2008இல் அதிகம் தேடப்பட்டவர்கள்

ARV Loshan
15
இவ்வாண்டு (2008) இணையத் தேடுதளங்களில் ஒன்றான YAHOO – யாஹு மூலம் அதிகம் தேடப்பட்ட நபர்கள் / விஷயங்கள் இவை தான்.


1. பிரிட்னி ஸ்பியர்ஸ் : பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தத ஒரு காலம் ( அந்தப் பாடல் வீடியோவாக வரும் போது சின்னத் துண்டு மட்டுமே அணிந்து வருவது எங்களுக்கு மேலும் குழுமை தரும் விஷயம் ) எனினும் அந்த வருடத்திலே இந்த பொப் தேவதை அதிகம் பிரபலமானத வேறு பல விடயங்கள் மூலமாக.
பொலிசால்
கைது, வைத்தியசாலையில் அனுமதி, மனநோய் இருக்கிறதா? எனப் பரிசோதனை, பின் தந்தையின் பாதுகாப்பு, முன்னாள் காதலருடன் மீண்டும் கும்மாளம் என்று பிரிட்னியின் வழியே தனிவழி.
இவ்வளவுக்குப் பின்னும் MTV விருதை
வென்றார். வுமனைசர் (Womanizer) என்ற இசைத்தொகுப்பு மூலம் சாதனைபடைத்தார். 27 வயதுக்குள் எத்தனை பரபரப்பு; எத்தனை ஆட்டங்கள்;

2. WWE : ரெஸ்லிங் (Wrestling) .போட்டிகளில் 2ம் இடத்தைப்பிடித்துள்ள WWE இந்த வருடம் ஏற்படுத்திய பரபரப்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஜீன் மாதம் மேடையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கவர்ச்சி அழகிகளை மேடைகளில் தாராளமாகத் திரியவிட்டது, திட்டமிட்டு பரபரபாக்கி ஏற்படுத்தப்பட்ட சண்டைகள், புதிய வீடியோ கேம்ஸ், திரைப்பட வெளியீடுகள் என்று றுறுநு இணையத்தளங்களை அதிகமாகவே ஆக்கிரமித்தது.


3. பராக் ஒபாமா : 2008இன் மிகப்பெரிய கதாநாயகர்களில் ஒருவர். ஹிலரி கிளின்டனில் ஆரம்பித்து, இறுதியில் மக்கெய்ன் வரை தோற்கடித்த ஒபாமாவால், பிரிட்னியையும், றுறுநுயையும் மட்டும் இணையத் தேடலில் தோற்கடிக்க முடியவில்லை எனினும் ஒபாமாவின் இளைஞரைக் குறிவைத்த இணையத்தளம்/Facebook மூலமான பிரசார யுக்திகள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் புதுசு ஒபாமா புதுசு.

4.மிலே சிரஸ் (Miley Cyrus) : இந்த ஆண்டுக்கு முன்னர் டிஸ்னி தொடரான ஹன்னா மொன்டான (Hanna Montana) கதாநாயகியாகவே அறியப்பட்டிருந்த 15 வயது மட்டும் நிரம்பிய மிலே சிரஸ் - இவ்வருடத்தின் பரபரப்பு நாயகிகளில் ஒருவராக மாறியது ஒர சுவாரஸ்யமான கதை.
எதிர்கால ஹொலிவூட் நாயகி எனக் கருதப்பட்டவர். வனிட்டிஃபெயார் (Vanity Fair) என்ற சஞ்சிகையில் கொடுத்த மிகக் கவர்ச்சியான போஸ்கள் மூலம் பெரும் பரபரப்பைக் கிளறிவிட்டார். வெறுமனே ஒரு படுக்கை விரிப்புடன் இந்தப் பதினெட்டு வயது நிரம்பாத சிறுமி காட்டிய ஆபாச போஸ்களுக்கு – அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு. பகிரங்க மன்னிப்பு கேட்டுத்தப்பித்தார். எனினும் இளைஞர் மத்தியிலும், இணையத்திலும் அதிகம் தேடப்படுபவரில் ஒருவராகிவிட்டார்.


5.RuneScape : (இணையத்தள விளையாட்டு) : பழைய வகைக் கணினிகளிலும் செயற்படக்கூடியது என்பது ஒரு மேலதிக தகுதி. புதிய கிராபிக்ஸ் யுக்திகள் மூலம் இவ்வருடத்தில் அதிகம் பேரை ஈர்த்தது. பலபேர் விளையாடக்கூடியது இதன் சுவாரஸ்யத்தை அதிகரித்துப் பலபேரைத் தேடவைத்தது. இதில் வெற்றிபெற உண்மையிலேயே பணத்தைச் செலவழிக்கும் கறுப்புச் சந்தை உருவானது பற்றிய சாச்சை ஒரு தனிக்கதை.

6.ஜெசிக்கா ஆல்பா : இவர் நடித்திருந்த 2007 திரைப்படங்கள் எவையுமே நன்றாகப் போகவி;ல்லை. அதைவிட மோசம், மிக மோசமான நடிகை விருதுக்காக 3 தடவைகள் நியமனம் பெற்றார். எனினும் இவர் பரபரப்பானதும், பிரபல்யமானதும் இவரது திருமண மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் வெளியான பின்தான். இந்தப்படங்கள் ழுமு சஞ்சிகையில் வெளியிடுவதற்கு இவர் பெற்றதொகை 1.5 மில்லியன் டொலர்கள்.

7.நருட்டோ - NARUTO : ஒரு கேம்; ஒரு மிருகம்; ஒரு பாத்திரம்; எது வேண்டுமானாலும் சொல்லலாம். நின்ஜாவில் வருகின்ற கற்பனாபாத்திரங்களில் ஒன்றான இந்த நருட்டோ இணையப் பாவனையாளர்களில் அதிக ரசிகர்களையுடைய பாத்திரமாக மாறியிருப்பது சாதனையே. நம்ம நமீதா, மேலைத்தேயக் கவர்ச்சி மொடல்கள் பலபேரையும் முந்தியிருப்பதானது பெரிய விஷயமில்லையா?

8.லின்ட்ஸே லோஹான் : கடந்த வருடங்களில் மிகப் பிரபலமாக இருந்து, பின் மிக மோசமான அவமானங்களுக்கு உட்பட்டு, தனது புகழின் இறங்குமுகத்தில் இருந்;து, 2005இல் ஓரளவு தன்னை சீரமைத்துள்ளார். லின்ட்ஸே லோஹான் அதிகம் தேடப்பட நல்ல காரணங்களுக்கும் உண்டு. விவகாரமான விஷயங்களும் உண்டு. அவர் அரசியல் பற்றிப் பதிவுகள் எழுதியது, புதிய மர்லின் மன்றோவாக போஸ் கொடுத்தது போன்றவையும். விவகாரமான விஷயங்களில் இரு திரைப்படங்களிலிருந்து நீக்கப்பட்டது, உலக இசைத்திருவிழாத் தொகுப்பாளராக இருந்து இடைநடுவே வெளியே அனுப்பப்பட்டது, பல புதிய காதல்கள் என்பவற்றையும் சொல்லலாம்.

9.ஏஞ்சலினா ஜோலி : ஒரு கனவு தேவதை, ஹொலிவூட்டின் அழகுராணி என்பதெல்லாம் கடந்து அன்பு அம்மாவாகப் பெருமைப் பெயர் பெற்றது. உலகின் பெருமை மிகுந்த ஃபோர்ப்ஸ் (Forbes) , கின்னஸ் போன்ற பதிவுகளிலும் இடம்பிடித்தவர். பல்வேறு பாத்திரங்களில் - ஒரு அதிரடி நாயகியாக – கார்ட்டூன் பின்னணிக்குரலாக புகழ்பெற்று மில்லியன் கணக்கான டொலர்களை உழைத்தாலும், ஒஸ்கார் (Oscar) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் - எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் புகழினை ஏஞ்சலினாவிற்கு தந்தது. இவரும் இவரது நட்சத்திரக் கணவர் பிராட் பிட்டும் இணைந்து நல்லகாரியங்களுக்கு வழங்கிய நன்கொடைதான்.
அந்தத்தொகை இலேசுப்பட்டதல்ல – 14 மில்லியன் டொலர்கள்.


10.அமெரிக்கன் ஐடல் - American Idol : 2007ம் ஆண்டின் அமெரிக்கன் ஐடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட இவ்வாண்டு அமெரிக்க FOX தொலைக்காட்சி அதிக நேயர்களைப் பெற்றுத்தந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான புதிய இளையவர்கள் வெளிவந்ததன் மூலம் இணையத்தேடுதலிலும் டொப் டென்னில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*