வேற்றுக்கிரக ஜந்துக்கள் பூமியில் !!!

ARV Loshan
15

வேற்றுக் கிரகவாசிகள் என்றவுடனேயே வானத்தை அண்ணாந்து பார்த்து வானத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்திறங்கும் மனிதரைப் பற்றியே நாம் சிந்திக்கிறோம்.ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் வேற்றுக்கிரக வாசிகள் தான் எங்கள் கண் முன் நிற்கும் உருவங்கள்..ஆனாலும் பூமியிலே எங்கள் கால்களுக்குக் கீழே மில்லியன் கணக்கான கண்ணுக்குத் தெரியாத(இலகுவில் தெரியாத
),சில மில்லி மீட்டர்களே நீளமான பல உயிர்கள் (ஜந்துக்கள்,பூச்சிகள்) உலா வருகின்றன.. எனினும் நாங்கள் அவற்றைக் கூர்ந்து நோக்குவதில்லை..அவ்வாறான வேற்றுக்கிரக ஜந்துக்கள் போன்ற சில சிறிய உயிரினங்களை இன்று நாங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம்.. (பயப்படாதீங்க.. கை குலுக்க எல்லாம் தேவை இல்லை)



வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மினி ரோபோ மாதிரியுள்ள இந்த பூச்சி,சிகோபெத்ரா(Zygopetra) என்ற வகையைச் சேர்ந்த ஒரு வகைத் தும்பியினம்.. கண்கள் இரண்டும் பிரிந்து வேறு வேறு திசைகளைப் பார்க்கக் கூடியது..



ஆங்கில மாயாஜாலத் திரைப்பட வில்லன்கள் போலக் காணப்படும் இந்த அசிங்கமான மஞ்சள் ஜந்து, டசிசிரா புடிபுண்டா(Dasychira Pudibunda) என்ற பெயருடையது.. 




மனிதர்களை நீண்டகாலமாக ஏமாற்றிவரும் ஒரு அபாயமான ஜந்து இது..மஞ்சளாகவும், கருப்பாகவும் நிறம் மாறக்கூடியது... அப்பாவி விலங்கு என்று நினைத்து விஷக்கடிக்கு மனிதர் பலர் ஆளாகியுள்ளனர்.
இதன் பெயர் அப்பிடே(Apidae)



மம்மி ரிடர்ன்ஸ்/ லோட் ஒப் த ரிங்க்ஸ் படங்களில் வரும் உருவம் போன்ற இது ஒருவகை வெட்டுக்கிளி இனம். இதன் பெயர் டேட்டிகோனிடே(Tettigoniidae)



இன்னுமொரு வெட்டுக்கிளி வகை இது.. கொஞ்சம் வேகம்,துறுதுருப்பானது 



பார்க்கவே புதிராக இருக்கும் இது ஒருவகை தாவர சத்து உறிஞ்சி.. மேம்ப்ராசிடே(Membracidae)குடும்ப வகையைச் சேர்ந்த இந்த ஜந்து, தனது அலகுகளால் தாவரத்தின் தண்டுகளில் உள்ள சத்தை உறிஞ்சி எடுத்துவிடும்..



யாராவது ஹாலிவுட் இயக்குனர்கள் பார்த்தால் தமது அடுத்த வேற்றுக்கிரக வாசிகள் படத்தின் பிரதான பாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யும்படி இருக்கும் இந்த ஜந்து மிகவும் கபடமானது.. ஒரு பூ போல நடித்து தனது இரைகளை கப்பென்று பிடித்து விடும்..  



குழவிகளில் ஒரு வகை.. இந்தக் குழவிகள் பூமியில் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை.
 

வெட்டுக்கிளியும், தும்பியும் கலந்த ஒரு வகை இது. கவசம் அணிந்த இராணுவ வீரன் போல இதன் தோற்றம் இருப்பது தான் இதன் விசேடம்.எனினும் பரிதாபமான விஷயம்,அதிகப் புரதச் சத்து நிறைந்த இந்த ஜந்து மேலை நாடுகளில் பல பேரின் உணவுத் தட்டுக்களில் விருப்பத்துக்குரிய உணவாக மாறிவருகிறது.


சதுரங்கக் காய்களில் மந்திரி போலவோ, லோட் ஒப் ரிங்க்ஸ் படத்தில் வரும் ஒரு மந்திரவாதி போலவோ காணப்படும் இது சுவர்க்கோழி இனங்களில் ஒன்று.. 

 

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*