January 08, 2009

ரஷ்யப் பெண்ணின் கால்..


1977ம் ஆண்டுக்குரிய (அப்போது நான் பிறந்தே இருக்கவில்லை) ரீடேர்ஸ் டைஜஸ்ட்(Readers Digest) சஞ்சிகையில் வாசித்த ஒரு ஜோக் இது.

இந்தப் புத்தகம் என் கையில் கிடைத்ததே ஒரு தனி சுவாரஸ்யம். வழமையாகவே நான் பொருள் வாங்கும் கடையில் அன்றும் சில பொருட்கள் வாங்கப்போயிருந்தேன்.

பொருட்களை அங்கிருந்த முதலாளி எடுத்துத் தரும்போது அங்கிருந்த மேசை மேல் இந்த மிகப் பழைய ரீடேர்ஸ் டைஜஸ்ட் புத்தகம் கிடந்ததைக் கண்டேன். பொதுவாகவே பழைய புத்தகங்களின் தாள்கள் பொருள்கள் சுற்றப் பயன்படுவதால் அது பெரிதாகத் தோற்றாவிட்டாலும், ரீடேர்ஸ் டைஜஸ்ட் கிடந்தது கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது.

அதன் மேல் கண்ணைப்படரவிட்டபடியே, முதலாளியிடம் பொருட்களுக்கான பணத்தைக் கொடுத்தபோது பத்து ரூபா மேலதிகமாகவே கொடுத்து, அந்தப் புத்தகத்தையும் தருமாறு கேட்டேன்.

'ஐயோ! தம்பி அதுக்குக் காசேதும் வேண்டாம்ளூ வந்த யாரோ விட்டிட்டுப் போயிட்டினம். நீர் கொண்டு போய் வாசியும்ளூ ஆராவது தேடி வந்தால் சொல்லி அனுப்புறன்' என்றார். சும்மாவே பொருள் வாங்கப் போகும் நேரத்திலும் தொங்குகிற பேப்பர்களை ஓசியில் மேய்கிற என்னைப்பற்றி நன்றாக அறிந்த அந்;த முதலாளி.

புத்தகத்தின் உள் அட்டையில் M.J.மிஹா என்று எழுதப்பட்டுள்ளது. எந்த ஆன்டி / ஆச்சி தேடி வரப்போறாவோ?

இனி ஜோக்

பனிப்போர் காலத்தில் - ஜெனீவாவில் அமெரிக்க, ரஷ்யப் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை.

பேச்சு மேசையிலிருந்த, அமெரிக்கப் பிரதிநிதியின் மேசைக்குக்கீழிருந்த கால் நேர்; முன்னால் இருந்த ரஷ்யப் பெண் பிரதிநிதியின் காலைத் தற்செயலாகத் தட்டிவிட்டது. நாகரிகமாக புன்சிரிப்புடன் அந்த அமெரிக்கர் – ரஷ்யப் பெண்ணிடம் பேசாமலேயே தலையைச் சாய்த்து மன்னிப்புக் கோருவது போன்ற பாவணையைக் காட்டினார்.

பதிலுக்கு அந்த ரஷ்யப் பெண் எதுவுமே பேசவில்லை. முகத்தில் எந்த உணாச்சியையும் காட்டவில்லை. அதற்குப் பதில் பக்கத்திலிருந்த ரஷ்ய காம்ரேடிடம் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தாள். காம்ரேடும் தன்னருகிலிருந்த உயரதிகாரியிடம் ஏதோ ரஷ்யமொழியில் யாருக்கும் புரியாமல் ஏதோ சொன்னார்.

அந்த ரஷ்ய உயரதிகாரி உடனடியாக அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து நீண்ட நேரம் ஏதோ பேசினார். பின் ரொம்ப சீரியஸாக பேச்சுவார்த்தை 2 1/2 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பம்.

ரஷ்ய உயரதிகாரி வெகு விறைப்பாக காம்ரேடிடம் ஏதோ மெதுவாகச் சொன்னார். காம்ரேட் ரஷ்யப் பெண் பிரதிநிதியிடம் ஏதோ முணுமுணுத்தார்.

பிறகு அந்த ரஷ்யப் பெண் குரலைச் செருமிச் சீர் செய்தபின், உதட்டில் வரவழைத்த புன்னகையோடு முன்னாலிருந்த அமெரிக்க ஆண் பிரதிநிதியைப் பார்த்துச்சொன்னார்.

' நான் ரெடி! உங்க இடத்திலயா?, எங்க இடத்திலயா? எப்போ? '

15 comments:

தமிழ் மதுரம் said...

' நான் ரெடி! உங்க இடத்திலயா?, எங்க இடத்திலயா? எப்போ? '//

லோசன் எதுக்கு ரெடி??? பேச்சுவார்த்தையிலே பேச்சா???? என்னது ஒன்னுமே புரியலையே???? ஹா........ஹா.......ஹா....:))

ப்ரியா பக்கங்கள் said...

இந்த நாவலில் வரும் Laughter the best Medicine தொடர் உண்மையிலேயே சிறந்த சிந்திக்க வைக்கும் காமெடியை தன்னகத்தே கொண்டது.

அது சரி தாங்க எங்க வச்சுக்கிறதா தீர்மானம் .. இதுக்கு நம்ம ஏரியா தான் நல்லம் போல கிடக்கு .. ஏனெண்டால் நல்ல சுற்றம், நல்ல வசதியாவும் இருக்கு, மேல சொல்ல போனால் எங்கட தனி வித்தையையும் காட்ட சுகமாய் இருக்கும்..
நீங்களும் ரெடிதானே
இந்த மார்கழி குளிர் சரி இல்லை தை பிறக்கட்டுமேன்..ha ha

வேத்தியன் said...

//1977ம் ஆண்டுக்குரிய (அப்போது நான் பிறந்தே இருக்கவில்லை)\\

வயசைக் குறைச்சுக்கப் பார்க்கிறீங்களோ???
:)))

kuma36 said...

///நான் ரெடி! உங்க இடத்திலயா?, எங்க இடத்திலயா? எப்போ?////

அண்ணா இந்த வரிகளை விடியலில் சொல்லலையே!!!!!!!!!

Anonymous said...

லோஷன்
இப்படி ருசியர்களை கிண்டல் பண்ணி அமெரிக்கா நிறைய எழுதியது, அதை திருப்பி எழுதுவது என்பது ஒன்று, அதை திருப்பி எழுதும் மனநிலை இன்னொன்று.

இவ்வாறான கீழ்தரமான விடயங்களே அமெரிக்காவால் செய்ய முடிகிறது; உங்களாலும் கூட

Gajen said...

//1977ம் ஆண்டுக்குரிய (அப்போது நான் பிறந்தே இருக்கவில்லை)//

அண்ணே...இது ரொம்ப ஓவரா இல்ல?? 1977 இல் உங்களுக்கு ஒரு 10-15 வயது இருக்கும் என்று நினைத்தேனே?

சி தயாளன் said...

ஏதாவது கராட்டி, ஜூடோ...இல்ல ஓட்டப் பந்தயமா இருக்கும் போல..:-)

பிரணவன் said...

koncam over than its ok :-)

Sinthu said...

Loshan anna, I also don't understand.

Anonymous said...

நல்லதொரு ஆக்கம் . கடைசியில எல்லோரையும் ஜோசிக்க வைசிடிங்க
ம்ம் .... அவக்ங்க எதுக்கு சொல்லியிருப்பாங்க என எல்லோருக்கும் தெரியும் என நினைகிரன்

Unknown said...

ஒண்ணுமே புரியலை!?%$#@&*

RAMASUBRAMANIA SHARMA said...

MORE OF PUNGENT ODOUR...BUT THE SARCASM IS EXCELLENT...RASSIANS...HAVE REAL COURAGE...AND THEY ARE READY FOR EVERY THING FOR THE BETTERNENT OF THEIR NATION...THATS WHAT I UNDERSTAND...

pusparaj said...

லோசன் எனக்கும் ஒரு சந்தேகம் அந்த ரஸ்யப்பென் எதுக்க ரெடியென்டு சொன்னவள் ஒருக்காச்சொல்லுங்கோவன்

லோசன் அண்ணா பாராட்டுக்கள் உங்களுடைய படைப்புகளை நான் வாசிப்பதுன்டு இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள்

Kirushanth Raj said...

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு இதுக்கு முதல் எதாவது நிகழ்ச்சில சொன்னிங்களா அண்ணா?

Unknown said...

//1977ம் ஆண்டுக்குரிய (அப்போது நான் பிறந்தே இருக்கவில்லை)//
அண்ணா என்ன சொல்ல வாறார்?????
நீங்க யூத்தா?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner