வெள்ளவத்தை
கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் -
அதிகமாகத் தமிழ் பேசுவோரே
வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06)
பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.
வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!
நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும்
கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!

எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்
பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம்
எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும்
உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம்
பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால்
இது ஒரு குட்டி லண்டன் அல்லது
டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்)
அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும்
ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும்
மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!
வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே
கட்டிப் பாசனம் செய்யலாம்!
எங்கள் வெள்ளவத்தை வீதிகளில்
விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்!
பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி
இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.
குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை
பயணிக்க புதியதாய்
நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!
பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில்
அள்ளிக் கொடுத்து
சாதாரண மரக்கறி விலைகளையும்
சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!
எனினும்
தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!
காய்கறிக் கடைக்காரர் முதல்
காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே
தமிழறிவர் வெள்ளவத்தையில்!
பஸ் கண்டக்டர் கூட
வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான்
டிக்கெட் கொடுப்பார்!
பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும்
பெருமளவில் உண்மை!
பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும்
தமிழிலேயே பேசுவர்!
எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும்
தலைநகரின் தமிழ்த் தலைநகரம்
தடுக்கி விழுந்தால் ஆலயம்
தடுமாறி விழுந்தால் சைவக்கடை
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின
வெளிநாட்டுப் பணத்தினால்!
பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் ரெய்டுண்டு
எனினும்
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி
விடுப்புகள் பேசியும்
வீராப்பாய் விண்வீரம் பேசியும்
நிற்கும் எம் இளைஞர் கண்டால்
வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற
எண்ணம் எட்டிப் பார்க்கும்!
அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்
ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!
வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும்
தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!
வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!
(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)
காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..
நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க
காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும்,ஆன்டிமாரும்
அணிவகுத்து நடை பழகுவார்கள்..
உடல் மெலிவோ,கொழுப்போ
காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..
நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..
ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர்
அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..
ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில்
எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது
(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)
குண்டுகள் எங்கு வெடித்தாலும்
குண்டுகளை எங்கே போட்டாலும்
கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்
அவருடல்களில் தங்கங்கள் விளையும்
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!
கல்யாணங்களோ காசால் களைகட்டும்
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.
கிடைக்கும் நிலமெல்லாம்
கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால்
இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு
ஓடிவிட்டார்கள் சிங்களவர்
வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்
தமிழொலிக்கம் (தமிழ் மட்டுமே)
கரையோரக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றம் என்று
நாம் பொங்கியெழுந்த காலம் போய்த்
தலைநகருக்குள்ளேயே
தட்டுத் தடங்கலின்றித் தமிழரின்
தொடரான குடியேற்றம் என்று
கொதித்தெழக் கூடும்
(கொட்டாஞ்சேனை மட்டக்குளி போன்றவையும்
இதற்கு பொருத்தமே)
42 comments:
அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்
ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!
வாடா ராசா... வேலை முடிந்து இங்க தானே வரப்போறாய்.
(நான் சொல்லவில்லை. யாரோ சொல்வது கேட்கிறது)
நன்றாக இருக்கிறது.
:-)
Jana
வெள்ளவத்தை புத்தகக்கடைகளை விட்டுவிட்டீர்களே லோஷன் :)
கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியில் வாரமொருமுறை தவறாமல் போய்வரும் இடம் வெள்ளவத்தை. தேவையான தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும். அதிலும் ஒரு பழைய புத்தகக் கடையொன்று இருக்கிறது பாருங்கள்..ஒவ்வொரு வியாழனும் அங்கு போய் அள்ளிக்கொண்டு வருவேன். போன உடனே வருவதில்லை..எப்படியும் மணித்தியாலக் கணக்கில் ஆகும் என்பது தெரிந்து, வெற்றிலை சாப்பிட்டபடி இருக்கும் அதன் முதலாளி (அண்ணா) நான் போனால் என்னை இருத்தி விட்டு சாப்பிடவும் வீட்டுக்கும் போய்வருவார். :)
நல்லாருந்தது...படிக்க..உங்க எழுத்துநடையும் அருமை!
ரொம்ப நல்ல இருக்கு உங்கள் ஊரை பற்றி உங்கள் வாயிலாக ஓரளவு தெரிந்து கொண்டேன்..
ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி
துபாய் வானொலியில் தமிழும் இப்படித்தான் கதைக்கப்படுகிறது.ஒரு ஆறுதல், நம்ம சேட்டன் சேச்சிமார்களும் மலையாளத்தை இதே ரீதியில் கொலைசெய்து வருவது.
ஓ இதுதான் வெள்ளைவத்தையா?:)
நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)"
அண்ணா பொதுவாக எல்லா பெண்களுமா இல்லை குறிப்பாக வெள்ளவத்தை பெண்களா? குழப்பமாக இருக்கிறதே?
சிந்து
பங்களாதேஷ்
என்ன இருந்தாலும் நம்ம வெள்ளவத்தையை இப்படிக் கிண்டல் அடிக்ககூடாது. விடுபட்ட சில
பஸ் ஸ்டாண்டுகளில் சைட் அடிக்க நிற்கும் இளம் வயது வாலிபர்கள்.
அவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என பல நிமிடங்கள் நின்றுவிட்டு 5 பஸ்சை கொண்டக்டர் சரியில்லை என்று சொல்லி ஆறவது பஸ்சில் பயணம் செய்யும் வனிதையர்கள்.
ரியுசன் சென்டர்களில் படிக்கும் பொடியள் செய்யும் அட்டகாசங்கள். (மொட் ஸ்ரடி சென்டரில் நாம செய்யாததா).
நோ லிமிட்டில் ஷொப்பிங் செய்தால் தான் ஜீரணமாகும் என நினைக்கும் சிலர்.
வாரம் தோறும் தமிழ்ச் சங்கத்தில் ஏதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலோ அல்லது கூட்டத்திலோ கலந்துகொள்ளும் முதியவர்கள்.
குழுக்களாக சண்டைபோடும் விடலைகள்
அப்பா மூச்சு வாங்குகின்றது மிகுதியை வேறு ஒருவர் எழுதவும்.
அப்பா மூச்சு வாங்குகின்றது மிகுதியை வேறு ஒருவர் எழுதவும்.//
hotel rolex கொத்துரொட்டி
ராமகிருஸ்ணன்ல சாப்பாட்டு கடையில காலை சாப்பாடு..
உருத்திராமாவத்தை தமிழ்சங்கம்
வெள்ளவத்தை கடற்கரையும் அடர்ந்த புதர்களும் குடைகளும்..
-------------
பஸ் ஸ்ரான்ட் என்றால் அது பம்பலப்பிட்டி ப்ளாட்ஸ் பஸ்ரான்ட்தான். அதுதான் பொதுவான இணைப்பு புள்ளி
// வெள்ளவத்தை கடற்கரையும் அடர்ந்த புதர்களும் குடைகளும்..//
இதை எப்படி மறந்தேன் ஹிஹிஹி/.
நாங்கள் எல்லாம் மார்கட் ஹோல்ட்காரர்கள்
ஆமா வேள்ளவத்தயில முஸ்லீம்களுக்கும் வீடு / கடை வாடகைக்கு / விற்பனைக்கு இல்லாயாமே? (துவேசம்) யாழ்ப்பாணத்து தமிழ் எண்டா மட்டும் விரும்பி கொடுப்பாங்க. கிழக்கு எண்டாலும் விருப்பமில்ல தானே..
அருமையாக இருந்தது அண்ணா !
// வாரம் தோறும் தமிழ்ச் சங்கத்தில் ஏதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலோ அல்லது கூட்டத்திலோ கலந்துகொள்ளும் முதியவர்கள். //
சிலநேரங்களில் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பயங்கரமாக கடுப்பேற்றுவதுண்டு. . .
ஊரிலயெண்டால் ஏதாவது கோயிலடில இருந்து ஏறிக்கதைகக்கிறதயெல்லாம் இங்க மேடையில மைக் கிடைச்சவுடன கதைக்கத்தொடங்கிவிடுவினம் :))
"வாடா ராசா... வேலை முடிந்து இங்க தானே வரப்போறாய்.
(நான் சொல்லவில்லை. யாரோ சொல்வது கேட்கிறது)"
நல்லபடியாக வீடு போய் செர்ந்துவிட்டிர்காளா anna
இதில் கொஞ்சம் வெள்ளவத்தை பற்றி ஓரளவு முதல் தெரிந்தவையே
சங்கம் ரீயூட்டரி..ரொலக்ஸ் உணவகம், ரொக்சி தியேட்டர்..அப்புறம் கொஞ்சம் எல்லை தாண்டினால் நம்ம பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி...இன்னும் நிறைய இருக்கே,..:-)
வெள்ளவத்தை நிரம்பி இப்போ கொஞ்சம் கொஞ்சமா தெஹிவளை, களுபோவிளையும் தமிழர் ஆதிக்காமாக மாறி வருகிறது..
Wellawatte Commercial bank ATM Machine இல் நிற்கின்ற queue மாதிரி வேறு எங்கையும் இல்லை.. இத்தனைக்கும் இப்போ 3 or 4 machines போட்டிருக்கிறார்கள்.. அப்பிடியும் நீளுது...
அப்புறமா Royal bakery எப்பிடி விட்டுப் போச்சு...
வெள்ளவத்தை தமிழர் என்றால் ஆட்டோக்காரர் சொல்லும் ரேட்டிற்கு ஆட்டோவே வாங்கி விடலாம்...
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!//
லோசன் இந்த இடத்தில ச.வே. அவர்கள் சொன்ன கவிதை நினைவுக்கு வருது: கன்னியவள் போட்டிருக்கும் சட்டை!
என்றோ களவு போன என்னுடைய சட்டை!
சொன்ன சிறுமிக்கோ வயது பத்து! விளக்கம் சொல்ல வேண்டுமா கண் வாயைப் பொத்து!
அப்ப லோசன் வெள்ளவத்தைக் கலியாணப் புறோக்கர்மார், சாத்திரிமார் எல்லோரையும் எழுத மறந்திட்டீர் போல???
:)
ஐயா ஆதிரை, நம்ம வத்தையிலேயே எனக்கு சவாலா? இதெல்லாம் நம்ம கிட்ட நடக்குமா?(அது சரி உண்மையிலேயே உங்களுக்கு நான் வீட்டுக்கு வர்ற நேரம் தெரியுமா?)
நன்றி ஜனா
நன்றி ரிஷான்.. உண்மை தான் நிறையப் புத்தகக் கடைகள் இருந்தாலும், பழைய புத்தகக் கடை இப்போ ஒன்றே ஒன்று தான்.. நீங்கள் நாட்டை விட்டுப் போனதும் மூடி விட்டார்களோ தெரியவில்லை.
நன்றி சந்தனமுல்லை,வினோத்
நன்றி வடுவூர் குமார்
பாருங்கய்யா நம்ம மொழி நாசமாப் போனா கவலையில்லை.. அடுத்தவனுடையத்தையும் சேர்த்து நாசமாக்கினா.. ;)
கவின்.. ம்ம்ம் இதுவே தான்..;)
சிந்து.. உங்களுக்கே குழப்பமா?
நீங்க எல்லாரும் தானே குழப்ப மொழி மிக்ஸ் பண்ணி பேசுபவர்கள்.. அதில் வெள்ளவத்தை லேடீஸ் தனி ஸ்பெஷல்.
வந்தி.. கலக்கல்.. நான் விட்ட இடமெல்லாம் விடாமல் தொட்டு விட்டீர்.. (இதெல்லாம் தங்கள் ஏரியாக்களா? )
சயந்தா இன்னும் உங்கள் குடை, பஸ் ஸ்டாண்ட் அனுபவங்கள் மறக்கலை போலை.. ;)
அனானி.. இந்தக் குறுகிய துவேஷக் கருத்துக்கள் நான் இருபது வருடங்களாக இருக்கும் வெள்ளவத்தையில் அறிந்ததில்லை.. என் வீட்டுக்கு அருகில் கூட ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்.. (இப்படியான கருத்துகள் மட்டும் முகமூடியணிந்து அனானிகளாகவே வரும்)
வந்தியத்தேவன் said...
\\
// வெள்ளவத்தை கடற்கரையும் அடர்ந்த புதர்களும் குடைகளும்..//
இதை எப்படி மறந்தேன் ஹிஹிஹி/.
நாங்கள் எல்லாம் மார்கட் ஹோல்ட்காரர்கள்
\\
அதுசரி இதை எப்படி மறந்தனியள் வந்தி...;)
எல்லாம் செய்யுறதும் எங்கடை ஆக்கள் தானே...:)
வெள்ளவத்தை காலங்களை மறக்க முடியாது...
'துணடு'ச்சண்டைகள்...:)
'காங்க்' பில்டப்புகள்...
இப்படி நிறைய...
ஊருக்கு வந்தால் கட்டாயம் கொஞ்சநாள் நிக்க வேணும் வெள்ளவத்தைல...
\\\
நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)
\\\
இதுதான் அண்ணன் எனக்கும் விளங்காத விசயம் டக்கெண்டு மாறி விடுவாளவை...:)
//உடல் மெலிவோ,கொழுப்போ
காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..//
லோஷனும் இந்த பாஷனுக்குள் அடக்கமோ...?
:))
கடற்கரைப்பக்கம் தாளம்பத்தைகளைப்பற்றியும் எழுதாக லோசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.நீதி செத்துவிட்டது
நண்பர்களே, உண்மையில் தமிழ்ச் சங்கம் , நோ லிமிட்,தாழம்பத்தைகள் பற்றி எழுதா விட்டால் வெள்ளவத்தை தாயே வந்து சாபமிடுவாள் என்று ராத்திரி என் கனவில் வந்து சுவாமி பதிவானந்தா அறிவுறுத்தினார்.. அதனால் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லுங்கள்..தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்.. ;)
உண்மை தான் மாயா, ஆனால் அந்த முதியவர்களுக்கு என்று ஒரு கூடுமிடம் வேணும் தானே..
நம்மை மாதிரி இளையவர் போகாத காரணத்தால் தான் அது முதியவர் கூடும் இடமாக மாறுகிறதோ என்று நான் நினைத்து இடையிடையே போவதுண்டு..:)
நைச்பிக் .. என்னைய்யா பெயர் இது? வம்பா இருக்கே..;)
ம்ம்ம் எவ்வளவு காலம் தான் ஒரு இடத்தையே ஆளுகிறது?
சூப்பர்!!! சுபி , வெள்ளவத்தையின் மேலும் முக்கியமான அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள்..ஆட்டோக்கள் கொழும்பில் ஓடுவதே தமிழருக்காகத் தானே.. ;)
கமல், பொருத்தமான கவிதை..பெண்களைப் பெற்றோருக்கு செலவு மிச்சம்.. சின்ன வயசுல போட்ட ட்ரெச்சை அப்படியே எடுத்து வச்சா பெரிசானாப் பிறகு போடலாம்.. ;)
ம்ம்ம்ம் அவங்களும் முக்கியம் தானே.. ஆனா இப்போ எல்லாருமே பார்ட் டைம் தொழிலா இதை செய்யிறாங்களே..
நன்றி தூயா..
தமிழன்-கறுப்பி - கட்டாயம் வாங்கோ.. வந்தால் இப்ப புதிய மாற்றம், புதிய வேடிக்கைகள், புதிய பாஷன் எல்லாம் பார்க்கலாம்,, ;)
இல்லை நிமல், எனக்கு உண்மையில நேரமில்லை.. கிடைக்கிற நேரத்தில ஏதாவது நெட்ல விளையாடுறனான்.. டாக்டர் சொன்னவர் விளையாடினா உடம்புக்கு நல்லமாம்.. ;)
ஐயோ சாத்திரி.. என்னை மன்னியுங்கோ.. இப்ப தாளம்பத்தை எல்லாம் பெட்டர்.. ராமகிருஷ்ண வீதி,விவேகானந்த வீதி கடலோட முடியிற இடங்களைப் போய்ப் பாருங்கோ.. (Marine drive) நிறைய கார்கள்,ஆட்டோக்கள் நிக்கும்.. ;)
இதையெல்லாம் எழுதினா வெக்கமேல்லே..
குண்டு எங்க தான் வெடித்தாலும் பெண்களை கோவிலிலும் இளைஞர்களை சிறையிலும் காணலாம்.
என்ன தான் இருந்தாலும் யாழ்ப்பாண குட்டிகள் போல வெள்ளவத்தை பிகருகள் வராது...
அன்டிதமார்கள் மட்டுமல்ல 90 வயசு ஆச்சி கூட தன்னை குமரி என்டு நினைச்சு நைட்டியுடன் பிராவை வெளியில் தெரிய போட்டுக் கொண்டு போற நிலை உண்டு தான்.
அதை விட்டு அப்பாட்மென்டு விட்டு அப்பாட்மெட் கள்ளக் காதல். கணவரைவிட்டு இன்னொரு கணவரை எதிர்பார்பக்கும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
,uT ,zu;lhk; Ml;lk; glq;fs; gpshrh> <;Nuhrpy, ghHj;Jtpl;L nkhfkPbahtpy; rhg;gpLtJ NGhd;wtw;iw kPd;Lk; epidTf;F nfhzHe;jPH. ed;wp. 35 Mz;LfSf;F Kd; nts;stj;ijapy; jq;fp ,Ue;jNghJk; ,Nj czHTfs; nky;ypastpy; Njhd;wj;jhd; nra;jd. md;Wk; ngz;fs; xU jpdj;jtkhd jkpq;fpyk; NgrpdhHfs;. eif epiwa mzpe;jhHfs;. rur;tjp kz;lgj;jpy; jkpo;tpohf;fs; ele;jd. jpUkzq;fs; ele;jd.
Mdhy; Mlk;guk; ,Uf;ftpy;iy. Kbatpy;iy. Vnddpy; ntspehl;Lg; gzk; tutpy;iy.
,e;jg; gzj;ij mDg;Gtjw;fhf ,q;Nf cwTfs; vd;d ghLgLfpwhHfs; vd;gJ njupAkh? njupe;Jk; guthapy;iy kdepiyah?
இருந்தவங்க இருக்காங்க.. புதியவங்களுக்கு தான் நோ என்ட்ரி... ஆனா நீங்க நல்லா நாலு பேர் கிட்ட கேட்டு பாருங்க.. இதுல அனுபவம் இருக்கு.. ஒரு கடை வைக்க இடம் தேடி அலைந்ததில் அனுபவம்.. கூட ஒரு மலையாக தமிழரும் சேர்ந்த பார்த்நேர்ஷிப்.. அதே இடங்களுக்கு அந்த தமிழ் நண்பர் சென்று கேட்டபோதுதான் மேற்கொண்டு கதைத்தார்கள்.. வேண்டும் என்றால் இந்த வார வீரகேசரி பேப்பர் ல இருக்கிற வாடகை விளம்பரங்களுக்கு ஒரு முஸ்லீம் பெயர்ல கால் பண்ணி பாருங்க..
வெள்ளவத்தை. இந்த வார்த்தையில் ஏதோ ஒரு மாயை இருக்கிறது. 'காசு'வத்தை என்றோ நினைக்கத் தோன்றுகிறது. இங்க இருந்தால் அல்லது போனால் காசு சிம்பிளாக போகும். காரணம் கண்டு பிடிக்க நினைத்தால், அப்படியே அங்கொடை பஸ் எடுக்கலாம். லோஷன் 'றொக்சி' தியேட்டர் இனை தவறவிட்டுவிட்டீங்கள்.
அப்புறமா Royal bakery எப்பிடி விட்டுப் போச்சு... ஃஃஃ
உண்மை தான். நான் கொழும்பு வந்த நேரத்தில் அது ஒரு ஒடுங்கிய பாதைக்குள்ளால் தான் போகவேண்டும்.சுவரில் முட்டுப்பட்டால், ஏதும் கரி பட்டுவிடுமோ என்று பயந்தபடியே... ஆனால் அது சில காலத்தில் பிரமாண்டமாக எழுந்தமைக்கு..100 வீதம் தமிழர்களின் பணமே.
நான் ஒரு தடவை ஆட்டோவில் போனபோது ஓட்டி வந்த முஸ்லீம் பையன் ஒருவன் சொன்னான். மட்டக்குளியில் இருந்தாலும், அவன் வெள்ளவத்தையில் தானாம் ஓட்டுகின்றான். ஏன் என்றால், இங்கு தான் உழைக்கலாம் என்று.
இராமகிருஸ்ண மிசன் மண்டபம் இப்போது களை கட்டுவதில்லையா? குறிப்பிட்டுச் சொல்வது என்றால் முன்பு தமிழ்ச்சங்கம், கொமர்சல் வங்கியில் இருந்து மனிங் ப்ளேஸ் வரையும், 42ம் ஒழுங்கையில் இருந்து, விவேகானந்தா வீதி வரையும் இளைஞர்கள் எப்போதும் வீதியில் நிற்பதைப் பார்க்கலாம்.
நன்றி யாரோ ஒருவன் நீங்கள் சொன்னதும் உண்மையே..
அந்த விவகாரமான விஷயம் வெள்ளவத்தைக்கு மட்டும் உரியதல்லவே.. எல்லா இடங்களுக்கும் பொதுவானதே..
அழகுதமிழ்.. உங்கள் சொதப்பி விட்டது.. :(
அனானி.. எனக்கு அனுபவமில்லாத,நான் அறியாத விடயங்களுக்கு நான் பொறுப்பேற்க அல்லது புறம் கூற விரும்பவில்லை.. இப்படியான விஷயங்களை நீங்கள் என் உங்கள் சொந்தப்பெயரிலேயே சொல்லக் கூடாது?
கதியால், ஆமாம் சிங்கள நண்பர்கள் வேடிக்கையாக சல்லி வத்தை என்று தான் சொல்வார்கள்..
தூயவன்.. உண்மை தான்.. அதை சொல்லப்போனால் இன்னும் நிறையக் கடைகள் சொல்ல வேண்டி வரும் என்று தான் விட்டுவிட்டேன்.. ;) ஏன் சும்மா விளம்பரம்?
அந்த வீதிகள் இப்போ வாகனங்களாலும் பெருகி நிறைகின்றன..
ராமகிருஷ்ண மடத்தையும், அதற்கு எதிரில் ஷண்முகா உணவகத்தையும் விட்டுவிட்டீர்களே அண்ணா. துட்டுக் கூட இருந்தாலும் சுவையும் சூழலும் அற்புதமான உணவகம் அது.
அண்ணா, இந்தப்பதிவு Facebook இல் பல பேரின் கையில் copy paste சித்திரவதைக்கு ஆளாகி வருகின்றது.நான் அந்த 'Note' களில் comment விட்டுச்சென்றாலும் delete பண்ணி விடுகிறார்கள்.ஹெஹெஹெ.உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
கணேஷ்,
//ராமகிருஷ்ண மடத்தையும், அதற்கு எதிரில் ஷண்முகா உணவகத்தையும் விட்டுவிட்டீர்களே அண்ணா. துட்டுக் கூட இருந்தாலும் சுவையும் சூழலும் அற்புதமான உணவகம் அது.//
மிஷன் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன்.. ;)
உண்மை தான்.. உணவு அங்கே நல்ல ருசி.. அதற்கேற்ற விலை.. விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை.. ;)
தியாகி.. //அண்ணா, இந்தப்பதிவு Facebook இல் பல பேரின் கையில் copy paste சித்திரவதைக்கு ஆளாகி வருகின்றது.நான் அந்த 'Note' களில் comment விட்டுச்சென்றாலும் delete பண்ணி விடுகிறார்கள்.ஹெஹெஹெ.உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.//
ஆமாம் எனக்கே பல பேர் மின்னஞ்சல் மூலமாக வாசியுங்கள் என்று அனுப்பி விடுகிறார்கள்.. எங்கே பொய் சொல்வேன். நம்ம பெயரை வேண்டுமென்ற எடுத்து விட்டு chain mailsஆக அனுப்பி வைக்கிறார்கள்.. நல்ல காலம் அவர்கள் பெயர்களை எங்கேயும் தாங்கள் எழுதியதாகப் போடாதவரை சந்தோஷமே.. ;)
தமிழ் மற்றும் சமயம் வளர்ப்பதில் பல அறிய சேவை செய்த வரும் தமிழ்ச் சங்கம் பற்றி ஒரு முறைப்பாட்டை மனுநீதி சோழனுக்கு .....
ஒரு குறிப்பிட விழா நடைபெறும் பொழுது அந்த 57 வது ஒழுங்கையால் ( உருத்திரா மாவத்தை முடிவு )போனதுண்டா?
ஆம் இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு (மிகவும் ஒழுங்கற்ற விதமாக ) வேறு எந்த வாகனமும் போக முடியாமல் இருப்பதைப் பார்க்கலாம்
இது பற்றி தமிழ்ச் சங்க நிர்வாகம் மற்றும் முக்கியமாக 'படித்த பெரியவர்கள்' கவனம் செலுத்தவும்.
குறிப்பு - அண்மையில் ஒருவழிப் பாதையாக குறியிடப்பட்டது குறிப்பிடப்படவேண்டியது
MURUNGAKKAAI VILAIYAI UYARTHTHIYA PERUMAI WELLAWATTA KU THANE IRUKKU :p
MAAVILAI, VAALAIYILAI VITRUKKOODA PILAIKKALAAM ENA NAMBIKKAI KODUTHTHATHUM WELLAWATTA THANE :)
Post a Comment