாட்டுல் அவனவன் ஈழத்துக்காக தீக்குளிச்சி செத்துக்கிட்டிருக்கான் அங்க நீயும் உன் பிரென்டும் மொக்கப்பதிவு எழுதுறதும் அதுல போட்டி போடுறதும்... நல்லா இருங்கடே//
பேருக்கேத்த மாதிரியே இருக்கீங்க...
சகா – எந்தநேரமும் இங்கே எம்மால எழவுப்பாட்டோ - இல்லாவிட்டால் நாம் காண்பதையும் கேட்பதையுமே எழுத முடியாது...
நல்லா இருப்பதற்காக எல்லாவற்றையுமே அவதானித்தும் எழுத முடியுமானவற்றை எழுதுகிறோம்.
**கொஞ்சம் என் தளத்தின் முன்னைய பதிவுகளையும் பாருங்கள்
நன்றி வருகைக்கு..
Dout Ganesh said...
நான் வலைப் பதிவு பார்க்க வந்த புதியவன் எப்படி அண்ணா நீங்க முறியடிப்பீங்க
ஹிஷாமின் ஹிட் 23
உங்களின் ஹிட் 16
பின்ன எப்படி கொஞ்சம் விளக்கினா உங்களுக்கு புன்னியமா போகே ம் போகும்//
எதை நீங்க ஹிட்னு நினைக்கிறீங்க?
என் தளத்தின் மூலையில் Hit counter இருக்கிறது – அதை கிளிக்குங்கள் -
வருகை (hits) விபரங்கள் கிடைக்கும் ----
மொத்த வருகைகளில் நான் முதலிடத்திலிருந்தாலும் - ஒருநாள் வருகையில் தான் போட்டி
Post a Comment