October 13, 2008

சரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..

அமெரிக்கப் பங்குச் சந்தைகள் திடீர் சரிவைக் காட்டியபோது,சட சடவென சரிந்தது,அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமல்ல;பல பேரின் மனக் கோட்டைகளும் தான்..

பங்குச் சந்தைகளில் அந்த இமாலய சரிவுகளை நேரடியாக அவதானித்துக் கொண்டிருந்த வர்த்தகர்கள்,முகவர்கள் காட்டிய அதிர்ச்சி,ஆச்சரியங்கள்,கவலைகளைப் பதிவு செய்கின்றன இந்தப் புகைப்படங்கள்..
பாருங்கள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை என்ன வெளிப்பாடுகளைக் காட்டுகிறார்கள்.. 

எங்களுக்கு வேடிக்கை..அவரவர்க்கு வேதனை..

தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்..

இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு எனக்கு வந்த சந்தேகம்,மனதை உருக்குகின்ற இந்தக் காட்சிகளை,அப்படிப்பட்ட சோகமான,அதிர்ச்சியான நேரத்திலும் மினக்கெட்டுப் படமெடுத்த அந்தப் புண்ணியவான் யாரோ?
9 comments:

Anonymous said...

It is merely gambling and for money oriented people.Also it is expected by economist of US.When you are in money you won't listen.with this money they could have created another war on another petrol rich nation.

முரளிகண்ணன் said...

:-(

Vathees Varunan said...

இவங்களுக்கு இப்படியான நேரங்களில் மட்டுமே தலையில கைவைக்க வேணும் என்ற நினைப்பாவது வரும். நான் நினைக்கின்றேன் பின்லேடனுக்கு சந்தோசத்தில் பல நாட்களாக நித்திரை வந்திராது அதோட இந்தத் தள்ளாத வயதில சிறிது நாளைக்கு சும்மா மூளையை குடைந்து புதுசாக ஏதும் பிளான் போடத் தேவையில்லை நன்றாக ஓய்வும் எடுக்கலாம்.

Nimal said...

சோதனை மேல் சோதனை...
:(
:)

Anonymous said...

முன் போட்ட விதை மரமாகி நிற்கிறது

கயல்விழி said...

பங்கு சந்தையில் பணம் இழந்தவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு வகுப்பினர். பங்குச்சந்தை என்பது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரி, இலாபம் நஷ்டம் இரண்டையும் எதிர்ப்பார்க்கவேண்டியது தான்.

Anonymous said...

இவ்வளவு காலாமும் உலக மக்கள் வேதனைப்படுகையில் மகிழ்ச்சியடைந்தவர்கள் தான் இந்த பங்குச் சந்தை சூதாடிகள். இன்று அவர்கள் தலையிலேயே இடி விழுந்துள்ளது. 1930 ல் நடந்தது போல இந்த சூதாடிகள் தற்கொலை செய்து கொண்டாலும் அவர்களுக்காக அழுவதற்கு யாருமில்லை.
http://kalaiy.blogspot.com/2008/10/blog-post.html

Anonymous said...

படங்கள் மிகத் தத்ரூபமாக இருக்கின்றன.ஆனாலும் அமெரிக்கர்கள் கலங்குவதைப் பார்க்கும்போது ஒருவித குரூர திருப்தி!
வசந்தன்- New Orleans

Anonymous said...

http://www.youtube.com/watch?v=CnlMnf7t4t4 inthapaddal oda audio version ethir pakkiram vettrila ungada mail id illai athuthan ippidi koby தீனா கோபி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner