கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாயில் திறந்து வைக்கப்பட்ட உல்லாசபுரி தான் ஐந்து நட்சத்திர விடுதியான அட்லாண்டிஸ் ஹோட்டல்.
உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் தீவான பாம் ஜுமைரா (Palm Jumeirah) என்ற தீவுக்கூட்டத்தின் பிறைப் பகுதியில் அமைந்துள்ள சகல வசதிகளும் நிறைந்த ஐந்து நட்சத்திர விடுதி தான் இந்த அட்லாண்டிஸ்.
துபாய் விமான நிலையத்திலிருந்து 35 கிலோ மீடர் தூரத்தில் அமைந்துள்ளது.
மனிதனின் மிகப்பெரும் முயற்சியால் கடலுக்குள்ளே செயற்கையாக உருவாக்கப்பட்ட முதலாவது தீவுத் தொகுதி..
அரபுக்கடலில் நீண்டு,அழகாகக் கிடக்கும் தீவுத் துண்டங்கள்.. PALM JUMEIRAH
துபாயின் பெயர் சொல்லும் புதிய கட்டடங்களில் ஒன்றாக மாறியுள்ள (மூன்று மாதங்களுக்குள்ளேயே) இந்த அட்லாண்டிஸ் ஆரம்பிக்கப் பட்ட போதே மிக பிரம்மாண்டமான,ஆர்ர்ப்பாட்டமான, அதகள கோலாகல கொண்டாட்டங்கள் ஒருவாரகாலத்துக்கு இருந்தன..
அந்த ஆரம்ப நிகழ்வுகளின் பொது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளும்,லேசர் அலங்கார நிகழ்வுகளும் இதுவரையில், உலகில் நடத்தப்பட்ட எந்த ஒரு பிரம்மாண்ட நிகழ்வையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்தன..
சீனாவின் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் கூடத் தோற்றுத் தான் போயின என்று சொல்லலாம்..
அந்த நிகழ்வுகளின் அசத்தும் சில புகைப்படங்கள் ..
அனுப்பி வைத்த அட்லாண்டிஸ் ஹோட்டல் உரிமையாளருக்கு நன்றிகள் (hehe.. இப்படியெல்லாம் பந்தா காட்டினா தாம்பா பெரிய இடத்தில் தொடர்பு உள்ள ஆள்னு சொல்றாங்கப்பா)
இந்த அதிசய சொர்க்கபுரியின் மேலும் சில அசத்தல் வசதிகள்..
வசதியான அறைகள்..
தனியார் கடற்கரை
வெவ்வேறான உணவகங்கள் (எல்லாவிதமான உணவுகளும் கிடைக்கும்)
sauna and gyms
theme parks