October 06, 2008

கலைஞரின் மனமாற்றம்?

இலங்கையில் தமிழர் இனப்படுகொலை செய்யப்படுவதைத் தடுக்குமாறும் இந்திய பிரதமரை இந்த இலங்கைப் பிரச்சியில் தலையிடுமாறும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோரியிருப்பதும் தமிழக மக்கள் அனைவரையும் தந்தி அனுப்புமாறும் கோரியிருப்பதும் தீடீர் மாற்றங்கள்; நல்ல மாற்றங்கள் நீண்டகாலமாக இலங்கைத தமிழர் எதிர்பார்த்ததும் இதையேதான்.

எத்தனையோ விதமாக எவ்வளவோ பேர் பலகாலம் எடுத்துக் காட்டியும் வேண்டுகோள் விடுத்தும் கெஞ்சியும் கேட்டும் கரையாத அவர் மனம் முதல் தடவையாக இப்போது மாறியிருப்பதற்கான காரணம் யாது?

நேரடியாக ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் மன்மோகன் சிங்கிடம் (அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியிடம்) சொல்லி அல்லது வலியுறுத்தி செய்யக்கூடிய விஷயத்தை தமிழக மக்கள் மூலமாகவும் திமுகவினர் மூலமாகவும் தந்தி அனுப்பச் சொல்கின்ற காரணம் தான் என்ன?

இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் தெரியாதா தமிழக  தமிழ்மக்கள் இலங்கை மக்கள் மீது கரிசனையுள்ளவர்கள் என்று? இல்லை 15 வருடங்கள கழித்தும் மக்கள் இலங்கைத்தமிழர் அழிவதை விரும்பவில்லை என்பதை உலகுக்குக் காட்ட தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர் விரும்புகிறாரா?

இல்லை இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்பபடுகின்ற தந்திகள் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்த முனைகிறாரா?

கருணாநிதி இந்தச் செயலை எப்போதே செய்து நல்ல பெயரை வாங்கியிருக்கலாம்!  நேரடியாக வெளிப்படையாகவே இலங்கைத்தமிழர் பிரச்சனையில் தனது இலங்கைத்தமிழர் சார்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கலாம். இடதுசாரிகளும் இந்திய மத்திய அரசிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுகவின் ஆட்சியைக் கலைக்குமளவுக்கு முட்டாள்தனமான முடிவை காங்கிரஸ் அரசு எடுத்திராது.
                      
இலங்கைத் தமிழரின் உலக வாழ் தமிழரின் மனப் பொறுமையைத் தொடர்நது சோதித்து வந்த கலைஞர் மனது மாறியதற்கான காரணம் என்ன? எனது பார்வைகள் (தமிழக அரசியல் எல்லாம் படித்தறிந்தது தான்)
1.கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாடு செய்த மாபெரும் போராட்டத்தின்  வெற்றியா?
2.இலங்கைத் தமிழருக்காகத் தமிழகத்தின் அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்ததா?
3.விடுதலைப்புலிகள், தமிழீழம், இலங்கைத்தமிழர் மீது எந்தவித அனுதாபமும் அற்ற விரோதப்  போக்கையே காட்டிவந்த ஜெயலலிதா -அதிமுகவையும் இந்த மாபெரும்  உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுத்தியதா?
(இறுதிநேரத்தில் அதிமுக பெருந்தலைவர் இந்த உண்ணாநிலைப்போராட்ட மேடையில் கலந்து கொள்ளாமைக்கான காரணம் 
விஜயகாந்த் கலந்து கொண்டது - இடதுசாரிகளுடன் சேரவிரும்பாதது -காங்கிரசோடு சேரும் ஆசை இன்னுமிருப்பது -இவை மூன்றில் ஒன்று எனக் கூறப்படுகிறது)

4.1991இற்குப் பிறகு ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு சற்று அடங்கியிருந்த ஈழத்தமிழர் ஆதரவு அலையைத் தமிழ்நாட்டு மக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியதா?

5.பாரதீய ஜனதாவின் இல.கணேசனே பகிரங்க அறிக்கைகள் மூலம் ஈழவிடுதலையை ஆதரித்ததா?

6.திமுக,காங்கிரஸ் தவிர ஈழ அனுதாபிகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தமை ஏற்படுத்திய தாக்கமா?

7.கவிதை மட்டும் எழுதிப் பயனில்லை; உலகத்தமிழரின் தலைவராக இருப்பதற்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்தாக வேண்டும் என்ற காலத்தின் தேவையை இப்போதாவது உணர்ந்தாரா?

8.தொப்புள் கொடி உறவு தாய்வீடு என்று ஈழ அனுதாபத்தை மையப்படுத்தி 80களில் தமிழகத் தேர்தல்களை வென்றமை மீண்டும் திரும்புகிறது என்ற கணிப்பா?


இவற்றுள் எது / எவை காரணமாக இருந்தாலும் கலைஞரின் இந்த அறிவித்தல் அண்மைக்காலத் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் சார்பாக ஏற்பட்டுள்ள பெரியதொரு பயனுள்ள தாக்கம் என்பது மட்டும் உண்மை!
                                             
பழ நெடுமாறன்,வைகோ,டாக்டர் ராமதாஸ் ,தொல்.திருமாவளவன்,விஜயகாந்த் என்ற வரிசையில் கலைஞர் வந்து இருப்பது இலங்கைத்தமிழருக்கு மிகப்பெரியதொரு ராஜதந்திர வெற்றி!

பல லட்சக்கணக்கான (ஆறரைக்கோடி தமிழக மக்களல்லவா) ஆதரவு ,அழுத்தத் தந்திகளுக்கும் பிறகு இந்திய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?
இதேவேளை,இன்று ஈழத்தமிழருக்காக மாபெரும் ஆதரவும் கூட்டத்தையும் திமுக நடத்துகிறது.

(மற்ற எல்லாக் காரணிகளையும் விட கலைஞர் கருணாநிதியின் மனமாற்றத்துக்கும் பங்களிப்புச் செய்த காரணியை எனது நண்பர்கள் எனக்குச் சுட்டிக் காட்டியுள்ளனர்

எனது வலைத் தளத்தில் நடத்திய கருத்துக்கணிப்பு,அதன்பின் 'கருணாநிதி மூஞ்சியில் கரி'(http://loshan-loshan.blogspot.com/2008/09/blog-post_25.html) ஆகியவை நல்ல வாசிப்பாளரான கலைஞரைப் பாதித்திருக்கலாமென்றும், எனது வெற்றி எப் எம்மின் காலைநிகழ்ச்சியில் (கருணாநிதி) நடத்திய கருத்துக் கணிப்பை www.vettri.lk இல் கலைஞர் கேட்டிருக்கலாமென்றும் சொன்னார்கள் - அடே லோஷன்,இதெல்லாம் ரொம்ப ஓவர்டா என்று என் மன சாட்சி எச்சரிப்பது வேறு விஷயம்.. )

யார் குத்தியும் அரிசியானால் சரி என்ற பழமொழிக்கமைய யாருடைய முயற்சியாக இருந்தாலும் ஈழத்தமிழரின் அரை நூற்றாண்டு காலக் கண்ணீருக்கு முடிவுகளைத் தரும் விதத்தில் இந்தியா இதயசுத்தியுடன் உதவினால் சரி!

12 comments:

Anonymous said...

// நேரடியாக ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் மன்மோகன் சிங்கிடம் (அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியிடம்) சொல்லி அல்லது வலியுறுத்தி செய்யக்கூடிய விஷயத்தை தமிழக மக்கள் மூலமாகவும் திமுகவினர் மூலமாகவும் தந்தி அனுப்பச் சொல்கின்ற காரணம் தான் என்ன? //

STD நிமிடத்திற்கு ஒரு ரூபாய் ஆக்கியது பேரன் தானே!!!

தமிழ் உதயன் said...

தந்திக்கு பதிலாக இவர் ஒரு கடிதம், அதுவும், இலங்கை தமிழர் பிரச்சனை ஓயும் வரை மத்திய அமைச்சரவையில் பங்கு எடுக்க மாட்டோம் என்று எழுதலாம்.

கொழுவி said...

அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன ?

நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்னர் உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை சொன்னவன் ஞானி -

இந்த பாடலை எனக்காக உங்கள் வானொலியில் ஒலிபரப்ப முடியுமா ? :)

ARV Loshan said...

அவர் தான் இப்போ பேரனா இல்லையா என்றே தெரியலையே?

அதையும் மக்களையே எழுதிப்போட சொல்லுவாரோ?

கொழுவி,அடிக்கடி அந்தப் பாடல் வெற்றியில் ஒலிக்கிறதே கேட்கலையா? ;)

Anonymous said...

இந்த உண்மையை சொன்னவன் ஞானி - //

ஓ பக்கங்கள் எழுதுகிற ஞானிதானே இது :) :)

பாட்டில ஒரு வரி வருகிறது
ஒண்மையை கொன்ற பின்னர் நெஞ்சுக்கு நீதி என்ன?

நெஞ்சுக்கு நீதி கலைஞர் எழுதிய புத்தகம் தானே:) :) :)

இறக்குவானை நிர்ஷன் said...

காலத்துக்குத் தேவையான பதிவு லோஷன் அண்ணா.அரசியல் பகடைக்காய்களாக இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தப்படுவதை இப்போது மக்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பதிவைப் பாருங்கள்
http://puthiyamalayagam.blogspot.com/2007/12/blog-post_04.html

ARV Loshan said...

இன்று மாலையே திமுக நடத்திய மாபெரும் பேரணி பற்றிய செய்திகளும்,அதைவிட மிக முக்கியமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் இந்தியாவுக்கான தூதரை அழைத்து தமிழ் மக்கள் மீதான கண்டனத்தைத் தெரிவித்த செய்தியும் அறியப் பெற்றோம்.
ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. பேசா மௌனியாக இருந்த மன்மோகன் சிங்????
கலைஞர் மட்டும் முன்னாலேயே செயல்பட்டிருந்தால்?
பரவாயில்லை.. better late than its never..
நன்றிகள்.. கலைஞருக்கும்,இந்தியப் பிரதமருக்கும்.. கொஞ்சமாவது இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்ததற்கும்,ஈழத் தமிழருக்கு சின்ன நம்பிக்கைக் கீற்றை வழங்கியதற்கும்.
முக்கியமாகத் தமிழக அன்பு உறவுகள் மீண்டும் காட்டியிருக்கும் எழுச்சியும்,ஆதரவும் தொடர்ந்து நிலைத்து விடிவோன்றை வழங்க வேண்டும் என 'தொப்புள்கொடி' உறவுகள் எதிர்பார்க்கின்றன...

ARV Loshan said...

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பொன்று - ஈழத் தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டி விட்டு அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி இணையத்தளம் ஒன்றில் நான் படித்தது.
இந்த அழைப்பு வந்தது நேற்று (ஞாயிறு)மாலை.. ஐயா இதுக்குப் பிறகு தான் தந்திக்கு அழைப்பு விடுத்தீங்களா என்று நம்ம நண்பர் ஒருவர் கேட்டாருங்க..

ஜோ/Joe said...

//இந்த அழைப்பு வந்தது நேற்று (ஞாயிறு)மாலை.. ஐயா இதுக்குப் பிறகு தான் தந்திக்கு அழைப்பு விடுத்தீங்களா என்று நம்ம நண்பர் ஒருவர் கேட்டாருங்க..//

LOSHAN,
வரம்பு மீறி போகிறீர்கள் என்பதை வருத்தத்துடம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து வேடிக்கை காட்டுவதாக சொல்லும் நீங்களும் அதைத்தான் செய்கிறீர்கள் என நினைக்கத் தோன்றுகிறது.

ARV Loshan said...

இல்லை ஜோ,நான் வேடிக்கைக்காக மட்டுமல்லாமல் உண்மையான சந்தேகத்துடன் தான் கேட்கிறேன்.. என் திடீரென இந்த அறிக்கையைக் கலைஞர் விட்டார்?
இவ்வளவு காலம் காத்ததற்குப் பெயர் ராஜதந்திரமா?
என்னை கலைஞரை வெறுப்பவன் என்று எண்ணவேண்டாம்.. உலகத் தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படுபவருக்கான கடமை இது..காலம் தாழ்த்தாமை தலைவனுக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்பு.

ஜோ/Joe said...

LOSHAN,
நீங்கள் இலங்கை தமிழரா ? ஆமென்றால் ஒன்றை கடைசியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கலைஞரை ஆதரிப்போரிடையே ஈழத்தமிழர்களுக்காக பரிவும் ஆதரவும் காட்டுவோரின் எண்ணிக்கையும் விகிதமும் ,எதிர் முகாம்களில் இருப்போரை ஆதரிப்பவர்களிடையே ஈழத்தமிழர்களுக்காக பரிவும் ஆதாரவும் காட்டுபவர்களின் எண்ணிக்கையும் விக்கிதமும் உங்களுக்கு தெரியுமா ?

தமிழகத்தின் அரசியலும் நிலையும் தெரியாமல் உளறிக்கொண்டிருக்காதீர்கள் .

இதுவே உங்களுக்கு என் கடைசி பின்னூட்டம்.

Anonymous said...

///வரம்பு மீறி போகிறீர்கள் என்பதை வருத்தத்துடம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.///

///தமிழகத்தின் அரசியலும் நிலையும் தெரியாமல் உளறிக்கொண்டிருக்காதீர்கள் ////

ஜோ என்ற கழக பதிவருக்கு

உங்கள் பரிவுக்கு ஆட்பட்ட ஒரு ஈழத் தமிழன், உங்களது தலைவர் மீது விமசனம் வைத்தால் உடனே மேலே குறிப்பிட்டிருக்கும் பாணியில் "அன்போடு" அதட்டும் உங்கள் பண்பு புல்லரிக்க வைக்கிறது. இதிலிருந்தே தெரியும் உங்களுடைய பரிவெல்லாம் உலகதத் தமிழன் மீதெல்லாம் அல்ல "கருணநிதி " என்ற ஒற்றை மனிதன் மீதுதான். அதை வெளிப்படடையாக சொல்லி விடுங்களேன்.அதை விடுத்து எதற்கு அனைவரின் மீதும் காழ்ப்பை வாரி வீசிக்கொண்டு ? இன்று "இந்த தம்பி தந்தியடி சமாசாரத்தை முன்னிட்டு " கருணா நிதியை எதிர்த்து இணையத்தில் பதிவிட்டவர் அனைவருமே தொடர்ந்து அவரை எதிர்த்தேதான் வந்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால் உங்கள் மூளையில் உண்மை உதயமானாலும் ஆகலாம். இல்லையென்றால் உன்க்களை அந்த ஆண்டவனாலும் மன்னிக்க கருணாநிதியாலும் காப்பாற்ற முடியாது

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner