December 28, 2008

நட்சத்திரமாய் ஒரு வாரம்..

மிகக் குறுகிய காலத்திலே தமிழ் மணத்தினால் நட்சத்திரப்பதிவராகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆனந்த அதிர்ச்சி!

ஒரு சில மாதங்களிலேயே எனது வலைத்தளமானது நிரந்தரமான வருகையாளர்களையும் நண்பர்களையும் ஈர்ந்தது எனக்குத் தெரிந்தாலும் கூட, பல பிரபல பதிவர்களுக்கே இதுவரை கிடைக்காத இந்த கௌரவம் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை தமிழ்மண நிர்வாகி மின்னஞ்சல் மூலமாக அறியத்தந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்த நத்தார் – புது வருட வாரம் வானொலியைப் பொறுத்தவரை மிகப்பரபரப்பான, வேலை கூடிய வாரம் என்ற காரணத்தினால் உடனடியாகவே எனக்கு ஒரு வார காலமாவது பிற்போட்டு இந்த வாய்ப்பைத் தருமாறு கேட்டேன்! எனினும் அன்பாக அதை மறுத்துவிட்டார். நானும் 23ம் திகதி எனது நட்சத்திர வாரம் ஆரம்பமாவதை மறந்தேவிட்டேன்!

எந்தவித முன்னாயத்தமும் இல்லை; தயாரிப்புகளோ, ஏற்கனவே எழுதி வைத்த பதிவுகளோ கைவசமிருக்கவில்லை. 23ம் திகதி பகலில் நான் போட்ட பதிவுக்கு (கிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..)
நண்பர்கள் பலர் "நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்" எனப்பின்னூட்டம் போடத்தான் உறைத்தது! ஆகா... மறந்திட்டனே... இந்த ஒரு வார காலம் ஓடியதே தெரியவில்லை!

உண்மையில் தரமான பதிவுகளை நான் இட்டேன் என நம்பவில்லை! அதேவேளை நட்சத்திரமாகத் தெரிவுசெய்த தமிழ்மணத்தையோ, அங்கிருந்து வரும் அன்பர்களையோ ஏமாற்றி, சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.
(வழமையாகவே வரும் தமிழிஷ்;, தமிழ்மண, என் நண்பர்கள், இதர வழிகள் மூலம் வருவோரையும் தான்)  

இதற்காகவே கொஞ்சமென்ன, அதிகமாகவே உழைத்தேன்!  
வழமையாக 10 -11 மணி நேரம் அலுவலக வேலை செய்பவன் மேலதிகமாக இன்னும் சிலமணிநேரம் அதிகம் செலவழித்தேன்; வீட்டிலும் இணையத்தில் கொஞ்சம் அதிகமாகவே இணைந்தேன். 
(புரிந்துணர்ந்து வழமைபோல் சகித்துக்கொண்ட மனைவி, குடும்பத்தினர், அலுவலக சக ஊழியர்களும் நன்றிக்குரியவர்களே )  

இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தில் இந்த நன்றிப் பதிவுடன் மொத்தமாக நான் இட்ட பதிவுகள் 12.
அனைத்தையும் ரசித்தீர்களோ,சகித்தீர்களோ உங்கள் ஒவ்வொருவரது வருகையையும்,பின்னூட்டங்களையும் நான் சுகித்தேன்.. 
நன்றிகள்!!!
 
இந்த ஏழு நாட்களில் எனது தளப் பக்கம் வருகைகள் அதிகரித்திருப்பது உண்மையே! பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாய் உணர்கிறேன்.
 
இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறீர்கள் - ஆனால் என்னால் முடிந்தளவு முயல்கிறேன்! எல்லாத் தரப்பினரையும் திருப்தி செய்வது என் நோக்கமில்லை! எனினும், என் தொழிலுக்கான முன்னுரிமை காரணமாக மேலுமிருக்கையிலேயே என் பதிவுகள் அரங்கேறும்.
 
இந்த வேளையில் எனது வருகைச் சுட்டி – வருகைகள் 50,000 தாண்டியிருப்பதை காட்டுகிறது.
மகிழ்ச்சி!  

இந்த நட்பு தொடர்ந்திருக்கட்டும்! உங்கள் வருகைகள் என் தளத்திற்கு எப்போதும் இருக்கட்டும்! (bookmark பண்ணிக்கோங்க! )
 
நல்லா இருந்தா பாராட்டுங்க (உண்மையிலேயே நல்லா இருந்தா) 
இல்லைன்னாலும் பின்னூட்டத்தில் திட்டுங்க! 

எனது வலையுலக எழுத்துப் பயணத்தில் நீங்கள் அனைவருமே மறக்கமுடியாதவர்கள்!
 
பி.கு : நான் உண்மை ஜனநாயகத்திலே மதிப்புள்ளவன் என்பதனாலேயே பின்னூட்டங்களை மட்டுறுத்தாமல் - பயன்படாமல் - யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்திடலாம் எனத்திறந்துவிட்டுள்ளேன்.  

இதனைத் தவறாகப் பயன்படுத்தி – பிரசாரம் கொண்டு செல்வதற்கும், வம்பிழுப்பதற்கும் - பிறரைப் புண்படுத்தவும் பயன்படுத்தாதீர் என நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
அத்துடன் அனானிகள் முடிந்தவரை பெயர்களையும் வெளியிடுமாறும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களையும் கூட நான் வெட்டாமல் விட்டு வைக்கிறேன்.. அவை தகாத வார்த்தைகளாக இருக்காதவரை..

என் ஆக்கங்கள் பற்றிய காட்டமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். அவை வேறு யாரையும் பாதிக்காத வரை..

எனென்றால் நான் அடிக்கடி எழுவது போல, விமர்சனங்களுக்குப் பயப்படுவான் எந்த செயலையும் செய்யவும் கூடாது.. யார் பற்றியும் விமர்சிக்கவும் கூடாது..

நன்றிகள்..  
நட்புடன் லோஷன்!

20 comments:

சி தயாளன் said...

வாழ்த்துகள்..உங்கள் வாலொலி வறுவல்கள் சூப்பர்ப்...

தொடரட்டும் உங்கள் பணி

ஆதிரை said...

வாழ்த்துக்கள் அண்ணா.

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

சூப்பர்

Anonymous said...

hello indha vetti ungala prabalamakinathu shakthi tv and fm. muthalla irunthu yosichu parungo ungala muthalla prabalam aakinathu shakthi than atha manasula vachuttu kathaingo.oru pathivula paththan neenga than puthiya paatukal muthalla poduraningalo sooriyanla irukum pothu.aaruku poi solluriyal.muthalla shakthi tv and fmku nantri sollungo.

Anonymous said...

naan muthalil irunthu sollonum endu ninachanan.ungal mahanin photovai eduka solli ennenda kann pattividum ellor parvaikum vaikum pothu, veeta poi oruka mahanuku suthi podunga.

அருண்மொழிவர்மன் said...

போதுமான அவகாசம் இல்லையென்றாலும் ஒருவாரமும் அமர்க்களாம் செய்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். வானொலி வறுவல்களாஇ தொடர்ந்து வழங்கினால் நன்றாக இருக்கும்

மாயா said...

வாழ்த்துக்கள் அண்ணா!
போதிய ஏற்பாடுகள் இல்லையெனினும் பதிவுகளை இனிமையாகவும் சுவையாகவும் படைத்தீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றிகளுடன்
மாயா

Anonymous said...

இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறீர்கள் - ஆனால் என்னால் முடிந்தளவு முயல்கிறேன்! எல்லாத் தரப்பினரையும் திருப்தி செய்வது என் நோக்கமில்லை! எனினும், என் தொழிலுக்கான முன்னுரிமை காரணமாக மேலுமிருக்கையிலேயே என் பதிவுகள் அரங்கேறும்.//

வானலையால் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருப்பதோடு, இன்று வலைப்பதிவினூடாகவும் எமையெல்லாம் வசிகரீக்கும் லோசன் அவர்கள் மென் மேலும் பல பல புதிய படைப்புக்களைத் தர வேண்டும் என வேண்டுவதோடு அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...

தொடர்ந்து புதிய பல பதிவுகள் வெகு விரைவில் வராவிடில் நாம் தீக் குளிக்க நேரிடும் என்பதையும் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றோம்.... வாமலோசன் ரசிகர் மன்றம், No 31/37 Queen Elisapeth St, Lords 3015, England

Sinthu said...

"இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறீர்கள்"
u r correct anna,
V r expecting a lot from uuuu.........
Write a lot..
Sinthu
Bangladesh

Sinthu said...

best of luck...............
V r ready to ready.
Write when u have time
Everything s cool here
thxs 4 ur every post...

Sinthu said...

best of luck...............
V r ready to ready.
Write when u have time
Everything s cool here
thxs 4 ur every post...

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணா
உங்களின் எழுத்து நடை சுப்பர் தெடருங்கள் உங்களின் பணியை

வானொலி வறுவல்கள் சுப்பர் இன்னும் வரும் என்று எதிர்பார்க்கின்றேன்

Vathees Varunan said...

வாழ்த்துகள் அண்ணா

Anonymous said...

வாழ்த்துக்கள் லோசன்!
தங்கள் பதிவுகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கக்கூடியவாறுள்ளது. உங்கள் கைதுக்கு முன்னான பதிவுகள் கைதுக்கு பின்னான பதிவுகள். என்னை ஈர்த்தவை கைதுக்கு முன்னான பதிவுகளே. அப்பதிவுகளின் அடர்த்தி தற்போதைய பதிவுகளில் இல்லையென்பது வெளிப்படை. இருந்தாலும் உங்களின் பாதுகாப்பு கருதி நீங்கள் அவ்வாறான பதிவுகளை நிறுத்தியமை புரிந்துகொள்ளக்கூடியதே.

ஒரு சிறிய விமர்சனம் உங்கள் மீது வைக்க விரும்புகின்றேன். பல நூற்றுக்கணக்கான வலைப்பதிவாளர்களிடையே உங்களை இனங்காட்டியது உங்களின் கவர்ச்சியான நேர்த்தியான பதிவுகளே. தற்போது நீங்கள் அடிக்கடி ஏனையவர்கள் போல (சாதாரண) பதிவுகளை இட்டுவருகின்றமையை காணக்கூடியவாறிருக்கின்றது. இதை குறைத்துக்கொண்டால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும் முடிந்தால் 2002 வருடம் விடுதலைப்புலிகளின் தலைவரால் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம் பற்றிய ஒரு பதிவை (உங்களுக்கு அசெளகரியங்கள் இல்லாவிட்டால்) போட்டால் அது பயனுள்ள ஒரு வரலாற்று பதிவாக இருக்கும் என்பது எனது கருத்து.

மீண்டும் வாழ்த்துக்கள்.
நன்றி

Anonymous said...

ஈழசோழன் சொன்னதை நானும் ஆமொதிக்கிறேன்!!!!!!

Anonymous said...

Hi anna ..
Best of luk...
i'm reading ur every post.. excellent... keep it up...

Jeya.
Canada.

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் லோசன்... தொடருங்கள்!

Nimal said...

வாழ்த்துக்கள் லோசன் அண்ணா...!!!

Anonymous said...

எங்கள் அன்புக்குரிய லோஷனை நட்சத்திர பதிவராக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி தெரிவிப்பதுடன், இதைப்போலவே இதர திரட்டிகளும் லோஷனை நட்சத்திர பதிவராக அறிவிக்க வேண்டுமென காட்டமான வேண்டுகோளை இங்கு எமது கழகத்தின் கண்மணிகள் சார்பில் பதிவுசெய்கிறோம்.

கொ.ப.செ
அ.உ.லோ.ர.க
(அகில உலக லோஷன் ரசிகைகள் கழகம்)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner