இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த கெவின் பீட்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக சற்றுமுன்னர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பயிற்றுவிப்பாளர் பீடர் மூவர்சுக்கும் இவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அடுத்து உடனடியாக அவசரக் கூட்டம் ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை கூட்டி இருந்தது.
பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் tele conference முறை மூலம் நடத்திய நேற்றைய கூட்டத்தில் தலைவர் பீட்டர்சன்,பயிற்றுவிப்பாளர் ஆகிய இருவர் மீதும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படலாம் என்று பரவலான கருத்துக்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் பயிற்றுவிப்பாளர் மாற்றம் ஒன்றும் இடம்பெறலாம் என்றும் கருதப்பட்டது..
எனினும் தென் ஆபிரிக்காவில் தனது நீண்ட விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் பீட்டர்சன்,திடீரென தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார்.இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடவடிக்கை எதையும் எடுக்க முன்னர் தானாக விலகியதாகவே கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர்களான மைகல் வோன், போல் கோல்லிங்க்வூட் ஆகியோர் விலகிய நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் கெவின் பீட்டர்சன் தலைவராகப் பதவியேற்றது குறிப்பிடத் தக்கது.
அண்மைக்காலத்தில் இங்கிலாந்துக்குக் கிடைத்த தலை சிறந்த தலைவர் என்றும், துணிச்சலான ஒரு தலைவர் என்றும் இவர் குறுகிய காலத்திலேயே புகழ் பெற்றிருந்தார்..
என்ன செய்வது, இப்போ இவரது விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இங்கிலாந்துக்கு ஒரு புதிய தலைவரை நியமனம் செய்வது மிக சிக்கலான விடயம் என்று கருதப் படுகிறது.. உருப்படியான ஒருவரும் இல்லையே..
தகவல் வெளிவந்த உடனேயே சூட்டோடு சூடாகப் போட்டமில்ல..
நன்றி cricinfo & sky