
நேற்று க்ரைஸ்ட்சேர்ச்சில் சச்சினின் அபார ஆட்டம் பார்த்தபோது வியப்புத்தான் வந்தது! 20 வருடமாக இந்தத் துடுப்பாட்ட இயந்திரம் ஒயாமல் இயங்குகிறதே என்ன வரம் இது!
சிங்கத்துக்கு வயதேறினாலும் இன்னமும் கம்பீரமும்,கர்ஜனையும்,ராஜ கர்வமும் குறையவே இல்லை.. எத்தனை புதிய match winnerகள் வந்தாலும் சச்சின் சச்சின் தான்.. அவர் full formஇல் உள்ளபோது யாரும் அவர் பின்னால் தான்.. நேற்றும் இது நிரூபணமானது..
நேற்று சச்சினின் 43வது ஒருநாள் சதம்!
1989இலிருந்து கிரிக்கெட்டின் பிரிக்க முடியாத ஒரங்கமாக மாறியிருப்பவர் சச்சின். சனத் ஜெயசூரியவைத் தவிர இவர் மட்டுமே 90களுக்கு முன்னர் விளையாட ஆரம்பித்து இன்று வரை சர்வதேச கிரிக்கெட்டில் எஞ்சியுள்ள ஒரே ஒருவீரர்.இருவரும் விளையாட ஆரம்பித்தது '89இல்.
நேற்று சிக்ஸர்கள் மழையாகப் பொழிந்த போட்டி. பந்து வீச்சாளர்களைப் பரிதாபமாக்கி பல சாதனைகளைத் தவிடு பொடியாக்கியிருந்தாலும் வயது என்ற வரம்பையும் மீறி இளைய வீரர்களைப் பின்தள்ளி விசுவரூபம் எடுத்து நின்றவர் சச்சின்!
இரு அணிகளும் சேர்ந்து விளாசியது போட்டியில் மொத்தமாக 31 சிக்ஸர்கள்.
வருபவர் போனவர் எல்லாமே சிக்ஸரைப் பொழிந்தார்கள் - மைதானம் அவ்வளவு சின்னதென்றால் வேறு என்னதான் முடியாது) ICC இனியாவது இப்படிப்பட்ட மைதானங்களை Twenty – 20 தவிர்ந்த ஏனைய சர்வதேசப் போட்டிகளுக்கு பயன்படுத்துவதைத் தடைசெய்யவேண்டும்.
அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டமழை பொழிந்த கராச்சி,பார்படோஸ் மைதானங்கள் பற்றியும் பரிசீலிக்கவே வேண்டும்.
இவ்வளவுக்கும் நான் சச்சினை நேற்று ரசித்தது அவர் தனது இனிங்சையும் இந்தியாவின் ஒட்டக் கட்டமைப்பையும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் நேற்று யுவராஜ்சிங்கோடு சேர்த்து கட்டியெழுப்பிய விதம். சேவாக் கம்பீரின் ஆட்டமிழப்பின் பின் அதிரடி யுவராஜிடன் இணைந்து கியர் மாற்றி சச்சின் வேகமெடுத்த விதம் புதிய ஆட்டக்காரர்கள் அனைவருக்குமே பாடம்.
சனிப் பிடித்த தசைப்பிடிப்பு மட்டும் வராதிருந்தால் சயீட் அன்வரின் உலக சாதனை (194) நிச்சயம் தவிடுபொடியாகியிருக்கும்.
அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக நியூசிலாந்தில் ஆரம்பித்த தனது சாதனைப் பயணத்தில் இதுவரை காலமும் நியூசிலாந்தில் பெறமுடியாதிருந்த ஒருநாள் சதத்தை நேற்றுப் பெற்றுவிட்டார்.
டெஸ்ட் அந்தஸ்துடைய நாடுகளில் இன்னமும் மேற்கிந்தியத் தீவுகளில் மட்டுமே சச்சின் டெண்டுல்கார் சதம் அடிக்கவில்லை.
எனினும் நேற்று நியூசிலாந்து அணியும் விடாமல் துரத்தியடித்தது நியூசிலாந்தின் போராட்ட குணத்தைக் காட்டியது மட்டுமன்றி மைதானத்தில் கையாலாகத் தன்மையுமே காட்டியிருந்தது.
வந்து போன எல்லோரும் (நியூசிலாந்தின் பின்வரிசை வீரர்கள் மில்ஸ்,சௌதீ உட்பட)அடித்த சிக்ஸர்கள் சச்சினின் 163 என்ற அபார அடியைக் கொஞ்சம் தரம் குறைத்து விட்டதென்றே உணர்கிறேன்.
ஆனால் சச்சின் என்ற சிங்கம் இன்னும் சில ஆண்டுகள் கம்பீரம் குறையாமல் கர்ச்சிக்கும் என்றே தோன்றுகிறது! காயமும் உபாதைகளும் நேற்று போல் துரத்தித் தொல்லை தராவிட்டால்..
37 comments:
//ஆனால் சச்சின் என்ற சிங்கம் இன்னும் சில ஆண்டுகள் கம்பீரம் குறையாமல் கர்ச்சிக்கும் என்றே தோன்றுகிறது!//
:)))
//ஆனால் சச்சின் என்ற சிங்கம் இன்னும் சில ஆண்டுகள் கம்பீரம் குறையாமல் கர்ச்சிக்கும் என்றே தோன்றுகிறது! காயமும் உபாதைகளும் நேற்று போல் துரத்தித் தொல்லை தராவிட்டால்.. //
சந்தேகமில்லாமல் வழிமொழிகிறேன்!!!
அண்ணா கன்னுவைகதிங்க அண்ணா.............
அடுத்த சதம் இனி எப்பவோ..? :-)
தூக்கம் வரும் வரைக்கும் match பாத்தேன்..யுவராஜும் இவரும் வெளுத்து வாங்கும்போது நியுசீலாந்து மேல தான் பரிதாபம்..Paddle sweep என்ன, Late cuts என்ன..அப்பப்பா..கன நாளா காணாத சச்சின்..
// as he only (mostly) take runs where he does not need to take it.//
உதாரணம் தர முடியுமா...
சில முக்கியமான ஆட்டங்க்களில் சச்சின் சரியாக விளையாடவில்லைதான். ஆனால் எல்லா ஆட்டங்களிலும் அவர் விளையாடவேண்டும் என்று நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....
உதாரணமாக 2007 உலகக்கோப்பை ஃபைனல் வரை சென்றதற்கு அவரும் ஒரு காரணம், பாகிஸ்தானுடன் அவர் ஆடிய ஆட்டம் யாராலும் மறக்க முடியாது. அதே போல சார்ஜாவில் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டமும், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியத்தொடரில் அவரின் ஆட்டமும் மறக்க முடியாதவை.
நுட்பமான ஆட்டத்தில் சச்சின் சிறந்தவர். அவரின் ஆட்டம் பலருக்கு பாடமாக அமைவதுடன், யுவராஜ், ரோகித் போன்ற பலருக்கு குருவாக இருந்து வழிகாட்டவும் செய்கிறார்.
அவரது சேவை நாட்டிற்கும், கிரிக்கெட்டிற்கும் தேவை.
இலங்கையில் மூன்றுமுறை தவறாக ஆட்டமிழந்த போதும், அதை விமர்சிக்காத தன்மையும், புகழ்ச்சியின் மத்தியில் இருந்தும் அவரின் தனிமனித ஒழுக்கமும் அவரின் மேல் மற்ற நாட்டினருக்கும், ஆட்டககார்களுக்கும் மிகவும் மரியாதை வைத்துள்ளதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சச்சின் எப்போதும் ஹீரோதான் அண்ணா. சனியன் பிடிச்ச தசைப்பிடிப்பு வராவிட்டால் 200தாண்டியிருக்கும்
என்ன தான் இருந்தாலும் வயது தன் விளையாட்டை காட்டிவிட்டது பாத்திங்களோ. எண்டாலும் அபாரமான விளையாட்டு. ஆரம்ப துடுப்பாட்ட வீரனாக இறங்கி 45 ஓவர் மாட்டும் நிண்டதே பெரிய விசயம். வயது மட்டும் ஒரு 20+ எண்டால் நேற்று கதை வேற.
//How many ducks he got in crisis... //
Less than the centuries and fifties he has got in crisis
//I admire Lara... I will post abt his achievements later in my blog...//
Also please say whether World Cup Matches come under CRISIS as per your definition and the number of times Lara has taken his team to the next step in World Cup
// But, I need to discuss with my bro before that as I have forgotten everything for past two years...//
Great.
You have forgotten. But still you accuse a person
Tirumph,
You got to understand this when you are talking about sachin. This guy has played cricket internationally for the past 20+ years and that too for india. Do you understand on what it means ? You don't need to go any further than this to state his achievements.
And i like the way you tried to move the discussion away to lara and you got the response you were looking for too !
So, let me tell you this "Lara is class batsman" and i not going to argue with you about lara when the post is on sachin !
***
Because of Tendulkar I started hating Indian team and started supporting Pakistan
***
That is good..Isn't it ? pakistan was a wonderful team during that time. So, you got to like sachin for that atleast.
By the way, didn't sachin started playing left handed after 98 ?
//I know for the fact that he had been titled as "Kaalai vaarum kaaval theivam"//
அதற்கு statistics ஆதாரம் கேட்டேன்
இது வரை நீங்கள் ஒரு துரும்பை கூட தரவில்லை
//Lara messed up himself for long time but he achieved lot later.
I am positive abt all the statements...
But, I am not fit to list the reasons now. That's the truth. //
அப்பாடா. காரணங்களை கூற முடியாது என்று ஏற்றுக்கொண்டீர்கள். நிம்மதி
காரணங்கள் இருந்தால் தானே அதை கூற முடியும்.
//Even if I can after I confirm with thambu, I dont need to list here as I said "its just my opinion abt his batting (bowling/etc) dudes.. I didnt write to start an argument.. Just thought that I had a chance to show my disappointment over him.."//
உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம்
அல்லது
பிடிக்காமல் இருக்கலாம்
அது உங்களது “கருத்து” (தனிப்பட்ட உரிமை)
அவரது கவர் டிரைவ் மோசமாக இருக்கிறது என்றோ அல்லது அவர் அணிந்த டீ-சர்ட் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றோ கூற உங்களுக்கு முழு உரிமை உள்ளது
ஆனால் சச்சின் பற்றி தவறான “தகவல்” (ஆட்டம், ஒட்டம் விபரங்கள்) தருவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள்
//You wont understand how I felt disappointed as I had been watching him since 92. I was his crazy fan since childhood... He was one person who disappointed me so much than Lara...//
இது சரி. உங்களது தனிப்பட்ட உரிமை
ஆனால்
//I am not a big fan of sachin as he only (mostly) take runs where he does not need to take it. in crisis he just get very few runs and ditch the entire team. // இதை மறுக்கிறேன். இதற்கு நீங்கள் ஆதாரம் தர வேண்டும்.
இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. புரிந்து கொள்ளுங்கள்
உங்
//So, let me tell you this "Lara is class batsman" and i not going to argue with you about lara when the post is on sachin !//
லாரா Class ஆட்டக்காரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் சச்சினை விட அவர் அவரது அணிக்கு குறைவான ஆட்டங்களையே வென்று தந்துள்ளார் என்பது உண்மை. அதற்கு அவரது அணியின் பிற வீரர்கள் காரணம் என்பதும் உண்மை
சந்தேகம் இருந்தால் ஆட்ட விபரங்களை பாருங்கள்
//By the way, didn't sachin started playing left handed after 98 ?//
அட்ரா அட்ரா
புருனோ சச்சினைக் குறை சொன்னால் உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகின்றது ஆனால் நம்ம பண்ணைபுரத்து இசையரசரை நீங்கள் வாரோ வார் என்று தூற்றுவீர்கள். நடுநிலைமையாக பதிவிடுங்கள். உங்களுக்கு எப்படிச் இளையராஜாவைப் பிடிக்காதோ அப்படித்தான் அவருக்கு சச்சினைப் பிடிக்காது இதில் என்ன தப்பு. உங்களுக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா?
//புருனோ சச்சினைக் குறை சொன்னால் உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகின்றது//
சச்சினை பிடிப்பதும் பிடிக்காததும் உங்கள் சொந்த விஷயம்
ஆனால் அதற்காக தவறான தகவல்களை தரக்கூடாது.
// ஆனால் நம்ம பண்ணைபுரத்து இசையரசரை நீங்கள் வாரோ வார் என்று தூற்றுவீர்கள்.//
நன்றாக கவனியுங்கள். நான் அவரது இசையை எங்காவது விமர்சித்துள்ளேனே. அவர் ராகத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். சுருதி பேதம், தாளம் சரியில்லை என்று நான் கூறியிருக்கிறேனா.
நான் விமர்சித்தது அவரது நேர்மையை.
செய்யாத சாதனையை செய்ததாக கூறி 6 கோடி தமிழர்களை ஏமாற்றிய மோசடியை.
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
// நடுநிலைமையாக பதிவிடுங்கள். உங்களுக்கு எப்படிச் இளையராஜாவைப் பிடிக்காதோ அப்படித்தான் அவருக்கு சச்சினைப் பிடிக்காது இதில் என்ன தப்பு.//
தவறு கிடையாது. எனக்கு சச்சினை பிடிக்காது என்று கூற அவருக்கும், உங்களுக்கும், யாருக்கும் முழு உரிமை உள்ளது. அது கருத்து. ஆனால் அதற்கு நீங்கள் தவறான தகவல்களை தரக்கூடாது.
கருத்து வேறு. தகவல் வேறு
// உங்களுக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா?//
அனைவருக்குமே ஒரே நியாயம் தான். உங்களுக்குத்தான் கருத்திற்கும் தகவலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை
எப்படி நான் சச்சினின் சாதனைகளுக்கு ஆதாரம் தருகிறேனோ அது போல் இசையையோ இசைக்குறிப்பையோ வெளியிட்டால் பிரச்சனை தீர்ந்தது
தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)
தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.
உதாரணம் :
சரியான தகவல் - பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்
கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம். உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம். எனக்கு பிடிக்காமல் இருக்கலாம்
ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.
இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.
அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது
ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம். அதைத்தான் நான் செய்தேன்.
நான் உங்கள் அபிமான இசைக்கலைஞரின் நேர்மையை விமர்சித்தேன். நீங்கள் அதற்கு (நான் கூறியதற்கு எதிராக) ஆதாரம் தந்தால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள் தயார்
ஆதாரம் என்பது அந்த இசை / அல்லது அந்த இசைக்குறிப்பு வெளியாக வேண்டும்
அப்ப நம்பிக்கை -
உதாரணம்
நம்பிக்கை 1 - பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 - பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 - பெட்ரோல் விலை கூடும்
நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது
படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :)
// உங்களுக்கு எப்படிச் இளையராஜாவைப் பிடிக்காதோ//
எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும் :) :)
அவரது நேர்மை(?யின்மை) தான் பிரச்சனை :) :) :)
அதை விமர்சிக்க உரிமையில்லையா !!!
சச்சின் சீருந்திற்கு வரிவிலக்கு கோரியதை ஒருவர் விமர்சித்தால் அவருக்கு சச்சினின் ஆட்டம் பிடிக்க வில்லை என்று அர்த்தமா
அல்லது சச்சினின் ஆட்டம் பிடிக்கும் ஒருவர் அகர்கார் அணியில் இடம்பெற்றதை விமர்சிக்க கூடாதா
எ.கொ.ச.இது
லோஷன் அண்ணாச்சி
உங்கள் எரியாவை ரணகளமாக்கியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் !!!
Sachin Fanatic : Sachin is GOD. Agarkar is the best Indian Bowler.
Sachin Fan : Sachin is the best Batsman in World
Cricket Fan : Sachin is the best batsman in India, but his behaviour with non mumbai players needs to be question
Cricket Ignornant : Sachin has not won matches for India
sachina oru naalum saeed anwarda recorda break panna mudiyathu avar oru suyanalavathi ennakkavathu teamukkaka vilayadi irukkara avrukku eppavum avar carrier thaan mukkiyam... aanal saeed anwar entha nerathilum etharkum anjiyathillai
//sachina oru naalum saeed anwarda recorda break panna mudiyathu //
இந்த வருடமே சச்சின் ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அடைந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் :) :)
If Cricket is religion ...Sachin is GOD...--GREATEST FAN of...Guess....Sachin?? no no...
The Knight Rider, Prince of Kolkata , Bengal's Tiger , DADA , The One & Only DON in INDIAN CRICKET HISTORY, India's Most Successful Captain ..The Great Great Thalaivar Ganguly's Fan...
Thalaivar Ganguly Rocks..
Dear DADA,
IPL trophy s waitin 4 UUUU.....
Caome n collect it...
எனது நண்பன் தன்னை அடிக்கடி சிங்கத்தோடு ஒப்பிட்டுக்கொள்வான். அவனிடம் நான் அன்மையில் பார்த்த காதல்னா சும்மா இல்ல திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா பேசிய வசனத்தை இவ்வாறு குறிப்பிட்டேன்
ஒருவன் ; நாம சிங்கமுல்ல
ரவி கிருஷ்ணா ; உங்க அம்மா காட்டுக்கு போனாளா இல்ல சிங்கம் உங்க வீட்டுக்கு வந்திச்சா
இனிமேலு அந்த நண்பன் தன்னை சிங்கத்தோடு ஒப்பிடுவாங்கிறீங்க
யார் என்ன சொன்னாலும் சச்சின்..சச்சின் தான், பல ஆட்டக்காரர்களுக்கு மானசீக குரு அவர்தான்.
நல்ல பதிவு.
89 இல் இருந்து இன்று வரை சச்சின் ரசிகன்.
வேந்தன்- நன்றி வருகைக்கு..
Subankan said...
//ஆனால் சச்சின் என்ற சிங்கம் இன்னும் சில ஆண்டுகள் கம்பீரம் குறையாமல் கர்ச்சிக்கும் என்றே தோன்றுகிறது! காயமும் உபாதைகளும் நேற்று போல் துரத்தித் தொல்லை தராவிட்டால்.. //
சந்தேகமில்லாமல் வழிமொழிகிறேன்!!!
:)
Nimalesh said...
அண்ணா கன்னுவைகதிங்க அண்ணா.............//
சொன்னமாதிரியே தசைப்பிடிப்பு பாடாய்ப்படுத்துதே.. கண்ணு வச்சிட்டனோ? ஆனால் இன்று ஆரம்பித்த டெஸ்டில் அவர் விளையாடுவது ஆறுதல் & மகிழ்ச்சி
’டொன்’ லீ said...
அடுத்த சதம் இனி எப்பவோ..? :-)//
டெஸ்டிலா ஒருநாளிலா? வெகுவிரைவில் என்று மனம் சொன்னாலும் நியூசிலாந்தில் இனி வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
தியாகி said...
தூக்கம் வரும் வரைக்கும் match பாத்தேன்..யுவராஜும் இவரும் வெளுத்து வாங்கும்போது நியுசீலாந்து மேல தான் பரிதாபம்..Paddle sweep என்ன, Late cuts என்ன..அப்பப்பா..கன நாளா காணாத சச்சின்..//
உண்மை உண்மை துறுதுறு சச்சின் துடிப்பான சச்சின் வழமையாக சச்சினின் சதங்கள் normal - இந்த சதம் கொஞ்சம் rare & special
Triumph said...
once, (i cant remember the magazine yaa) they gave nick names for the indian cricket players. you know what they had given for sachin. "Poruththa neerathil kaalai vaarum kaaval theivam" hehe... //
சச்சின் சிலநேரம் அவ்வாறு காலைவாரி விட்டாலும் பெரும்பாலான நேரங்களில் குறிப்பாக அண்மைக்காலம் வரை சச்சின் தான் இந்தியாவின் வெற்றிகளின் ஒற்றைத்தூண் என்பதை எல்லோரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
// am not a big fan of sachin..as he only (mostly) take runs where he does not need to take it. in crisis he just get very few runs and ditch the entire team. //
I am not a bit fan of Sachin too.
சச்சின் டெஸ்ட் போட்டிகளின் 4வது இனிங்சில் பெரிதாக ஒட்டங்கள் குவிப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தும் உண்டு. அதற்கெல்லாம் சென்னை டெஸ்ட்டில் இங்கிலாந்தைத் துவைத்தாரே?
புருனோ Bruno .. நன்றி வருகைக்கு.
Anonymous said...
சில முக்கியமான ஆட்டங்க்களில் சச்சின் சரியாக விளையாடவில்லைதான். ஆனால் எல்லா ஆட்டங்களிலும் அவர் விளையாடவேண்டும் என்று நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....
உதாரணமாக 2007 உலகக்கோப்பை ஃபைனல் வரை சென்றதற்கு அவரும் ஒரு காரணம், பாகிஸ்தானுடன் அவர் ஆடிய ஆட்டம் யாராலும் மறக்க முடியாது. அதே போல சார்ஜாவில் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டமும், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியத்தொடரில் அவரின் ஆட்டமும் மறக்க முடியாதவை..//
உங்களது அனேகமான கருத்தக்களை ஆமோதிக்கிறேன். அது 2003 உலகக்கிண்ணம் என்பதே சரி.
sshathiesh said...
சச்சின் எப்போதும் ஹீரோதான் அண்ணா. சனியன் பிடிச்ச தசைப்பிடிப்பு வராவிட்டால் 200தாண்டியிருக்கும்//
ம்ம்..வயதேறும்போது இவற்றையும் போராடி வெல்லவேண்டும்.
sutharshan said...
என்ன தான் இருந்தாலும் வயது தன் விளையாட்டை காட்டிவிட்டது பாத்திங்களோ. எண்டாலும் அபாரமான விளையாட்டு. ஆரம்ப துடுப்பாட்ட வீரனாக இறங்கி 45 ஓவர் மாட்டும் நிண்டதே பெரிய விசயம். வயது மட்டும் ஒரு 20+ எண்டால் நேற்று கதை வேற.//
உண்மைதான்! நியூசிலாந்தின் இதமான காலநிலை வியர்வை வெளியேற்றத்தைத் தராததும் சச்சின் நீண்டநேரம் ஆடுகளத்தில் நின்றதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் அன்றைய பல அடிகள் 15 வருடங்களுக்கு முந்தைய சச்சினைக் கண்முன் கொண்டுவந்தன.
sachin could be the one and only professional cricketer of 21st century..
sachin could be the one and only professional cricketer of 21st century..
Post a Comment