சிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா?

ARV Loshan
12
நேற்று ஒரு மாபெரும் மேதையின் பிறந்த தினம்..தமிழை திரை மூலம் முழங்கவைத்த ஒரு இமயத்தின் பிறந்த நாள் .ஆயிரக் கணக்கான அழகான தமிழ் வரிகளுக்கும் ,சொற்க்களுக்கும் உயிர் கொடுத்த பெருமகன் .திரையில் ஒரு சிங்கம் ,தமிழ் சங்கம். பல சரித்திரப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த செம்மல்.எங்கள் மத்தியில் வாழ்ந்து, மறைந்த ஒரு வரலாறு.
                                                                


இப்படியான மாறாப் புகழ் கொண்ட ஒரு பெருமகனை நாம் மறந்து விடலாமா? சினிமா மட்டுமே போதும் சோறு கூட வேண்டாம் எனும் தமிழகத்தினரே இந்தப் பொன்னாளை மறந்து போகலாமா ?
குலுக்கித் தழுக்கிய சிலுக்கினை நினைவு வைத்துக் கொண்டாடிய எங்கள் வலைப்பதிவு உலகம் இந்த சிம்மக் குரல் செவாலியே சிவாஜியை மறந்ததேனோ? என்னாங்கடா உங்க நியாயம்? ஒரு வரி கூட யாரும் எழுதலையே (என்னைத் தவிர?) 

அதனால தான் இந்த சிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா?

அது சரி உங்களுக்கு பல்டி மன்னன் ரஜினி நடித்த சிவாஜி வந்த பிறகு,சரித்திர மைந்தன் சாகாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசனை மறந்து விட்டதே..படிக்காதவன் படத்தில் தன் பெயரை முதலில் போட்டு,சிவாஜியையே பின்னிறுத்தியவரின் பக்த கூட்டங்களன்றோ நீங்களெல்லாம்..எப்படி ஞாபகம் இருக்கும் அந்த நடிப்பின் இமயத்தை?
கேப்டன் சிவாஜியை நினைவுகூர்ந்து நடிகர் சங்கம் சார்பாக அக்டோபர் முதலாம் திகதியை தமிழ் திரையுலக நாளாக அறிவித்தாரே அதுவும் மறந்து போச்சா?
நாளை கருப்பு M.G.R  ஆட்சிக்கு வந்தால் புரட்சித் தலைவரையும் யாரென்று கேட்பீர்கள் .. 

நீ யார் உனக்கெதுக்கு அக்கறை என்று கேட்பீர்கள்..

சினிமா மோகத்துள் முற்றாக வீழாதவன் தான் நான்..என்னுடைய சமூகம் அவ்வாறு சினிமாப் பைத்தியங்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை கொண்ட ஒரு பொறுப்பான(கொஞ்சமாவது) ஊடகவியலாளன் நான்.எனினும் தமிழ் திரைப்படங்களைக் கொஞ்சமாவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படச் செய்தவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமே என்னை இவ்வாறு உங்களைக் கேள்வி கேட்கச் செய்தது.
(சன் டிவி,கலைஞர்,ஜெயா,விஜய் இலும் எந்த விசேடத்தையும் காணோம்..நோன்புப் பெருநாளின் மகிமையோ?ஆனால் அர்ஜுனுக்கும் ,முதல்வனுக்கும் நோன்புக்கும் என்ன சம்பந்தம்?)

பி.கு : நாளை சிவாஜியைப் பற்றி ஒரு வித்தியாசமான கோணத்தில் பதிவொன்றைத் தர இருக்கிறேன்..





Post a Comment

12Comments

Please Select Embedded Mode To show the Comment System.*