March 21, 2009

உலகின் முதலாவது தமிழ் பதிவரிடம் 11 கேள்விகள்..

இந்த பதினோரு ஜோதியில் கலக்கலாம் என்று இன்று சும்மா யோசித்தேன்.. இது மனசுள் இருந்த சில சந்தேகங்கள்.. உண்மையிலேயே யாருக்காவது விடை தெரிந்தாலும் சொல்லுங்கள்..




Loshan
  1. உலகின் முதலாவது தமிழ் பதிவர் யார்?(எப்போது தனது வலைத்தளம் தொடங்கினார் & இன்னும் போடுகிறாரா என்பது உப கேள்விகள்)
  2. அவர் ஆரம்பித்த உலகின் முதலாவது தமிழ் வலைப்பூ/வலைத்தளத்தின் பெயரென்ன?
  3. அவரின் முதலாவது வலைப்பதிவு எதைப் பற்றியதாக இருந்திருக்கும்?(நாமெல்லாம் ஆரம்பிச்சது போல வணக்கம் & அறிமுகம் தானோ?)
  4. முதலாவது பின்னோட்டம் யாரிடமிருந்து வந்திருக்கும்? (வலைப்பதிவு உருவாகு முன்னரே அனானிகள் இருந்ததாக சுவாமி வலையானந்தா அருள்வாக்கியிருக்கிறார்)
  5. தமிழிச்,தமிழ்மணம்,தமிழ், ஈதமிழ் போன்ற திரட்டிகள் எல்லாம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் வாசிப்போர் எப்படி இது பற்றித் தெரிந்திருப்பார்?
  6. மொக்கையா சீரியசா என்று முதல் பதிவை யார்,எப்படி தீர்மானித்திருப்பர்?
  7. நம்மையெல்லாம் மாதிரி அட்சென்ஸ், ஹிட்ஸ், போல்லோவேர்ஸ் (followers), வோட்டுக்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டாரே? (வேறு ஏதாவது குடும்ப,கடன் தொல்லைகள் தாங்காமல் அதைக் கொட்டத் தான் பதிவு போட வந்தாரோ?)
  8. உள்குத்து,நுண்ணரசியல்,கும்மி,அனானிகள் இல்லாத அந்த தமிழ்ப்பதிவு அவருக்கே போரடித்திருக்காதா?
  9. அனானிகளாக வந்து பழைய /புதிய பகை, எரிச்சல்,பிரசாரம்,விளம்பரம் பண்ணும் தொல்லைகள் அப்போதே ஆரம்பித்திருக்குமா?
  10. தான் தான் தமிழின் முதல் பதிவர் என்று வலைத்தளம் ஆரம்பித்த போதே அவருக்கு தெரிந்திருக்குமா?
  11. லோஷன் என்ற ஒருத்தன் ஒரு சோம்பலான,போரடிக்கும் சனிக்கிழமையில் தன்னைப் பற்றித் தன்னிடமே இப்படி ஒரு பதிவு போட்டு, பதினோரு கேள்வி கேட்பான் என்று அப்போதே யோசித்திருப்பாரா?

34 comments:

Raju said...

நீங்களுமா லோசன்...
ஆமா, விஜய் என்ன ஆனாரு...
விஜய விட்டாச்சா "தல"...?

Unknown said...

உங்கள் பதிலுக்கு நன்றி..

நீங்கள் சொன்னது போல (இந்திய சூரியன் அருகில் எமது ஒரு அலைவரிசையும், ஹலோ அலைவரிசைக்கருகில் எமது அடுத்த அலைவரிசியும் இருப்பதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்..)கூட இருக்கலாம்.எங்கள் ஊரில் (ஈரோடு மாவட்டம்) சூரியனும்,ஹலோவும்
கொஞ்சம் சக்திவாய்ந்ததுதான்.

அதேபோல‌ சூரியன் (இலங்கை), தென்றல் அருகில் எந்த பண்பலையும்
சக்தி வாய்ந்தது இல்லை.

மேலும் ஒரு கேள்வி !

தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?

ARV Loshan said...

நீங்களுமா லோசன்...//
என் டக்லஸ் நாங்கெல்லாம் 11க்குள்ள வரக் கூடாதா? ;)

'தல'//
????? ஏன்யா? (நான் முதல்ல 'தல' வலி பற்றி எழுதியதைக் கொஞ்சம் பாருங்களேன்..

விஜய விட்டாச்சா//
இப்போதைக்கு கொஞ்சம் விட்டு வச்சிருக்கோம்.. (நாங்க விட்டாலும் அவர் விட மாட்டாரே..;) ஏதாவது வரும் வரை இருப்போம்)

ARV Loshan said...

வாய்ப்பாடி குமார் said...
தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?//

இல்லை குமார், கேட்க வாய்ப்பு கிடைத்ததில்லை.. அண்மையில் இந்திய கப்பல் திருகோணமலை வந்து தரித்து நின்றபோது சில இந்திய அலைவரிசைகள் மிகத் தெளிவாக இலங்கையின் கிழக்கிலும், மத்திய மலைநாட்டிலும் கூடக் கேட்டது..

Anonymous said...

என்ன கொடும சார்.. ஒரு level க்கு மேல வந்தா எதையும் எழுதலாம்.. அதுக்கும் hits வரும் என்று தானே இப்படி எழுதுறீங்க.. பார்த்து.. வில்லு மாதிரி ஊத்திக்க போகுது..

சி தயாளன் said...

ஏன்..ஏன்..ஏன்ன்.....?

ARV Loshan said...

என்ன கொடும சார்.. to me
ஒரு level க்கு மேல வந்தா எதையும் எழுதலாம்..//
எந்த லெவலை சொல்றீங்க பெரியவரே?

அதுக்கும் hits வரும் என்று தானே இப்படி எழுதுறீங்க.. //
ஹித்சுக்காக எழுதுவதானால் எப்போதுமே நமீதா,விஜய்,கலைஞர் பற்றி எழுதலாமே.. (நான் எப்போதாவது தானே இவங்க பற்றி எழுதிறேன்.. ;))

வில்லு மாதிரி ஊத்திக்க போகுது.. //
என்னாது வில்லு ஊத்திகிச்சா? இது விஜய்க்கும் அவரது தொண்டர்களுக்கும் தெரியுமா? பார்த்து.. எங்கேயவாது பாதுகாப்ப போயிடுங்க..

ARV Loshan said...

டொன்’ லீ to
ஏன்..ஏன்..ஏன்ன்.....? //
ச்சும்மா.. ;) ஒரு பொது அறிவு சேகரிப்புக்கு..

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ARV Loshan said...

ச்சின்னப் பையன்- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

:)eeeeeeeee

SShathiesh-சதீஷ். said...

அச்சச்சோ தாங்க முடியலப்பா? கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களா? எப்பிடியப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க?

ARV Loshan said...

shathiesh,
அச்சச்சோ தாங்க முடியலப்பா? //
ஏம்ப்பா? நல்ல doctor இடம் காட்டலாமே..;)

கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களா? //
எங்கேப்பா நான் பதில் சொல்லி இருக்கேன்? இப்ப தானே கேள்வியே கேட்டிருக்கேன்..


எப்பிடியப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க?//
வழமை போலவே தான்.. (மண்டையப் பிச்சுகிட்டு.. ;))

Anonymous said...

http://vivasaayi.blogspot.com/2007/05/blog-post_25.html

மு. மயூரன் said...

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் வர முதல் மதி வைத்து நடத்திக்கொண்டிருந்த tamilblogs என்றொரு பட்டியல் இருந்தது. அங்கே அகரவரிசையில் இருக்கும் பதிவர் பெயர்க்ளை, பதிவுகளை சொடுக்கி போய் பதிவை வாசிக்க வேண்டும். கடைசியாய் அவர் எழுதிய பதிவை காண்பிப்பதெல்லாம் அப்போது இல்லை.

அக்காலத்தில் இந்த அனோனி காழ்ப்புணர்வுகள், குழுமச்சண்டைகள் எல்லாம் இருந்ததாக எனக்கு நினைவில்லை. வலைபப்திவுகளில் வேண்டத்தகாத விவகாரங்கள் ஆரம்பித்ததெல்லாம் தமிழ் மணம் வந்த பொறகு ஏற்பட்ட பரவலால்தான்.

மேலதிக தகவல்களுக்கு வலைபப்திவு தொடர்பான விக்கிபீடியா கட்டுரையினை பார்வையிடுங்கள்.

குப்பன்.யாஹூ said...

உங்களின் ஐந்தாவது கேள்விக்கு என் சிற்றறிவுக்கு எட்டிய பதிலை அளிக்கிறேன்.

2003 அல்லது 2004 ஆண்டு என நினைக்கிறேன், அப்போது யாகூ இனைய அறைகளில் பதிவு பற்றிய செய்திகள் வந்தது. சில பதிவர்கள் (சாட்டர்கள்) தங்கள் வலை பதிவு பற்றி சொல்லியது உண்டு.

அப்படி நான் போய் படித்த பதிவுகள் டுபுக்கு, எண்ணப் பரிமான்கள், சிங்கபூர் அறிவான், http://ennasitharalgal.blogspot.com/2007/07/blog-post_14.ஹ்த்ம்ல், ஆங்கிலப் பதிவு மாமி, எனாரை மாமி , சொம்யா

தமிழ் மதுரம் said...

வாய்ப்பாடி குமார் said...
உங்கள் பதிலுக்கு நன்றி..

நீங்கள் சொன்னது போல (இந்திய சூரியன் அருகில் எமது ஒரு அலைவரிசையும், ஹலோ அலைவரிசைக்கருகில் எமது அடுத்த அலைவரிசியும் இருப்பதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்..)கூட இருக்கலாம்.எங்கள் ஊரில் (ஈரோடு மாவட்டம்) சூரியனும்,ஹலோவும்
கொஞ்சம் சக்திவாய்ந்ததுதான்.

அதேபோல‌ சூரியன் (இலங்கை), தென்றல் அருகில் எந்த பண்பலையும்
சக்தி வாய்ந்தது இல்லை.

மேலும் ஒரு கேள்வி !

தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?//


கோடைப் பண்பலையை நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் காலத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாககத் தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது கேட்பதுண்டு..


உமா சோமஸ்கந்த மூர்த்தி, மற்றும் ராஜாராம் முதலிய அறிவிப்பாளர்களை எனக்கு நன்றாகப் பிடிக்கும். அவர்களுடன் உரையாடியும் உள்ளேன்.... இன்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடியதாக உள்ளது. ஆனால் எனக்குப் புலம் பெயர்ந்து வந்ததால் நேர்ம் போதாமை ஒரு பிரச்சினை.

ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் சுவையில் மாலைத் தென்றல் நிகழ்ச்சி வழங்குவார்கள். எஸ்.எம்.எஸ்ஸில் இனிய கீதங்கள் மாலைத் தென்றல் முதலியவை நான் ரசித்துக் கேட்கும் கோடை எப். எம் இன் இன்ன பிற நிகழ்ச்சிகள்.
கோடை எப் எம் தவிர்த்து, சூரியன் எப்.எம் கோவை, நெல்லை, சென்னை முதலியவையும் எமது பகுதிக்கு கேட்கக் கூடியதாக இருக்கும். ஒவ்வோர் நாளும் நாங்கள் இந்த வானொலிகளைச் செவிமடுக்கக் கூடிய அளவிற்கு ஒலித் தெளிவும் நன்றாக இருக்கும்...

ARV Loshan said...

நன்றி அனானி.. உண்மையில் தெரியாத பல விஷயம் கிடைத்தது..

தமிழ் மதுரம் said...

லோஷன் என்ற ஒருத்தன் ஒரு சோம்பலான,போரடிக்கும் சனிக்கிழமையில் தன்னைப் பற்றித் தன்னிடமே இப்படி ஒரு பதிவு போட்டு, பதினோரு கேள்வி கேட்பான் என்று அப்போதே யோசித்திருப்பாரா?//


அவர் யோசிக்கிறாரோ இல்லையோ நாங்கள் யோசிக்கிறோம்,..


என்ன உங்களை வைச்சு நீங்களே காமெடி பண்ணிக்கிறீங்களா?? ஆங்.....


என்ன வெற்றி எப்.எம் இலை ஸ்பெஷல் றூம் போட்டு யோசிப்பீங்களோ??:)

ARV Loshan said...

நன்றி மயூரன்..
உபயோகமான தகவல்கள்..

அக்காலத்தில் இந்த அனோனி காழ்ப்புணர்வுகள், குழுமச்சண்டைகள் எல்லாம் இருந்ததாக எனக்கு நினைவில்லை.//

மெய்யாலுமேவா? நம்ப முடியவில்லை... ;)



குப்பன்_யாஹூ said...
உங்களின் ஐந்தாவது கேள்விக்கு என் சிற்றறிவுக்கு எட்டிய பதிலை அளிக்கிறேன்.

2003 அல்லது 2004 ஆண்டு என நினைக்கிறேன், அப்போது யாகூ இனைய அறைகளில் பதிவு பற்றிய செய்திகள் வந்தது. சில பதிவர்கள் (சாட்டர்கள்) தங்கள் வலை பதிவு பற்றி சொல்லியது உண்டு.

அப்படி நான் போய் படித்த பதிவுகள் டுபுக்கு, எண்ணப் பரிமான்கள், சிங்கபூர் அறிவான், http://ennasitharalgal.blogspot.com/2007/07/blog-post_14.ஹ்த்ம்ல், ஆங்கிலப் பதிவு மாமி, எனாரை மாமி , சொம்யா//

அப்பாடி.. என் பதிவு மூலமாக பல பேருக்கு மலரும் நினைவுகள் மீட்டப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு போல.. ;) நன்றி குப்பன்..



கமல் said...
அவர் யோசிக்கிறாரோ இல்லையோ நாங்கள் யோசிக்கிறோம்,..//

யோசிக்க வைப்பது ஒரு பெரிய விஷயம் தானே.. ;)

உங்களை வைச்சு நீங்களே காமெடி பண்ணிக்கிறீங்களா?? ஆங்.....//
நானே பண்ணிகிட்டா வேற யாரும் பண்ண முடியாதே.. இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க.. ;)

வெற்றி எப்.எம் இலை ஸ்பெஷல் றூம் போட்டு யோசிப்பீங்களோ??:)//
இருக்கிற றூமே ரொம்ப பெரிசா இருக்கு.. இதுக்குள்ள யோசிக்கிறதுக்கு வேற ஒரு றூமா??
நல்லா தான் கேக்கிராங்கையா றூமு.. ;)

Tech Shankar said...

Classic Questions from good person's great post.

Thanks

மாயா said...

வலைப்பதிவுகள் பற்றியும் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் தொடர்பாகவும் இங்கு சிந்தாநதி விரிவாக எழுதி இருக்கிறார்.

1] http://valai.blogspirit.com/archive/2007/11/29/kasi.html

2] http://valai.blogspirit.com/archive/2007/11/29/interview.html

................................
சிந்தாநதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. ரொம்ப நாளா அவரைக் காணவில்லை!

Anonymous said...

loshan, super. continue.....................

by
ithayam

புல்லட் said...

உங்கட ரூம் ரொம்ப பெரூசா சார்? நல்லா உருண்டு உருண்டு யொசிச்சிருக்கீங்க? இப்பதான் எனக்கு எகனொமிக் கிறைசிசெண்ட அடிநாதம் விளங்குது...

Anonymous said...

நானொரு மூத்த பதிவர் என்பதனால் :) :) :) உங்களின் கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்ல முடியும்.

மயூரன் சொன்னது போல tamilblogs என்ற ஒரு திரட்டி இருந்தது. அதில் பதிவுகள் திரட்டப்படாது. பதிவர்களின் பெயர்கள் திரட்டப்பட்டிருந்தன.

அதனை விட தற்போது தமிழ்மண நட்சத்திரத்தின் மூலம் - வலைப்பூ என்ற ஒரு வலைப்பதிவாக இயங்கியது.

அதில் வாரமொருவரை ஆசிரியராக்கி அவர் - அந்த வாரம் தான் படித்து சுவைத்த பிற வலைப் பதிவுகளை அறிமுகம் செய்து வைப்பார்.

தமிழ்மணம் 2004 செப்டம்பரளவில் வந்திருக்க வேண்டும். அப்போது தமிழ்மணத்தின் பயன்பாடு மட்டுப்படுத்தப் பட்டிருந்தது.

புதிதாக வந்த 10 இடுகைகள் என்ற அளவில் அதன் பயன்பாடு இருந்தது. அப்போது கருவிப் பட்டையெல்லாம் இல்லை.

தமிழ்மணம் தனது குறித்த நேரத்திற்கொருதடவை புதிய பதிவுகளைத் திரட்டும்.

அப்போது மறுமொழி திரட்டல் எல்லாம் கிடையாது. (அதனாலேயே பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதும் இல்லை :)

2004 களில் அனானி - கும்மி மொக்கை - போன்றவை இருந்ததில்லைத்தான். ஆனால் 2006 களில் அது ஆரம்பித்து விட்டது.

அப்போ நான் எழுதியதெல்லாம் பழைய நினைவுகள்தான்.

ஜனவரி 1 2003 இல் முதல் தமிழ் பதிவு வந்ததாக சொல்கிறார்கள். இடையில் ஒருதடவை இது ஆராயப்பட்டு இன்னொரு பெயரையும் சொன்னார்கள்.

ஆ.. முதலில் குரல் ஒலிப்பதிவினை தமிழில் இட்டது கொழுவி என்கிறார்கள். பொய்யாக இருக்கும்

Darmaraj (எ) Darma said...

வணக்கம் அண்ணா!
வார்ப்புரு சரியில்லை . . .
ஒடுங்கியதாக இருக்கிறது

மாற்றவும்

Anonymous said...

i'm from jaffna.
now a days here we can able to hear
radio city, radio mirchi, redio one, & kodai panpalai.
i think they will clearly heard in snow seasons(dec-april).

ஆதிரை said...

வெள்ளிக்கிழமை இல்லாத எல்லையில் (எப்படியிருக்கு மொழி பெயர்ப்பு?) கூடவந்தவ புடவை வாங்க குட்டி லோசனுடன் அந்த மூலைக்குள் நின்று இதுவா யோசித்தீர்கள்...?

சரி... சரி... எங்களை குழப்பமால் உங்களுடைய சந்தேகங்களுக்கான விடைகளை தொகுத்துப் போடுங்கோ. கடைசிச் சந்தேகத்துக்கான விடை வேண்டாமே... :)

ஆதிரை said...

அடப்பாவி லோஷன்...
உனக்கு தூக்கமே வாறதில்லையா...? அல்லது நாளை விடியலுக்கு இன்னொருத்தரா...?

Unknown said...

நன்றி லோஷன் அவர்களே !

கமல் அவர்களுக்கும் நன்றி !

சர்வதேச வானொலி என்றொரு பிளாக்கிலும் வானொலி பற்றிய
தகவல்கள் நிறைய உண்டு என்பதையும் அறிய தருகிறோம்

ARV Loshan said...

தமிழ்நெஞ்சம் said...
Classic Questions from good person's great post.//
Thanx தமிழ்நெஞ்சம் .. :)


மாயா said...
வலைப்பதிவுகள் பற்றியும் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் தொடர்பாகவும் இங்கு சிந்தாநதி விரிவாக எழுதி இருக்கிறார்.//
நன்றி மாயா.. உங்கள் பற்றி அறிந்த போதே சிந்தாநதி பற்றியும் அப்போது தெரிந்துகொண்டேன்..

Anonymous said...
loshan, super. continue..................... by
ithayam//
நன்றி.. :)


புல்லட் பாண்டி said...
உங்கட ரூம் ரொம்ப பெரூசா சார்? நல்லா உருண்டு உருண்டு யொசிச்சிருக்கீங்க? இப்பதான் எனக்கு எகனொமிக் கிறைசிசெண்ட அடிநாதம் விளங்குது...//
அடப்பாவி.. சாடை மாடையாக நம்ம சைசையும் போட்டு தாக்கிட்டீங்க போல.. ஆமாங்கோவ் ரூம் பெரீசு.. நூறு பேர் ஒண்ணா சேர்ந்து வேலை செய்யும் அளவுக்கு.. ;)


சயந்தன் said...
நானொரு மூத்த பதிவர் என்பதனால் :) :) :)//
நன்றி சயந்தன் ஐயா அவர்களே(மூத்த பதிவருக்கு மரியாதை ங்கண்ணா)

//2004 களில் அனானி - கும்மி மொக்கை - போன்றவை இருந்ததில்லைத்தான். ஆனால் 2006 களில் அது ஆரம்பித்து விட்டது.

அப்போ நான் எழுதியதெல்லாம் பழைய நினைவுகள்தான். //
நல்ல விஷயங்களை மீட்டித் தந்தீர்கள்.. (இளமை திரும்பியிருக்குமே??)

//முதலில் குரல் ஒலிப்பதிவினை தமிழில் இட்டது கொழுவி என்கிறார்கள். //
வாழ்த்துக்கள் . கொழுவியா? யாரது.. ஓ அவரா? அவர் மகன் முன்பு அடிக்கடி என் பக்கம் வருவார்.. இப்ப எங்கேயாவது புலம் பெயர்ந்திட்டாரோ?

ARV Loshan said...

Darmaraj(A) Darma said...
வணக்கம் அண்ணா!
வார்ப்புரு சரியில்லை . . .
ஒடுங்கியதாக இருக்கிறது

மாற்றவும்//
உங்கள் கருத்துக்கு நன்றி தர்மராஜ்.. இப்போ தான் கருத்துக்கள் வருகின்றன. பார்க்கலாம்.


அனானி.. உங்க விஷயத்தை குமார் படித்திருப்பார்..


ஆதிரை said...
வெள்ளிக்கிழமை இல்லாத எல்லையில் (எப்படியிருக்கு மொழி பெயர்ப்பு?) கூடவந்தவ புடவை வாங்க குட்டி லோசனுடன் அந்த மூலைக்குள் நின்று இதுவா யோசித்தீர்கள்...?//
அடப் பாவி.. இதையெல்லாம் எங்கே இருந்து பார்த்தீங்க.. எப்படிப்பட்ட பொறுப்பான குடும்பத் தலைவன் பார்த்தீங்களா? (அந்தக் கொடுமை எனக்கு மட்டுமல்லவா தெரியும்?)

விடைகளைத் தான் நம்ம அன்பர்கள்/சிரேஷ்ட/மூத்த பதிவர்கள் விபரமா தந்திருக்காங்களே..


ஆதிரை said...
அடப்பாவி லோஷன்...
உனக்கு தூக்கமே வாறதில்லையா...? அல்லது நாளை விடியலுக்கு இன்னொருத்தரா...?//
விழித்திரு என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. நானொரு இரவுப் பறவை.. தாமதமா தூங்கி விரைவில் எழும்பும் பயபுள்ள..

மீண்டும் நன்றி குமார்..

Unknown said...

Anonymous Anonymous said...

i'm from jaffna.
now a days here we can able to hear
radio city, radio mirchi, redio one, & kodai panpalai.
i think they will clearly heard in snow seasons(dec-april).

March 22, 2009 6:46 PM


அன்பு நண்பர் ஜப்னாவில் இருந்து எழுதியவர்க்கும் நன்றி.

மேலும் தகவல்கள் காண‌

http://www.sarvadesavaanoli.blogspot.com/

۞சிந்தாநதி said...

லோஷன்

http://valai.blogspirit.com/archive/2007/01/16/birthday.html

http://valai.blogspirit.com/archive/2007/01/16/karthik.html

நவன், கார்த்திக்

முதல் பதிவர்கள் பற்றிய பதிவுகள்.

மாயா,

நினைவிருத்தி தேடியதறக்கு நன்றி.
ஒன்பது மாதங்களுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறேன்.

http://tamil.kanimai.com/

தமிழ்.கணிமை மீண்டும் செயல்படுகிறது...

தமிழன்-கறுப்பி... said...

மயூரன் சொன்ன தகவல்கள்தான் எனக்கும் நினைவிலிருந்தது.
ஆனால் அனானி அப்டி இப்படியென்று தாக்குதல்கள் என்பதைவிட முறையான விவாதங்கள் அப்பொழுதிலிருந்தது போல இப்பொழுது இல்லை என்பதுதான் என்னுடைய எண்ணமும், மற்றபடி சிந்தாநதியின் தளம் பற்றி மறந்து போயிருந்தேன் நினைவூட்டியதற்கு நன்றி மாயா..

ஆமா சிந்தாநதி எங்க போயிட்டிங்க ஏன் ஆட்டையில் கலந்து கொள்வதில்லை?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner