தனியொருவனுக்கு உணவு...

ARV Loshan
2
இன்று உலக உணவு தினமாம்.நான் காலை நிகழ்ச்சி (வெற்றி FM இல் விடியல்) செய்தபோது சொன்ன முக்கியமான விஷயம் "எப்போதும் சாப்பிடும்போது ஒருவேளை உணவுக்குக் கூட கஷ்டப்படுகிற மக்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள்."

காரணம் நாங்கள் தினமும் மூன்று வேளை (சிலபேர் அதற்கு மேற்பட்ட தடவைகளும் கூட) உண்கிறோம்.ஆனால் உலகில் 23 சதவீதமானோர் ஒருவேளை உணவு கூட உண்ணமுடியாமல் இருக்கிறார்கள். அமெரிக்காவில் கூட 7 சதவீதமானோர் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறார்களாம்.

இதற்கிடையில் அமெரிக்காவில் சோளத்திலிருந்து எதனோல் உற்பத்தி செய்கிறார்களாம். ஒரு கார் ஓடுவதற்குத் தேவையான ஒரு பெட்ரோல் தாங்கியை நிரப்புவதற்கு 324 கிலோ சோளம் தேவைப்படுகிறது.இந்த அளவு சோளத்தினால் ஒரு குழந்தைக்கு ஒரு வருடம் முழுவதும் உணவு கொடுக்கலாம்.என்ன கொடுமை இது!உணவுப் பற்றாக்குறை;உணவுப் பங்கீட்டில் சமநிலை இல்லை எனக் கூக்குரல் இடும் அமெரிக்காவும்,ஐக்கிய நாடுகள் உணவு அமைப்பும்,ஏனைய மேலைத்தேய நாடுகளும் இது பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமே.. 

ஆசியர்களால் தான் உணவுப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை நம் அரசியல்வாதிகளின் தொப்பைகளைப் பார்த்து தீர்மானிப்பதை மேலைத் தேயத்தவர் நிறுத்திக் கொள்ளவேண்டும்.நம் வீதிகளில் வயிறு ஒட்டி ஒருவேளை உணவுக்காக அலையும் ஏராளமானவர்களை அவர்களுக்குக் காட்டவேண்டும்.
இதற்கிடையில் நேரமும்,உணவும் மிகுந்துபோன (ஜாஸ்தியாகிப் போன என்றும் சொல்லலாம்) ஒரு மேலைத்தேய சமையல் கலைஞர் உணவுகளை வைத்து செய்திருக்கும் கோலங்களைப் (அலங்கோலங்களா என்று நீங்க தான் சொல்லணும்) பாருங்களேன்..

பாரதி சொன்னான் தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று.. 
இப்படியே உணவுகளால் அலங்காரம் செய்தால் எத்தனை ஜகங்களை அழிக்கவேண்டுமோ???
 
       
           

           

           

           

           

           

           

           

           

           

           

           

           

Post a Comment

2Comments

Please Select Embedded Mode To show the Comment System.*