இந்த மாத ஆரம்பத்துடன் நான் ஒலிபரப்புத் துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆவது பற்றி நான் ஏற்கெனவே பதிவிட்டு இருந்தேன்.. எனினும் நாளாந்தம் நடக்கின்ற புது,புது நிகழ்வுகளை எழுதிக் கிழிப்பதால் என்னால் ஆண்டுகள் பத்து பகுதி-மூன்றை இன்னும் தொடர முடியவில்லை (வெகு விரைவில் வரும்)
எனது இந்த சின்ன எல்லை கடப்பை (landmark) பாராட்டியும் எனது வெற்றிக் குழுவினரின் முகங்களை நேயர்களுக்கு காட்டும் முகமாகவும் இந்த வார இசையுலகம் சஞ்சிகை எனது புகைப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்துள்ளார்கள்.
இசையுலகம் - இலங்கையில் இருந்து வெளிவருகிற ஒரு முற்று முழுதான இசை,பாடல்கள்.சங்கீதம் பற்றிய ஒரு அருமையான சஞ்சிகை.. (மாதம் இரு தடவை) நல்ல ஒரு நேயராக இருந்து,சிறப்பான ஒலி,ஒளி விமர்சகராகவும்,சிறப்பான ஊடகவியலாளராகவும் விளங்கும் மதன் தான் ஆசிரியர்.என்னுடைய நல்ல நண்பரும் கூட.
துணிச்சலாக என்னுடைய படத்தை அட்டையில் போட்டதே ஒரு பெரிய விஷயம் (எத்தனை பிரதி விற்றுத் தீர்ந்ததோ என்று கேட்கணும்) ;)
நடுப் பக்கங்களில் என்னுடைய சிறு பேட்டியும்,எம் வெற்றிக் குழு அங்கத்தவர்களின் புகைப்படங்களும்..
வெற்றி FM ஆரம்பித்து முதல் தடவையாக எல்லோருடைய படங்களையும் வெளியிட்டிருக்கிறோம்..எத்தனை பேர் மூர்ச்சை ஆனார்களோ? ;)
ரொம்ப அழகா இருக்கிறேன் என்று பல அழைப்புகளும்(உண்மையா தான் சொல்றேன்),பார்த்தோம் என்று ஒரு சில மடல்களும் வந்தன.. (இது வரைக்கும் எந்த அம்மாவும் என் பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்க உங்கள் படம் உதவுகிறது என்று சொல்லவில்லை என்பதே மகிழ்ச்சியானது)
மதனுக்கும்,அழகாக செய்து வடிவமைத்த நண்பர் நிசாகுலனுக்கும் நன்றிகள்.. (நம்மையெல்லாம் இருப்பதை விட இன்னும் கொஞ்சம் அழகா ஆக்கி இருக்கலாம்.. பரவால்ல அடுத்த முறை ;) )
அப்போ நானும் ஒரு model ஆகிட்டேனே.. யாராவது உங்க விளம்பரங்களுக்கு என்னை நாடுவதாக இருந்தால் என் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். (கொஞ்சம் ஓவரோ?)
அட்டைப்படம்
நடுப்பக்கம்