ஏதாவது ஒரு காரியம் நாங்க தொடங்கும்போது, ம்கூம் உன்னால இது முடியவே முடியாது என்று சொல்பவர் நம்மிலே ஏராளம் உண்டு.. (அது தானே ஆக்கபூர்வமாக நாங்கள் எதை புதிதாக செய்யப் புறப்பாட்டாலும் ஏதாவது சொல்லி இடை நிறுத்த,விமர்சனம் சொல்கிறோம் பேர்வழி என்று விளங்காமல் செய்யவென்றே ஏராளமானவர்கள் இருப்பார்களே.. அவங்களே தான்.. )

எங்களால் முடியுமா முடியாதா என்பதைத் தீர்மானிக்க அவர்கள் யார்? எங்களுக்குத் தேவையானவற்றை, நாங்கள் அடைய வேண்டியனவற்றை அடைவது எங்கள் தேவையும் ,உரிமையும் தவிர அவர்கள் விருப்பமோ,தேவையோ அல்லவே.. அவர்களைக் கவனிக்காமல் சுற்றும் முற்றும் பாருங்கள்.. இந்த நத்தை போல..

உங்களுக்கு இருக்கும் எல்லா வித வாய்ப்புக்களையும் யோசித்துப் பாருங்கள்.. முடியாதுன்னு மற்றவர்கள் சொல்கிறார்களே அப்படியும் இருக்குமோ என்றும் ஒரு தடவை யோசித்துப் பார்க்கலாம்.. தப்பில்லை.. யோசித்து முடிந்ததா? தெளிவாயிட்டீங்களா?

இனி ஒரு தயக்கமும் வேண்டாம்.. நத்தை உணர் கொம்பையும்,தலையையும் நீட்டுவது போல,உங்கள் எண்ணங்களை முன்னோக்கி வைத்து காலை முன்னோக்கி வைக்கத் தயாராகுங்கள்..
முடிவெடுத்த பிறகு முடியாவது,மண்ணாவது.. (ஆஹா நல்லா இருக்கே இந்தக் கோஷம்.. நானே உருவாக்கியது.... யாரவது தேவைன்னா எடுத்துக்கலாம்)

கடவுள் எதையெல்லாம் உங்களுக்கு வழங்கியிருக்கிறாரோ.. அல்லது கடவுள் நம்பிக்கை அற்றோர் உங்களிடம் எதுவெல்லாம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் முற்று முழுதாகப் பயன்படுத்த திடமாகுங்கள்.. தேவையான பொழுதில் தேவைப்படாவிட்டால் பிறகேன் அவை தேவை? (ஆகா எத்தனை தேவை..தேவை தான் இந்தக் கேள்வி இப்போ..)
உங்களிடம் உள்ள படைப்பாற்றலையும்,கூரிய நுட்பங்களையும் பயன்படுத்துங்கள்.. நீங்கள் நினைத்த காரியம் அடைவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேண்டாம்..

முயற்சி,முயற்சி,முயற்சி மட்டுமே..
இறுதியில்.. வெற்றி உங்களிடம்..
உங்களால் முடியாது என்று சொன்னவர்கள் முகம் எந்தத் திசையில் என்று தேடிப் பாருங்கள்..

முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை இந்த உலகத்திலே..
நத்தையால் முடியும் என்றால் நம்மால் முடியாதா?
(அதுக்காக இந்த நத்தை போலவே இந்த இம்மியளவு தூரத்தைக் கடப்பதே உங்கள் கடமையாகக் கொள்ளாதீங்கப்பா கரும வீரர்களே..)
இதையெல்லாம் எதோ இன்று இந்த நத்தைப் படங்களைப் பார்த்த பிறகு சொல்லவேண்டும் போல இருந்தது.. ரொம்பக் கூட அறிவுரை பேசிட்டேனோ..
எவ்வளவைப் பொறுத்துக்கிட்டீங்க இதைக் கூடப் பொறுத்துக்க மாட்டீங்களா?
14 comments:
முடியல!
ஸ்ஸ்ப்பா... நான் கூட இவ்வளவு தூரத்த கடக்கிறதுக்கு இவ்வளவு பில்டப் எதுக்கு என்று தான் யோசித்தேன் :)
அண்ணை உங்களுக்கு வயசாகுது என்றது மட்டும் பதிவில விளங்குது :)
anna u insired me to do onething.i was confused about one thing so after reading this i decided to do that thing.
So thanks..............
ம்ம்ம்ம்ம்.... இரண்டு கட்டையும் இணைக்கும் இரும்பு சட்டம் இருப்பதை ஏன் நத்தையிடம் சொல்லவில்லை சொல்லி இருந்தால் சுலபமாக பொகலாமில்லையா? படம் எடுக்கும் அவசரத்தில் சொல்லமுடியலயா....
முயற்சி,முயற்சி,முயற்சி மட்டுமே..
இறுதியில்.. வெற்றி உங்களிடம்...
நல்லாயிருக்கு...:)
நல்லாத்தான் இருக்கு.
ஆனால் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்
நத்தையாலை முடியிறதுஇருக்கட்டும் அவ்வளவு நேரமும் பொறுமையாய் இருந்து படடுத்தவரை என்னத்தை சொல்லுறது. அவராலையும் முடியாதது ஒண்டுமில்லை
இப்ப அந்த நத்தைய யார் நகரச் சொன்னது?
சரி அது நகர்ற வரைக்கும் பொறுமையா இருந்து போட்டோ எடுத்தீங்களே, நீங்க மனசு வெச்சிருந்தீங்கன்னா அத தூக்கி விட்ருக்கலாம்ல.
முயற்சி,முயற்சி,முயற்சி மட்டுமே..
எங்களுக்கு நிச்சயமாக எனக்கு இது ஓர் நல்ல அறிவுரை anna
நன்றிகள்
நத்தையால் முடியும் என்றால் நம்மால் முடியாதா?
ஏன் முடியாது.முடியும் அண்ணா
லோஷன் எப்படி இப்படியெல்லாம்?
அறிவில்லாத நத்தையை போல் ஏன் முயற்சி செய்ய வேண்டும் ஈசியான வழியிருக்கும் போது.. :)
என் அனுபவத்தில் அதிகம் எழுதுவதில் ஒரே ஒரு அபாயம்தான் உள்ளது. பல வகையான கதைகளும் நாவல்களும் பரிசோதனை முயற்சிகளும் விமர்சனங்களும் அதிகம் எழுதுவதால் கவனிக்காமல் போய்விடும் அபாயம் நிச்சயம் உள்ளது. விமர்சகர்களும் நல்ல ரசிகர்களும் பல புத்தகங்களை படிக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால் எழுதுபவனை அதிகம் எழுதாதே என்று சொல்வது பறவையை அதிகம் பறக்காதே என்று கட்டளையிடுவது போல.''
`அப்பாவின் டைரி' கட்டுரையில் சுஜாதா, 1995.
//ம்ம்ம்ம்ம்.... இரண்டு கட்டையும் இணைக்கும் இரும்பு சட்டம் இருப்பதை ஏன் நத்தையிடம் சொல்லவில்லை சொல்லி இருந்தால் சுலபமாக பொகலாமில்லையா? படம் எடுக்கும் அவசரத்தில் சொல்லமுடியலயா..///
சொல்லியிருந்தா இப்பிடி ஒரு பதிவு போட்டிருக்க முடியுமா?...
Post a Comment