December 24, 2008

வானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்துக்கள்

ஒன் எயார்/மைக்ஸ் ஒன்

வானொலிகளில் கலையகத்தில் நாங்கள் நிகழ்ச்சி அறிவிப்புக்களில் ஈடுபடும்போது, ஒலிவாங்கிகளை இயங்கக் செய்ய முதல் கலையகத்துக்குள் இருக்கும் மற்றவர்களை எச்சரிக்க பயன்படுத்தும் சமிக்ஞ்சை வார்த்தை தான் "மைக்ஸ் ஒன்" அல்லது "ஒன் எயார்"(mic is on/on air).
இந்த சொல்லுக்குப் பிறகு எல்லோரும் மௌனம் சாதிக்கவேண்டும்-ஒலிவாங்கியில் பேசுவது தவிர.. 
அத்துடன் கலையகத்துக்கு வெளியே உள்ள சிவப்பு சமிக்ஞ்சை விளக்கு ஒன்று ஒளிர்ந்து உள்ளே ஒலிவாங்கியானது இயங்கிக் கொண்டிருக்கிறது, யாரும் உள்ளே இப்போது பிரவேசிக்கப் படாது என்று சொல்லும்.

சொல்லி சொல்லிப் பழகியதால் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதும், கலையகத்தில் யாரும் இல்லாத போதும் கூட நாங்கள் "ஒன் எயார்" சொல்லி மைக் ஒன் செய்வதுண்டு..
பழகி விட்டதே,,

சூரியனில் நான் இணைந்த பின் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சி அறிவிப்பாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சுகமான சுமை எனக்கும் வந்தது.

தேடல் உள்ளவர்களாகவும்,அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்ததால் எங்கள் வேலை இலகுவாக இருந்தது.
வழமையாக மாதக் கணக்கில் எடுக்கும் பயிற்சியில் ஒரு சில நாட்களிலேயே தேறியவர்கள் இவர்கள்..

அப்படியும் சில சுவாரஸ்ய சறுக்கல்கள்.. 

சில பேர் முதல் தடவை அறிவிப்பில் ஈடுபட்டு விடை பெறும் போது தங்கள் பெயரையே மறந்து போனார்கள்..
இன்னும் சிலர் சந்தோஷப் பரபரப்பிலே செய்வதறியாது பேசவே தயங்கினர்.
இன்னும் ஒரு சிலர் செய்தது தான் வேடிக்கையின் உச்சக் கட்டம்.

"ஒன் எயார்" சொல்லாமல் ஒலிவாங்கியைத் திறக்க கலையகத்தில் இருந்த மற்றவர்களின் உரையாடல்கள் எல்லாம் சத்தமாகவோ,சன்னமாகவோ ஒலிபரப்பாகியது.. 

"சரியான குளிர் என்ன.. "
"அடுத்த பாட்டு ரெடியா?"
"நான் ஸ்டார்ட் பண்ணுறன்.. நீர் நேயருக்கு வணக்கம் சொல்லும்"
"கொத்து ரொட்டி ஒத்து வரல்ல போல"

இப்படிப் பல சுவாரஸ்யமான உரையாடல்களை அன்று நள்ளிரவு வேளையில் நீங்கள் கேட்டிருக்கலாம்.(நாம் புதியவர்களைத் தயார்படுத்த நள்ளிரவு நேரங்களைத் தெரிவு செய்தது அவர்களின் அதிக தடுமாற்றங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவே)

இன்னும் சில நேரம் ஒலி வாங்கி திறக்கப்பட்ட பின்னர் "ஒன் எயார்" சொன்னதும் உண்டு.. வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கு பற்றிக் கொண்டு வரும் கோபமும் எரிச்சலும்.. 

முதலில் சொல்லாமல் ஒலி வாங்கி திறந்ததுக்காக பிறகு "ஒன் எயார்" சொன்னாங்களோ..

ஆனால் இதே காலத்தில் இன்னொரு வானொலியில், செய்தி அறிக்கைக்கு முன்னர் ஒலிவாங்கியைத் திறந்து "மைக்ஸ் ஒன்" சொன்ன சுவாரஸ்யமான கதை உண்டு..

#################

முதலில் வழங்கியவன்

சூரியன் வானொலியில் நாம் பணிபுரிந்த காலத்திலே புதிய பாடல்களை யார் (எந்த வானொலி)முதலில் தருவது என்ற போட்டி சூடுபிடித்திருந்தது..(இப்போதும் இருந்தாலும், வெற்றியில் நாம் அதை பெரிது படுத்துவதும் இல்லை,நேயர்களுக்கும் அது எரிச்சல் ஏற்படுத்துவதை உணர்ந்து கொண்டோம்)

இந்தப் போட்டியில் நாமே அடிக்கடி வென்று கொண்டிருந்தோம்.. (இது வேறயா என்று கேட்காதீர்கள்.. அந்தக் காலத்தில் இது ஒரு திரில்)
புதிய பாடல் போட்டதும் "இந்தப்பாடலை முதலில் வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன் என்று நீட்டி முழங்குவோம்.." (பாடலுக்கிடையிலும் பறை தட்டி முழக்குவோம்)

பின்னர் அதை ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறியாக பயன்படுத்த ஆரம்பித்தோம்(அடியேனின் குரலிலே தான்)

அதி தீவிர நேயர்களுக்கு (சூரிய வெறியர்கள் என்றே அன்பாகச் சொல்லலாம்) புதிய பாடல்களுக்கிடையில் இந்தக் குரல் ஒலிக்கும் பொது ஷக்தியை வென்றுவிட்ட சந்தோசம்.

இதற்காக நாம் முதலாவதாக ஒளிபரப்பாத பாடல்களுக்கிடையிலும் இந்த குரலை ஒலிக்கச் செய்து போட்டி வானொலி நண்பர்களை எரிச்சல் அடையச் செய்வதும் உண்டு.

(எத்தனை அநியாயம் செய்திருக்கிறோம்..)

இந்த நேரம் தான் வந்த ஒரு சில புதிய அறிவிப்பாளர்களை பழக்குவதற்காக இப்போது என்னோடு வெற்றியில் இருக்கும் அறிவிப்பாளர் ஒருவரை நியமித்தேன்.. (அவரு யாருன்னா ஹீ ஹீ.. நான்கு எழுத்துப்  பெயருள்ள ஒரு கணினிக் கெட்டிக்காரர்)

அவரும் எல்லாம் சொல்லிக் கொடுத்து இப்போதும் பிரபலமாகவுள்ள (இவர்களும் இப்போது சூரியனில் இல்லை) நண்பர்களை தனியாக நிகழ்ச்சி செய்ய விட்டிருக்கிறார். 

அதிகாலை மூன்று மணிக்குப் பழைய பாடல்கள் ஒலிக்கும் நிகழ்ச்சியை தற்செயலாக தூக்கத்தில் எழும்பிக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி..
டி.எம்.எஸ்சும், பீ.பீ.ஸ்ரீநிவாசும் பாடும் பாடல்களுக்கிடையில் "இந்தப் பாடலையும் முதன் முதலாக வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன்"என்று எனது குரல் பைத்தியக்காரத் தனமாக ஒலிக்கிறது..

தொலைபேசியில் அழைத்து வானொலியில் பாவிக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்த பிறகே என் கோபமும் நின்றது.. என் குரலும் நின்றது.. 

இன்னும் கொஞ்ச வறுவல் பிறகு வரும்.. (நான் இந்த வறுவல் எல்லாம் வறுக்கலையா என்று நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள்.. ஹீ ஹீ .. அதெல்லாம் இப்பவே சொன்ன எப்படி.. பிறகு சொல்லணுமில்ல) 


27 comments:

Sinthu said...

anna super and cool
"(அவரு யாருன்னா ஹீ ஹீ.. நான்கு எழுத்துப் பெயருள்ள ஒரு கணினிக் கெட்டிக்காரர்)" Is this Pradeep anna? I'm nt sure abt it..Don't beat mwronge if it is .....

Anonymous said...

டி.எம்.எஸ்சும், பீ.பீ.ஸ்ரீநிவாசும் பாடும் பாடல்களுக்கிடையில் "இந்தப் பாடலையும் முதன் முதலாக வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன்//

ங்கொய்யால...

எனது முதல் வானொலி நாளன்று. எஸ் கோவிந்த ராஜன் என்று சொல்லக் கூடாது சீர்காழி கோவிந்த ராஜன் என சொல்லணும் என பாலசிங்கம் பிரபாகரன் அண்ணா ஒரு தடவை சொல்லித் திருத்திய பிறகு அடுத்த பாடலுக்கான அறிவிப்பைச் செய்து விட்டு பாடலையும் ஒலிக்கச் செய்து - மைக் கை நிறுத்தாமல் - பின்னால் சிடி தேடிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து இப்ப ஓகேயா என்றேன்.

அவர் பதறி திடுக்கிட்டு :) தன்ரை வாயைப் பொத்திக் காட்டினார். உஸ் என்பது போல சைகை காட்டுகிறார். நான் அவற்றையெல்லாம் அசட்டை செய்யாமல்.. ஏன் ஏதும் பிரச்சனையே.. ஏன் பதறுறீங்கள் என்று தொடர்ந்து கேட்டேன்.

பிறகு அவர் பாய்ந்து வந்து எல்லாத்தையும் ஈக்குலேசரில் இழுத்து குறைத்தார்.

இதெல்லாத்தையும் விட பெரும் பகிடி.. இத்தனை நடந்த பிறகும் அன்றைய பகல் பொழுது கலையகத்தை தனியே என் கையில் தந்து விட்டு சென்றதுதான் :) :)

Mathu said...

Hehehe....thats funny and nice to remember :)

சி தயாளன் said...

நல்ல பகிடிதான்...முந்தி சூரியனும் சக்தியும் உந்த புதுப்பாடல்களை யார் முந்தித்தருவது என்று போட்ட கூத்து இருக்கே..ஐயோ...வேணாம் விடுங்கோ

துஷா said...

சூரியன் வானொலியில் நாம் பணிபுரிந்த காலத்திலே புதிய பாடல்களை யார் (எந்த வானொலி)முதலில் தருவது என்ற போட்டி சூடுபிடித்திருந்தது............

கொட்கும் போதே அதிரும் இல்ல அது............
ya sinthu i also think that the same person.

காரூரன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் லோசன்!

கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
கிருஷ்ணா said...

மீண்டும் பழைய காலங்கள் ஞாபகம் வருது. பத்துப்பேரும் சேர்ந்து பண்ணின கூத்தை ஆயுளுக்கும் மறக்க முடியாது.

எங்களோட வந்த ஒருவர் (கொஞ்சம் பிந்தி வந்தவர்) ”மைக்ஸ் ஒன்” சொல்லுறதப் பிழையா விளங்கிக்கொண்டார். ஒவ்வொரு முறையும் பேசத் தொடங்குமுன் ”மைக்ஸ் ஒன்” சொல்லவேணும் என்று தரப்பட்ட அறிவுறுத்தலின்படி, அவர் மைக்கை ஒன் செய்துவிட்டு ”மைக்ஸ் ஒன்” சொல்லிவிட்டுத்தான் தான் சொல்லவந்ததைச் சொன்னார். நல்லவேளையாக சில தடவைகளிலேயே கண்டுபிடித்துவிட்டோம்.

அதேபோல யார் பாடலை முந்தி வழங்குவது என்ற போட்டியில், ”புதுப்பேட்டை” பாடல்கள் வந்தபோது முதல் பாடலை நான் போட்டுவிட்டு வழமையான மந்திரங்களையும் (???) சொல்லிவிட்டேன். மற்றப்பக்கம் சக்தி எப்.எம்மில் இருந்த நண்பர், அந்தரப்பட்டு, அந்த சிடியில எத்தனை பாட்டு இருக்கிறது என்று எல்லா விபரமும் சொல்லி ”இதோ ஒரு அற்புதமான பாட்டு, முதன் முதலில்...” என்று போட்டுவிட்டார். நீண்டநேரம் கழிச்சுத்தான் அது தனி இசை என்பது அவருக்குத் தெரிந்தது.

இப்படி இன்னும் நிறைய இருக்கிறது.. அதையே ஒரு பதிவாகப் போடலாமே லோஷன் அண்ணா?

சந்தனமுல்லை said...

:-))))

தமிழ் மதுரம் said...

இந்த நேரம் தான் வந்த ஒரு சில புதிய அறிவிப்பாளர்களை பழக்குவதற்காக இப்போது என்னோடு வெற்றியில் இருக்கும் அறிவிப்பாளர் ஒருவரை நியமித்தேன்.. (அவரு யாருன்னா ஹீ ஹீ.. நான்கு எழுத்துப் பெயருள்ள ஒரு கணினிக் கெட்டிக்காரர்)//

என்ன லோசன் அது உவர் பிரதீப் தானே?????

Anonymous said...

:) அப்போது கோபம் வந்தாலும் இப்போது சிரிப்பாக உள்ளது..இல்லையா?

//(அவரு யாருன்னா ஹீ ஹீ.. நான்கு எழுத்துப் பெயருள்ள ஒரு கணினிக் கெட்டிக்காரர்)//
உங்களுக்கு ப்ளொக்கர் கெடர் செய்து தந்தவரா?

Anonymous said...

அண்ணே எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. ரேடியோவில பேசிக்கிட்டே இருக்கீங்க.. என்ன பேரு..என்ன பண்ணிறீங்க.. இத்தியாதி.. இத்தியாதி..ஆனா நாங்க என்ன பாட்டு கேட்டாலும் டக்குனு போடறீங்களே அது எப்படி? சி.டி பிளேயர்,கம்பியூட்டர ஆன் பண்ணி ஒக்காந்து இருப்பீங்களோ! சரி திடீர்னு படம் பேர் மறந்து போனா என்ன பண்ணுவீங்க!

SurveySan said...

//டி.எம்.எஸ்சும், பீ.பீ.ஸ்ரீநிவாசும் பாடும் பாடல்களுக்கிடையில் "இந்தப் பாடலையும் முதன் முதலாக வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன்"என்று எனது குரல் பைத்தியக்காரத் தனமாக ஒலிக்கிறது..////

:) blind followers irundhaa idhudhaan prachanai. ;)

ஆதிரை said...

நேற்று வானொலியில்..
பஸ்ஸிற்கு இரு ரிக்கட் எடுத்த மெல்லியவன்.
இன்று இணையத்தில்...
நான்கு எழுத்து கணனிக்காரர்.
நாளை எங்கு? எப்படி?
பிரதீப், இவரை எச்சரிக்கை செய்து வையப்பா. அல்லது கோடிகளுக்கு ஆப்பு வைத்துவிடுவார் போல இருக்கு....:-)

Anonymous said...

அண்ணா அது என்னவோ நான் வானொலியின் பரம ரசிகன். சூரியன் என் உயிர் மாதிரி. நீங்கள் எனது அபிமான மனிதர்(2008 feb வரை ).உங்கள் பதிவுகள் எனக்கு சிரிப்பை அள்ளி தருகின்றது. உங்கள் வெளிப்படையான பதிவுகள் தொடரட்டும். Hatton இல் உங்கள் குரலை தொடர்ந்து கேட்க ஆசை எதிர்பார்க்கிறோம். ஆனால் உள் மனதில் வெற்றியின் வெற்றி சூரியனை நெருங்க கூடாது என்ற கெட்ட எண்ணமும் உள்ளது.

Anonymous said...

அண்ணா அது என்னவோ நான் வானொலியின் பரம ரசிகன். சூரியன் என் உயிர் மாதிரி. நீங்கள் எனது அபிமான மனிதர்(2008 feb வரை ).உங்கள் பதிவுகள் எனக்கு சிரிப்பை அள்ளி தருகின்றது. உங்கள் வெளிப்படையான பதிவுகள் தொடரட்டும். Hatton இல் உங்கள் குரலை தொடர்ந்து கேட்க ஆசை எதிர்பார்க்கிறோம். ஆனால் உள் மனதில் வெற்றியின் வெற்றி சூரியனை நெருங்க கூடாது என்ற கெட்ட எண்ணமும் உள்ளது.

Anonymous said...

"எனது குரல் பைத்தியக்காரத் தனமாக ஒலிக்கிறது.."

ஓ தெரிந்து கொண்டுதான் செய்கிறீர்களா?

Anonymous said...

நீங்களும் மப்ரூக்கும் செய்த வானொலி விவாதங்கள் FULL MOON DAY PECIALS பின்னாளில் குரோதமாக மாறியதாக ஒரு செய்தி. எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்...

ARV Loshan said...

நன்றி சிந்து.. ம்கூம் சொல்ல மாட்டேனே.. சரியான விடைகள் பின்னர் குலுக்கல் மூலமாக அறிவிக்கப்படும்.. ;) (எப்போ என்று கேக்கப்படாது)

சயந்தன், உங்களுக்குள்ள இப்படி ஒன்று இருக்கா?
பாலசிங்கம் பிரபா அண்ணாவுக்கு வந்த சோதனை.. நல்ல காலம் நீங்கள் என்னிடம் அகப்படவில்லை..காதால் இரத்தம் வந்திருக்கும்..

மது.. நன்றி :)

டொன் லீ.. ஹீ ஹீ.. அது தான் நாம இப்ப திருந்தீட்டமிள்ள..

துஷா நன்றி.. அதிரும் அதிரும்..

நன்றி காரூரன்..

கிருஷ்ணா.. பழைய நினைவுகள் இப்போதும் சுகம் தான்..
ம்ம்ம் புதுக்கோட்டை சரவணன் பாடல்கள் அறிமுகம் மறக்கவே முடியாது..
இன்னொருவர் இந்தப்படப் பாடல்களின் உரிமை பற்றி எனக்கு அழைப்பு எடுத்த கதையும் தெரியும் தானே.. ;)

நன்றி சந்தனமுல்லை.. :)

நன்றி கமல், குலுக்கல் தான் உங்களுக்கும் பதில்..

ஆமாம் தூயா.. அதைத் தான் அனுபவம் என்று சொல்வது..
ஹீ ஹீ.. குலுக்கல்..

அட்டாக் அண்ணே, ஆமாங்கண்ணே..எந்த நேரமும் சீடீ மேஷின்னும்,கோம்பியூடரும் தயாராக ஓடிட்டே இருக்கும்..இப்ப எல்லாமே கணினி மயமாயிட்டுது..ஆனா நாங்க யாருமே இது பற்றி எழுத மாட்டோம். ஏன்னா தொழில் ரகசியம்..சில softwares வெளியில் போட்டியாளர்களுக்குத் தெரிய வந்திடும்.
ஆமாம், அவ்வாறு படப் பெயர் மறந்த கதை,பாடியோர் மறந்த கதை, நிகழ்ச்சிப் பெயரே மறந்த கதையெல்லாம் கூட உண்டு.. ;)

சர்வேசன், ஆமாம் எதுக்கு சொல்றோம்னு புரிஞ்சுக்காட்டி இப்டி தான்.. ;)

ஆதிரை, தொடர்ந்து வெற்றியும் கேக்கிரீங்கன்னு விளங்குது..
ஒ நம்ம பிரதீப் ,மாட்டிக்கப்போற விஷயம் உங்களுக்கும் தெரிந்ஜாச்சா?
வாறது வருமய்யா.. ;)

தமிழ் மதுரம் said...

LOSHAN said... அட்டாக் அண்ணே, ஆமாங்கண்ணே..எந்த நேரமும் சீடீ மேஷின்னும்,கோம்பியூடரும் தயாராக ஓடிட்டே இருக்கும்..இப்ப எல்லாமே கணினி மயமாயிட்டுது..ஆனா நாங்க யாருமே இது பற்றி எழுத மாட்டோம். ஏன்னா தொழில் ரகசியம்..சில softwares வெளியில் போட்டியாளர்களுக்குத் தெரிய வந்திடும்.
ஆமாம், அவ்வாறு படப் பெயர் மறந்த கதை,பாடியோர் மறந்த கதை, நிகழ்ச்சிப் பெயரே மறந்த கதையெல்லாம் கூட உண்டு.. ;)//

லோசன் நல்லாக் காதில பூச் சுத்துறீங்கள்... எனக்கும் முந்திக் கொஞ்ச நாளா உந்த தொழில்நுட்பம் பற்றிப் பெரிய சந்தேகம் தான். நானும் நிறைய நாட்கள் ஏதோ பெரிய தொழில் நுட்பம் என்று குழம்பிக் கொண்டிருந்தேன்,.. அப்ப உவர் கணா விட்ட கேட்டால் அவர் அடிக்கடி சொல்லுவார் அது தம்பி ''றக்கர்'' இல போடுவம் என்று... என்ன றக்கர் என்றால் அதில நிறையப் பாட்டு இருக்கும் என்பார். 2005 இல் காண்டி என்னைச் சக்தி எப்.எம் இற்கு கூட்டிப் போனார். அப்பவும் நான் உந்த சிதம்பர ரகசியத் தொழில் நுட்பத்தைப் பற்றிக் கேட்டன், காண்டி தன்ர நிகழ்ச்சி தொடங்கப் போகுது ,, சத்தம் போடாமல் இரும் என்று சொல்லிட்டு ஒரு பாட்டைப் போட்டிட்டு....போன் அடிக்க எடுத்தார் பாருங்கோ.....ம்.....இதுக்கு பிறகு என்ன தொழில் ரகசியம் என்று சொல்லவோ.... இல்லை வேணாமோ...சரி நான் ஏன் உங்க தொழில் ரகசியத்தைக் கெடுப்பான்......

கரவைக்குரல் said...

அதிகாலை வேளையில் இந்த பாடலையும் முதன் முதலாக வழங்கியவன் சூரியன் என்று சொல்லியிருந்ததால் அது சரி தானே லோஷன்
அதிகாலை வேளை அன்றைய நாளின் ஆரம்பம் என்றதால் அவர் அப்படி சொன்னார் என்று வைத்துக்கொள்ளலாம் இல்லையா ?
நாளின் ஆரம்பத்தில் போட்டி போட்டு பாடல் தரும் நேரத்தில் அவர் முந்தி விட்டார் இல்லையா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உங்கள் இனிய அனுபவங்கள் என்னையும் சிரிக்க வைக்கிறது
இன்னும் வரட்டும்
அன்புடன் கரவைக்குரல்

Unknown said...

இலங்கை வானொலியின் 2500 மீட்டர் உயரமுள்ள ஆன்டனா


இலங்கை ரூபவாஹினி கார்பரேசன் தனது சக்தியை அதிகரிக்க உள்ளதாக புராட்காஸ்ட் ஆசியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு அருகில் உள்ள பிதிருடலகா மலையின் உச்சியில் சக்தி வாய்ந்த ஜம்ப்ரோ வகை ஆன்டனாவை நிறுவ உள்ளது. இந்த மலையானது 2500 மீட்டர் உயரமுள்ளதால், இலங்கை முழுவதும் இந்த ஒரு இடத்தில் இருந்தே இலங்கை முழுவதும் ஒலிபரப்ப முடியும். பண்பலை ஒலிபரப்பினை இந்த ஆன்டனா மூலம் செய்தால், தமிழக நேயர்களும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டக வாய்ப்புள்ளது.

Unknown said...

வணக்கம் ,
நான் குமார் ,தமிழ்நாடு .
உங்கள் நிகழ்ச்சிகளை குளிர் காலத்தில் எப் .எம் வாயிலாக
கேட்ப்போம் .
இப்பொழுது கேயு பேன்ட் DTH 98* Protostar மூலம் கேட்கிறோம் .

ஆனாலும் ரேடியோ பொட்டி மாதிரி இல்லை .

தமிழ்நாடு
கேட்கிறமாதிரி ரெடி பண்ணுங்களேன் உங்கள் சூரியனையும்
சக்தியைமும் வெற்றியையும் .

சாந்தி நேசக்கரம் said...

அறிவிப்பு அனுபவம் அருமை லோஷன். நீங்கள் குறிப்பிட்ட சில சறுக்கல்கள்...
"""ஒன் எயார்" சொல்லாமல் ஒலிவாங்கியைத் திறக்க கலையகத்தில் இருந்த மற்றவர்களின் உரையாடல்கள் எல்லாம் சத்தமாகவோ,சன்னமாகவோ ஒலிபரப்பாகியது..

"சரியான குளிர் என்ன.. "
"அடுத்த பாட்டு ரெடியா?"
"நான் ஸ்டார்ட் பண்ணுறன்.. நீர் நேயருக்கு வணக்கம் சொல்லும்"
"கொத்து ரொட்டி ஒத்து வரல்ல போல"
"""""""""""""""

இதேபோன்றதொரு உரையாடல் ஐரோப்பிய தமிழ் வானொலியொன்றில் நடந்தது.
அது ---என்ன ஐசே தள்ளிப்போறீர் ? கிட்ட வாரும் கிட்ட வந்திரும்...

அந்த நேரம் அந்த வானொலியில் நானும் ஒரு நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த நேரம். வெளியில் பலர் அந்த உரையாடல் பற்றி சொல்லி உங்கடை வானொலியில இப்பிடிப் போனது கேட்கேல்லயா என்ற போது நீங்கள் வானலைக்கு வராமல் திட்டியதைவிட அதிகமாக நான் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளரையும் அறிவிப்பாளினியையும் திட்டியது இன்னும் உரியவர்களுக்கு என்னில் படு கோவம்.

வானொலி அனுபவங்கள் பற்றி எழுதலாமென்ற புதிய ஐடியாவை உங்கள் எழுத்துக்கள் தந்துள்ளன.

சாந்தி

ARV Loshan said...

திலீபன், நீங்கள் தான் முன்னைய அனானி என்று நினைக்கிறேன்.. நன்றி என் மீது உள்ள அன்புக்கு,, உங்கள் சூரியன் பற்றும் தெரிகிறது.. நெருங்கி வருகிறோம் என்று இப்போது புரிகிறது.. ;)

அனானி,//"எனது குரல் பைத்தியக்காரத் தனமாக ஒலிக்கிறது.."

ஓ தெரிந்து கொண்டுதான் செய்கிறீர்களா?//

கேட்பதற்கு நீங்கள் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? ;)

தவறான தகவல்.. எங்கள் நிகழ்ச்சிகள் எந்தவிதத்திலும் எங்களுக்குள் குரோதங்கள் தரவில்லை.. முகாமைத்துவப் பணிப்பாளருக்குத் தான் (அவருக்கு மட்டுமே) அந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லை.. மப்ரூக் நீங்கியது /நீக்கப்பட்டது ஒழுக்காற்றுக் காரணங்களுக்காக..

கமல், பூச் சுற்றியது நாங்கள் அல்ல.. ஷக்தியில் விளம்பரங்கள் மட்டுமே கணினி மயப்படுத்தப் பட்டுள்ளன.. ஆனால் சூரியனிலும்,தற்போது வெற்றியிலும் பாடல்கள் முதல் கொண்டு அனைத்துமே கணினி மயப்படுத்தப் பட்டுள்ளன.அதிலும் நாங்கள் பயன்படுத்தும் மென்பொருள் நீங்கள் தற்போது வாழும் நாட்டிலிருந்தே தருவிக்கப் பட்டது..

நன்றி கரவைக்குரல்.. :)

கருப்ப்ஸ்/குமார் உங்கள் கருத்துக்கு நன்றி.. எனினும் தனியார் வானொலிகளால் இதை செயற்படுத்துவது கொஞ்சம் சிரமமானது.. எனினும் நீங்கள் செயம்மதி மூலமாக எங்களைக் கேட்கலாமே.. இல்லாவிட்டால் இணையத் தளம்..

ஷாந்தி, ஹா ஹா.. நல்ல விவகாரம் போல இருக்கே.. ;)
நீங்களும் எழுதுங்கள்.. உங்களுக்கு தூண்டுகோலாக எனது பதிவு அமைந்தது சந்தோஷமே.. :)

Anonymous said...

ஹாய் லோஷன் அண்ணா நீங்கள் கூறிய வானொலி வறுவல் நள்ளிரவில் அல்ல காலையிலேயே ஷக்தி fm இல் கடந்த வாரம் இன்றைய நாள் எப்படியில்(காலை 6.20am) நடந்தது. அன்று காலையில் ஜெகதீஸ்வர ஷர்மா என்பவரிடம் அன்றைய நாள் தகவல்களை பெற அவரின் லைன் வழங்கப்பட்ட பின் கலையாக மைக் ஆன் செய்யப்பட்டு இருந்தது. இதன் போது அங்குள்ள அறிவிப்பாளர்கள் அவர்கள் கதையை கதைத்ததும் ஐயரை "நாசமா போனவன் சொல்லுடா", "சொல்லி தொலைடா " என்று திட்டியதும் நிகழ்ந்தேறின. ஆனால் கடைசி வரை அந்த அறிவிப்பாளர்(பெயர் சொல்லவில்லை-உங்களுக்கு தெரியும்) அதை பற்றி அறியாமல் ஐயருக்கு நன்றி சொல்லி நிகழ்ச்சியை தொடர்ந்தார்.(நீங்கள் விடியல் நடத்தும் போடு நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்)

Sayanolipavan said...

இதற்காக நாம் முதலாவதாக ஒளிபரப்பாத பாடல்களுக்கிடையிலும் இந்த குரலை ஒலிக்கச் செய்து போட்டி வானொலி நண்பர்களை எரிச்சல் அடையச் செய்வதும் உண்டு.

(எத்தனை அநியாயம் செய்திருக்கிறோம்..)


nenka niraya esirpinkale avanka kavalai paddathu illaya? lite aka pavam pola theriuthu. but athu sari than apadi seythaal than meendum thavruthal vida madanka..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner