January 28, 2009

உலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி !

உலகின் வேகமான மனிதர் என்ற பட்டத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு சிபாரிசு செய்ய இருப்பதாக நம்ம நண்பர் கஞ்சிபாய் காலையிலே என்னிடம் சொன்னார்.. பின்ன இல்லாமலா? உசைன் போல்ட்டாவது நூறு மீட்டரை கடக்க 9.69 விநாடிகள் எடுத்தார்.. 

நம்ம அண்ணாச்சி முகர்ஜியோ (பெயர்லயே ஜி வச்சிருக்காரே.. பெரிய ஆள் தான்) இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து இலங்கைப் பிரச்சினை,நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்து தீவிரமாக,ஆழமாக அலசி ஆராய்ந்த பின்னர்
 
    
இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -  வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்தி 

இந்தியப் பிரதமர்,தமிழக முதல்வர் சொல்லி அனுப்பிய விஷயங்கள் பற்றியும் விளக்கமளித்து விட்டு 
(இதெல்லாம் நாமாகவே ஊகித்து அறிந்ததுங்கோ.. ஹீ ஹீ ) மரியாதை நிமித்தம் வழங்கப்பட்ட இராப்போசனமும் அருந்தி விட்டு மறுபடியும் இந்தியாவுக்கு செல்வதாக இருந்தால் எத்தனை வேகம் இந்த வேகம்.. 

இவ்வளவு காரியமும் செய்து முடிக்க அவருக்கு எடுத்தது வெறும் ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே..விமான நிலையத்தில் வந்து இறங்கியது இரவு 8.27க்கு, மறுபடி விமானம் இந்தியாவுக்கு முகர்ஜியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது அதிகாலை 1.27க்கு.. 


இலங்கையில் இருந்தவர்கள்,இலங்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்து கொழும்பு நகருக்கு வருவதற்கும்,மறுபடி கொழும்பில் இருந்து கட்டுநாயக விமான நிலையத்திற்கு செல்வதற்கும் எடுக்கும் நேரம் பற்றித் தெரிந்திருக்கும்..  

நேற்று பிரணாப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொழும்புக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.. பாருங்கையா நம்ம முகர்ஜி ஐயாவின் வேகத்தை..

சரி அதை விடுவோம்.. அவரது பெருமைக்கும் தகுதிக்கும் இலங்கையின் ஜனாதிபதியைத் தவிர அவர் வேறு யாரோடும் பேசவேண்டிய தேவையில்லை..

ஆனால் நேற்று பேசப்பட்ட விடயங்கள்?????

தமிழக முதல்வர் இந்த விடயங்கள் பற்றித் தான் பேசவேண்டும் என்று தொலைபேசியில் பேசும்போது சொல்லி இருந்தாரா? 

எங்கள் இலங்கை தமிழ் பத்திரிகைகள் என்ன சொல்லி இருக்கின்றன என்றும் கொஞ்சம் பாருங்களேன்.. இலங்கையில் உள்ளவர்கள் பத்திரிகைகளை வாங்கிப் பாருங்கள்.. ஏனையோர் இணையத் தளங்களில் பார்த்துக் கொள்ளுங்கள்..

நேற்று எல்லோருக்கும் சொல்லப்பட்ட முகர்ஜியின் ப்ளான் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பிரயாணம்.. (அதில் தம்புள்ளை சென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதும் இருந்ததோ தெரியாது). அதைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.. 

அப்படி இருக்கும்போது ஏன் அவசர அவசரமாக முகர்ஜிஜி (ஒரு எக்ஸ்ட்ரா ஜி மரியாதைக்கு) அதிகாலையே புறப்பட்டார்?? என்ன அவசரம்??

ஒரு வேளை ஏதாவது அவசர தகவல் ஏதாவது சொல்லவந்தாரோ? 
    
டெல்லியில் முகர்ஜி" அப்பாவித் தமிழரைப் பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவேன்"

இல்லை இந்திய தமிழ் ஊடகங்கள் பல சொல்வது போல அவசர உதவிகள் மட்டும் கொடுக்க வந்தாரோ?

இல்லை ஒரு விருந்தாளியாய் வந்து இராப்போசனம்,சுட சுட ஸ்பெஷல் இலங்கை தேநீர் குடிக்க வந்திருப்பாரோ?

நாலு சுவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை யாமறியோம் பராபரமே..

எனினும் என்ன நடந்திருக்கு என்பதை இன்னும் ஒரு சில நாளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஊகிக்கக் கூடியதாக் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. 

கலைஞர் இன்று என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ரொம்ப ஆவலாயிருக்கிறேன்..

இன்று எனது சக சிங்கள பெண் ஊழியர் ஒருவர் சொன்னது "இந்தியா என்ன சொல்லப் போகிறது.. அப்படித் தான் யுத்தத்தை நிறுத்தச் சொன்னாலும் நம்ம பெரியவர் நிப்பாட்டுவாரா?நீங்க இல்லேன்னா பாகிஸ்தான்,சீனா இருக்கு எண்டு முகர்ஜிக்கு சொல்லி இருப்பார்.. அவரும் யெஸ் சார் சொல்லிட்டு அடுத்த பிளைட்லயே பறந்திருப்பார்".

அப்படித் தான் நடந்திருக்குமோ??? 

தமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா?

25 comments:

Anonymous said...

pranabai pathi unaku ennada theriyum vendruu...

ஜெகதீசன் said...

//
நீங்க இல்லேன்னா பாகிஸ்தான்,சீனா இருக்கு எண்டு முகர்ஜிக்கு சொல்லி இருப்பார்.. அவரும் யெஸ் சார் சொல்லிட்டு அடுத்த பிளைட்லயே பறந்திருப்பார்".
//

:)

Anonymous said...

இதுக்கு பேசாமல் தொலைபேசியில் கதைச்சிருக்கலாமே... இல்லை மகிந்தவை பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசை உணர்வு பெருக்கெடுத்திருந்தால் video conference இல் கதைத்திருக்கலாமே...

ஜெகதீசன் said...

இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி எவ்வளவு சொல்லியும் மேட்ச் பார்க்காம அவர் போனதால ஜனாதிபதிக்கு முகர்ஜி மேல ரெம்பக் கோவமாம்...
சிங்கிடமும் சோனியாவிடமும் கம்ப்ளைண்ட் பண்ணப் போறாராம்...
:P

Anonymous said...

At this point its important to understand how Tamilnadu politicians are enacting a Drama..

If u carefully see DMK has said it will decide its further action by FEB 15 when so many people are dying they need nearly 20 days for getting ready for the meeting.

We also should see that MDMK has announced that it will protest on FEB 13th. Now my worries what is actually going to happen during that time.Believe all these politicians from Tamilnadu also has gr8 role to play in this.

So this drama has already been scripted now all the players are just playing their role including the politicans from Tamilnadu.

Gajen said...

//ஒரு வேளை ஏதாவது அவசர தகவல் ஏதாவது சொல்லவந்தாரோ?

இல்லை இந்திய தமிழ் ஊடகங்கள் பல சொல்வது போல அவசர உதவிகள் மட்டும் கொடுக்க வந்தாரோ?//

அண்ணா..ஒரே கல்லில் 2 3 மாங்காய் சேர்த்து அடித்துவிட்டு போயிருக்கிறார் போல் தெரிகிறது..தமிழ் நாட்டின் வாயையும் அடைத்தாகிவிட்டது, செய்தி/உதவியும் வழங்கியாச்சு..ரொம்ப speedப்பா இந்த ஆளு..

Anonymous said...

ஓவரா எதிர்பார்ப்பதும் பின் எமாருவதும்தான் தமிழனின் இலட்சணத்தில் ஓன்று...

ஒருவர் செத்தால் நூற்றுக்கணக்கானவர் என்பர் (நூற்றுக்கும் அதிகமான, நூற்றுக்கணக்கான என்பவற்றுக்கு பல தமிழருக்கு வித்தியாசம் தெரிவதில்லை..

தமிழ் இலக்கியங்களில் எல்லாவற்றையும் வர்ணித்து பழக்கி, அவை பாட விதானம் ஊடாக எல்லா தமிழரையும் சென்றடைந்த பின் இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்?

ers said...

தமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா?

இந்த பட்டத்தை காலகாலத்திற்கும் சுமக்க தகுதியானவர்கள் நாம் தான். என் ஆதங்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றாலும் சில வார்த்தைகள் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரணாப் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தவிர்த்து மற்ற கரைவேட்டிகள் இந்த பிரச்சனையில் உருப்படியாய் ஏதும் யோசிக்க போவதில்லை. தமிழகத்திற்கு வரும் போது பிரணாப் பேசும் வார்த்தைகள் டெல்லி சென்றதும் மாறுகின்றன. தமிழனை பாதுகாக்க உறுதியான குரல் இந்தியாவிடம் இருந்து இன்னமும் வரவில்லை என்பது வேதனைப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு தமிழனும் சக தொப்புள் கொடி உறவுகளை இழந்த துயரத்தை நெஞ்சோடு புதைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இவர்கள் சோமபானம் (நாங்கள் அப்படித்தான் சொல்வோம்) அருந்திவிட்டு கூலாக அப்பாவி தமிழர்களின் இழப்புக்களை குறைப்போம் என்று சொல்வார்கள். நாங்களும் தலையாட்டிக்கொண்டிருப்போம். பிரணாப் மட்டுமல்ல எந்த நாயும் இலங்கைக்கு போய் இதை தீர்க்க முடியாது என்பதே என் எண்ணம். இது தீர்க்கப்படவேண்டுமெனில் இலங்கையில் ஆயதபோராட்டத்தில் தமிழன் வெற்றிபெற்றே ஆகவேண்டும். இப்போது காலம் நம்மை சோதிக்கிறது. என்றாவது ஒரு நாள் விடியல் வரும் என்ற சோகத்திலேயே நம்மவர்கள் இருட்டில் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். விடியல் வருவதற்குள் வெளிச்சத்தை பார்க்கும் தமிழன் ஒருவன் கூட இலங்கையில் இருக்கப்போவதில்லை. செல்களின் தாக்குதல்களில் இவர்கள் சிதைந்து போயிருப்பார்கள். அப்போதும் கூட உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தான் போகிறது. தமிழகத்தில் உள்ளவர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

Unknown said...

வேறு வழியில்லை. புத்தியிருந்தால் போராடும் குணம் இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள்.

இல்லையேல் மொத்தப்பேரும் கிளம்பி வேறுவேறு தீவு இருந்தால் செல்லுங்கள்.

தாய்த்தமிழனை நினைக்காதீர்கள். எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை.

யார் முதலில் சாவோம் என்று.அப்படியே உதவ நினைத்தாலும் வாயிலேயே
அடிப்பார்கள். சம்பந்தம் இல்லாமல் கேஸ் வரும்.தேவையா ? சீமானையும் அமீரையும் பாருங்கள்.

எனவே பிரணாப்பாவது, புடலங்காயாவது !

தமிழினத்தலைவரையும், அம்மாவையும் பார்ப்போம் என அழைக்கிறீர்கள்.

வருவமா ? வந்து விடுவோமா ?

தெரிந்தே கிண்டலா ?

கடவுளை மட்டுமேதான் இங்குள்ள தமிழனால் ஈழத்தமிழன் வாழ்வு சிறக்க
வணங்க முடியும்.

கடவுளே திருச்செந்தூர் முருகா ! உன் காலுக்கு கீழே நடப்பது தெரியவில்லையா ?

கன்னியாகுமரித்தாயே உன் கண்ணுக்கும் தெரிய வில்லையா ?

காப்பாற்று .கடவுளே காப்பாற்று !

Anonymous said...

வன்னி மக்களை ஏன் புலிகள் பிடித்து வைத்திருக்க வேண்டும்

புலிகள் தப்பி ஓடுவோரை தெருவிலேயே
சுட்டு சடலங்களை ஏனையோர் பார்வைக்கு விட்டு வைத்தது மனிதாபமான செயலா

Anonymous said...

Most of us think about it through every possible corner....

No body understands why Indian establishment behave so childishly & stupidly,while their national security also will be at stake soon.

History will tell for sure, India will be the biggest loser.....
"விளக்கைப் பிடிச்சுக்கொண்டு கிணத்துக்க விழுந்த கதையா'

Vaanathin Keezhe... said...

"வன்னி மக்களை ஏன் புலிகள் பிடித்து வைத்திருக்க வேண்டும்

புலிகள் தப்பி ஓடுவோரை தெருவிலேயே
சுட்டு சடலங்களை ஏனையோர் பார்வைக்கு விட்டு வைத்தது மனிதாபமான செயலா..."

-கமெண்ட் என்ற பெயரில் இஷ்டத்துக்கும் கிறுக்குகிறார்களே... தமிழன் மனோபாவத்துக்கு இவர்களே சரியான உதாரணங்கள்.

சுய சிந்தனை இல்லாமல் யாராவது ஒருவர் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே இருக்கும் விருப்பத்தின் விளைவு இது.

இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு குரு வேண்டும்.

தமிழன் என்ற உணர்வைக் காட்டக் கூட ஒரு ஜெயாவோ... கருணாநிதியோதான் விளக்குப் பிடிக்க வேண்டும் இவர்களுக்கு.

ரொம்ப கஷ்டம்!

Anonymous said...

naangal{indians} sarvaathikaara aadsiyil irukkiroom.

Anonymous said...

முகர்ஜி வந்தாலும், சோனியாஜி வந்தாலும் எதுவும் செய்ய மாட்டாங்க..
நம்ம காங்கிரஸ்காரன் தமிழனுக்கு பிடிச்ச ஜென்ம சனி.. விட்டுத் தொலைங்க லோஷன் சார்..
ஆட்சியை நாங்கள் வெகு விரைவில் கேப்டனிடம் கொடுப்போம்.. தமிழராய் இணைந்து ஜெயிப்போம்..

Anonymous said...

இந்த கேப்டன் தான் காங்கிரசுகிட்ட கூட்டு வைக்க துடியா துடிக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில இதுவரைக்கும் இவரு ஒரு போராட்டமாவது நடத்தி இருக்காரா? நடத்துனா காங்கிரசுடன் கூட்டு சேர முடியாதே?இவரு தமிழனைக் காப்பாத்தப் போறாராம்.

kuma36 said...

தமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா?
யாருகிட்ட கேக்குறிங்க அண்ணா

ஆதிரை said...

அண்ணே... இவர் எங்களின்ர தமிழினத் தலைவர் கலைஞர் ஐயாவுக்கு முதுகு வலி எப்படி..? இங்க வாறதற்கு முதல் ஏன் அவருடன் ஃபோனில கதைச்சீங்கள்? இலங்கையில குளிசை ஏதும் வாங்கிவரச் சொன்னதோ மனுசன்?

பாவம் மனுசன். மாசி 15க்கு முதல் அவரைக் குணப்படுத்துங்கோ. அன்றைக்கு அவரின் இயக்கத்தில் ஒரு நாடகம் இருக்குதாம். ஆனால், அதைப் பார்க்க வந்த சனம் கூட்டம் கூட்டமாய் போகினம்......

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

டாங்கி வரும் முன்னே
முகர்ஜி வரும் பின்னே..

King... said...

அதான் முதலே பெரியவர் சொல்லிட்டாரே எங்கடை அழைப்பபை ஏற்றுத்தான் பிரணாப் மயிர்ஜி மன்னிக்கவும் முகர்ஜி வாறார் எண்டு..

Anonymous said...

விடுதலை அடைய வேண்டியது தமிழக தமிழனா அல்லது தமிழீழ தமிழனா?

ஏற்கெனவே ஈழப்பிரச்சினையில் பிரதமர் ‘கவலை தெரிவிக்க’ ஒரு போராட்டம்.... அவர் தம் சக்திக்குட்பட்ட அளவில் முயல்வதாகக் கூறவைக்க ஒரு போராட்டம்.... இப்போது பிரணாப் முகர்ஜியைக் கிளப்பி அனுப்ப ஒரு போராட்டம்.....
மழை வெள்ளத்தில் ஒரு போராட்டம்..
சாகும் வரை மாணவர்கள் பட்டினி போராட்டம்..

இப்படி இங்கே தமிழன் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதும், ஈழத்தமிழன் அங்கே அன்றாடம் கொல்லப்பட்டுச் சாவதும்தாம் தமிழனுக்கு விதிக்கப்பட்ட வாழ்வா...? இந்தக் கொடுமையைப்பற்றி அக்கறைப்படாது, நமக்கு பசப்பு வார்த்தைகள் கூறி இழுத்தடிப்பு உத்தியில் ஈடுபடத்தான், நம்மை ஏமாற்றத்தான் நமக்கு தமிழக, தில்லி அரசுகளா....? முதலில் தேசியம் என்றால் என்ன? தன்னுடைய நாட்டு பிரஜைகளை தன்னுடைய அந்தஸ்தாக கருதி அவர்களது கோரிக்கைக்கு செவிமெடுத்து அதன் படி செயல்படுவதே தேசியம் என்பதாகும்..அன்று சிங்கபூரில் ஒரு அமெரிக்கனுக்கு 5 கசையடி தண்டனை என்றதும் அமெரிக்க அரசு தன் முயற்சியால் தடுத்து நிறுத்தியது..அது தேசம் ஆனால் இந்தி தேசம் எவ்வாறானது?
உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. சிறிது கூர்ந்து நோக்கினால் மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்..

ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?

1)காவேரி பிரச்சனை
2)முல்லை பெரியாறு பிரச்சனை
3)ஒக்கேனக்கல் அல்ல அது தவறு அது கிருஷ்ணகிரி சேலம் என நீளும் போல தெரிகிறது
4)கண்ணகி கோயில் பிரச்சனை
5)பாலாற்று பிரச்சனை
6)தமிழக மீனவர் பிரச்சனை

இதில் ஒன்றிலாவது தமிழர்கள் சார்பாக நடுநிலைமையோடு இந்தி அரசு நடந்து கொண்டதா?வங்காளிகளுக்காக வங்கதேசம் உருவாக்கிய இந்திய அரசு பண்டிட்ஜிக்களூக்காக இன்றும் காசுமீர் விவகாரத்தில் பாக்கிஸ்தானோடு அக்க போர் செய்கிறது..எனவே உங்களுக்கு புரியவில்லையா?தமிழனுடைய உயிரும் இவர்களுடைய மயி ம் ஒன்று என?

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் இந்தி அரசின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். இந்தி அரசு சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை ‘இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது.


காவிரி பிரச்சனைக்கு 'கரு'நாகத்திடம் கெஞ்சல்
முல்லை பெரியாருக்கு கொலையாளியிடம் கெஞ்சல்
ஓக்கேனக்கலுக்கு 'கருநாகத்திடம் கெஞ்சல்
கண்ணகி வழிபாட்டு உரிமைக்கு கொலையாளியிடம் கெஞ்சல்
பாலாற்று பிரச்சனைக்கு கொல்டிகளிடம் கெஞ்சல்
தமிழக மீனவர் பிரச்சனைக்கு இந்தி காரனிடம் கெஞ்சல்
தமிழீழ இனபடுகொலையை நிறுத்த இந்திகாரனிடம் கெஞ்சல்

இப்படி மானம் கெட்டு பிச்சை எடுத்தும் கோரிக்கை வைத்தும் ஒரு தேசிய இனம் வாழுகிறது என்றால் அது தமிழினமே ஆகும்..ஒரு சிறிய மண்புழு கூட அதனை அழிக்கமுற்படும் போது
சிறிய எதிர்பையாவது காட்டும்..அகிம் இம்சை உண்ணாவிரதம் என்ற பெயரில் வீரத்தில் சிற்ந்த
தமிழர்களை முட்டா .. ஆக்கியது யார் என்ன சிந்திக்க வேண்டும்..இவர்களுக்கு கார்கில் முதல் வங்கதேச பிரிவினை முதல் Fறோண்T ளீணே லிருந்து சண்டை போட்டு சாக தமிழர்கள் வேண்டும்..பிற விவகாரத்தில் தேவையில்லை

தமிழர்கள் போலி இந்தி தேசியத்தில் இருந்து வெளிவர வேண்டும் இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை புதுடில்லி ஏகாதிபத்திற்திற்கு விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்

தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வரசுகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்

Gowri Ananthan said...

எனக்கு இன்னமோ எதோ Agreementla sign வாங்கிட்டுப் போனமாதிரி தெரியுது.. 120ஒ 160ஒ ஒரு பிடியில்லாமல் தூக்கி குடுப்பாங்களா..? ஆனாலும் இந்தியா அளவுக்கு மஹிந்த ஒன்னும் முட்டாளா தெரியல..

Anonymous said...

அண்ண தலைப்பு சூப்பர்.

குள உடைப்பில் அள்ளூண்டு போன டாங்கிக்கு பதிலா புதுசு கொடுத்து விட்டு, மன்னாரில் எண்ணை கிணறோ, அல்லது திரிகோணமலையில் எண்ணைகுதமோ அக்கிறிமெண்ட் சைன்பண்ணிப்போட்டு வந்திருப்பார்.

தமிழ் மதுரம் said...

இதைத் தான் சொல்லுறது திருவிழாவிலை வாங்கின தலையாட்டுற பொம்மை என்டு...என்ன புரியுதே???? வா என்றால் வரும்?? வைன் கொடுத்தால் ஓடும்?? போ என்றால் போகும்??? பேசாதை என்டால் மௌனமாய் இருக்கும்??? சொல்லாமற் செய்வார் பெரியார். சொல்லிச் செய்வார் சிறியார். சொல்லியும், சொல்லாமலும் செய்யார் அவர் யார்??? யாராவது சொல்லுங்களேன்??//

King... said...

மிக கேவலமான அரசு இலங்கை அரசு (இந்தியாவும்)

Hisham Mohamed - هشام said...

அவசர விஜயம்னா அப்படித்தான் இருக்குமாம்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு....

முதல் பின்னூட்டமிட்ட பீட்டர் அநோநிமஸ் - பயபுள்ள என்னதான் சொல்லுறான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு சொல்லிட்டேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner