December 21, 2010

இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே

நேற்று செஞ்சூரியன் Super Sport Parkஇல் தென்னாபிரிக்கா இந்தியாவை இன்னிங்சினால் தோற்கடித்தது எதிர்பார்த்ததே – எனினும் துவைத்தெடுக்கும் என்று எதிர்பார்த்தது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் போராட்டத்தினால் இன்னிங்சினாலும் 25 ஓட்டங்களினாலுமே வென்றது தென்னாபிரிக்கா.

மழை முதல் நாளில் வெறும் 38 ஓவர்கள் மட்டுமே பந்துவீச அனுமதித்தும் கூட, இறுதிநாளின் 98 வீதமான நேரம் மீதியாக இருக்க தென் ஆபிரிக்கா இந்தியாவைத் தோற்கடித்துள்ளது.

விக்கிரமாதித்தன் இம்முறை விளையாட்டுக்காட்டவில்லை. முன்னைய எதிர்வுகூறலில் சொன்னது போலவே அத்தனையும் நடந்துள்ளன.
3வது நாளின் பின் ஆடுகளம் தனது வேகத்தையும் உயிர்ப்பையும் கொஞ்சம் இழந்ததனால் மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் - குறிப்பாக சேவாக் + கம்பீர் – பின் தோனி ஆகியோரின் வேகமான அதிரடிகளாலும் தென்னாபிரிக்காவின் வெற்றி தாமதப்படுத்தப்பட்டது.

சேவாக் -  கம்பீரின் 2ம் இன்னிங்ஸில் காட்டிய பதிலடி வேகத்தை முதலாம் இன்னிங்ஸில் காட்டியிருந்தால் தென்னாபிரிக்கா கொஞ்சமாவது நிலை குலைந்திருக்கும். அடுத்த டெஸ்ட்டில் இந்த உபாயத்தைக் கையாண்டு பார்க்கலாம்.

லக்ஸ்மன், ரெய்னாவின் தடுமாற்றம் - தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் வேக, அதிவேக + பவுன்ஸ் பந்துகளால் முதலாம் இன்னிங்சில் இந்தியாவை முழுதும் உருட்டி எடுத்தார்கள். இரண்டாம் இன்னிங்சில் நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவருமே மாட்டிக்கொண்டார்கள்.

ஆனால் சதம் பெற்ற சச்சின் + அரைச்சதங்கள் அடித்த மூவரும் கூட, வேகம் + எகிறி எழும் பந்துகளால் தான் வீழ்த்தப்பட்டார்கள்.

இது தென்னாபிரிக்காவுக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு சொத்சொபேயை விட வேகமான ஒருவரை (பார்னெல்/மக்லாரென்/வேறுயாராவது) அழைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

மறுபக்கம் இந்தியாவின் பந்துவீச்சு – சஹீர்கானும் இல்லாமல் நொண்டியடித்தது. தென்னாபிரிக்க வீரர்கள் ஒவ்வொருவருமே தாம் விரும்பியபடி ஓட்டங்களைக் குவித்துவிட்டு பின்னர் ஆட்டமிழந்தனர். கலிசின் இரட்டைச்சதம், இரு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் என்று துடுப்பெடுத்தாடிய அனைவருமே இந்தியப்பந்துவீச்சாளர்களை இலகுவாகக் கையாண்டார்கள்.

இவற்றில் கலிசின் இரட்டைச்சதம் - சச்சின் டெண்டுல்கரின் 50வது டெஸ்ட் சதம் போலலே முக்கியமானது – மைல்கல்லானது.

15 வருடங்களாக விளையாடிவரும் உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரரின் முதலாவது இரட்டைச்சதம் இது. 36 வயதிலே தனது முதலாவது இரட்டைச்சதத்தை ஐக்ஸ் கலிஸ் பெற்றுள்ளார்.
அப்பாடா ஒருவாறாக ஒரு இரட்டை சதம்.. 

கலிஸின் பொறுமையான நிதானமான துடுப்பாட்டத்தின் பலாபலன்கள் தான் தென் ஆபிரிக்காவின் உறுதியான துடுப்பாட்ட வரிசை பல அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவது. கலிசை மையப் படுத்தியே உலகின் மிக அச்சுறுத்தலான துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்று தென் ஆபிரிக்காவினால் கட்டிஎழுப்பபட்டுள்ளது.

ஆனாலும் இருநூறு ஓட்டங்கள் என்ற மெயில் கல்லைத் தாண்ட முடியாமல் கலிஸ் அடிக்கடி தடுக்கி வீழ்ந்துகொண்டே இருந்தார். இவருக்குப் பின் வந்த அம்லா,வில்லியர்ஸ் கூட இரட்டை சதம் பெற்றுள்ள நேரம், கலிஸின் இமாலய சாதனைகளுக்கு இப்போது இந்த இரட்டை சதம் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

அவர் இந்த மைல் கல்லை எட்டும்வரை தாம் மிகுந்த பதற்றத்தோடு இருந்தததாக ஸ்மித் கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் நேரத்திலேயே அவரது சத சாதனையை ரிக்கி பொன்டிங் முறியடிப்பார் என நாம் நம்பியிருந்தோம். ஒரே சதம் இருவருக்கிடையில் வித்தியாசமாக இருந்தது. இப்போது சச்சின் 50 சதங்கள்,பொன்டிங் 39,கலிஸ் 38....

அதிலும் கலிஸின் இருநூறு ஓட்டங்கள் பெறப்பட்டதும் வேகமாகவே.. இது தென் ஆப்ரிக்கா இந்தியா மீது மேலும் அழுத்ங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமைந்தது. பந்துவீச்சாளருக்குத் தாராளமாக நேரம் இருந்தது.

அம்லா இன்னொரு கலிஸ்.. கடந்த வருடத்திலிருந்து ஓட்டங்களைக் குவிக்கும் இயந்திரமாக தென் ஆபிரிக்காவுக்கு மாறியுள்ளார்.. ஒரு நாள்,டெஸ்ட் இரண்டிலும் ஓட்ட மழை பொழிகிறார்.

அடுத்த தென் ஆபிரிக்கத் தலைவர் என்றும் ஸ்மித்தின் செல்ல நண்பன் என்றும் வர்ணிக்கப்படும் டீ வில்லியர்ஸ வந்து நிகழ்த்தியது கொலை வெறித் தாண்டவம்.ஐந்து சிக்சர்களுடன்,அவ்வளவு நேரம் கொஞ்சம் ஆறுதலாக ஆடிவந்த கலிசையும் வேகமாக ஆட ஊக்கப் படுத்தி(கலிசும் ஐந்து சிக்சர்கள் அடித்தார்) இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார்.

அம்லா - கலிஸ் இணைப்பாட்டம் 230 ஓட்டங்கள் - 52 ஓவர்களில்.
கலிஸ் - டீ வில்லியர்ஸ் இணைப்பாட்டம் 224 ஓட்டங்கள் - 38 ஓவர்களில்

டீ விலியர்சின் சதம் டெஸ்ட் போட்டியொன்றில் தென் ஆபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற வேகமான சதமாகும்.

 இந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸின் முக்கிய இணைப்பாட்டமான சச்சின் - தோனி இணைப்பாட்டம் இவற்றுக்குக் கொஞ்சம் ஈடு கொடுப்பதாக அமைந்தது.ஆனாலும் இன்னும் அதிக ஓட்டங்கள் தேவைப்பட்டன..
41 ஓவர்களில் 177 ஓட்டங்கள்.

இந்தியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஒரு சில பந்துகள் சிறப்பாக வீசினாலும் இன்னும் வளரவேண்டி இருக்கிறது. சாகீர் கான் காயத்திலிருந்து முற்றாகக் குணமடைந்துள்ளார் என்று சொல்லப்படுவதால் அவரது இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான வருகை இந்தியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்க்சில் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிக சிரமப்பட்டுத் தான் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டி இருந்தது. ஆனாலும் இந்தியா அதிரடியாக ஆடியபோதும் 128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்.

முதலாம் இனிங்க்சில் 484 ஓட்டங்கள் பின்னிலையில் இருப்பதென்பது தரும் தாக்கம் வெற்றியைப் பற்றியோ, ஏன் சமநிலை பெறுவதைப் பற்றியோ கூட ச்நிதிக்க விடாது. இது ஓரளவு மனதை இலகுவாக்கின்ற விடயமும் கூட..
தலைக்கு மேலே பொய் விட்டது.. இனி சாண் என்ன முழம் என்ன என்ற நிலை தான்..

இதனால் தான் சேவாக்,கம்பீர் ஆகியோர் அதிரடியை ஆரம்பித்தார்கள். லக்ஸ்மன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இன்னும் கொஞ்சம் நின்று பிடித்திருந்தால் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்க்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.
 ரெய்னாவின் இடம் அடுத்த போட்டியுடனே மாற்றப்படுமா? அப்படியாக இருந்தால் யார்?
அடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது.
லக்ஸ்மன் அனுவபத்தினால் அடுத்த போட்டியில் திருந்துவாரா பார்க்கலாம்.

சச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி?
என்ன சாதனை இவரிடம் இல்லை? இவரோடு போட்டிபோட்டு வந்த பொன்டிங்கின் இடம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகள் விடாமல் ஆடிய களைப்பேதும் இல்லாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சதம் அடித்து அசரவைக்கிறார்.
சச்சின்+சதம் = அடிக்கடி பார்க்கும் காட்சி 

இவர் இந்த சூழ்நிலையில் சதம் அடித்து தனது மைல் கல்லை நிலைநாட்டியது ஆச்சரியமே இல்லாத விஷயம். சச்சினும் இதை ஒரு பெரிய சாதனையாக (பெருந்தன்மையுடன்) கருதவில்லை என்கிறார்.
ஆனால் 37 வயததைத் தாண்டிய ஒருவர் ஐம்பது டெஸ்ட் சதங்களைப் பெற்றும் 14500 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றும் இன்னும் இளையவர்களை விடத் துடிப்போடு ஆடிக் கொண்டிருப்பதானது இமாலய சாதனை தானே?

சாதனைகள் மட்டுமே சச்சினின் இலக்கு என்ற விமர்சனங்களுக்கும் சச்சின் பதில் சொல்லி இருக்கிறார்
"சாதனைகள் படைப்பது மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதிலிருந்து எப்போதோ நின்றிருப்பேன்"

2009 இன் ஆரம்பத்திலிருந்து சச்சின் இருப்பது அசுர formஇல்.. 19 போட்டிகள், 30 இன்னிங்க்சில் 80.15 என்ற சராசரியில்
2084 ஓட்டங்கள். 9 சதங்கள்,8 அரைச் சதங்கள்.. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..

ஓய்வு பெற முதல்(ஓய்வு எப்போது என்று யாராவது கேட்பீங்களா?) இன்னும் எத்தனை சாதனைகள்+சதங்களோ?

ஆனால் தென் ஆபிரிக்காவில் வைத்து தொடரை விடுங்கள்,ஒரு டெஸ்டையாவது வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான தனியாட்டம் மட்டும் போதாது.
அணியில் மற்றத் துடுப்பாட்ட வீரர்களும் தாக்குப் பிடிக்கவேண்டும்.
தோனியின் 90 ஓட்டங்கள் முக்கியமானவை.ஆனாலும் ஒரு நாள் வேகத்தில் ஆடிய அவர் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கவேண்டும். சச்சின் மேலும் குற்றம் இருக்கிறது.
தோனியுடன் ஆடும்போது அவர் பந்தை எதிர்கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்தது பரவாயில்லை. ஆனால் தோனியின் விக்கெட் போனபிறகு ஏனைய மூன்று விக்கெட்டுக்களையும் இந்தியா துரிதமாக இழந்த நேரம் சச்சின் டெண்டுல்கர் strikeஐத் தான் எடுத்து பொறுப்புணர்வுடன் ஆடியிருக்க வேண்டும். இறுதி மூன்று வீரர்களுடன் சச்சின் புரிந்த இணைப்பாட்டம் வெறும் 59 பந்துகள்..
இதில் சச்சின் எதிர்கொண்டது 29 பந்துகளே.. இந்தியா இன்னும் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.

 இந்தியா நீண்ட காலமாகவே ஒரு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தடுமாறியே வந்திருக்கிறது.. (உள்நாட்டிலும் கூட) அதே போல, போகப் போக இதுவும் சரியாகிவிடும் என்று இருந்துவிட முடியாது..
தென் ஆபிரிக்கர்கள் அசுரவெறியுடனும் வேகத்துடனும் இருக்கிறார்கள்.
ஸ்டேய்நும் மோர்க்கேலும் உருட்டி எடுத்து விடுவார்கள் போலத் தான் தெரிகிறது..

இன்னொரு முக்கிய விஷயம் - இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும்.
இப்போதிருக்கும் நிலையில் சாகீர்+சச்சின்+சேவாக் சேர்ந்து ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே இது சாத்தியம் எனத் தோன்றுகிறது.


21 comments:

Vathees Varunan said...

ஆஹா..ஆஹா.. தொடர்ந்து கிரிக்ட் பதிவு...சாதனைகளின் மறுபெயர் சச்சின் என்றும்கூறலாம் போலிருக்கிறதே...

Vijayakanth said...

wait pannunga.... namma pasangalukku starting trouble.. but poga poga withthaiya kaattuwaanga!!!

கன்கொன் || Kangon said...

மீண்டும் அருமையான அலசல்...

ஒரே ஒரு இடத்தைத் தவிர பதிவு முழுக்க ஒன்றுபடுகிறேன்.

// அடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது. //

இதைத் தவிர பதிவை முழுதுமாக ஏற்றுக் கொள்கிறேன். :-)

மீண்டும் கிறிக்கற் பதிவுகள் வருவது மகிழ்ச்சி. ;-)

ம.தி.சுதா said...

pls mait..

Anonymous said...

Sudu soru...:)

Subankan said...

சச்சின் - இமயம்
இந்திய தோல்வி - எதிர்பார்த்த விடயம்தானே?

ம.தி.சுதா said...

////128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்////

ஆமாம் பல நல்ல படிப்பினைகளை காடட்டியது

////சச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி?
என்ன சாதனை இவரிடம் இல்லை?////

உண்மையாகவே... பல விமர்சனங்கள் இரந்தாலும் சாதனைக்காகவே அவர் வயது இளமையாகிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

K. Sethu | கா. சேது said...

//இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே//

ஓமோம் பல வேதாளங்கள் தத்தம் முருங்கைமரங்களில் ஏறிக்கொண்டன.

~சேது

Jana said...

ஆஹா... இந்தியா தோற்க வேணும் ஆனால் சச்சின் அடிக்கவேண்டும் என்று என்போல விரும்புவர்களின் விருப்பத்திற்கான போட்டி இது!!

யோ வொய்ஸ் (யோகா) said...

போட்டி முடிவு எதிர்பார்த்ததுதான், சச்சினுக்கு வாழ்த்துக்கள். நான் சச்சினின் ரசிகனில்லை என்றாலும் சச்சினை சிறு வயதிலிருந்தே ரசித்து வந்திருக்கிறேன். சச்சின் தனியே அணிக்கு வெற்றியை தேடிதரவியலாது, மற்றைய வீரர்களும் சிறப்பாக விளையாண்டால்தான் இந்தியா வெல்ல முடியும். 20-20, மற்றும் ஒரு தின போட்டியை போன்று One Man Show மூலம் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியாது என இந்திய வீரர்கள் உணர வேண்டும்

இந்தியாவின் பலவீனம் பந்துவீச்சுதான், முக்கியமாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசாதது இந்தியாவுக்கு ஒரு பெரும் பிரச்சினை, 5 நாள் ஆட்டங்களுக்கு சுழல் பந்து வீச்சாளர்களிடம் பார்க்க கூடிய Flight & Loop இவரிடம் இருக்கவில்லை. என்னை பொருத்தவரை பாஜியைவிட ஓஜா சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

AB de Villers ஆடிய ஆட்டம் 20-20 போட்டியை போன்றிருந்தது, எந்த வித Pressure உம் இல்லாமல் இந்திய பந்து வீச்சாளர்களை அடித்து நொருக்கினார். இவ்வருடம் நான் மிகவும் ரசித்த டெஸ்ட் இனிங்சுகளில் இதுவும் ஒன்று

Unknown said...

அருமையான அலசல் அண்ணே..
சொல்ல ஏதும் இல்லை!

நிரூஜா said...

கிறிக்கட் என்றால் நீங்க நல்லா எழுதியிருக்கீங்க எண்டு நான் சொல்லியா தெரிய வேணும்.

யாருக்காவது சச்சினை நேரடியாக சந்திக்க கிடைச்சா, என்ட சார்பில எவ்வளவு கெட்டவார்த்தையால திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த எல்லா மொழியிலயும் திட்டுங்க.

ங்கொய்யால..., 20 வருசத்துக்கு மேல கிரிகட் விளையாடுற ஒருத்தரை போலவா விளையாடினார். குறைஞ்சது 25 ஓட்டங்களையாவது எடுத்திருக்கலாமே.

Kiruthigan said...

நல்ல பதிவு அண்ணா
அலசல் அருமை

Bavan said...

நல்ல பதிவு அண்ணா, அருமையான அலசல்
இந்தியா தோற்க வேணும் ஆனால் சச்சின் அடிக்கவேண்டும், இரண்டுமே நடந்தது சந்தோஷம்..:D

கார்த்தி said...

சச்சின் கடைசிநேரத்தில் பொறுப்புடன் தானே strikeகளை எடுக்காமை பற்றி பலரும் குறைபட்டுக்கொண்டனர். சிலர் இதற்கும் மேல் சென்று அவர் சாதனைக்காக மட்டுமே விளையாடுறார் என்று கூடச்சொல்லுமளவிற்கு இது பெரிது படுத்தப்பட்டுவிட்டது..

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே..,

இந்திய அணி இது போன்ற பெரிய தொடர்களுக்குச் செல்லும் போது பயிற்சி அனுபவத்தைப் பெறுவது அவசியம். அதன் பிறகு கட்டாயமாக குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பது என்ன?...

பி.சி.சி.ஐ. ஆதிக்கம் செலுத்தும் ஐ.சி.சி. எதிர்கால கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டங்களில் வியாபார எண்ணங்கள் தவிர கிரிக்கெட் நலன்கள் சுத்தமாக இல்லை எனலாம்.

ஆஸ்திரேலியாவில் முதலிரண்டு டெஸ்டுகளில் கலக்கிய இங்கிலாந்து ஆஷஸ் தொடருக்கு முன் 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது இங்கு கவனிக்க வேண்டியது.

வார்ம் அப் போட்டிகள் இல்லாவிட்டால் - சேவாக், கம்பீர்,டிராவிட்,சச்சின்,லக்ஸ்மன்,தோனி,ரெய்னா... என்று நீண்டுகொண்டிருக்கும் பாட்டிங் சூரப்புலிகள் 130 ரன்களை எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

இப்போது ஒரு பயிற்சி ஆட்டம் முடிந்து இருக்கிறது.., அடுத்த போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வி இருக்காது..., இறுதி டெஸ்ட் டிரா ஆகலாம்.
இந்திய ரசிகர்கள் ஒரு தின போட்டியை எதிர்பார்க்கலாம்.

நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...,
அன்புடன்.ச.ரமேஷ்.

KANA VARO said...

எனக்கென்னமோ இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில காட்டின திறமையைப் பார்க்க இரண்டாவது டெஸ்ட்ல தென் ஆபிரிக்காக்கு கடும் அழுத்தத்தினை பிரயோகிப்பினம் போல கிடக்கு.. பார்ப்பம்.

ஷஹன்ஷா said...

டபுள் ஹட்றிக் கிரிக்கட் பதிவு...(ஒரே ஓவர்ல....)
பின்னீட்டீங்க....சபாஸ் அண்ணா


கடந்த வாரம் முதல் எங்களுக்கு காலம் சரியில்ல போல.....எங்கட team எல்லாம் தோற்குது....ம் ம் ம்

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்(bat,ball) படு மோசம்...முதல் நிலை அணியா இது என்ற கேள்வி கூட இடையில் வந்தது...(இப்ப கூட லைட்டா இருக்கு..!)

தெ.ஆபி பந்து வீச்சாளர்கள் இந்தியாவை சுருட்டிய விதம் அபாரம்(என் எதிரணி என்றாலும் பாராட்ட வேண்டும்)
அவர்களின் நுணுக்கத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தாமைதான் வருத்தம்..சகீா் இல்லாமையால் பந்து வீச்சு டிப்பாட்மென்ட் ஆடியதை தெளிவாக அவதானிக்க முடிந்தது...

சச்சின்-கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..ஃஃஃ

உண்மைதான்..


அடுத்த டெஸ்டில் ரெய்னா மாற்றப்படுவார் என எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை...பார்ப்போம்
சகீா் வருவது மகிழ்ச்சி...

பார்ப்போம் boxing day போட்டியை....-ரசிப்போம்...
விமர்சனங்களுடன் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.....

ஷஹன்ஷா said...

ஃஃஃயாருக்காவது சச்சினை நேரடியாக சந்திக்க கிடைச்சா, என்ட சார்பில எவ்வளவு கெட்டவார்த்தையால திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த எல்லா மொழியிலயும் திட்டுங்க.ஃஃஃ

வாழ்க சச்சின்......!!(இதுதான் இப்ப கெட்ட வார்த்தையாம்...அரசியல்ல பயன்படுத்துறதால...)இது எப்புடி....!!

sinmajan said...

இரண்டாவது வெற்றிக்கு தென்னாபிரிக்கா பகீரதப் பிரயர்த்தனம் எடுத்தேயாக வேண்டும்.இது போல் இலகுவில் கிடைக்காதென்று தான் நினைக்கிறேன்.
கமோன் கலிஸ்.. நான் ரசிக்கும் வீரர்களில் ஒருவர்

Philosophy Prabhakaran said...

// இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும் //

இந்தியாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றே நினைக்கிறேன்... எதோ ஒரு போட்டியில் சருக்கிவிட்டோம்... தொடர்ந்து இந்த நிலை நீடிக்காது...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner