March 11, 2009

தொடரும் வெற்றி - இனி பொன்டிங்கின் இளமை அணியின் காலம்

நேற்றைய தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டேர்பன் டெஸ்ட் வெற்றியுடன் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்திருக்கிறது அவுஸ்திரேலியா.நேற்றைய டேர்பன் வெற்றி இருவாரங்களுக்கு முதல் எந்தவொரு அவுஸ்திரேலிய வீரரும் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

சொந்த மண்ணில் வைத்து அவமானகரமாகத் தொடரை இழந்த பிறகு புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டு புது இரத்தம் பாய்ச்சப்பட்ட அவுஸ்திரேலியா அணி பெற்ற 3வது தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றி இது!
                            
நீண்டகாலம் பெருமையுடன் தம் வசம் வைத்திருந்த ICC தரப்படுத்தல் முதலாமிடம் என்ற கிரீடத்தையும் மீண்டும் தக்க வைத்திருப்பதோடு மத்தியூ ஹெய்டன்,கிளென் மக்கிராத்,அன்ட்ரு சைமன்ஸ்,பிரெட் லீ ஆகியோருக்கான தகுந்த,புதிய,இளைய,நீண்டகால முதலீடுகளாக ஃபில் ஹியூஸ்,பிட்டர் சிடில்,மார்க்கஸ் நோர்த்,பென் ஹில்ஃபென்ஹோஸ் என்று நான்கு பேரைத் தயார் செய்துவிட்டார்கள்.

தென்னாபிரிக்காவை அவர்களது சொந்த மண்ணிலேயே முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் துவைத்து கிழித்து தொங்கி விட்டுவிட்டார்கள்.

அதுவும் டேர்பன் டெஸ்ட் போட்டிக்காக தென்னாபிரிக்கா தயார் செய்து வைத்த வேகமான பவுன்சி (Bouncy) ஆடுகளம் அவர்களுக்கே குழி பறித்து தான் வேதனை! 'சொந்த செலவில்' சூனியம் வைப்பது போல வேகமான ஆடுகளத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவின் இளம்புயல்கள் முதலாம் இனிங்சில் தென்னாபிரிக்காவை 138க்குள் சுருட்டிவிட்டார்கள்.

போதாக்குறைக்கு தலைவர் ஸ்மித்தின் கையை மீண்டும் முறித்ததோடு மிச்செல் ஜோன்சன் ஜக்ஸ் கலீஸின் தாடையையும் பெயர்த்தும் பயமுறுத்திவிட்டார்.

ஸ்மித்தினால் மூன்றாம் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாதுள்ளதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோற்று 'WHITE WASH' அவமானத்தைத் தவிர்க்க இறுதி டெஸ்ட் போட்டிக்கு மூன்று மாற்றங்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தென்னாபிரிக்கா.

அதில் முக்கியமாக தலைவராக கடமையாற்றவுள்ள ஆஷ்வெல் ப்ரின்ஸ்.ஜே.பி.டுமினியின் வரவினால் வெளியேயிருந்த பிரின்ஸ் நேரடியாகத் தலைமைப் பதவியுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் என்ற மேலதிக சுமையுடன் குதிக்கறார் பாவம்!

அவுஸ்திரேலிய புதுமுக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பிலிப் ஹியூஸ் பற்றி நான் முன்னைய பதிவில் இளமையின் வெற்றி - ஆஸ்திரேலியா
சொன்னபோது too early என்று சொன்னவர்கள் இந்த டெஸ்டில் அவரது இரு சதங்களையும் பார்த்திருக்கவேண்டும்.

வருங்கால நட்சத்திரம் ஒன்றின் உதயம்! இருபது வயதிலேயே தனது இரண்டாவது டெஸ்டிலேயே இரு இனிங்சிலும் சதங்கள்! இன்னும் தொடரும் இவர் நீண்டபயணம்!


                         இரட்டை சதம் பெற்ற போட்டியின் நாயகன் ஹியூஸ்


உலகில் பெரும்பான்மை கிரிக்கெட் ரசிகர்கள் (குறிப்பாக தமிழ் பேசுவோர்) அவுஸ்திரேலிய அணியைப் பெரும்பாலும் எதிர்த்தபோதும் (கரித்துக் கொட்டியபோதும்) அலன் போர்டரின் காலத்திலிருந்து நான் அவுஸ்திரேலிய அணியை ரசிப்பவன்! 

அவர்களது அராஜகப் போக்கும் கர்வமும் சிலநேரம் எரிச்சல் தந்தாலும் கூட அவர்களது ஆவேசம் - தொழில்சார் அணுகுதுறை (professional approach) வீழ்ச்சியிலிருந்து மீண்டெழும் விதம் ஆகியன எனக்கு எப்போதும் ரசிக்கத் தகுந்தனவாகவும் தனிப்பட்ட ரீதியில் உந்துதல் தருவதாகவும் அமைவதுண்டு.

தென்னாபிரிக்காவில் பெறப்பட்ட இந்த இரு டெஸ்ட் வெற்றிகளுமே பல முக்கிய விஷயங்களை உணர்த்துகின்றன.

அவுஸ்திரேலியாவின் பிராந்திய ரீதியிலான பலமான கிரிக்கெட் கட்டமைப்பு.

இளைய வீரர்கள் திறமையோடும் சாதிக்கும் தாகத்தோடும் காத்திருக்கிறார்கள்.

தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவில் வைத்துத் தொடரை வென்றபின் அளவு கடந்த தன்னம்பிக்கையோடோ அல்லது போதுமான தயார்படுத்தல்களில்லாமலோ இருந்திருக்கிறது.

பெரிதாக அறியப்பட்டிருக்காத அவுஸ்திரேலிய இளம்வீரர்கள்.ஆஸ்திரேலியாவின் ரகசிய ஆயுதங்களாக இந்தத் தொடரை வென்று கொடுத்துள்ளார்கள்.

அதுவும் ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரின் இரு டெஸ்ட் போட்டிகளையுமே ஒரு முழுநேர சுழல் பந்து வீச்சாளர் இல்லாமலேயே வென்றிருக்கிறது..

சீனியர்களின் பங்களிப்பு பெரியளவு இல்லாமலேயே இந்த இரு வெற்றிகளும் பெறப்பட்டுள்ளமை உண்மையில் பெரிய விஷயமே..

அடுத்து வரும் ஆஷஸ் தொடருக்கு தற்போது காயமடைந்துள்ள சீனியர்கள் (லீ,கிளார்க், சைமண்ட்ஸ்,டெய்ட்) மீண்டும் அணிக்குள் திரும்ப வேண்டுமானால் ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கும்..

இவ்வளவு நாளும் ஸ்டீவ் வோ தந்த அணியைப் பயன்படுத்தி வெற்றிகண்டு வந்த பொன்டிங்,சிரேஷ்ட வீரர்கள் எல்லோரது ஓய்வுக்கும் பிறகு கடந்த ஒரு வருடத்துள் பத்து புதிய வீரர்களுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் அறிமுகம் கொடுத்துள்ளதன் மூலம், தனது இளமை அணியின் காலத்தை ஆரம்பித்துள்ளார். 

கடந்த ஆஸ்திரேலிய அணி பற்றிய பதிவில் சொன்னது போலவே மீண்டும் சொல்கிறேன்..
இளமையின் வேகத்தோடு வெற்றியை ருசிபார்க்கப் புறப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் வெற்றி அலை அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கிறேன்.     
அனேகமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆபிரிக்கா அடி வாங்கும்.. அவ்வளவு தூரம் பொறி கலங்கிப் போயுள்ளது..

இனிவரும் காலம் பொண்டிங்கின் இளமை அணியின் காலம்.. 




8 comments:

ஆதிரை said...

அவுஸ்திரேலியா அணியில் ஒருத்தர் காயம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஓய்வெடுத்தால் அணிக்குள் மீள உள்வாங்கப்படுவதற்கு தவம் கிடக்கவேண்டிய காலம் திரும்பி விட்டது போலுள்ளது.

//இனிவரும் காலம் பொண்டிங்கின் இளமை அணியின் காலம்..

ஏனோ தெரியவில்லை... நீங்கள் ஏதோ எழுத, நானோ இங்கு எழுதப்படாத வரிக்கு வாயசைத்துவிட்டேன். மன்னிக்க... :)

எட்வின் said...

அவர்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் வெற்றிகளுக்கு காரணம். தற்போது இருக்கின்ற அணியினர் நம்மைப் பார்த்து "இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" என கேட்பது போலுள்ளது.

//உலகில் பெரும்பான்மை கிரிக்கெட் ரசிகர்கள் (குறிப்பாக தமிழ் பேசுவோர்) அவுஸ்திரேலிய அணியைப் பெரும்பாலும் எதிர்த்தபோதும் //

இந்த தமிழ் பேசுபவன் அவ்வாறு ஆஸ்திரேலியாவை அவ்வாறு கருதவில்லை :)

Anonymous said...

மனுஷன் வீட்டுக்கு போக பயத்துல officeல இருந்து blog எழுதிறார் பாவம்.

Anonymous said...

ஆஸ்திரேலியா பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேலை சொல்லி வைத்து அடிக்கிறார்களோ? இருந்தாலும் இந்தியாவுடனும் விளையாடி வென்றால் தான் அதன் மீள் வருகையை நிரூபிக்க முடியும்

தர்ஷன் said...

//தென்னாபிரிக்காவில் பெறப்பட்ட இந்த இரு டெஸ்ட் வெற்றிகளுமே பல முக்கிய விஷயங்களை உணர்த்துகின்றன.

அவுஸ்திரேலியாவின் பிராந்திய ரீதியிலான பலமான கிரிக்கெட் கட்டமைப்பு.//

உண்மை இங்கும் அவ்வப்போது kandurata, western, Uva என்று பிராந்திய போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டாலும் எவையும் வினைத்திறனான முறையில் நீடித்ததாய் தெரியவில்லை.
Premier league பாடசாலை Cricket என சகலதும் இதே நிலையில்தான்
அங்கு வசதிகள் அதிகம் என்பது உண்மையானாலும் இங்கு ஓரிருவரைத் தவிர சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகுதான் பலர் கொஞ்சமேனும் அத்தரத்தில் ஆட முயல்கின்றனர்.

Gajen said...

//அதில் முக்கியமாக தலைவராக கடமையாற்றவுள்ள ஆஷ்வெல் ப்ரின்ஸ்.ஜே.பி.டுமினியின் வரவினால் வெளியேயிருந்த பிரின்ஸ் நேரடியாகத் தலைமைப் பதவியுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் என்ற மேலதிக சுமையுடன் குதிக்கறார் பாவம்!//

அண்ணா..3 ஆம் டெஸ்ட் போட்டிக்கு சற்று முன்னர் கல்லிஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்...மத்திய வரிசை வீரரான பிரின்ஸ், 3 ஆம் டெஸ்டில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக இறங்க உள்ளார். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் அவர் கூடிய கவனம் செலுத்த ஏதுவாகவே கல்லிஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Anonymous said...

Soory Loshan, I can't agree with you 100%. Inthe second test we can't consider as a complet test. Beacuse AUS did a nasty thing. They put some bodline balls and revoce SMITH. Then KALLIS. That means they didn't break the line in a proper way. After that SMITH didn't come back. Thats means SA played with a 9 players order and they scored in 2nd Innings. Any how this is your blog. You can write what ever you want. Thats all. whoever win the battle with a full-fledged team only can be consider as a HEROS. This is ZEROS. After the 2nd mach in AUS. the SA is not a full team. Even all the comentaters and viewers agree that what SMITH DID IN THE 3rd TEST (BUT I AM NOT A SA SUPPORTER)

Anonymous said...

I need to comment back for the comment of the anonymous. Cricket interests me more than othr games cos it has very close links to the real life. When the whole cricketing world was mourning the death of the victorious Australian dominancy, it is really a great thing and appreciatable captaincy of ponting that led to the two victories. In cricket ppl get out by umpire's mistakes and they survive as well by the same. so it is unpredictable. simply speaking 'take life as it is'. likewise in football if one person is penalised with redcard, can u go on lamenting that my team played wit 9 players.. huh.. noway. so these things happen in cricket.as far as i am concerned i believ no1 really aims to injure a player and win a game.it happened and gone. bt that shouldnt diversify the victory of aussies from a dark slum they underwent. so i think we shouldnt be deprived to appreciate his captaincy and moreover underestimate the 'eluchchi' of australia. by the way i am not an australia supporter. i love cricket thats it.. :-) ena loshan wat du say..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner