Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

January 11, 2021

சிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி !

 தோல்வியைத் தவிர்ப்பதே சில நேரங்களில் வெற்றி தான் !

அதை இன்று இந்தியா போராடிச் செய்திருக்கிறது.



மூன்று வீரர்கள் காயம்.
அவுஸ்திரேலியாவின் படுபயங்கர பந்து வீச்சு வரிசை, இறுதிநாள் சிட்னி ஆடுகளம், பொல்லாத அவுஸ்திரேலிய வீரர்களின் வாய்கள்..

இதையெல்லாம் தாண்டி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இறுதி நாளில் இழந்து, இன்று சமநிலையில் முடித்தது சரித்திரத்தில் ஒரு பெரிய சாதனை தான் !

Rishabh Pant ஆடுகளத்தில் இருந்தபோது நான் நினைத்தேன், இந்தியா ஒரு சரித்திரபூர்வ வெற்றியைப் பெறப்போகிறது என்று.

Adversity brings out the best in man
இக்கட்டான சூழ்நிலைகள் தான் சரித்திர நாயகர்களை உருவாக்குகிறது.
Pant இன்று அவ்வாறு தான் தெரிந்தார்.

எதற்கும் அஞ்சாமல் ஆடிய விதம் அவுஸ்திரேலிய வீரர்களை நிச்சயம் பயமுறுத்தியிருக்கும்.

Pant விக்கெட் காப்பில் தான் விட்ட பிடிகளை, தனது ஓட்டைக் கைகளை எல்லாம் இன்றைய அதிரடித் துடுப்பாட்டம் மூலமாக முழுதுமாக அழித்துவிட்டார்.

புஜாராவின் வழமையான பொறுமையான ஒட்டல் பாணி இந்திய ரசிகர்களாலேயே நக்கல் செய்யப்படுவதுண்டு. ஆனால் இன்று பாண்டுக்கு ஏற்ற அற்புதமான இணையை வழங்கியிருந்தார்.

ஜடேஜாவும் முழுமையாக ஆரோக்கியமாக இருந்திருந்தால் பாண்டின் அதிரடியோடு இந்தியா வெற்றிக்கு கொஞ்சமாவது முயன்றிருக்கும் என நம்புகிறேன்.

இதே போல 406 என்ற இலக்கை இந்தியா 44 ஆண்டுகளுக்கு முன்னர் Port of Spainஇல் துரத்தி வென்றது இரண்டு தசாப்தகாலமாக டெஸ்ட் சாதனையாக இருந்ததும் நினைவுபடுத்தவேண்டியது.
(அந்தப் போட்டி கிரிக்கெட்டின் போக்கையே முற்றுமுழுதாக மாற்றியது வேறு கதை என்று அப்பா அடிக்கடி சொல்வார்.
அந்தத் தோல்வி தான், அந்தப் போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் Fast bowlingஐத் தமது ஆயுதமாக தெரிந்தெடுக்கக் காரணமாக அமைந்ததாம்

ஆனால் ஐந்து விக்கெட் இழக்கப்பட்ட பிறகு 250+ பந்துகள் விஹாரியும் அஷ்வினும் போராடியது இந்தியாவுக்குப் புதிய அனுபவம் தான். (அதுவும் அவுஸ்திரேலியாவின் படுபயங்கர sledgingஐயும் தாண்டி)
விஹாரி தனது தெரிவை நியாயப்படுத்தியிருக்கிறார்.
அஷ்வின், தான் ஏன் இந்தியாவின் முதலாவது Test தெரிவாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் துடுப்பின் மூலமாகவும் காட்டியிருக்கிறார்.

நான் வழமையான அவுஸ்திரேலியாவின் ரசிகன் தான்.
ஆனால் இன்று மிக முக்கியமாக அணித்தலைவர் பெய்னின் மோசமான நடத்தைகள், அணுகுமுறைகளுக்காகவே இந்தியா (வெல்லாது என்று தெரியும்) தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்பினேன்.
அதிலும் பேயன் (ஊப்ஸ் பெயின்) விட்ட பிடிகளே இந்தப் போட்டியை அவுஸ்திரேலியா வெல்லாமல் போக பிரதானமான காரணங்கள் என்பேன்.
ஸ்மித் பாண்டின் Guard தடங்களை வேண்டுமென்றே அழித்ததாக இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வரும் படங்களை பார்த்தேன். Smith cheater என்று மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஸ்மித் அதை வேன்றுமென்றே செய்திருந்தால், அதன் மூலம் போட்டியின் முடிவை மாற்ற எத்தனித்திருந்தால் அதையும் கண்டிக்கவே வேண்டும்.

சுவர் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை இன்னொரு டிராவிட்டினால் இப்போது வழிநடத்தப்படும் இந்தியா இதை விடச் சிறப்பாகக் கொண்டாடியிருக்க முடியாது.

அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயமாக இது ஒரு தோல்வியே தான் !

என்ன, சின்னக் கவலை ஸ்மித் மீண்டும் க்குத் திரும்பிக் காட்டிய இரண்டு இன்னிங்ஸ் சாகசங்கள், Labuschagne, Greenஇன் ஆட்டங்கள், கமின்ஸின் முதல் இன்னிங்ஸ் நெருப்புப் பந்துவீச்சு எல்லாம் வீணானதே என்பது தான்.

ஆனால் அது தான் டெஸ்ட் !
Tests your perseverance.

தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படும் Gabba, பிரிஸ்பேனில்.

இந்தியாவின் காயம் + உபாதை லிஸ்ட் பெரிசு என்பதால் இதே போராட்டத்தைக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும், ரஹானேயினால் உந்தப்படும் இந்த அணி இறுதிவரை போராடும் என்றே தெரிகிறது.

ரஹானேயின் தலைமையில் இன்னமும் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை.
Ajinkya Rahane, still undefeated as a captain in Test cricket
#AUSvIND

இதே நெருப்பில் பாதியையாவது நம்ம அணி எமது கோட்டை காலியில் காட்டுமாக இருந்தால்....
பொங்கல் சும்மா பொங்கி களைகட்டும் எமக்கு.
#SLvENG 1st Test - 14th

November 26, 2020

Lanka Premier League ! #LPLT20

 நேற்று (புதன்கிழமை - நவம்பர் 25) எனது Facebookஇல் எழுதிய பதிவு சில சேர்க்கைகள், திருத்தங்களுடன்.



போட்டிகள் அத்தனையும் ஹம்பாந்தோட்டையில்..
ஒவ்வொரு நாளும் போட்டிகள்..
கொரோனா, நிதி சிக்கல்கள், வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் தடங்கல்கள், ​IPLஐத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ள சர்வதேசப் போட்டிகள் (நாளை - வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மூன்று தொடர்கள் ஆரம்பமாகின்றன - அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலியா - இந்தியா ஒருநாள் சர்வதேசப் போட்டி, நியூசீலாந்தில் நியூசீலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் T20 & தென் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து T20) என்று ஏராளமான தடைகளைக் கடந்து பல தடவைகள் தள்ளி தள்ளி தள்ளிப் போடப்பட்டு.. எப்படியாவது நடத்தியே ஆகவேண்டும் என்று இப்போது சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..
ஆனால்​ நம் நாட்டின் கிரிக்கெட்டுக்கும் மழைக்கும் உள்ள ராசி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் Franchise Cricket T20 ராசி என்று நாளை வரை எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் எனக்கு மட்டும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நிவர் புயல், பொதுவாகவே ​இந்த மாதங்களில் தென், தென் மேற்கு மாகாணங்களில் பெய்யும் மழை, கொரோனா என்று வில்லன்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்..
​ஆயினும் இந்த 23​ போட்டிகளும் எப்படியாவது, எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நடைபெற்று முடியவேண்டும் என்று ஒரு கிரிக்கெட் ரசிகனாக, இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் எழுச்சிப் பாதையில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படும் ஒரு இலங்கை கிரிக்கெட் அபிமானியாக விரும்புகிறேன்.
சொற்ப சர்வதேச வீரர்கள் (பெரிய பிரபலங்கள் இல்லை - போதாக்குறைக்கு முனாப் பட்டேல், இர்பான் பதான், கோனி வகையறாக்கள்) , ஐந்தே ஐந்து அணிகள், அவசர ஏற்பாடுகள், எதிர்பார்த்த பரபரப்பை விடக் குறைவு, அணிகளின் பெயர்களிலும் லோகோக்களிலும் அவசரம், சர்வதேசத் தரத்தில் ஒப்பிடுவதற்கு நாம் தயங்கும் சில குறைகள் என்று என்னதான் சொதப்பல்கள் கண்ணை உறுத்தினாலும் இப்படியான ஒரு கொரோனா காலகட்டத்தில் எப்படியாவது நடத்தி முடிப்பது முக்கியம்.
அடுத்தாண்டுகளுக்கு தொடர்வதற்கும் இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துக்கும் இது ஒரு ஆரம்பமாக இருக்கும்.
(கொரோனா உக்கிரமாகத் தாண்டவமாடும் இந்தக் காலகட்டத்தில் இப்படியொன்று தேவையா என்று கேட்டால், எப்போதோ செய்திருக்கவேண்டியது இப்படியாவது நடக்கட்டும் என்று கடக்கவேண்டியது தான்)



அடுத்த விஷயம் இன்னொரு முக்கியமானது.
உங்களில் பலர் என்னிடம் கேட்டது..
எந்த அணிக்கு ஆதரவு ?
Jaffna Stallions
என்று ஒரு அணி உருவாக்கப்பட்டதும் எம்மவர் பலர் தானாகவே அந்த அணிக்கு பாசமழை பொழிந்ததை நாம் IPLஇல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பலரின் ஆதரவோடு பார்க்கலாம். (சென்னையை நானும் நாமும் கலாய்க்க பிற்காலத்தில் இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கு என்பது வேறு கதை)
ஒரு தமிழ் பேசும் பிரதான நிலத்திலிருந்து ஒரு அணி என்னும்போது இயல்பான பாசம் வருவதும், நமக்கான அணி என்ற ஒட்டுதல் ஏற்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
இந்த அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டவுடனேயே என்னைப் போன்ற இன்னும் பலரின் ஆதரவு கூடியது, இலங்கைத் தேசிய அணியில் ஒரு தமிழ் பேசும் வீரரைக் காண மாட்டோமா என்ற ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு.
ஆனால், கிரிக்கெட்டில் உணர்ச்சிவசப்படுதலையும் வெறும் 'தமிழன்டா' கோஷத்தையும் மட்டுமே வைத்து அணி ஆதரவை முடிவு செய்யாத என்னுடைய Jaffna Stallions மீதான இம்முறை ஆதரவுக்கு நேற்று சங்கக்காரவும் அவரைத் தொடர்ந்து அவருடைய நண்பர் மஹேல ஜயவர்த்தனவும் சொன்ன காரணங்களும் சேர்ந்தே இருக்கின்றன.
(படங்கள் கீழே)





1.குறித்த பிரதேசத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வீரர்களின் தெரிவு, இத்தனை காலம் அரசியலிலும் இலங்கை என்ற அடையாளத்திலும் விலகியிருக்கும் எம்மவருக்கு கொஞ்சமாவது நம்பிக்கையைக் கொடுக்கும் ஒரு முதலடி.
2. இந்த ஐந்து அணிகளில் சர்வதேச மைதான வசதி இல்லாமல் இருக்கும் ஒரே அணி.
3.முதலீட்டாளர்களாக புலம்பெயர் நம்மவர்களும் வருவதால் எதிர்காலத்தில் கிரிக்கெட்டைத் தாண்டி எமது மக்களின் அபிவிருத்தியை நோக்கிய வேறு பல முக்கிய துறைகளுக்கான முதலீடுகளும் வரும் சாத்தியத்தை உருவாக்கலாம்.
Stallions என்பது பற்றி எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருந்தது (2012 SLPLஇல் வைக்கப்பட்ட Uthura Rudras ஐ விட லட்சம் மடங்கு பரவாயில்லை என்பது வேறு).
ஆனால் அணியின் பங்குதாரர்களில் சிலருடன் பேசிய பின் பரிசீலனையில் இருந்து வேறு பலவற்றுடன் பார்க்கையில் நெடுந்தீவு குதிரைகளின் அடையாளமாக, கம்பீரத்தை வெளிப்படுத்தும் பொலிக்குதிரை வெற்றிபெறும் அணிக்கு பொருத்தமாக இருக்கட்டுமே..
அணியில் எனக்குப் பிடித்த சில வீரர்கள் இருக்கிறார்கள்..
தனஞ்சய டீ சில்வா, வனிது ஹசரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக இவர்கள் எதிர்காலத்துக்கான நட்சத்திரங்கள்.
முக்கியமாக மினோத் தன்னை ஒரு சிறப்பான T20 வீரராக நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
இரும்பு மனிதன் திசர நாமெல்லாம் திட்டித் திட்டியும் ரசிக்கிற ஒரு Love hate fandom.
ஆனால் இதை விட அதிகமான பிடித்த வீரர்களைக் கொண்ட அணிகள் இருக்கின்றன என்பது தான் உண்மையும் இந்த T20 franchise type League போட்டிகளில் இருக்கிற தர்மசங்கடமும்.
நான் பொதுவாக இவ்வகையான போட்டிகளில் தனியே ஒரு அணிக்கு ஆதரவு தெரிவித்து பார்ப்பதில்லை. பிடித்த வீரர்கள் எல்லா அணிகளிலும் சிதறியிருக்கும்போது எப்படி தனியே ஒரு அணி ?
Big Bash Leagueஇல் கூட சங்கா விளையாடியபோது Hobart Hurricanes பிடித்த அணியாக இருந்தாலும் Shane Warne, Steve Smith, Cameron White என்று பலரும் வேறு அணிகளுக்கு ஆடும்போது மனம் நிலையாக நிற்காது.
IPL, CPL வகையிலும் இவ்வாறு தான்.
ஆனால் அதில் ஒரு வசதி..
போட்டியை ரசிக்கலாம்.
#LPL2020LPL இலும் மத்தியூஸ், குசல் ஜனித், டசுன் ஷானக, இசுறு உதான, கமிந்து மென்டிஸ், அசேல குணரத்ன, பானுக ராஜபக்ச, வெளிநாட்டு வீரர்களில் பிரெண்டன் டெய்லர், Hazratulla Zazai என்று பலரும் பல்வேறு அணிகளில்.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்,
Colombo Kings
என்ற பெயர் நான்கு ஆண்டுகளுக்கு முதலே என் மனதில் இருந்திருக்கிறது.
செல்பேசியில் நான் விளையாடும் Real Cricket gameஇல் எனது அணியின் பெயர் அது.


அறிவிப்பு வந்தவுடன் ஒரு ஆனந்த அதிர்ச்சி.
அதுவும் தலைவன் அஞ்சலோ மத்தியூஸ்.
கேட்கவும் வேண்டுமா?
அணியும் ஒரு கட்டமைப்பு நேர்த்தியுடன் இருக்கிறது.
ரசலும் முழுமையான உடற்தகுதியோடு விளையாடினால் மற்ற அணிகளுக்கு சிரமம் தான்.
பாகிஸ்தானிய பின்புலத்தோடும் பலத்தோடும் இருக்கும்
Galle Gladiators
அணியும் மிகப் பலமானதாகத் தெரிகிறது.
மாலிங்கவும் விளையாடி, அமீரும் மாலிங்கவும் சேர்ந்து பந்துவீசி இருந்தால்...
கண்டியில் குசல் ஜனித்தினதும் தம்புள்ளையில் ஷானகவினதும் தலைமைத்துவ அணுகுமுறைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
சிங்கள இணையத்தளங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர் பக்கங்கள் ஒரு கொழும்பு - கண்டி மோதலை சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.
Colombo - Kandy Rivalry
வழமையாக துவேஷம் தலையெடுக்கக்கூடிய வாய்ப்புடைய இரு அணிகளுக்கும் ஆச்சரியகரமாக ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.
அதுவும் தென்னிலங்கை அணிக்கு பாகிஸ்தானிய உரிமையாளர் வந்தும் (ஷிராஸ் மட்டுமே ஒரு இலங்கை முஸ்லிம் வீரராக அந்த அணியில் இடம்பெற்றும்), யாழ்ப்பாண அணியில் மட்டும் தமிழ் வீரர்கள் இடம்பெற்றும் கூட இப்படி நடந்திருப்பது மகிழ்ச்சியான மனமாற்றம்.
திறமையினால் தான் அணிக்குள்ளே வந்தார்கள் என்பதை சர்வதேச மட்டத்தில் காட்டக்கூடிய வாய்ப்பை வியாஸ்காந்த் கிடைக்கும் வாய்ப்புக்களில் ஏற்படுத்தவேண்டும்.
எனக்குப் பிடித்த இன்னொரு Leg spinnerஆக இந்தத் தம்பி வரட்டும்.
இப்படியான போட்டிகளில் கவனிக்கப்படும் அணியின் சீருடைகளில் அணியின் பெயர்கள், சின்னங்களில் காட்டப்பட்ட அதே அவசரம்.
இவற்றுள் Jaffna Stallionsஇன் நீல நிற சேர்வைகள் கண்ணுக்கு கவர்வதாக இருக்கிறது.
இருக்கிற அணியின் லோகோக்களில் நேர்த்தியும் Jaffnaவிடம் தான் காண்கிறேன். புதிய லோகோவில் அப்படியொரு கம்பீரம்.


கொழும்பின் நீலம் + சிவப்பு இன்னும் கொஞ்சம் நேர்த்தியுடன் ஒரு trend ஆக வரும்.
காலியின் ஊதா அவர்களது பாகிஸ்தானிய அணியின் (Quetta Gladiators)அதே நிறம். Richness இருக்கிறது. எனினும் எனக்கு ஒட்டவில்லை.
தம்புள்ளை Viikings (பெயரில் அந்நியம் இருந்தாலும்) ஒரு ஈர்ப்பான, இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு கலவை. எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் பயன்படுத்திய கால்பந்து ஜெர்சி நினைவு வருகிறது.
கண்டியினுடையது தான் புறக்கோட்டையில் பேமண்டில் பேரம்பேசி ஐந்நூறு ரூபாய்க்கு எடுக்கும் அளவுக்கு கவலைக்கிட நிலையில்.
போட்டி நடைபெறும் இந்தக் காலகட்டம் பற்றிக் கொஞ்சம் மனதில் சலனம் இருந்தாலும் கொரோனாவினால் தான் இத்தனை பிற்போடப்பட்டது என்று நம்புவோம்.
அடுத்த முறை வேறு காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக நடப்பதற்கான வெற்றி இம்முறை கிட்டட்டும்.
இந்த தொடர் பற்றிய சில முக்கிய காணொளிகள்
1. Lanka Premier League #LPLT20 Teams & Players in Tamil | அணிகள், வீரர்கள் & வரலாறு - முழு விவரங்கள்
2.Lankan Premier League | வீரர்கள் & விபரங்கள் - ஒரு முழுமையான பார்வை | ARV Loshan #LPL2020
3. Lanka Premier League - Jaffna Stallions இன் கூக்ளி | Vijayakanth Viyaskanth
4. LPL Jaffna Stallions | Lanka Premier League| Tamil Cricket
5.Lanka Premier League 2020 | Official Theme Song

September 17, 2019

பாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை !! மிஸ்பா அறிவிப்பு !!

#Pakistan #PAKvSL
இலங்கைக்கு எதிரான தொடர் (நடந்தால்) - பாகிஸ்தான் முன்னோடிக் குழாமில் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் இல்லை.



உமர் அக்மலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.

தலைமைத் தேர்வாளர் + பயிற்றுவிப்பாளர் பதவிகளை பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக்கின் தெரிவு....

Shoaib, Hafeez ஆகியோர் இப்போது Caribbean Premier League - CPLஇல் ஆடிவருவதன் காரணமாகவும், அவர்களுக்கு ஒக்டொபர் 12ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாலுமே அணியில் சேர்க்கப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான T20, ஒருநாள் தொடர்கள் September 27 முதல் October 9வரை இடம்பெறவுள்ளன.
இறுதி பதினைவர் கொண்ட குழாம்களை வருகின்ற சனிக்கிழமை மிஸ்பா அறிவிப்பார்.

இன்னும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தத் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவை அறிவிக்கவில்லை.

Pakistan Probables:

Sarfaraz Ahmed (captain),
Babar Azam (vice-captain)
Abid Ali
Ahmed Shehzad
Asif Ali
Faheem Ashraf
Fakhar Zaman
Haris Sohail
Hasan Ali
Iftikhar Ahmed
Imad Wasim
Imam-ul-Haq
Mohammad Amir
Mohammad Hasnain
Mohammad Nawaz
Mohammad Rizwan
Shadab Khan
Umar Akmal
Usman Shinwari
Wahab Riaz


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner