January 15, 2009

சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?

நேற்று தூயாவின் வேண்டுகோள் பதிவு http://thooya.blogspot.com/2009/01/blog-post_14.html
பார்த்த பிறகு வேதனையாகவும் இருந்தது.. ஆனால் இதுபற்றி எங்களால் எதுவுமே செய்ய முடியாது என்றும் தோன்றியது.. இதுபற்றி இந்தியாவுக்கு இதுவரை கொடுக்காத விழிப்புணர்ச்சியையா இனிமேலும் நாம் கொடுக்கப் போகிறோம்?

இன்று இந்தியத் தூதர் இலங்கை ஜனாதிபதியை சந்திக்கிறார்.. வெகுவிரைவில் பிரணாப் முகர்ஜி இலங்கை வருவாராம்.. வந்து என்ன நடக்கும்? அதற்குள்ளே எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கே,,,,

இன்று எனது கறுப்பு வெள்ளியின் இரண்டு மாத கால நிறைவு நாள்..

இதை எழுத வேண்டும் என்று தோன்றியது! இன்று எழுதுகிறேன்! எனக்கு சில நண்பர்கள் பின்னூட்டம் இடும்போது இலங்கையில் இருக்கிறாயே இனப்படுகொலை பற்றி எழுது! ஈழத்தமிழர் போராட்டம் பற்றி எழுது! என்று அடிக்கடி கண்டிப்புடன் எழுதுவார்கள்; சிலவேளை உத்தரவும் இடுவார்கள்!

அண்மையில் ஒருவர் -
Anonymous said...
தமிழ்மக்கள் செத்து மடிகின்றார்கள். அது குறித்து ஏதாவது எழுதுகின்றாயா? கிறிக்கட் மட்டையுடன் கூடப் பிறந்தவன் போல என்ன உளறுகின்றாய்? சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?
January 13, 2009 5:17 PM
என்று தனது கோபத்தைக் காட்டி இருக்கிறார்.. இலங்கையில் எங்கள் இடத்தில் நீங்கள் இருந்து பாருங்கள்..

எனக்கு இவற்றை வாசிக்கும்போது சிலநேரம் சிரிப்பு வரும்; சிலநேரம் சினம் வரும். சிலநேரம் நமது நண்பர்கள் சிலர் எனக்குச் சொல்வது போல் திட்டமிட்டே என்னை உசுப்பேற்றுகிறார்களோ என சிந்திப்பேன்!

ஆனால் இதுவரை நான் எல்லோரதும் பின்னூட்டமிடும் உரிமையை மதித்து மட்டுறுத்தலை இன்னும் கட்டுப்படுத்தவில்லை. (எத்தனையோ நண்பர்கள் வலியுறுத்தியும் கூட) எனது வலையத்தளம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஆறே ஆறு பின்னூட்டங்களை மட்டுமே நிராகரித்துள்ளேன். இவற்றில் எவையுமே என்னை விமர்சித்ததனால் அல்ல! ஆபாச வார்த்தைகள் தாங்கி வந்தவையும் என் போட்டியாளர்கள் சிலபேரைத் தகாத முறையில் தாக்கி வந்தவையுமே!

பின்னூட்டங்களை எதிர்பார்த்துப் பதிவுக் கடைகள் திறந்து வைத்துவிட்டு பின்னூட்டங்களின் அளவுகளை எண்ணிக்கை வைத்தே படைப்பின் பிரபல்யம் தீர்மானிக்கப்படும். எங்கள் பதிவுலகத்தில் பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்துவது தணிக்கை போலன்றோ? (சில சிரேஷ்ட,சக பதிவர்களுக்கு இதில் கருத்து முரண்பாடு இருந்தாலும் என் நிலை இதுவே தான்)

இலங்கையில் தற்சமயம் வாழ்ந்துகொண்டு சொந்தப் பெயரிலே பதிவுகளை எழுதும் எல்லாம் பதிவர்களின் வலைத்தளங்களையும் வாசித்துப் பாருங்கள்!இலங்கை இனப்பிரச்சினை,நடப்பு யுத்தம்,தற்போதைய நிலை பற்றி அவர்கள் தங்கள் மனதில் பட்ட உண்மை நிலையை எடுத்து சொல்லி இருக்கவே மாட்டர்கள். காரணம் சூழ்நிலை அப்படிப்பட்டது..

இன்று காலையில் நான் வெற்றி FM இல் வாசித்த செய்தி இது.. (முதலாவது செய்தியே இது தான்)

தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய வேளையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பானது நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் மூலம் பாதுகாப்பு பிரிவினால் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னர் தீவிரவாதத்தை ஒழித்து விட முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான ஒரு வெற்றிச் சூழ்நிலை நாட்டில் நிலவும் வேளையில் அரசியல் வாதிகள் அதனை இழிவுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
அதனை நடுநிலையாக இருந்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்..

எல்லோருக்கும் இங்கே லசந்த விக்ரமதுங்கவாகவும் , நிமலராஜனாகவும் வாழமுடியாது..
இந்த சூழ்நிலையில் எல்லாம் அறிந்த முட்டாள் வீரனாக இருப்பதை விட, ஒன்றுமே அறியாத அறிவுள்ள கோழையாக இருப்பதே உத்தமம்..

நானும் கூட ஒரு காலத்தில் 'இந்தியாவே இது உனக்கு நியாயமா?' கேட்டவன் தான்..

எனினும் எழுதி ,எழுதி என்ன கண்டோம்.. இன்றும் கூட எத்தனை பேர் பதிவு போடுகிறோம்.. இந்தியாவைத் தலையிடுமாறு கோரி, தமிழக முதலமைச்சரை இந்தியப் பிரதமரை வலியுறுத்தக் கோரி, இன்னும் பல புலம்பல்களுடன் எத்தனை விதமாக எழுதுகிறோம்..

தமிழக மக்கள் கொதித்தெழுந்து,ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம் நடத்தியும் நடந்தது என்ன? கண்ட பயன் என்ன? நடப்பது நடந்து கொண்டுதானே இருக்கிறது? எல்லாமே முடிந்துவிடும் அபாய நிலை ஒருபக்கம் தோன்றி இருக்கிறது..

இந்தக்காலகட்டத்தில் இலங்கையில் தமிழரின் அவல நிலை குறித்துக் கண்டன,கவலை பதிவு இடுபவர்கள் எல்லோருமே புலம் பெயர் நாடுகளில் இருந்தோ, தமிழகத்தில் இருந்தோ தான் எழுதுகிறார்கள்.. ஆனால் அவர்களின் மன உணர்வுகளை நான் மதிக்கிறேன்.. இவர்களை விடப் பாதுகாப்பாக இருக்கும் பல பேர் ஒன்றுமே எழுதாமல் இருக்கும்போது,எழுதவாவது இவர்களுக்கு உணர்வும்,மனமும் இருப்பது பாராட்டக் கூடியது..

எனினும் இலங்கையில் எந்நேரமும் உன்னிப்பான பார்வை வலையில் இருக்கும் எம்மால் இவ்வாறு எழுத முடியாது.. புனைபெயரில் எழுதுவோர் கூட விரிந்திருக்கும் இன்றைய நவீன தொழிநுட்ப வலையில் சிக்கி இருக்கின்றனர்..

முடிந்தவர்கள் லசந்தவின் இறுதிக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்.. இன்னும் பலவிஷயம் புரியும். அது இலங்கையின் Sunday Leader பத்திரிகையில் வெளிவந்தது.. இன்னும் பல இணையத்தளங்களிலும் வெளிவந்தது.. வாசித்தவுடன் ஒருகணம் அந்த துணிச்சலான ஊடகவியலாளனுக்காக ஒரு கணம் மனம் வருந்தியது.. அந்தத் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.

அத்துடன் இன்னுமொன்று, யாரையும் இது பற்றித் தான் நீங்கள் எழுதவேண்டும்;இது பற்றி எழுதக் கூடாது என்று வலியுறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது.. அவ்வாறு செய்வது கூட ஒரு வகையான அடக்குமுறையே..

அனானிகளாக பெயர் தாங்காமல் வந்து தங்களின் புளிப்புக்களை கொட்டிச் செல்வோருக்கு நான் சொல்லவேண்டியவற்றை நண்பர் ராகவன் அழகாகச் சொல்லி இருக்கிறார்.. அதையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்..

சொந்தப்பெயரில் தங்கள் உண்மையான குரோத,விரோத உணர்வுகளைக் காட்டமுடியாத கோழைகள் தான் இந்த அனானிகளாக குப்பைகளாக விஷம் கொட்டிச் செல்வோர்.. சொந்தக்கருத்தை தங்கள் பெயரில் சொல்ல பயம் ஏன்?

உங்கள் வன்மங்கள்,தனி நபர் மீதான தாக்குதல்கள் எவ்வளவு தூரம் ஒருவர் மனதைப் படுகொலை செய்யும் என்பதை நண்பர் ஹிஷாமின் இந்தப்பதிவு சொல்கிறது..

ஆனால் நான் இவை போன்றவற்றால் மட்டுமல்ல,இதை விட மோசமான தாக்குதல்களாலும் கிஞ்சித்தும் நிலைகுலைபவனோ, சலனப்படுபவனோ அல்ல.. இதையெல்லாம் நேரடியாகவே சந்தித்தனால் தான் இப்போதும் இதே ஊடகத் துறையில் இருக்கிறேன்..

எனக்கு அந்த ஒரு வாரகால உள் வாழ்க்கையின் பிறகு என்னைப்பற்றி மட்டுமல்லாமல் என்னை நம்பியுள்ள என் குடும்பம்,என் சக ஊழியர்கள்,என் உறவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.. அதற்காக அடக்கி வாசிக்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்.. உணர்வுகள் எனும்போது சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னால் போதும்..

சத்தமாக ஊர் கேட்கும் விதத்தில் சொல்லித் தான் நான் யார்,நம் உணர்வுகள் எப்படியானவை என்று காட்டவேண்டும் என்ற தேவை எனக்கில்லை..
என்னைப்பற்றியும், என் உண்மையான உணர்வுகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் அறிந்தவருக்கும், என் நண்பர்கள்,எனது பதிவுகளை முன்பிருந்தே வாசித்து வருபவர்கள்,எனது நேயர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அது போதும் எனக்கு..
என்னைப்பற்றி யாருக்கும் நான் நிரூபிக்கவேண்டிய தேவையில்லை..

அதற்காக என்னை யாராவது சிறை சென்று மீண்ட பிறகு கோழையாகி விட்டானே என்று யாரும் நினைத்து விடுவார்களோ என்று நான் புரட்சி வாதியாக எழுதினால் என்னை விட யாரும் அடிமுட்டாள்களாக இருக்க முடியாது..

இந்தப் பதிவுக்கும் பல அனானிப் பின்னூட்டங்கள்,கண்டனப் பின்னூட்டங்கள் பாய்ந்து வரும்.. அவற்றையும் உளமார வரவேற்கிறேன்..

காரணம் நான் எப்போதுமே நான் தான் !!!


38 comments:

கார்க்கிபவா said...

இதையெல்லாம் பெரிதாக நினைக்க வேண்டாம்

sundarmeenakshi said...

yes what u r telling is 100% coorect.only things will change when the people way of thinking change .
u or me may think or worry. or fight nothing going to happen.
when srilankan president think it is correct or not?or
LTTE leader think it is correct or not?
when their mind is changing then only situation will change.
when it will change when thay realise the pain of the ordinary man running for the life with child.when people close to them died.experiance it won't come under tree. pain sarowness thinking this will create the understanding. but unfortunatly thay or not in this situation.

துஷா said...

அண்ணா காலையில் வெற்றியில் விடியலில் எவ்வளவு சந்தோசத்துடன் இணைந்து இருந்திர்கள் (உங்களுடன் நாங்களும் நீண்ட நாட்களின் பின் அதிகம் சிரித்து கொண்டு) அதே போல் இதை வாசிக்கும் போதும உங்களுடைய மனநில புரிகின்றது

உண்மையான் நலன்விரும்பி உங்களின் மனநிலை உணர்ந்து கொள்வான்

தமிழ் மதுரம் said...

லோசன் எமது உறவுகளின் நிலை இது தான் என்றால் நாம் என்ன செய்ய முடியும்??? உங்களைப் பற்றித் தெரியாதவர்கள் என்பதை விடச் சில பேர் பிறரைச் சீண்டிப் பார்ப்பதற்கென்றே அலைகிறார்கள் போலும்! இந்தியாவின் நிலைப்பாடு பற்றி நண்பர் சயந்தன் தீர்க்க தரிசனமாய் எழுதிய பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Vathees Varunan said...

மிகவு சரியாக சொன்னீர்கள்
பல பேருக்கு நன்றாக புரிந்திருக்கும்.
(அதிலும்முக்கியமாக அனானிகளுக்கு)

Anonymous said...

ம்ம்ம்ம்ம்

Sinthu said...

"Anonymous said...
தமிழ்மக்கள் செத்து மடிகின்றார்கள். அது குறித்து ஏதாவது எழுதுகின்றாயா? கிறிக்கட் மட்டையுடன் கூடப் பிறந்தவன் போல என்ன உளறுகின்றாய்? சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?
January 13, 2009 5:17 PM"

அண்ணா ஒரு தமிழனின் நிலையைப் பற்றி புரிந்துகொள்ள முடியாத தன் பெயரையே சுதந்திரமாக சொல்ல முடியாத கொலைகளைப் பற்றி நீங்கள் கவலப்படாதீங்க....

"சத்தமாக ஊர் கேட்கும் விதத்தில் சொல்லித் தான் நான் யார்,நம் உணர்வுகள் எப்படியானவை என்று காட்டவேண்டும் என்ற தேவை எனக்கில்லை..
என்னைப்பற்றியும், என் உண்மையான உணர்வுகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் அறிந்தவருக்கும், என் நண்பர்கள்,எனது பதிவுகளை முன்பிருந்தே வாசித்து வருபவர்கள்,எனது நேயர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அது போதும் எனக்கு..
என்னைப்பற்றி யாருக்கும் நான் நிரூபிக்கவேண்டிய தேவையில்லை.. "

அண்ணா உங்கள் எழுத்திலிருந்தும் உங்கள் குரலின் தொனியிலும் கூட உங்கள் மன நிலையை அறியக்கூடியவர்கள் நாங்கள்....
உங்களின் ரசிகையாகவும் என்பெயரை நேரடியாக சொல்பவளாகவும் இருப்பேன்..
சிந்து

Anonymous said...

so, the president said journalists should be nuetral,really .
I don't know whether to laugh or cry.

Sinthu said...

பூயா அக்கா கேட்டிருந்தார், முடிந்தால் ஒரு பதிவு போடுங்க என்று.... அது தான் இந்த பதிவு.. லோஷன் அண்ணாவின் வலைப்பூவை வாசித்த பின்னர் எழுதியது.. முடிந்தால் படிக்கவும்...

http://vsinthuka.blogspot.com/2009/01/blog-post_15.html

சி தயாளன் said...

உங்களுடன் உடன்படுகிறேன்...லோசன் அண்ணா..

மாயா said...

// இலங்கையில் எங்கள் இடத்தில் நீங்கள் இருந்து பாருங்கள்.. //
இந்த வசனத்திலிருந்து அவர்கள் அனைத்தையும் விளங்கிக்கொள்ள வேண்டும் :(

Anonymous said...

லோசன் அண்ணே பொந்த்தியா என்னமோ ஈழ தமிழர்களிடம்தான் பாகுபாடு காட்டுவதாக படம் காட்டுகிறீர்கள் உண்மையில் தமிழ்நாட்டுகாரன் எவனையும் சந்தியா மதிப்பது இல்லை ..உங்களுக்கு இந்த கட்டுரை சமர்பணம்..

//இந்தியாவின் தமிழின அழிப்பு என்ற உள்ளூரவு கொள்கையே-வெளியுறவு கொள்கையாகும்!//

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?
இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்! இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறது

தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள் எனவே தமிழீழம் சாத்தியமில்லை என்கிறார் மார் கசிய கம்னுசுட் கட்சியின் அவாள் திரு வரதராசன் அதாவது சிங்களவனும் பண்பாட்டில் சிறந்த தமிழர்களும் ஒன்று என்கிறார் சுருக்கமாக சொன்னால் சிங்களவனுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்கிறார்..

போர் நிறுத்தத்தை மிறீயது யார் என்று தெரியாமலே அறிக்கை விட்டு திரிகிறார் இந்திய கம்னுச்டு கட்சியின் தலைவர் பாண்டியன்..தமிழின எதிரியான இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது இருபத்திநாலு மணி நேரமும் கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான பாப்பாத்தி

செயலலிதாவும்,இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் மாமாவும் ரா-மு ரா-பி (ராசிவ் காந்திக்கு முன் ராசிவ் காந்திக்கு பின்) என ஈழ விடுதலையை பிரித்து பார்க்குமாறு புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு வேண்டு கோள் விடுக்கும் கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள்

என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை
உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.அது ஈழ தமிழர்களுக்கும் சரி தமிழக தமிழர்களுக்கும் சரி!

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!

Anonymous said...

லோசன்!
சாதாரண ஒரு மனிதன் இந்த கொடிய சுழ்நிலையில் நின்று தன் இனத்துக்கு ஆற்றக்கூடிய உச்ச வரம்புநிலையில் நின்று செயலாற்றுகின்றீர்கள். பிறகு ஏன் இந்த சிறு கலக்கம்.

வலி எம்முடையது. நாம் தான் போராடவேண்டும் எவ்வழியிலாவது. தமிழ்நாட்டை நம்பியிருப்பது வேலைக்காகாது. அங்குள்ள வெங்காயங்கள் பலதுக்கு நாம் என்ன கேட்கின்றோம் என்று கூடத்தெரியவில்லை. பிச்சை கேட்பவர்களைபோல் பார்க்கின்றார்கள். (எமக்காக குரல் கொடுக்கும் 0.00001 வீதத்தினர் விதிவிலக்கு).

வலைப்பதிவாளர்களே!
தயவு செய்து தமிழ்நாட்டு மக்களை நம்பி தான் எமது இருப்பு உள்ளது என்ற மாயையை ஏற்படுத்திவிடாதீர்கள். மாறாக இது ஒரு அரசியல் தேவைக்கான வேண்டுகோள் என்பதை புரியவையுங்கள்.

புல்லட் said...

எனக்கு சுத்தமா சீரியஸ் டொப்பிக் வராது.வரவும் கூடாது. ஆனாலும் இந்த பதிவையும் அதன் இணைப்புகளையும் வாசிக்க கோபமும் சீரியசா ஏதாவது எழுதணும் போலவும் கிடக்கு. ஆனால் என்னத்த எழுத? எல்லாம் வெளிப்படை உண்மையாயிருந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறாக்களை நாங்கள் ஏதும் செய்ய முடியாது. உசார்மடையருக்கு வரைவிலக்கணம் இலங்கையில இப்ப பிறந்த பிள்ளைக்கும் தெரியும் என்பது உந்த அனானிகளுக்கு தெரியாதோ என்னவோ? கடா வெட்டும் களத்தில் நாமே மாலையிட்டு மஞ்சள் பூசிவர இங்கு எல்லோரும் வாழ்க்கை வெறுத்தவரல்ல.முடிந்தால் நீ செய்... இல்லாவிட்டால் மூடு. வெந்த புண்ணில் வேணுமென்றே வேல் பாய்ச்சபவர்களை இனி அனானி என்னு வரைவிலக்கணப்படுத்திவிடுவார்கள் அன்பர்களே. ம்ம்ம்... எழுதுபவன் எதற்கெல்லாம பயப்பட வேண்டியிருக்கிறது?

Gajen said...

//சத்தமாக ஊர் கேட்கும் விதத்தில் சொல்லித் தான் நான் யார்,நம் உணர்வுகள் எப்படியானவை என்று காட்டவேண்டும் என்ற தேவை எனக்கில்லை..
என்னைப்பற்றியும், என் உண்மையான உணர்வுகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் அறிந்தவருக்கும், என் நண்பர்கள்,எனது பதிவுகளை முன்பிருந்தே வாசித்து வருபவர்கள்,எனது நேயர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அது போதும் எனக்கு..
என்னைப்பற்றி யாருக்கும் நான் நிரூபிக்கவேண்டிய தேவையில்லை..//

Hats off Sir!!

M.Rishan Shareef said...

நல்ல பதிவு லோஷன்..

//இலங்கையில் இருக்கிறாயே இனப்படுகொலை பற்றி எழுது! ஈழத்தமிழர் போராட்டம் பற்றி எழுது! என்று அடிக்கடி கண்டிப்புடன் எழுதுவார்கள்; சிலவேளை உத்தரவும் இடுவார்கள்! //

நானும் இதனைத் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறேன். இதே கருத்திலும், இன்னும் ஆபாசமாகவும் அனானிப் பின்னூட்டங்கள் தொடர்கையில் என்னதான் செய்யமுடியும் அழித்துவிடுவதைத் தவிர ?

Nimal said...

:-(

அனானிகள் அனானிகளாகவே இருக்கட்டும்...

நாம் நாமாகவே இருப்போம்...!

சின்னப் பையன் said...

இதையெல்லாம் பெரிதாக நினைக்க வேண்டாம்...

kuma36 said...

///ஆனால் நான் இவை போன்றவற்றால் மட்டுமல்ல,இதை விட மோசமான தாக்குதல்களாலும் கிஞ்சித்தும் நிலைகுலைபவனோ, சலனப்படுபவனோ அல்ல.. இதையெல்லாம் நேரடியாகவே சந்தித்தனால் தான் இப்போதும் இதே ஊடகத் துறையில் இருக்கிறேன்..///

நிச்சியமாக எமக்கு நன்றாகவே தெரியும்.

ஆதிரை said...

//என்னைப்பற்றியும், என் உண்மையான உணர்வுகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் அறிந்தவருக்கும், என் நண்பர்கள்,எனது பதிவுகளை முன்பிருந்தே வாசித்து வருபவர்கள்,எனது நேயர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அது போதும் எனக்கு..//

நிச்சயமாக அண்ணா...
எப்போது யாழ்ப்பாணம் பயணம், உங்க என்ன நடக்குது, பாலஸ்தீனம் தெரிகிற உன் கண்களுக்கு ஏன் உன் சொந்தங்கள் தெரியவில்லை, இனி என்ன செய்யப் போறீங்கள் - இவைகள் தான் இப்போது புலத்திலுள்ள ஒரு சில நண்பர்களின் வினாக்களாகிவிட்டன. அவர்களும் இங்கிருந்தவர்கள் தான். எல்லாம் பட்டுணர்ந்தவர்கள் தான். ஆனாலும், கேட்கின்றார்கள் விடை கிடையாது எனத் தெரிந்து கொண்டும்...

suthan said...

ஹாய் அண்ணா .பதிவுக்கு நன்றி ,சத்தமாக ஊர் கேட்கும் விதத்தில் சொல்லித் தான் நாம் யார் ,நம் உணர்வுகள் எப்படியானவை என்று காட்டவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லை .வடிவேல் மாதிரி சொன்னால் "உசுப்பெத்திஜே உடம்பை ரணகளம் ஆக்கிவிடுவார்கள்"
நாம் நாமாகவே இருப்போம்...!

சுதன்

ILA (a) இளா said...

Go ahead Boss!

Anonymous said...

good one Loshan. Do not let people influence what you write about.
Go ahead and write what you want to write about and only when you want write.

தேனீ said...

Loshan, Solbavargal sollattum. Ungal manachatchiyin padi neega nadvugo! ungal idathill naan irunthalum idhai than seithirupen, unarvelushiyudan pinnoootam idupavar yaarai irundalum idai tha seivarrr.

Thodarattum ungal pathivuP paNi.

நஜிமுதீன் said...

லொஷன், சுருக்கமாக சொன்னால், எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொண்டு, நீங்கள் பயணம் செய்கின்ற பாதை, முட்களால் சூழ்ந்திருந்தாலும் அதில் எப்படி பயணிப்பது, என்பதைப் பற்றி சிந்திக்கக் கூடிய பக்குவம் உங்களுக்கிருக்கிறது, அதனால் உங்களை தூற்றுவோர் தூற்றட்டும், தொடருங்கள் உங்கள் பாதையை,

Anonymous said...

Loshan,

Be your self and dont worry about the "Armchair Pandits" (padditha muddallkal).

Mano

The Godfather said...

விஜய் டிவியின் "காக்க காக்க" மீண்டும் வருகின்றது...

www.mytamildiary.blogspot.com

Think Why Not said...

நாம் என்றுமே நாம் தான்...

Don't worry Loshan Anna.. Keep up your Good work..

ரணங்கள் said...

**சொந்தப்பெயரில் தங்கள் உண்மையான குரோத,விரோத உணர்வுகளைக் காட்டமுடியாத கோழைகள் தான் இந்த அனானிகளாக குப்பைகளாக விஷம் கொட்டிச் செல்வோர்.. சொந்தக்கருத்தை தங்கள் பெயரில் சொல்ல பயம் ஏன்?**
இப்படி திரு லோசன் அவர்களேசொல்வது தவறு.
கருத்துக்கள்தான் முக்கியம் கருத்துச் சொல்லப்படுபவர் அல்ல அப்படியானால்.
தராகி என்று எழுதிய சிவராமையும் உங்களது கருத்துக்குள் உள்வாங்கியது உங்களது முட்டாள் தனம்.

ரணங்கள் said...

**சொந்தப்பெயரில் தங்கள் உண்மையான குரோத,விரோத உணர்வுகளைக் காட்டமுடியாத கோழைகள் தான் இந்த அனானிகளாக குப்பைகளாக விஷம் கொட்டிச் செல்வோர்.. சொந்தக்கருத்தை தங்கள் பெயரில் சொல்ல பயம் ஏன்?**
இப்படி திரு லோசன் அவர்களேசொல்வது தவறு.
கருத்துக்கள்தான் முக்கியம் கருத்துச் சொல்லப்படுபவர் அல்ல அப்படியானால்.
தராகி என்று எழுதிய சிவராமையும் உங்களது கருத்துக்குள் உள்வாங்கியது உங்களது முட்டாள் தனம்.

Anonymous said...

What is wrong with 'posting' all types of comments? Obviously you don't have to accept those comments ..but what's wrong in posting? People are different and people have different opinions on different things..and I don't know why negative comments get deleted sometimes ,..because we cannot keep everything positive at all the times. Even for kids, its good that they learn disappointment, nobody can grow without being disappointed,without hearing bad comments..so surprised

Anonymous said...

லோஷன்,வெளிநாட்டில் பாதுகாப்புடனும் சுதந்திரத்துடனும் இருக்கும் சிலருக்கு உசுப்பேற்றுவது என்பது கிறிக்கட் விளையாட்டு பார்பது மாதிரிதான். தூயா உட்பட

ஆதிரை said...

@ ரணங்கள்
//கருத்துக்கள்தான் முக்கியம் கருத்துச் சொல்லப்படுபவர் அல்ல அப்படியானால்,
தராகி என்று எழுதிய சிவராமையும் உங்களது கருத்துக்குள் உள்வாங்கியது உங்களது முட்டாள் தனம்.

சிவராம் தராகியாக மாறியது எதற்காக? சிவராமாக நின்று செய்ய முடியாததை தராகியாக நின்று சாதித்தார். அதற்காக கிரிக்கட் தொடர்பாக செய்திவெளியிட்ட ஊடகத்தை பார்த்து தமிழ் தேசியம் எங்கே என தராகி கேட்டாரா? நான் எண்ணுவது சரியாயின், இங்கு புனைபெயர்களில் தங்கள் தளங்களில் எழுதித்தள்ளுபவர்களை லோஷன் குறை கூறவில்லை. அப்படி கூறவும் முடியாது. (நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில், முகத்துக்கு திரை போட்டு பதிவிடமுடியும் என்பது முட்டாள்தனம்) சிவராம் மறைந்ததன் பின்னர், தராகி யார் என்பது வெளிப்படையானது. தராகியாக நின்று சொன்னதற்கெல்லாம் உரிமையாளர் சிவராம். ஆனால், தங்களினால் எப்போதுமே உரிமையேற்கமுடியாத அசிங்கமான - இச்சூழலில் ஜீரணிக்கமுடியாத கருத்துக்களை துப்பிவிட்டுச் செல்பவர்களின் நோக்கம் வெளிப்படையானது.

@Triumph
What is wrong with 'posting' all types of comments? Obviously you don't have to accept those comments
நண்பரே... பின்னூட்டமிடுபவர் எல்லோரையும் உங்கள் போன்று நாணயம் மிக்கவர்கள் என எண்ணிவிடாதீர்கள். லோஷனின் அதிகமான பதிவுகளில் நான் பின்னூட்டமிடுகின்றேன். அதனைத்தொடர்ந்து வரும் பின்னூட்டங்களை என் மின்னஞ்சலினூடாக பெறுகின்றேன். அதனால், லோஷனினால் நீக்கப்பட்ட பின்னூட்டங்கள் எவை எனவும் எனக்குத்தெரியும். அவை ஒன்றும் நாகரிக வார்த்தைகளாலானவை அல்ல... ஏன், பதிவுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவையுமல்ல. ஒரு இயக்குனராக தன்னை உருவகப்படுத்தி இடப்பட்ட கேவலமான வார்த்தைகள். எந்தக்குழந்தையும் அதிலிருந்து எந்தச்சவாலையும் கற்றுக்கொள்ளாது.

Anonymous said...

I dont believe in idol worship but the philosophy or hindu religion & newton's 3rd law (though it is again not applicable in real world) both saying that every action got its on reaction. Just ignore the comments.. people discussing abt those comments also unnecessary... its like digging the grave..

& aathirai, you can create millions of fake accounts with fake names. so we cant say that whoever write something here with email id's are honest. including me :-)

blogs are to express ur opinions.. share it.. ppl who like it would appreciate it.. so just carry on...

Forward out of error
leave behind the night
forward thru the darkness
forward into light.. my school anthem...

happy blogging...

Subankan said...

அண்ணா, நானும் எழுதியிருக்கிறேன், நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.

http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html

கொழுவி said...

நீங்கள் இட்டிருக்கும் உங்களது படமே போதும். முழுவதையும் சொல்கிறது. எழுத்து விளக்கங்கள் தேவையில்லை

ஜோசப் இருதயராஜ் said...

"சத்தமாக ஊர் கேட்கும் விதத்தில் சொல்லித் தான் நான் யார் நம் உணர்வுகள் எப்படியானவை என்று காட்டவேண்டும் என்ற தேவை (எனக்கில்லை.)"
அநேகருக்கு இல்லை


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இலங்கை தழிழர்களின் உண்மை நிலையை அவர்களின் உணர்வை நன்றாகவே தொக்கி நிற்கிறது.

ila said...

Well Said Loshan.. Not just people in SL but SL tamils who lives outside are also watching helplessly due to their relatives in SL.

PS: I came across your blog just recently and started reading thats why this late comment :)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner