கமெரா கண்களால் பார்க்கையில் இன்னும் அழகாக மிளிர்கிறது பூமி..
எல்லாப் படங்களையும் பார்த்த பிறகு கீழே உள்ள முக்கியமான விஷயத்தையும் வாசித்து விட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;)
தலைப்பு விளக்கம் அங்கே தான் இருக்கு..
யுத்தத்தின் எச்சங்களாக காட்சி தரும் உடைந்து,சிதைந்த தாங்கிகளும் காணப்படுகின்றன.. பார்த்தீர்களா?
அழிவுகளைத் தந்தவை அழிந்து நிற்கும்போது அதுவும் அழகு தானே..
அழகை ரசிக்க காலமா நேரமா? யாரோ ஒரு முகமறியா கமெரா கலைஞனுக்கு நன்றிகளை சொல்லிக் கொண்டே பார்த்து ரசிப்போம்.. கடந்த முறை நான் தந்த தலைப்பு -
மேலிருந்து பாருங்கள் அழகு தெரியும் டபுள் மீனிங் என்று நம்ம நண்பர் ஒருவர் கண்டுபிடித்திருந்தார்.. (என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. ;) )
அதனால் இம்முறை இந்த அழகு ததும்பும் பூமியின் அழகான புகைப் படங்களை (இவையும் வானிலிருந்து கொண்டே எடுக்கப்பட்ட பூமியின் புகைப் படங்கள் தான்.. அவர் பறந்து கொண்டோ,மிதந்து கொண்டோ எடுத்திருக்கிறார்) வானிலிருந்து பூமி பாருங்கள்.. (இதிலேயும் ஏதாவது கில்மா அர்த்தம் கண்டு பிடிப்பாங்களோ?)
என்ன கொடும சார்.... ;)