March 30, 2012

காத்திருந்த வெற்றி காலியில் கிடைத்தது


கொஞ்சக் காலமாக எந்த ஒரு இடுகையும் இடவில்லை; அதைவிட அதிக காலமாக கிரிக்கெட் இடுகைகள் இடவில்லை.
ஏன் என்று என்னையே நான் கேட்டுப் பார்த்தேன்.. பிசி? ம்ம் கொஞ்சம்... அலுப்பு.. ம்ம் அதுவும் தான்..
என்னத்தை எழுதி என்னத்தை.. அதான் ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் போட்டிகள் நடந்திட்டே இருக்கே..

சச்சினின் சதத்தில் சதங்கள்.. ராகுல் டிராவிடின் ஓய்வு.. விராட் கொஹ்லி, வெர்னம் பிலாண்டர் ஆகியோரின் அமோக ஆட்டங்கள், ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷின் எழுச்சி, உலக T20க்கு தெரிவாகியுள்ள ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்று மனசு சொல்லும்.. ஆனால் நேரமும் இருக்காது.. அலுப்பும் விடாது....

இன்று காலி டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வெற்றி பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தே விட்டேன்.
தற்செயலாக ஜொனதன் ட்ரோட் நேற்று நின்று இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தாலும் திட்டி எழுதி இருப்பேன் என்பது நிச்சயம்.



இலங்கையில் எந்த கிரிக்கெட் தொடர் நடந்தாலும் காலி டெஸ்ட் போட்டி இலங்கைக்கு ராசியானது என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முதல் இங்கே இடம்பெற்ற போட்டிகள் இரண்டு இலங்கை எதிர்பாராத, விரும்பாத முடிவுகளைத் தந்திருந்தது. கெய்லின் முச்சதம் & ஆஸ்திரேலியா கொடுத்த அதிர்ச்சி வைத்திய வெற்றி.

ஆனால் சுழல் பந்து வீச்சு என்றால் குளிர் காய்ச்சல் வந்து சுருண்டு போகும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக ஆரம்பிக்க காலியை விட வேறு பொருத்தமான இடம் அமைந்திருக்க முடியாது. ஆனாலும் முத்தையா முரளிதரன் இல்லாமல் வெற்றிகளுக்காக தவம் கிடந்த இலங்கை அணிக்கு, ரங்கன ஹேரத் இப்படியொரு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார் என்று நூறு வீதம் நம்பி இருந்திருக்க முடியாது தான். அதிலும் உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஸ்வான் இங்கிலாந்து அணியில் இருக்கிறார்.. இலங்கை அணி ஆஸ்திரேலியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் நேதன் லயனுக்கு எதிராக இதே காலி மைதானத்தில் தடுமாறி இருந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

இங்கிலாந்து, உலகின் முதல் தர டெஸ்ட் அணியாக இருப்பதும் இன்னொரு முக்கிய விடயம். பாகிஸ்தானுடன் மத்திய கிழக்கில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மரண அடி வாங்கினாலும் இங்கிலாந்தின் துடுப்பாட்டவரிசையின் பலம் தெரிந்ததே..

இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருந்தபோது இங்கிலாந்தில் வைத்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோற்று தனது மகுடத்தை இழந்தது. இப்போது இங்கிலாந்து முதலாம் இடத்தில் இருக்கும் நேரம் தொடர்ச்சியாக நான்காவது டெஸ்ட் போட்டியைத் தோற்றிருக்கிறது.
அடுத்த டெஸ்ட் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலோ, அல்லது சமநிலையில் அந்தப் போட்டி முடிந்து இலங்கை அணி தொடரை வென்றாலோ இங்கிலாந்து தனது டெஸ்ட் மகுடத்தைத் தென் ஆபிரிக்காவிடம் இழந்துவிடும்.

இலங்கை அணிக்கு நேற்றைய காலி வெற்றி நீண்ட நாள் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு வெற்றி என்று தான் சொல்லவேண்டும். முரளியின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை மண்ணில் வைத்துக் கிடைத்த முதலாவது வெற்றி & இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது. இலங்கை அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நேற்றைய வெற்றிக்குப் பின் சொன்னது போல, நீண்ட காலத் தேடலுக்குப் பின் வெற்றிக்கான அணியை, வழியைக் கண்டறிந்துள்ளது இலங்கை அணி. இந்த வெற்றிக்காக இலங்கை தலைமையை மாற்றவேண்டி இருந்தது.. நிறைய மாற்றங்களை அடிக்கடி செய்ய வேண்டி இருந்தது. எனவே இந்த வெற்றி சுகமானது தான்.

அதிலும் இந்த வெற்றியை நான் அதிகமாக ரசிக்கக் காரணங்கள் சில இருக்கின்றன...

ஒரு முக்கிய சுவாரஸ்யம் கலந்த வரலாற்று தகவல்...
முரளியின் கடைசிப் போட்டி அவர் 800 விக்கெட் சாதனை படைத்த காலிப் போட்டி.. இந்தியாவை இலங்கை வெற்றிகொண்ட அந்தப் போட்டிக்குப் பிறகு (July 2010 )  17 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு அதே காலியில் வைத்து முதலாவது உள்நாட்டு வெற்றி கிடைத்திருக்கிறது.


முரளி 800 @ காலி




மஹேலவின் தலைமைத்துவத்துக்கு உதாரணமான துடுப்பாட்டம் இந்த வெற்றிக்கான அடித்தளத்தை இட்டது. அணியின் முதலாம் இன்னிங்க்ஸின் மொத்த ஓட்ட எண்ணிக்கையில் மஹேலவின் பங்களிப்பு கிட்டத்தட்ட 60 வீதம்.
அந்த முதல் இன்னிங்க்ஸ் ஓட்ட எண்ணிக்கை தான் இலங்கையின் உறுதியான வெற்றிக்கான முதலாவது படியாக அமைந்தது.

இலங்கை அணியின் கீழ்வரிசைத் துடுப்பாட்டத்தின் போராட்ட குணம்..
வழமையாக இலங்கை அணியின் கீழ்வரிசைத் துடுப்பாட்டம் ஏனைய அணிகளைப் போல நின்று ஓட்டங்களைப் பெரியளவில் குவிப்பதில்லை.
ஆனால் இந்த காலி டெஸ்ட்டில் முதலாம் இன்னிங்க்சில் இலங்கையின் கடைசி மூன்று விக்கெட்டுக்களும் 127 ஓட்டங்களையும், தீர்க்கமான இரண்டாம் இன்னிங்க்சில் கடைசி இரண்டு விக்கெட்டுக்களும் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தன.
இந்த இரண்டிலும் இரண்டு ஜெயவர்த்தனக்கள் தான் பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தாலும், கடைசி வீரர்கள் உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசைக்கு எதிராக நின்று பிடித்தது பெரிய ஒரு விடயமே.

ரங்கன ஹேரத் தன்னை முரளிக்கு அடுத்தவர் தானே என்று நிரூபித்தது.
முரளியின் ஓய்வுக்குப் பிறகு அஜந்தா மென்டிஸ், சுராஜ் ரண்டிவ் போன்றோரை எல்லாம் நம்பாமல், அவர்களைப் பழக்கிக் கொண்டே ஹேரத்தை இலங்கை அணி சில ஆண்டுகளுக்கு நம்பி இருக்கவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்தவன் நான்.. அது டெஸ்ட்டாக இருந்தாலென்ன, ஒரு நாள் போட்டிகளாக இருந்தால் என்ன..
ஹேரத் இப்போது அதற்கான சான்றைத் தெளிவாக, உலகின் முதல் தர அணிக்கு எதிராகக் காட்டி இருக்கிறார்.

ஹேரத் பெற்ற 171 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்கள் முரளி இதே மைதானத்தில் பெற்ற விக்கெட்டுக்களுக்கு அடுத்ததாக சிறந்தது.
ஹேரத் தனது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் முதலாவது பத்து விக்கெட் பெறுதியையும் நேற்று பெற்றிருந்தார். இலங்கை சார்பாக போட்டியொன்றில் பத்து விக்கெட் பெறுதியைப் பெற்றுக்கொண்ட ஐந்தாவது பந்துவீச்சாளர் ஹேரத்.
இலங்கைப் பந்துவீச்சாளர்கள் பெற்ற 27 பத்து விக்கெட் பெறுதிகளில் 22 முரளியால் பெறப்பட்டவை.

ஹேரத்தின் இந்தப் போட்டிப் பெறுபேறு, அறுபது ஆண்டுகளில் ஒரு இடது கை பந்துவீச்சாளர் இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற சிறப்பான போட்டிப் பெறுபேறு என்பது மற்றொரு சாதனை.
ஹேரத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார் என்பது ஆரோக்கியமான விடயம். இலங்கிக்கு ஒரு கிடைத்துள்ளார் என்பது வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.


ரண்டீவ் தனக்குக் கிடைத்த டெஸ்ட் வாய்ப்பொன்றை இவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.
ரண்டீவ் வீசிய சில பந்துகள் மிகசிறப்பானவை.. அவர் தன்னை இன்னும் கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொண்டால் இன்னொரு முரளி தயார்.

பிரசன்ன ஜெயவர்த்தனவின் மீள் வருகை..

காயம் காரணமாக தென் ஆபிரிக்கத் தொடரின் பின்னர் பிரசன்ன விளையாடிய முதல் போட்டியில் தனது துடுப்பாட்டத் திறனை மீண்டும் ஒரு தரம் நிரூபித்துள்ளார். தினேஷ் சந்திமாலின் துடுப்பாட்ட எழுச்சி கொடுத்து வந்த அழுத்தத்தை அவர் போக்கிய விதம் கலக்கல்.

இலங்கையின் அபாரமான களத்தடுப்பு.. குறிப்பாக டில்ஷானின் பிடிஎடுப்புக்களும், பிரசன்னா ஜெயவர்த்தனவின் விக்கெட் காப்பும் நிச்சயமாகப் பாராட்டப்படவே வேண்டியவை.. இவை இலங்கையின் வெற்றிக்கான வழியை அகலப்படுத்தியிருந்தன.

ஆனால் இலங்கை கவனிக்க வேண்டிய பல ஓட்டைகள் இருக்கின்றன...

சீரில்லாத துடுப்பாட்டம் + வேகப்பந்துவீச்சு...
துடுப்பாட்ட வரிசையை அவசரப்பட்டு இலங்கை மாற்றவேண்டிய தேவை கிடையாது. காரணம் லஹிரு திரிமன்னேயைத் தவிர (தினேஷ் சந்திமால் கூட ஒருநாள் போட்டிகளில் தன்னைத் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் நிரூபித்திருக்கிறார்) ஏனைய அனைத்து வீரர்களுமே தங்களை நிரூபித்தவர்கள் & எந்தவேளையிலும் மீண்டும் பெரியளவில் ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள். திரிமன்னேக்கும் இன்னொரு வாய்ப்பு அடுத்த டெஸ்ட்டில் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.


ஆனால் வேகப் பந்துவீச்சு?
மோசமாக ஒன்றும் செய்யவில்லை தான்.. இலங்கை வீழ்த்தியது இரண்டு வேகப்பந்து விக்கேட்டுக்களைத் தான்.. ஆனால் கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் இப்படியான வேகப்பந்துவீச்சை விட இன்னும் நேர்த்தியாக வேண்டும்..
இலங்கை தான் குலசெகரவை இப்போது ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட் ஆக்கிவிட்டதே.. ஆனாலும் சுரங்க லக்மலும், வெலகேதரவும் இன்னும் கொஞ்சம் Line & Length ஐக் கவனிக்க வேண்டி இருக்கிறது.

இங்கிலாந்து இந்தத் தோல்வியை மத்திய கிழக்கில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் எதிர்பார்த்தே இருந்திருக்கும்..
ஆனால் நேற்று ஓரளவு நல்ல நிலையிலிருந்து கடைசி ஐந்து விக்கெட்டுக்களையும் 12 ஓட்டங்களுக்கு இழந்து தோற்றது நிச்சயம் மனதை உளைவிக்கப் போகின்றது. (கடைசி ஆறு விக்கெட்டுக்களை இழந்தது 31 ஓட்டங்களுக்கு)

அன்டர்சன், ஸ்வான் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், ஜொனதன் ட்ரோட்டின் சத்தமும் நம்பிக்கை கொடுத்தாலும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணிக்கட்டமைப்பு எப்படி அமையவேண்டும் என்று அவர்களுக்கு ஏற்பட இருக்கும் குழப்பம் சுவாரஸ்யமானது. ரவி போபரா குணமடையாவிட்டால் இங்கிலாந்தின் பாடு மீண்டும் திண்டாட்டம் தான்.

ஆனால் இலங்கை முன்னைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தடுமாறியது போல, இந்தியாவுக்கு எதிராக காலியில் வெற்றி பெற்று, முரளி ஓய்வு பெற்ற பின் கொழும்பில் கோட்டை விட்டது போல சரவணமுத்து அரங்கில் சரணடையுமோ தெரியவில்லை.
மஹேல மீது நம்பிக்கை இருக்கிறது.. அவரை விட எனக்கு..

நேற்றைய போட்டி பற்றிப் பேசுகையில் ஜொனதன் ட்ரோட்டின் சதம் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் ஆடுகளத்தில் இருக்கும் வரை இங்கிலாந்துக்கு வெற்றி பெறக்கூடிய சாதகத் தன்மை இருந்தது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாசெர் ஹுசெய்ன் ஆசியாவில் பெற்ற நான்காம் இன்னிங்க்ஸ் சதத்துக்குப் பின்னர் நேற்றைய சதம் இங்கிலாந்துக்குக் கிடைத்தது. ஆனால் அத்தனை அபாரமாக ஆடியும் தோல்வியிலிருந்து அணியைக் காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு துரதிர்ஷ்டமே..

இங்கிலாந்து அணி தவறவிட்ட ஏராளமான பிடிகள் இலங்கைக்கு அதிர்ஷ்டமாக அமைந்து போயின. குறிப்பாக மஹேல போன்ற வீரர் ஒருவரின் நான்கு பிடிகளைத் தவறவிடுவதை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா?
மஹேல தனிப்பட மொன்டி பனேசருக்கு நன்றி தெரிவித்திருப்பார் நிச்சயமாக..
(மொன்டியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் யார் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது ;))

உலகின் முதல் தர அணியாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடிய பிறகு கிரிக்கெட்டில் புதிய சக்தியாக தங்களை அறிவித்துக்கொண்ட அண்டி பிளவர் (இங்கிலாந்தின் பயிற்றிவிப்பாளர்) & அன்றூ ஸ்ட்ரோஸ் ஆகியோருக்கு இப்போது அடியின் மேல் அடி, அழுத்தத்தின் மேல் அழுத்தம்..

தங்கள் நாட்டின் சாதகமான ஆடுகளங்களிலும், தங்கள் நாட்டை ஒத்த ஆடுகளங்களிலும் தான் வென்று முதலாம் இடத்துக்கு வந்துள்ளார்கள் என்ற விமர்சனங்கள் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து எப்படி இதற்குப் பதிலளிக்கப் போகிறது என்பதையும் காத்திருந்து அறிய ஆவல்....

அடுத்த போட்டியிலாவது 5000 ரூபா டிக்கெட் என்று இலங்கை ரசிகர்களை மைதானத்தை விட்டே விரட்டாமல் ( இங்கிலாந்து ரசிகர்களும் வெறுத்துப் போனது வேறு கதை) அதிக ரசிகர்களை டெஸ்ட் போட்டி பார்க்க வைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை எடுக்குமா என்று பார்ப்போம்..

ஆனால் இந்தத் தொடரின் பெயர் தான் ஏதாவது ஒரு விஷயத்தை மறைமுகமாக சொல்கிறதோ என்று தோன்றுகிறது - JUSTRETIREMENT Test Series  :p

ஆனாலும் நேற்றைய டெஸ்ட் போட்டியின் பின்னதாக வெளியாகியுள்ள ICC டெஸ்ட் தரப்படுத்தலில் இவ்வளவு நாளும் முதலாம் இடத்தில் இருந்த குமார் சங்கக்கார இப்போது நான்காம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தலைவர் கிளார்க்கும், தென் ஆபிரிக்க வீரர் டீ வில்லியர்சும் சேர்ந்து முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்கள்.

ஏனைய இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் சமரவீர 7ஆம் இடத்திலும், மஹேல 19ஆம் இடத்திலும் இருக்கிறார்கள். ட்ரோட் ஒன்பதாம் இடத்தில்...

இலங்கைப் பந்துவீச்சாளர்களில் ஹேரத் கைப்பற்றிய 12  விக்கெட்டுக்களுடன் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஏனைய எந்தவொரு இலங்கைப் பந்துவீச்சாளரும் முதல் இருபது இடங்களில் இல்லை.
முதலாம் இடத்தில் தொடர்ந்தும் டேல் ஸ்டெய்ன், இரண்டாம் மூன்றாம் இடங்களில் அஜ்மல் & அண்டர்சன்..

ஆனால் நான் மிக ரசித்த ஒருவர் வேர்ணன் பிலாண்டர். அவரது தொடர்ச்சியான சிறப்பான பந்துவீச்சுக்கள் அவரை 11 ஸ்தானங்கள் உயர்த்தி ஐந்தாம் இடத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
(இன்று இரவு வெற்றி FM வானொலியில் V For வெற்றி V For விளையாட்டு நிகழ்ச்சியில் பிலாண்டர் பற்றியும் சில விடயங்களைப் பகிர்கிறேன்.. முடிந்தால் கேளுங்கள்)

நண்பர்ஸ்.. இனி IPL 2012உம் தொடங்க இருப்பதால் தேங்கிக் கிடந்த கிரிக்கெட் பதிவுகளும் சேர்ந்தே வரும் :))



March 10, 2012

நாங்கல்லாம் அப்போவே அந்த மாதிரி - ட்விட்டடொயிங் - Twitter Log

மற்றும் ஒரு ட்விட்டடொயிங் - Twitter Log
பெப்ரவரி மாதத்தின் எனது ட்வீட்களின் தொகுப்பு..



ஜெனீவா செய்திகள், சுஜாதாவின் நினைவுகளுக்காக அந்நியன், சூர்யாவின் not so impressive #NVOK #Monday night
9:47 PM - 27 Feb 12 via Twitter for iPhone

அட.. வானம் ஒரு பக்கமா இருட்டிக்கொண்டு வருதே.. 3 மணி ஆர்ப்பாட்டம் அம்போதானா? ;) தமிழரின் கண்ணீர் மழையாக வருதோ? #Nostalgia
2:27 PM - 27 Feb 12 via web

இருக்கும் இடமும் இருக்கும் நிலையும் தான் எம் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன
1:49 PM - 27 Feb 12 via web

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும்போது த.தே.கூ எடுத்த முடிவு சரி போல தான் கிடக்கு.. விஷமும், வெறியும் சேர்ந்தே வருது..
1:45 PM - 27 Feb 12 via web

அமரர் எழுத்தாளர் சுஜாதாவை இன்று(ம்) ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.. #நினைவுதினம்
8:13 AM - 27 Feb 12 via web

காதலி காதலி கனவுகள் வாராதா? கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா? - இன்று மாலை கேட்ட பாடலின் romantic வரிகள் #Love&LoveOnly
11:28 PM - 25 Feb 12 via Twitter for iPhone

தல எதிரிகளுக்கும் மங்காத்தா எரிச்சல்காரருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. உடனே கலைஞர் டிவி பாருங்க - Ocean's eleven Tamil dubbed version
10:47 PM - 25 Feb 12 via Twitter for iPhone

சித்ராவின் 'வந்ததே குங்குமம்' பாடலை சைந்தவி அருமையாகப் பாடினார். Wow amazing கலைஞர் டிவி - இசைக்கு ராஜா
10:00 PM - 25 Feb 12 via Twitter for iPhone

இந்திய அணியின் பிரச்சினை & இலங்கை விளையாட்டின் சில கூத்துக்களைப் பற்றி சொன்னதுமோ தெரியல இணையத்தில் வெற்றி கேட்கும் கூட்டம் அலை மோதுது ;)
8:04 PM - 25 Feb 12 via web

ஆத்திரம் கண்ணை மறைக்கும்போதும், சந்தேகம் மனதில் நிறையும் போதிலும், பொறாமை பொங்கும்போதும் உலகிலேயே மிகக் கெட்டவர்களும் நாம் தான் ; அடி முட்டாள்களும் நாம் தான். #அனுபவம்
Posted Saturday 25th February 2012 from Twitlonger


சிலருக்கு சந்தர்ப்பங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.. இன்னும் சில சந்தர்ப்பங்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்டும் விடுகின்றன..
9:32 PM - 22 Feb 12 via web

Friendship day?? ஒருத்தன் கண்ணை மூடிட்டு மில்லியன் கணக்கா கடன் தாறதுக்கு ரெடி என்கிறான்.. இன்னொருத்தனை after 15 yrs சந்திக்கிறேன் :)
10:59 AM - 22 Feb 12 via web

Suresh Raina, இலங்கைப் பந்துவீச்சாளரும் பவுன்சர் போட்டா விக்கெட் குடுக்கிறாய் பாரு.. நீ ரொம்ப நல்லவன்டா #cbseries
3:13 PM - 21 Feb 12 via web

வெண்ணெய் விரல்காரன் சந்திமாலின் உதவியோட கோழிப்பையன் சதம் அடிச்சு வென்று குடுத்திடுவானோ? #விக்கி துணை
2:59 PM - 21 Feb 12 via web


இலங்கை அணி சிங்கங்களுக்கு, உங்களையும், இந்தியாவின் Big 3 ஐயும் நம்பி இண்டைக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு Mega Cokeக்கு பெட் கட்டி இருக்கேன்.. #Vikki வேலையைக் காட்டிடாதீங்க :p
1:04 PM - 21 Feb 12 via web

கனவான் தன்மை காட்டிய சச்சினுக்கு இந்திய ரசிகர்கள் அர்ச்சனை.. இலங்கை ரசிகர்கள் நன்றி..அவங்க அவங்க கவலை அவங்களுக்கு ;) #Thirimanne #Mankaded
12:02 PM - 21 Feb 12 via web

இந்த ராகமும் இந்த தாளமும் என் தலைவனின் பாணியடி - ராஜாவின் பார்வை மெட்டு :) இனி இன்று நாள் முழுக்க மனசுக்குள் பாடும் #NowPlaying
9:42 AM - 21 Feb 12 via web

பேப்பர் தம்பி பாண் விலை 700 ரூபா ஆன உடன் அரசியலுக்கு வாறாராம். உடனடியா நானும் தயாராகணும். விரைவில் நடக்கும் #SriLanka A land like no other
7:33 AM - 21 Feb 12 via web

இந்தப் பாடல் 'கேட்க' மிகப் பிடித்தது.. படத்தில் விஜயகாந்தும் கிரணும் சேர்ந்து கொன்றுவிட்டார்கள்.. "வினோதனே" - தென்னவன் #NowPlaying
9:44 AM - 20 Feb 12 via web

நீ தானே எந்தன் பொன் வசந்தம் ... இளையராஜா +வைரமுத்து + SPB .. என்ன ஒரு கூட்டணி :) எப்போது கேட்டாலும் மனம் முழுக்க ஈரமான காதல்
8:53 AM - 20 Feb 12 via web

ஆறா வடு முழுதுமாய் வாசித்து முடித்த பின்.. மனதில் மாறாத வலியும் தாளா மனக் கனப்பும். சயந்தன் சாதித்துவிட்டீர்கள் http://pic.twitter.com/CNXxHUyI
11:27 PM - 19 Feb 12 via Photos on iOS

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது காவல்துறை தண்ணீர் பீய்ச்சியடிப்பு. பிறகு ஆர்ப்பாட்டம் பிசிபிசுப்பு என்பார்கள். #srilanka
5:17 PM - 17 Feb 12 via Twitter for iPhone

Twitterஇல் பிரபல ட்விட்டர்களின் சுவாரஸ்ய ட்வீட்களை Facebookஇல் தமது கருத்தாகக் கடத்தும் கருத்துத் திருட்டு நடக்கிறது. #ரசனைத்திருடர்கள்
3:10 PM - 16 Feb 12 via web

96ஆம் ஆண்டு இலங்கை வென்ற உலகக்கிண்ணம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு கொண்டு சென்ற வேளையில் சேதப்பட்டதாம்.அணியே அப்பிடித் தானே கிடக்கு ;)
2:02 PM - 16 Feb 12 via web

காதலும் வெற்றியும், வெற்றியும் காதலும் இணைந்த நாள் இன்று :) Feb 14 வெற்றியில் காதலும், என் காதலின் வெற்றியும் சேர்ந்ததாலோ? :) #VettriBday
8:55 PM - 14 Feb 12 via Twitter for iPhone

கிணத்தைக் காணேல்லை என்று வடிவேலு சொன்ன மாதிரித் தான் நானும் சொல்லோனும். கூகிள் என் வலைப்பதிவை எடுத்திட்டு.. முறையிட்டிருக்கிறேன்..
12:56 PM - 14 Feb 12 via web

விடியலில் வரப்போகிற அடுத்த இரண்டு பாடல்களுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகள்.... :)
9:18 AM - 13 Feb 12 via web

இரண்டும் எனக்குப் பிடித்தவை எழுதியவர் வைரமுத்து இரண்டிலும் சித்ராவின் குரல் இனிமை ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் & என் சுவாசக்காற்றே
9:28 AM - 13 Feb 12 via web

காஜல் அகர்வாலைக் கண்டேன் #CCL பார்ப்பதன் உச்ச இன்பம் பெற்றேன்
8:10 PM - 12 Feb 12 via Twitter for iPhone

மற்றப் பினாத்தல்களுக்கிடையில் மோகன்ராமின் அழகு தமிழ் ரசிக்கவைக்கிறது. #CCL
6:56 PM - 12 Feb 12 via Twitter for iPhone

மன்னிப்பு பெறும்போது உடனே மன்னிக்கப்பட்டுவிட வேண்டுமென்று நினைக்கும் மனம், மற்றவர் தவறுகளை மன்னிக்கமட்டும் பின்னடிப்பது வினோதம் தான் :/
10:30 AM - 12 Feb 12 via Twitter for iPhone

உள்ளத்தில் காயங்கள் உண்டு அதை நான் மறக்கிறேன்.. ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்.. அவதாரத்தின் நிறைவுப்பாடல்.. வசூல் ராஜா
8:57 PM - 11 Feb 12 via web

பருவம் தப்பிப் பெய்யும் மழை பயிருக்கு உதவுவதில்லை; கேட்ட நேரத்தில் கிடைக்கா எவையும் மனதுக்கு உவப்பதில்லை.
12:11 AM - 11 Feb 12 via Twitter for iPhone

பாவம் என் வாகன டயர்கள்; என் கோபம், அவசரம், விரக்தி அனைத்தையும் பொறுத்துக் கொள்வது அவையே
9:40 PM - 10 Feb 12 via Twitter for iPhone

வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்.. வாழ்வு யார் பக்கம்.. அது நல்லவர் பக்கம்.. #Vidiyal #காளி_படப்பாடல்
7:48 AM - 10 Feb 12 via web

விளையாட்டாப் படகோட்டி - தோனி.. கேட்கையில் படகில் மிதக்கும் சுகானுபவம்.. இளையராஜாவுக்கு இப்படியான பாடல்கள் தானாக வாய்க்கின்றன..
8:46 AM - 8 Feb 12 via web

நாங்கல்லாம் அப்போவே அந்த மாதிரி. இப்ப கேக்கவா வேணும் ;) #போராளி effect
9:21 PM - 7 Feb 12 via web

வெளிப்படையான நண்பர்கள் கிடைத்திருப்பது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த இன்னொரு அதிர்ஷ்டம்.. 1/2
6:52 PM - 7 Feb 12 via web

காரணம், உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் நண்பர்கள் = மறைமுக எதிரிகள். 2/2
6:52 PM - 7 Feb 12 via web


பூரணை விடுமுறை.. பஞ்சி, அலுப்பில் பாதி நாள், வானொலி கேட்டு பாதிநாள் என்று போச்சு..
6:46 PM - 7 Feb 12 via web

ஏன்டா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க? கிரியேட்டிவிட்டி வேண்டியது தான்; அதுக்காக இப்பிடியா? #ROFL #overImaginative
8:45 PM - 6 Feb 12 via Twitter for iPhone

முடிவில்லா முடிவுக்கு ஏது முடிவு - தோனி பாடலில் வந்த வரிகள்..
8:51 AM - 6 Feb 12 via web

இசைஞானி ரசிகராகத் தம்மைக் காட்டி ஆண்டிமாருக்கு ரோட்டுப் போடும் சில பச்சிளம் பாலக அங்கில்மாரைப் பார்த்தால் பாவமாக உள்ளது #அவருக்கே ;)
3:23 PM - 5 Feb 12 via Twitter for iPhone

 இசை என்றால் எல்லாம் இசை தான் :) வாத்தியம் போட்டாலும் இசை தான் ; வாயால் போட்டாலும் இசை தான். மனசுக்குப் பிடிச்சப் போதும்.
3:15 PM - 5 Feb 12 via Twitter for iPhone

மலர்ந்தும் மலராத மாதிரி நல்ல பாடல்களை விஜய் படத்துக்கு போட முடியுமா- இளையராஜா 1/2
2:57 PM - 5 Feb 12 via Twitter for iPhone

முடிஞ்சா விஜய்க்கு ஏற்ற குத்து பாட்டு ஒன்னு இந்தக்கால ற்றேண்டுக்குப் போட்டுக் காட்டுங்க- விஜய் ரசிகன் 2/2
2:58 PM - 5 Feb 12 via Twitter for iPhone

இயக்குனர் கேட்காமலே கொடுத்தல் தான் இசையமைப்பாளர்; கேட்டு வாங்கினால் சரவணபவன் - இளையராஜா இது என்னாங்கடா GVM beware ;)
2:38 PM - 5 Feb 12 via Twitter for iPhone

அதிகமா ஆசைப்பட்டா இருக்கிறதும் போயிடும்னு சும்மாவா சொன்னாங்க.. உலக சாதனை வச்சும் வெளியே உக்கார்த்தி விட்டானுகளே.. #VirendarSehwag
8:34 AM - 5 Feb 12 via web

சரி மக்கள்ஸ். நானும் என் பங்குக்குக் கொஞ்சப் பேருக்கு வயிற்றெரிச்சல் கொடுக்கப் போறேன். மீண்டும் தூங்கப் போகிறேன். 11 மணி வரையாவது ;)
7:45 AM - 4 Feb 12 via web

சனி காலை, விடுமுறை, #Dialog தலைப்பு செய்தி வாசிக்க எழும்பினால், என்னைத் தவிர உலகமே நித்திரை போல #எரிச்சல் - தூங்குங்கடே...
7:32 AM - 4 Feb 12 via web


விடுமுறை நாளிலும் சுதந்திரமா ஒரு எட்டு மணித்தியாலம் தொடர்ச்சியாகத் தூங்கும் உரிமை இல்லை.. ஹ்ம்ம்.. இலங்கையின் சுதந்திர தினமாம் இன்று
7:27 AM - 4 Feb 12 via web

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்ட வெள்ளரிக்கா.. உனக்கு சொந்தமென்று பட்டா அங்கே எழுதி இருக்கா? #வெயில்_படப்பாடல் #Vidiyal
7:43 AM - 3 Feb 12 via web

காதலில் சொதப்புவது எப்படி.. "அழைப்பாயா?" ரசிக்கவைக்கிறது.. கார்த்திக்கின் குரலும், கார்க்கியின் புதிய சொல் ஆளுகையும் ரசனை....
9:21 AM - 1 Feb 12 via web


March 07, 2012

தோனி - பிந்தியதாக ஒரு பார்வை


மிகத் தாமதமாக 'தோனி' படம் பற்றி நான் பேசுவதால் இதை விமர்சனமாக எடுக்காதீர்கள். நல்ல படம் ஒன்றைப் பற்றி பார்த்த, பார்க்காத உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை.

வீட்டிலே சொந்த செலவில் எழுபது ரூபாயில் வாங்கிய தரமான DVDயில் பார்த்தது.


தரமான, வித்தியாசமான படங்களை தயாரிப்பதில் மற்றவரை ஊக்குவித்து, தானும் பங்கேற்று வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் தடவையாக இயக்கியுள்ள படம். கதை, திரைக்கதை, தயாரிப்பு & பிரதான பாத்திரமும் அவரே.
பிரகாஷ் ராஜ் முதலிலேயே அறிவித்தது போல இந்தக் காலக் கல்விமுறையால் மாணவ,மாணவியர் சிறுவயதிலேயே சந்திக்கும் அழுத்தங்கள், அவர்களது பெற்றோர் மீது சுமத்தப்படும் மன, பண சுமைகள் பற்றி அழுத்தமாகப் பேசியுள்ளது தோனி.

தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாத இரு விடயங்கள் பற்றிப் படம் முழுக்க இயக்குனராக பிரகாஷ் ராஜ் பேசுகிறார்..

1.(ஆரம்ப) பாடசாலைக் கல்வி - (கல்லூரிக் கல்வி பற்றி இறுதியாக வெளிவந்த நண்பன் வரை இந்திய தமிழ் சினிமாக்கள் பேசிவிட்டன)

2.Single Parents என்று சொல்லப்படும் ஒற்றைப் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பில் இருக்கும் சிக்கல்கள்.. இதிலும் தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் பலரைத் தமிழ் சினிமாக்களில் பார்த்தாலும், தந்தை வளர்க்கும் குழந்தைகள் பற்றிக் கவனித்து குறைவே.

மனைவியை இழந்தும் ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் குழந்தையோடு அரச உத்தியோகத்தில் இருந்துகொண்டு வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிக்கன வாழ்க்கை வாழும் ஒரு அப்பாவி, நல்ல மனிதர் பிரகாஷ் ராஜ். தன குழந்தைகளின் எதிர்காலம் கல்வியால் வளப்படும் என நினைப்பதனால், குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என்று அவர்களுக்கு கல்வியைக் கஷ்டப்பட்டு நல்ல இடங்களில் வழங்க முயல்கிறார்.

ஆனால் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடுகொண்ட அவரது மகனுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையிலான கிரிக்கெட் - கல்வி போராட்டம் தான் அமைதியான குடும்பத்தைக் குலைத்துப்போடும் முக்கியமான விடயமாக மாறுகிறது.

இந்த இடம், இலங்கையில் பாடசாலைக் கல்வியில் மாணவர், பெற்றோர் சந்திக்கும் குழப்பத்துக்கும் பொருத்தமாகவே உள்ளது. கல்வி தவிர்ந்த புறக் கிருத்திய நடவடிக்கைகளில் தம் பிள்ளைகளை ஈடுபடுத்தத் தயங்கும் தமிழ் மொழி பேசும் பெற்றோருக்கும் பல முக்கியமான விஷயங்களைக் காட்டுவதாக உள்ளது.
நான் படித்த காலத்திலும் இதே குழப்பம் என் வாழ்விலும், எங்கள் குடும்பத்திலும் நிலவியது.



கிரிக்கெட்டில் அளவு கடந்த விருப்பம் கொண்டிருக்கும் மகன் அதில் காட்டும் அக்கறையில் ஒரு பாதியளவாவது கல்வியிலும் காட்டினால் என்ன என்று அவனிடம் கெஞ்சும் இடங்களிலும், கல்வியில் மந்தமாகிக் கொண்டே போகிறானே என்று ஆதங்கப்பட்டு அவனிடம் கெஞ்சி, கோபப்பட்டு, விரக்தியடையும் இடங்களிலும் தேசிய விருது பெற்ற முதிர்ச்சியைக் காட்டி ஜொலிக்கிறார் பிரகாஷ் ராஜ்.

அதீத கோபத்தினால் மகனை அடித்துவிடுவதும் அதற்குப் பின் வரும் காட்சிகளும் பிரகாஷ் ராஜ் தவிர வேறு யாராலும் அவ்வளவு அற்புதமாக செய்திருக்க முடியாதவை.
தான் மகனை அடிக்கவில்லை; இந்தக் கல்வி முறை தான் அடிக்க வைத்தது என்று பொருமுகின்ற இடங்கள், பொங்கி வெடிக்கின்ற இடங்கள் யதார்த்ததிலிருந்து கொஞ்சம் மிகையாக நின்றாலும் ஒரு தந்தையின் பொருமலை, உண்மையை சொல்லப் போய் தான் சந்திக்கும் சிக்கல்களை அடக்க முடியாமல் வெடிக்கும் இடங்களை வேறு விதமாக ஒரு இயக்குனராகக் காட்ட முடியாது என்பது தெளிவு.

இயக்குனராகவும் பி.ரா முதல் படத்திலேயே வென்றுவிட்டார் என்று நம்புகிறேன்.
இப்படியான படங்களில் வருகின்ற காட்சிகளை ஒரேயடியாக சோக சாயம் பூசி எம்மையும் அழவைக்காமல், நகைச்சுவைக் காட்சிகளுடன் இணைத்துக் கொண்டு சென்றுள்ள விதம் ரசிக்கக் கூடியது.

ஒரு நடுத்தர அப்பாவி மனிதனின் வாழ்க்கையின் நாளாந்த அவஸ்தைகளை, அவனை சூழ வாழும், அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் வேறுபட்ட குணாம்சம் கொண்டவரைக் காட்டுகின்ற உத்தியும் ரசனை. ஆனால் சொல்லும் விதத்தில் பி.ரா தனது குருநாதர் பாலசந்தரைக் கொஞ்சம் தழுவியிருக்கிறார்.

பாத்திர உருவாக்கங்களில் பொருத்தமான பாத்திரங்களை ஒவ்வொரு இடங்களிலும் இருந்து தேடி எடுத்திருப்பதில் இருந்து எவ்வளவு சிரத்தையாக தனது சக பாத்திரங்களில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
மகன் கார்த்திக்காக நடித்திருக்கும் - அசத்தியிருக்கும் சிறுவன் ஆகாஷ் பூரி, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் மகன்.

அயலவராக வரும் அழகான பெண் (நளினி) ஒரு மராத்தி நடிகையாம்.. இயல்பான நடிப்பு + இயற்கையான அழகால் கவர்கிறார். பெயர் ராதிகா ஆப்தே.

நாசர், பிரம்மானந்தம், சரத் பாபு, தலைவாசல் விஜய் ஆகியோரின் பாத்திரங்கள் அவர்களுக்கானவை :)
பிரபுதேவா பிரகாஷ் ராஜுடனான நட்புக்காக ஒரு ஆட்டம் போட்டு செல்கிறார்.

கந்துவட்டிக்காரனாக வரும் நடிகர் முரளி ஷர்மா இன்னும் சில படங்களில் வில்லனாக வரக்கூடும்.
அந்தப் பாத்திரத்தின் குணாம்சங்கள் ரசிக்கக் கூடியவை.

இளையராஜாவின் இசையில் பாடல்களில் மூன்று மனதில் நிற்கிறது. காட்சிகளுடன் நகர்ந்து செல்வதால் பாடல்களின் அர்த்தமும் அழுத்தமும் அதிகமாக எடுபடுகிறது.



படத்தின் பிரதான கதையம்சம் கல்வி நடைமுறை, அதற்கு அடுத்ததாக நடுத்தர வர்க்க குடும்பத்தின் போராட்டம் என்று இருந்தாலும், தனியாக வாழும் நளினி என்ற பெண்ணின் அவல வாழ்க்கையும் இடைச் செருகலாக வந்துபோவது மற்றொரு நடுத்தர வர்க்க சமூகத்தின் அவலம் என்று எடுத்துக்கொள்ளலாம் ; ஆனால் சில சிக்கல்களையும் போகிறபோக்கில் நகைச்சுவையாக சொல்வதில் சிலது அழுத்தமில்லாமல் போய்விடுகிறது.

சொல்லவேண்டிய விடயமும், சமூகத்தில் நடக்கிற விடயமுமாக இருக்கிறது. ஆனால் பிரகாஷ் ராஜ் சொல்லவந்த விடயத்தை இடை நடுவே குழப்பிக் கொண்டதாக ஒரு நெருடல்.
பொதுவாக இலங்கை சூழலில், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் கல்வி தான் வாழ்க்கையின் முதலீடாகக் கருதப்படுகிறது. அதிலும் மத்திய வர்க்கக் குடும்பங்கள் இன்றும் கல்வியைக் கொண்டே தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.

ஒரு சாதாரண குடும்பத்த் தந்தையாக பிரகாஷ்ராஜ் தனது மகனிடம் எதிர்பார்த்து ஏங்குவது இயல்பானது; ஏற்றுக் கொள்ளக் கூடியது.
நிரந்தர மாத வருமானம் போதாமல் கடன் பட்டு, ஊறுகாய் விற்று , அலைந்து திரிந்து பிள்ளைகளைப் படிப்பிக்க பாடுபடும் ஒரு தந்தையின் பதைபதைப்பை எம்மால் உணரக் கூடியதாகவே உள்ளது.

தோனியையும் சச்சினையும் அவர் வெறுப்பதும், சாபமிடுவதும் கிரிக்கெட்டை மகன் விட்டாலே அவனது கல்வி உருப்படும் என்று அவர் எதிர்பார்ப்பதும் அவரது நிலையிலிருந்து பார்க்கும்போது சரியாகவே தோன்றுகிறது. அதுவும் இவ்வளவு செலவழித்தும் மகன் சித்தியடையவில்லை; பாடசாலையிலிருந்து அவனை நீக்கிவிடப் போகிறார்கள் என்று தெரியவரும்போது அவர் அடையும் மனவருத்தமும் யதார்த்தமானது.

அந்த நேரத்தில் அவர் மகன் கிரிக்கெட் பார்க்கும் காட்சிகள் எங்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி பிரகாஷ்ராஜ் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் மகனுக்கு எப்போது அடிக்கிறாரோ அப்போது எங்கள் அனுதாபத்தின் ஆதரவு மகன் பக்கம் மாறுகிறது.

அவன் "எனக்கு maths வராது; கிரிக்கெட் தான் தெரியும்" என்று சொல்லும் இடத்திலிருந்து எங்கள் அனுதாபக் கோணம் மாறுகிறது.
அதற்குப் பிறகு தான் படத்தின் அடிநாதமான கல்விமுறையின் குறைபாடு பற்றி பிரகாஷ் ராஜ் கொதிப்படைய நாமும் இணைந்துகொள்கிறோம்..
அதற்குப் பிறகு தான் அந்த விடயத்தின் சீரியஸ் தன்மை எம்மாலும் உணரப்படுகிறது; பிரகாஷ் ராஜின் உணர்ச்சிமயமான போராட்டத்தின் உண்மைத் தன்மையும் புலப்படுகிறது.

ஆனால் ஏதோ ஒரு முரண்பாடு இதற்குள் இருப்பதாக மனம் சொன்னது...
கொஞ்சம் பிரசாரத் தன்மையும் சேர்ந்துகொண்டது போல..

ஆனாலும் தோனி போன்ற படங்கள் வரவேண்டும்.. யதார்த்த, சமூகவியல் பிரச்சினைகளைத் தெளிவாக முன்வைக்கும் படங்கள் பிரசார நெடி இல்லாமல் வந்தால் மக்களை இலகுவாகப் போய்ச்சேரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தயாரிப்பாளராக இருக்கும்போது சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து மற்றவரின் தயாரிப்பில் பிரம்மாண்டத் திரைப்படங்களைத் தயாரிக்கும் இயக்குனர் வரிசையில் இல்லாமல், பிரகாஷ் ராஜ் தான் இயக்கிய முதல் திரைப்படத்தைத் தானே தயாரித்து துணிச்சலாக தண்ணி முன்னிறுத்தியே நடித்திருக்கிறார் என்பது பாராட்டுதலுக்குரியது.
இன்னும் எதிர்பார்க்கிறேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner