ஓவியரான லோரா கில்பெர்ட்ஸ்(Laura Gilberts) தன்னுடைய எதிர்ப்பை வித்தியாசமாகக் காட்டியுள்ளார்.
அதுதான் இந்த zero dollar.

டாலரின் நாணயப் பெறுமதி தேய்ந்து கொண்டே போவதைக் காட்டத் தான் இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியதாக லோரா சொல்லி இருக்கிறார்.
கடந்த 7ஆம் திகதி, டாலர் போல அச்சு அசலாக பத்தாயிரம் நோட்டுக்களை அச்சடித்து நியூ யோர்க்கின் பல இடங்களில் லோரா விநியோகித்தார்.இதன் விசேடம் அவற்றின் பெறுமதி பூச்சியம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜோர்ஜ் வோஷிங்டனின் சிலைக்கு முன்னால் லோரா தன்னுடைய பெறுமதியில்லாத நோட்டுக்களை விநியோகிப்பதையும், நியூ யோர்க்கிலுள்ள அமெரிக்காவின் பிரதான பங்குச் சந்தை அலுவலகத்தின் முன்னால் லோரா தன்னுடைய நோட்டைக் காட்டுவதையும் படங்கள் காட்டுகின்றன..


எதிர்ப்பில் தான் எத்தனை ரகம்?
லோராவை இங்கே கூட்டிட்டு வந்தால்,எங்க நாட்டு ரூபாய் நோட்டுப் போலவே செய்து தருவாங்களான்னு கேட்டுப் பார்க்கணும்.. நிச்சயமா நான் zero note அடிக்க மாட்டேன்.. ;)