January 31, 2011

#tnfisherman & இலங்கை மீனவர்கள்...

தமிழக மீனவர் கொல்லப்படுவது நிறுத்தப்படவே வேண்டும்.எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
எங்கள் சகோதர்கள் இங்கே இறந்தபோது எமக்காக அழுதவர்கள் இறக்கையில் நாம் கண்ணீர் சிந்தாவிடில் மனிதரும் இல்லை;தமிழரும் இல்லை.






ஆனால் இந்தக் கொலைகள் பற்றிய மாபெரும் எழுச்சியில் இலங்கைத் தமிழ் மீனவர்களின் நாலாபக்க பிரச்சினைகளும் மூழ்கிப் போகும் அபாயமும் இருப்பதை மறக்காதீர்.
ஆழ்கடல் மீன்பிடித் தடை தற்போது குறைந்து, வலைகள் முன்பு பறிக்கப்பட்டு இப்போது கொஞ்சம் மூச்சுவிட ஆரம்பிக்கும் நேரம் இந்தியப் பெரிய மீன்பிடிப் படகுகளினால் வலைகள் அறுக்கப்பட்ட வறிய இலங்கை மீனவருக்காகக் குரல் கொடுக்க யார் உள்ளார்கள்?

அங்கே கொலைகள்.. இங்கே எம் மீனவர்களின் தற்கொலைகள்.. 

கொலைகளை நிறுத்த அழுத்தம் கொடுப்போம்..
தத்தம் எல்லைகளை யாரும் மீறாமலும் பார்த்துக் கொள்வோம்.

உண்மையை சொன்னால் துரோகி என்னும் சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும் தெரிந்த விஷயங்களை யதார்த்தமாக சொல்லவே இந்தப் பதிவு...

அண்மையில் சமூக வலைத்தளங்களில் இந்திய மீனவர்களின் படுகொலைகள் பற்றிப் பிரம்மாண்டமாக எழுந்த எதிர்ப்பலைகளால் அந்த மீனவர்களுக்கு நல்ல விடிவு கிடைத்தால் மகிழ்ச்சியே.. அதே போல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது இலங்கையின் அப்பாவி-ஆதரவற்ற மீனவர்களுக்கும் நல்லது நடக்கட்டும்.

அரசியல்வாதிகள் திடீரென விழித்தது என் என்று எல்லோருக்குமே தெரியும்.. ஆனால் வலையுலக எழுத்தாள நண்பர்களின் #tnfisherman ஒற்றுமையும் மாபெரும் எழுச்சியும் பெருமை தருகிறது.
ஆனால் இங்கேயும் தாமதம் ஏன் என்ற கேள்வி எழுகிறது? ஐந்நூறு பேர் இறந்த பிறகுதான் இத்தனை பேரின் கண்களும் விழித்தனவா?


அடுத்தது அடுத்த வல்லரசு இந்தியா தன் கடற்படையையும் ஆதிக்கத்தையும் இவ்வளவு நாளும் இப்போதும் கூட இந்த விடயத்தில் ஈடுபடுத்தாமல். குறைந்தபட்சம் குரலையும் கூட எழுப்பாமல் இருந்துவிட்டு இப்போது பதறுவது குரூர நகைப்பாக இல்லை? 


இன்னும் இலங்கையைக் கண்டிப்பதாக இல்லை.. ராஜதந்திரம் என்பது இது தானோ?
அரசியலில் இவையும் சகஜம் எனும்போது கேவலமாக உள்ளது.


இதே வேளையில் தான் பலரும் அறியாமல்/அறிய விரும்பாமல் இருக்கும் எம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் அவலங்களையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

வலையுலக நண்பர்கள் சிலர் தத்தம் சமூகத் தளங்களில் முன்வைத்த கருத்துக்களை அவர்களின் அனுமதியில்லாமலேயே இங்கே பயன்படுத்திக் கொள்கிறேன்.


‎"இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன" - http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971





‎#tnfisherman மீனவர்கள் தாக்கப்டுவது கண்டிக்கவேண்டியதுதான் அதேபோல அவர்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்காக குரல்கொடுக்க யாருமில்லை
Yesterday at 11:16am via Seesmic Web ·  ·  · Share

    • Gopikrishna Kanagalingam அது முக்கியமானது. இப்போது எழுந்திருக்கும் ஆதரவு அலை மூலம் அவர்களது பிழைகள் மறைக்கப்படக் கூடாது.
      Yesterday at 11:21am ·  ·  3 people

    • Gopikrishna Kanagalingam ஆனால் நான் கண்டவரை இலங்கை இராணுவத்தை எதிர்க்கிறோம் என் பார்வையில் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கு எதிராக செய்தவை எதுவும் தமிழ் ஊடகங்களால் மக்ககளுக்கு கொண்டுசேர்க்கப்படவில்லை. மாறாக அவர்களது பிழைகள் நியாயப்படுத்தப்பட்டு அப்பாவி இலங்கை மீனவர்களின் பிரச்சினை மறைக்கப்பட்டது.
      Yesterday at 11:24am ·  ·  5 people

    • Vathees Varunan உண்மைதான் கோபி பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்வார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்களா ஒருபோதும் இல்லை மாறாக துரோகி பட்டம்தான் கட்டுவார்கள்
      23 hours ago ·  ·  2 people

    • Vathees Varunan ‎#slfisherman
      23 hours ago · 

    • Vathees Varunan தமிழ் ஊடகங்கள் இலங்கைமீனவர்களுடை பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்யதின் காரணமாகவே இந்திய தமிழர்களுக்கு பல விடயங்கள் தெரியமலே போய்விட்டது
      23 hours ago · 

    • Carthigan Gopalasingam வதீஸ் கோபி கூறுவதை நானும் வழிமொழிகிறேன்!
      23 hours ago ·  ·  1 person

    • Nirshan Ramanujam ‎"இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன" - http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971
      20 hours ago ·  ·  1 person

    • Ajanthan Ajan 
      இலங்கை மீனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை வருமானம், தொழில்.ஆனால் தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை உயிர்.
      இரண்டுக்கும் முதலில் வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.
      கடல் எல்லை தாண்டினால் சுடலாம், சுடுவது எந்த நாட்டிலும் இல்லை.
      முதலில் உயிர் பிரச்சனைக்கு தீர்வு காணபட்டால் அடுத்தது இலங்கை மீனவ பிரச்சனையும் இலகுவில் தீர்க்கலாம்.அதை செய்யவேண்டியது இரு அரசுகளும்.
      அதைவிட்டு இரு அரசும் பொறுப்பற்ற வகையில் தட்டிகளிப்பதும், கொலைகளை இருட்டடிப்பது செய்வதும் பிரச்னைக்கு தீர்வு தராது.
      இலங்கை மீனவ பிரச்சனை இலங்கை ஊடகங்கள் ஏன் சொல்லுவது இல்லை ? நான் ஏன்டா நிர்சன் எழுதியதை தவிர வேறு எங்கும் பார்க்க வில்லை.
      பல ஆண்டு ஊடக பணியில் இருக்கும் உங்களை போன்றோரே அதை செய்வது இல்லை காரணம் உயிர் அச்சுறுத்தல்.இது இலங்கை திரு நாட்டில் இருக்கும் நிலைமை.
      இலங்கை மீனவ பிரச்சனை தொடர்பான செய்தியை வெளியே கொண்டு வருவது இலங்கை அரசின் பொறுப்பு, இலங்கை ஊடகத்தின் பொறுப்பு.
      அங்கே சாவதும் தமிழன், இங்கு வருமானம் இன்றி கஷ்ட படுவதும் தமிழன். அகவே வாய் முடி, நாங்கள் (இலங்கை அரசு) சுடவில்லை, இலங்கை மீனவ பிரச்சனைக்கு குழு அமைகிறோம் எண்டு எல்லாம் சொல்லி கொண்டு செல்ல வேண்டியது தான்.என்றாவது இலங்கை அரசு இந்திய அரசுடன் இலங்கை மீனவ பிரச்சனை தொடர்ப பேசியதாக செய்தி உண்ட ? இருக்காது.
      தமிழக தமிழர்களும் தெரியும் இலங்கை மீனவ பிரச்சனைகள் தெரியும்.
      தமிழக மீன்வகர்களுக்கு தெரியாது என்பது உங்கட அறியாமை காட்டுகிறது வை.
      அவர்களும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தான்போராடுகிறார்கள்.தமிழக, இந்திய அரசுக்கு, அழுத்தங்கள் கொடுகிறார்கள் அவர்கள் எந்த ஒரு ஆக்க பூர்வமான நடவடிக்கை, ஊடக தணிக்கை செய்ததாலே #tnfisherman என்று ட்விட்டர்'ல் பரப்புரை போராட்டத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
      அதை விளங்கி கொள்ளுங்கோ.

      20 hours ago · 

    • Gopikrishna Kanagalingam 
      ‎@நிர்ஷன் அண்ணா:
      இலங்கை மீனவர்களுககு எத்தனை காலமாக இந்தப் பிரச்சினை இருக்கிறது?
      இதுவரை எத்தனை முறை செய்திகளில் அந்தப்பிரச்சினைகள் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டிருக்கின்றன?
      எங்களுக்குத் தேவையே இல்லாத "விஜய் அரசியலுக்கு வருவாரா?", "ராகுல் காந்த...See More

      19 hours ago · 

    • Gopikrishna Kanagalingam 
      ‎@Ajanthan Ajan:
      யாரும் தமிழக மீனவர் தொடர்பான தாக்குதல்களை நியாயப்படுத்தவில்லை.


      ஆனால்,
      // இலங்கை மீனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை வருமானம், தொழில். //
      ...See More

      19 hours ago · 

    • Vathees Varunan 
      இங்கே மீண்டும் நான் கூறுகிறேன் மீனவர்கள் தாக்கப்படுவதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.


      நான் இதுதொடர்பாக விபரங்களை சேரித்தபோது கிடைத்த ஆச்சரியமான தகவல் என்னவெனில் இலங்கை கடற்படை தமிழ் பேசக்கூடிய ஒருவரை அழைத்துச்சென்று இந்தியமீனவர்களுக்கு தமிழி...See More

      18 hours ago · 

    • Mayooran Peri தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
      17 hours ago ·  ·  1 person

    • Mayooran Peri 
      இவர்கள் வடபகுதிக் கடலிலுள்ள மீன்களை சூறையாடுவது பற்றி ஏன் எவரும் கதைக்கின்றார்கள் இல்லை.


      இந்திய மீனவன் மன்னிக்கவும் தமிழக மீனவன் கொல்லப்படுவதை அவர்களது தலைவர் கருணாநிதியே கவனத்தில் எடுக்காதபோது நாம் ஏன் எடுக்கவேண்டும். உந்த தொப்புள் கொடி உறவுகள் எல்லாம் எப்பவோ முறிந்து முடிந்துபோனது.

      ஒரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்கும் தங்கள் சுயத்தை விற்கும் தமிழகத் தமிழர்கள் பற்றி கவலைப்படுவது மடத்தனம்.

      17 hours ago · 

    • Ajanthan Ajan 
      கோபி நான் சொன்னதை நீங்கள் ஒருக்கா மீண்டும் வாசிங்கோ.


      நான் நியாபடுத்தியதாக சொல்லவில்லை.
      தம்பட்டம் அடிக்கும் இரு அரசுகளுக்கும் தமிழ் சனம் சாவில் பொருப்பற்ற வகையில் நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதையே சொல்லி இருக்கிறேன்.


      ...See More

      17 hours ago · 

    • Gopikrishna Kanagalingam 
      நான் சொன்னதை திரும்ப வாசியுங்கோ.


      நான் சொன்னது "கடற்படை(?) மீனவன சுடுறதுக்கும், அதே மீனவன் இன்னொரு மீனவன்ர வயிற்றில அடிக்கிறதுக்கும்" வித்தியாசம் இல்லை எண்டு.


      அந்த மீனவனுக்கு வலையின்ர முக்கியத்துவம், அவசியம் தெரிய வேணாமா?
      ...See More

      16 hours ago ·  ·  2 people

    • Nirshan Ramanujam 
      கோபி,
      நியாயம்தான். இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நமது ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எங்களால் முடிந்தளவு பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறோம். ஒரு சில செய்திகள்கடற்படையினருக்குச் சாதகமாக இருந்தது என்பதற்காக எங்களது வாசகர்களிடமிருந்து நாம் வாங்கிக்கட்டிக்கொண்டது ஏராளம்.

      ஆனால் உண்மையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. பருத்தித்துறை – முனை மீனவர்களிடம் நான் சுமார் 2 மணிநேரங்கள் பேசினேன். அவர்களுடன் கடலுக்குச் சென்று ஆறுதலாக எல்லா விடயங்களையும் கேட்டறிந்துகொண்டேன். ஆனால் தைரியமாக எழுதும் அளவுக்கு ஜனநாயகம் இடம்கொடுக்கவில்லை.

      தென்னிலங்கையிலிருந்து முனை பகுதிக்கு வரும் சிங்கள மீனவர்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி மீன்பிடித்துச் செல்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் நமது இன மக்களாலே பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். எனது கட்டுரையை வாசித்துப்பார்த்தீர்களேயானால் மறைமுகமாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறேன்.

      தமிழ் ஊடகங்கள் சில வரையைறைகளைத் தாண்டிச் செல்ல அச்சம்கொண்டுள்ளன. புலனாய்வு இதழியல் என்பது தமிழ் ஊடகத்தில் இன்னும் சில வருடங்களில் இல்லாமல்போகலாம். மீனவர் விடயத்திலும் இவ்வாறான போக்குதான் காணப்படுகிறது.

      about an hour ago ·  ·  2 people





  • Muralitharan Mauran 
    இதில் வினவு தளத்தில் வந்த கட்டுரைக்கு கிருத்திகன் இட்ட பின்னூட்டம் முக்கியமானது.


    --


    கிருத்திகன்

    இந்தப் பிரச்சினையில் நீங்கள் அடிக்கடி சொல்கிற முதலாளிகள் தயவு நிறையவே இருக்கிறது என்பது உண்மை வினவு. என்னுடைய தந்தையாரிடம் சமீபத்தில் இன்பர்சிட்டிப் பகுதி மீனவர் ஒருவர் (யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்மித்த கடலோர ஊர் இன்பர்சிட்டி) சொன்னதாக ஒரு கருத்தைச் சொன்னார். ‘உண்மையிலேயே இந்திய மீனவகர்கள் கடல்தாண்டி வருகிறார்கள். பெரிய, நவீன இயந்திரப்படகுகள் மூலம் வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள் (மீன்களை அள்ளிக்கொண்டு செல்கிறார்கள் என்று வாசிக்கவும்). எங்கள் வயிற்றில் அடிப்பதோடு மட்டுமில்லாமல், எங்களை மிரட்டக்கூடச் செய்கிறார்கள். அவர்களை இராணுவம் சுடுவதில் தப்பில்லை’ என்பதாக அந்த மீனவர் சொல்லியிருக்கிறார்.

    12 hours ago ·  ·  1 person

  • Muralitharan Mauran 
    கிருத்திகன்


    இனி, சுடப்பட்ட தமிழக மீனவர்களைப் பார்ப்போம். யாருமே பெரிய, நவீன இயந்திரப்படகுகளில் வைத்துச் சுடப்படவில்லை. சின்னப் படகுகள் அல்லது கட்டுமரங்களில் வைத்துத்தான் சுடப்பட்டிருக்கிறார்கள். பெரிய நவீன இயந்திரப்படகுகளில் மீனள்ளி உழைத்துவாழ்ந்த கொழுத்த முதலைகளாயில்லாத அன்றாடங்காய்ச்சிகளே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அப்படியானால் ‘தங்களை மிரட்டிக்கூட மீன் பிடிக்கிறார்கள்’ என்று இன்பர்சிட்டி மீனவரால் சொல்லப்பட்ட அந்த பெரிய நவீன இயந்திரப்படகுக்காரர்கள் யார்? அவர்கள் ஏன் கொல்லப்படுவதில்லை? வெறுமனே வயிற்றுப்பிழைப்புக்காக மீன்பிடிப்பவர்கள் எல்லைதாண்டும்போது கடமையைச் செய்கிற இலங்கைக் கடற்படை ஏன் இந்த பெரிய நவீன இயந்திரப்படகுகளைக் கண்டுகொள்வதில்லை? அப்படியான படகுகள் பற்றிய செய்திகளே வருவதில்லையே, ஏன்? எங்கேயோ என்னவோ தவறு நடக்கிறது. அன்றாடங்காய்ச்சிகளான இலங்கை மீனவனும், இந்திய மீனவனும் வஞ்சிக்கப்படுகிறார்கள். யாரால்? எல்லைதாண்டி, இலங்கை மீனவனின் உழைப்பைத்திருடிவருகிற ‘அந்தக் குழு’ பாதுகாப்பாகத் திரிய, அடுத்தநாள் பிழைப்புக்கு வருபவர்களைக் கொல்கிற இலங்கை அரசு ‘சனநாயகச் சோசலிசக் குடியரசு’. அதை வேடிக்கை பார்ப்பது ‘அடுத்த வல்லரசு’.

    இந்தத் தகவலகள் எனக்குத் தரக்கூடிய பதில், ‘இந்தக் கொலைகள் கடல் எல்லை, இயற்கை வளம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு நடைபெறுவதில்லை. பாதுகாக்கப்படுவது பெருமுதலாளிகளின் நலன்கள் மட்டுமே’.

    12 hours ago ·  ·  4 people

  • Muralitharan Mauran 
    இலங்கை "சிங்கள" கடற்படை, தமிழக "தமிழ்" மீனவர்கள் என்று மட்டுமே பார்க்கப்படுகிற இந்தப்பிரச்சினை பற்றின பெரும் கோசத்தில் இந்தத்தாக்குதல்களின் பின்னாலிருக்கக்கூடிய அச்சுறுத்தும் வேறு அக்கறைகள், வேறு நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய சிறு ஊகம்தானும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது ஆபத்தானது.

    இதுவரை வந்தவற்றுள் வினவின் இந்தக்கட்டுரைதான் ஓரளவுக்காவது பரந்த தளத்தில் இப்பிரச்சினையைப் பார்க்க முயன்றிருக்கிறது [ http://www.vinavu.com/2011/01/28/tnfisherman/ ] ஆனால் இதுபற்றி இன்னும் விரிவாக கதைக்கப்படவேண்டும்.

    12 hours ago ·  ·  2 people

அறுக்கப்படும் வலைகளை விட இழக்கப்படும் உயிர்கள் முக்கியமானவையே.. ஆனாலும் அறுக்கப்படும் வலைகளாலும் இங்கே பலரது ஜீவனோபாயத்துக்கான வழிகள் பறிக்கப்படுகின்றன என்பதைக் கொஞ்சமாவது உலகுக்குக் கொண்டுவர என் பதிவு உதவினால் மகிழ்ச்சியே.


மீண்டும் அழுத்தமாகவே சொல்கிறேன்..


கொலைகளை நிறுத்த அழுத்தம் கொடுப்போம்..
தத்தம் எல்லைகளை யாரும் மீறி எளியவர் வயிற்றில் அடிக்காமலும் பார்த்துக் கொள்வோம்.

காரணம் பெரியண்ணன் அனுப்பும் பெரிய அக்கா நிருபமாவின் வருகையினால் எங்கள் சின்ன அண்ணர் உடனடியாக தன் தாக்குதல்களை நிறுத்தலாம். ஆனால் எம்மவரைக் கவனிக்கவும் குரல் கொடுக்கவும் யார் இருக்கார்?

# உணர்ச்சிவசப்படலைக் கடந்த ஆக்கபூர்வமான,யதார்த்த கருத்துகள்,விமர்சனங்களுக்குக் காத்திருக்கிறேன்.



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner