மென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்

ARV Loshan
15
நான் முன்பொரு பதிவில் சொன்னது போல
 இலங்கையின் புதிய நட்சத்திர சுழல் அஜந்த மென்டிஸ் நேற்றைய தினம் மேலுமொரு உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். குறைந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 50 விக்கட்டுக்களை எடுத்த சாதனையே அது!

முன்பு இந்தியாவின் அஜீத் அகர்கர் 23 போட்டிகளில் 50 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையை கடந்த மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற தொடரிலேயே வீழ்த்தி இருக்க வேண்டிய இந்த சாதனையை ஒரு சில வாரங்கள் கழித்து அதே ஜிம்பாப்வே அணிக்கெதிராக வீழ்த்தி முறியடித்திருக்கிறார் மென்டிஸ். மென்டிஸ் இந்த ஐம்பது விக்கெட்டுக்கள் எடுக்க எடுத்துக் கொண்டது 19 போட்டிகள் மாத்திரமே..

சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் கால் பதித்ததிலிருந்து சாதனை மேல் சாதனையாக முறியடித்தவன்னம் இருக்கிறார் மென்டிஸ்.  

இன்னும் மென்டிசின் சவாலை சரியான முறையில் எதிர்கொண்டு ஆடிய வீரராக எந்த ஒரு சர்வதேசக் கிரிக்கெட் வீரரையும் காணமுடியவில்லை.. எங்கிருந்து யாரின் வடிவில் வரப் போகிறாரோ?   
 
அத்துடன் நேற்றைய தினம் மற்றுமொரு இந்தியரின் சாதனையும் இன்னுமொரு இலங்கையரினால் சமப்படுத்தப்பட்டுள்ளது.. 

முன்னாள் இந்திய அணித்தலைவர் முஹம்மத் அசாருதீன் களத்தடுப்பில் எடுத்திருந்த பிடிகளின் சாதனையே அது.. அசாருதீன் 334 போட்டிகளில் எடுத்திருந்த பிடிகளின் எண்ணிக்கையை (156) இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன வெறுமனே 289 போட்டிகளில் பிடித்து சமப்படுத்தியுள்ளார். இன்னும் மகேல பல போட்டிகளில்,பல ஆண்டுகள் விளையாடப் போவதால் நெடுங்காலம் இந்த சாதனை அவருக்கு சொந்தமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பிடிகளை எடுத்திருக்கிறார். எனவே மகேலவுக்கு இப்போதைக்கு இந்த சாதனையை எட்டிப் பிடிக்கும் போட்டியாளர் பற்றிக் கவலை தேவையில்லை.

நேற்றைய போட்டியில்,இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வெறுமனே 210 ஓட்டங்களைப் பெற்றாலும் 130ஓட்டங்களால் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து ஆச்சரியமூட்டியது.. எவ்வளவு தான் சிறப்பாகப் பந்துவீசினாலும் துடுப்பெடுத்தாடுவதில் இன்னமும் பாடசாலை அணியைப் போலத் தான் விளையாடுகிறார்கள்..

ஆனால் மகேல ஜிம்பாப்வே அணிக்கேதிராகத் தடுமாறுவது தொடர்கிறது.. நேற்றும் அவர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.. இப்போது கடைசி ஐந்து இன்னிங்க்சில் ஜிம்பாப்வேக்கு எதிராக மகேல பெற்றிருப்பது வெறும் 19 ஓட்டங்கள் மாத்திரமே.

போகிறபோக்கில் மகேலவைக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழக்க வைப்பது எப்படி என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களிடம் மற்றைய அணிகளின் பந்துவீச்சாளர்கள் டியூஷன் எடுப்பார்கள் போலிருக்கே..   

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*