அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
சென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன்.
யாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ.
ஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன்.
நான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன.
பார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை.
அதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை' என்று நாம் கேலி செய்வதுண்டு) அப்படியே புயலில் பறந்து விட்டதாம்.
பெருமையும் புகழும் பெற்ற இணுவில் ஆஸ்பத்திரியின் முன்னால் ஒரு அரசமரமும் கீழே பிள்ளையாரும் காட்சியளிக்கும் (என்னை விட அதிக காலம் இணுவிலில் வாழ்ந்தவர்கள் இது பற்றி நன்கு அறிவார்கள்.) அந்த அரசமரம் இந்தப் பாரிய புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரறுந்து வீழ்ந்து விட்டதாம்!
வெள்ள சமுத்திரத்தில் மிதக்கும் யாழ்ப்பாணக் கோலம் இதோ!
யுத்தத்தை தொடர்ந்து யாழ்வாசிகளுக்கு மீண்டும் இந்த அவலங்கள்!
யார் கொடுத்த சாபமோ?
அம்மன் வீதி - நல்லூர்
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி
யாழ் நகர ஸ்டான்லி வீதி
யாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்
யாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம் யாழ் புனித பரியோவான் கல்லூரி வளாகம்
யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்
யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்
புராதனப் பெருமையும் அழிவுறா வரமும் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வீதி
புராதனப் பெருமையும் அழிவுறா வரமும் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வீதி
நல்லூர் கந்தசுவாமி ஆலய வெளிவீதி
பருத்தித்துறை வீதி - நல்லூர் ஆலய வீதி - நல்லூர்
யாழ் unicef அலுவலக வெளிப் பகுதி - ஆலய வீதி
யாழ் சேவா லங்கா அலுவலகப் பகுதி
நல்லூர்
யாழ் unicef அலுவலக வெளிப் பகுதி - ஆலய வீதி
யாழ் சேவா லங்கா அலுவலகப் பகுதி
நல்லூர்
புராதனப் பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றல்
இணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக
இணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக
இணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி
இணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம் பிரதான அஞ்சலகம்
இணுவில் கந்தசுவாமி கோவிலடி
யாழ் நகர ஹட்டன் நஷனல் வங்கி
இணுவில் பொது நூலக முன்றல்
இணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம் பிரதான அஞ்சலகம்
இணுவில் கந்தசுவாமி கோவிலடி
யாழ் நகர ஹட்டன் நஷனல் வங்கி
இணுவில் பொது நூலக முன்றல்