December 31, 2008

2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா

அவுஸ்திரேலியாவின் 16வருட சொந்த மண்ணில் தோல்வியுறாப் பெருமையைத் தவிடுபொடியாக்கிய தென்னாபிரிக்கா தான் இந்த 2008இன் அசகாயசூர அணி.

இந்த வருடத்தில் கிரேம் ஸ்மித்தின் தலைமையில் தென்னாபிரிக்கா 11 போட்டிகளில் வெற்றியை ருசி பார்த்துள்ளது. இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வி. வேறெந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் அணியும் இந்த ஆண்டில் தென்னாபிரிக்காவை நெருங்க முடியவில்லை.

             மெல்பேர்னில் வென்ற உற்சாகத்தில் தென் ஆபிரிக்க வீரர்கள்

ஒரு வருடத்தில் ஒரு அணியால் வெல்லப்பட்ட அதிகமான போட்டிகள் டெஸ்ட் வரலாற்றிலேயே 11 தான். 1984இல் மேற்கிந்தியத் தீவுகளும், 2004இல் இங்கிலாந்தும் இதே சாதனையைப் புரிந்திருந்தன.

இதற்கு அடுத்த படியாக 10 டெஸ்ட் வெற்றிகளை ஓராண்டில் 3 தடவைகள் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 2002, 2004, 2006

இதுவரையில் தென்னாபிரிக்காவின் எந்தவொரு அணித்தலைவரம் அடையாத அரிய டெஸ்ட் தொடர் வெற்றி அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரை வென்ற ஒரே தென்னாபிரிக்க தலைவர் ஸ்மித் மட்டும் தான்.

மெல்பேர்ன் மைதானத்தில் தென்னாபிரிக்கா 90களில் பின்னர் (இன ஒதுக்கல கொள்கைகளின் பின் மீள் வருகை புரிந்த பின் ) பெற்ற முதலாவது வெற்றியும் இதுவே.

இன்னமொரு குறிப்பிடத்தக்க விடயம் - கடந்த இரண்டாண்டுக்கும் மேலாக தென்னாபிரிக்கா எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வி அயைவில்லை. இறுதியாக தென்னாபிரிக்காத் தோல்வியடைச் செய்த ஒரே அணி இலங்கை. 2006 ஜீலை மாதம்.

இந்தக் காலகட்டத்தில் 9 தொடர்களை வென்றதுடன், ஓரே ஒரு தொடரை சமநிலையில் முடித்துக்கொண்டது.

                            வேக இரட்டையர் - ந்டினி & ஸ்டைன்

இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,இந்த வருடத்தை எவ்வாறு தென் ஆபிரிக்கா ஆரம்பித்தோ அதே போலவே நிறைவு செய்துள்ளது.. 2008இல் அவர்களது முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளுக்கேதிராக கேப்டவுனில் 185என்ற இலக்கை மூன்று விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது..நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 183என்ற இலக்கு.. ஒரே விக்கெட்டை இழந்து..

இதுபோல தென் ஆபிரிக்க அணித் தலைவரான ஸ்மித்துக்கு மேலும் ஒரு சாதனை கிடைத்துள்ளது.. நான்காவது இன்னிங்க்சில் வெற்றிகளைப் பெரும் வேளையில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர் என்பதே அது..
அவர் இவ்வாறு பெற்ற ஓட்டங்கள் 919.

அடுத்த படியாக வருகிறார்கள் ஹெய்டன் மற்றும் பொன்டிங் .

                                         சாதனைத் தலைவன் ஸ்மித்

இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற பெருமையும் ஸ்மித்துக்கே .. அவர் குவித்த 1656ஓட்டங்கள்(15 டெஸ்ட் போட்டிகளில்) இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள்..
மொகமட் யுஸுப் - 1788 (2006) 
விவ் ரிச்சர்ட்ஸ் - 1710 (1976) 

இவர் மட்டுமில்லாமல் இந்த ஆண்டில் தென் ஆபிரிக்காவின் எல்லாத் துடுப்பாட்ட வீரர்களுமே ஓட்டங்கள் குவிக்கும் மேஷின்களாக மாறியுள்ளார்கள்..இந்த ஆண்டில் ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களைத் தாண்டியவர்கள் பத்துப் பேரில் நால்வர் தென் ஆபிரிக்கர்கள்..
ஸ்மித்,மக்கென்சி,டீ வில்லியர்ஸ், அம்லா..(ஏனைய அறுவரில் மூவர் இந்தியர்,மூவர் ஆஸ்திரேலியர்)

நாளை பிறக்க இருக்கும் 2009 தென் ஆபிரிக்க்காவுக்கு எப்படி இருக்கும் என்பதை எதிர்வரும் சனிக்கிழமை சிட்னியில் ஆரம்பமாக உள்ள டெஸ்ட் போட்டி எதிர்வு கூறும் என நம்பலாம்.. 


18 comments:

சி தயாளன் said...

ஒரே கிரிக்கெட் பதிவுகளாக இருக்கு..பார்க்கலாம் அடுத்த வருடம் யார் யார் எல்லாம் கலக்கப் போகிறார்கள் என்று..ஆஷஷ் தொடர் வேறு வருகிறது அல்லவா..?

உங்களுக்கு என் இனிய புது வருட நல்வாழ்த்துகளும் உரித்தாகுக..

Sinthu said...

என்ன லோஷன் அண்ணா இந்த வருடம் (சீ சீ இந்த மாதம்...) அதிக பதிவு போட்டவர்களில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோ.........
Best of Luck.....
Continue.....

Sinthu said...

எழுத்து நன்றாக இருக்கு அண்ணா.........
Sinthu
Bangladesh

kuma36 said...

:^):^):^)

IRSHATH said...

லோஷன் அண்ணாவின் ஆஸ்திரேலியா மீதான கடுப்பு பர்திவுகளாய்.. என்ன செய்ய இனியாவது அவங்க உடன் ஆட ட்ரை பண்ணி மக்கள் மனதை வெல்லட்டும். (இல்லாட்டி லோஷன் அண்ணா அவதாரத்தில் வறுத்து எடுப்பார்)

IRSHATH said...

லோஷன் அண்ணாவின் ஆஸ்திரேலியா மீதான கடுப்பு பர்திவுகளாய்.. என்ன செய்ய இனியாவது அவங்க spirit of Cricket உடன் ஆட ட்ரை பண்ணி மக்கள் மனதை வெல்லட்டும். (இல்லாட்டி லோஷன் அண்ணா அவதாரத்தில் வறுத்து எடுப்பார்)

Sinthu said...

.அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன்கூட்டிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Sinthu
bangladesh

kuma36 said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா!

Unknown said...

ஒரே நாளில 3 பதிவா?

ஏப்பு?

ஏன் இந்த கொலைவெறி??

தமிழன்-கறுப்பி... said...

எல்லோருக்கும்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

அவுஸ்ரேலியாவிற்கு டைம் சரியில்லை,,,,,,
புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிடுகுவேலி said...

நிச்சயமாக தென்னாபிரிக்கா நிறையவே சாதித்துள்ளது இந்த வருடத்தில். இது தொடரும் என்றால் எல்லோருக்கும் வயிற்றில் புளியைக்கரைக்கும். ஆனால் எப்போதுமே அதிட்டம் இல்லாத அணி என்ற பெயர் எடுத்துள்ளதால் இந்த வெற்றிப்பயணமும் எங்காவது சறுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். நல்ல தகவல்கள். நல்ல பதிவு.

இரா பிரஜீவ் said...

ஒரே நாளில் இப்படி கடுகதி வீக்கத்தில் மூன்று பதிவு ஏன்? ஆனால் தாமதமாக வர முடியாத பதிவு என்பதால் பரவாய் இல்லை...

வாழ்த்துக்கள்

இரா பிரஜீவ் said...

ஒரே நாளில் இப்படி கடுகதி வீக்கத்தில் மூன்று பதிவு ஏன்? ஆனால் தாமதமாக வர முடியாத பதிவு என்பதால் பரவாய் இல்லை...

வாழ்த்துக்கள்

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

அண்ணா உங்களுக்கும் உங்களது குடும்பத்தினார்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

wishes from Thusha, Bangladesh

RAMASUBRAMANIA SHARMA said...

SOUTH AFRICA DEFETED AUSTRALIA O.K ...LOTS OF STATISTICAL DATA'S WILL BE AN ADDED ADVANTAGE, WHICH SHOWS THE INVOLVEMENT OF THE AUTHOR "LOSHAN"...IN THE GAME "CRICKET"...BY THE BY,., WHY WE SHOULD COMPLETELY FORGET ABOUT THE "INDIANS" VICTORY WITH THE SAME "INVINCIBLE AUSTRALIAN TEAM" PRIOR TO THE DEFEAT BY SOUTH AFRICAN TEAM...IS IT MAINLY BECAUSE, SA DEFETED AUSTRALIA IN THEIR HOME...????, EVEN OTHERWISE, LET US BEING INDIANS, SHOULD GIVE OUR BEST WISHES TO "INDIAN CRICKET TEAM"...FOR THEIR EXCELLENT CONTRIBUTION IN THE RECENT TIMES...ESPECIALLY THE VICTORIES AGAINST THE SAME AUSTRALIANS...THIS IS MY SUGGESTION ONLY...

ARV Loshan said...

நன்றி டோன் லீ, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. பிசியாகவே இருந்தாலும் கணினியிலே ஏதாவது செய்யவே வேண்டும் போல இருந்தது,, அது தான் கிடைத்த தகவல்களையெல்லாம் தொகுத்து ஒரே நாளில் மூன்று பதிவு.. ;)
ம்ம்ம்ம் இம்முறை ஆஷஸ் நிச்சயமாக விறுவிறுப்பாக இருக்கும்.

சிந்து,.. நன்றி.. அப்பிடியெல்லாம் எதுவும் இல்லீங்கோ.. நம்ம வழி நம்ம வழியே தான்..

நன்றி ராகவன்..

இர்ஷாத்.. கடுப்பு என்பதை விட கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் அவர்கள் விட்ட கோபம் தான்.. எப்படி இருந்தவங்க.. ம்ம்ம்.. ;)
அவதாரம் ஹி ஹீ

நன்றி சிந்து, நன்றி கலை..

சஞ்சய்.. ஹீ ஹீ.. சும்மா தாம்ல.. எப்பவாவது தான் இந்த வெறி வரும்.. அன்னிக்கி பலி.. சாரி பதிவு போட்ருவம்..

நன்றி தமிழன்..

கவின்.. நன்றி.. எப்ப தான் இனி சரியாகுமோ..

கதியால், ஆமாம்.. chokers என்ற பெயரை எல்லாம் துடைத்து விட்டார்கள்.. இந்த ஆண்டில் ஆரம்பத்திலேயே அணித் தலைவர் கையை முறித்துக் கொண்டார்.. :(

பிரஜீவ், வீக்கம்? ஏதாவது எழுத்துப் பிழையோ?
ஆமாம் ஏதாவது பதிவோம் என்றிருக்க ரொம்பப் பொருத்தமாகவும் காலதாமதம் செய்ய முடியாதவாறும் இருந்த படியாலே இந்தக் கடுகதி மூன்று பதிவு..

நன்றி அத்திரி, நன்றி துஷா

ராமசுப்ரமனிய ஷர்மா,

நன்றி.. ஆமாம் இந்திய அணியின் வெற்றியும் மகத்துவமானதே..அது பற்றி முன்பே i have mentioned and as u have mentioned,only this South african team managed to beat Australia in their home grounds.Thats why i praised them.
But i agree Indians are improving day by day and we should salute them. They will be world beaters soon.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner