இன்று என்னிடம் உள்ள சில கேள்விகள்..
என் மண்டையைக் குடைகிற கேள்விகள்..சரி என்கிட்டயே வைத்து இருந்தால் சரி வராது.. நான் மட்டும் யோசித்துக் கொண்டிருக்க நீங்கள்லாம் ஜாலியாக இருக்கலாமா? இதோ பிடியுங்கள்.. நீங்களும் யோசியுங்க.. நான் பெற்ற இன்பம் பெறுக நீவிரெல்லாம்.. ;)
1.உண்மையில் வன்னிக்குள் என்ன நடக்கிறது?புலிகள் அதே பலத்துடன் உள்ளார்களா? இராணுவத்தின் கை ஓங்குகிறதா?
2.இலங்கை அரசியலில் - கருணா அம்மான் (இப்போ மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் )தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (அதுதான் TMVP) பெயரை மாற்றப் போவதாக சொல்லி இருக்கிறாரே.. என்ன பெயர் வைப்பார்? (புலிகளை யாருக்கும் இலங்கையிலும்,சர்வதேசத்திலும் பிடிப்பதில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்.)
3.முதலாம் திகதி உண்ணாவிரதத்துக்கு யாரெல்லாம் வருவார்? யாரெல்லாம் வர மாட்டார்? என்னென்ன சொல்லுவார்?(அதனால் என்னென்ன பயன் கிடைக்கும்? என்னென்ன புது சர்ச்சைகள் தொடங்கும்?)
4.பேச்சு மூலமான தீர்வுக்கு இந்தியாவிடம் உண்மையில் பசில் உறுதியளித்தாரா?(அல்லது அது சும்மா பேச்சுக்கு தானா?)
5.பசில் ராஜபக்ஸவின் சந்திப்புக்குப் பிறகு இந்திய மத்திய அரசு இலங்கைக்கு மேலும் ஆயுதங்களை வழங்குமா?அவர் சொன்ன காரணங்களை முழுவதுமாக இந்தியா நம்பி விட்டதா?
6.இன்று வரை காலக்கெடு வைத்த கலைஞர் பிரனாப் முகர்ஜியின் வேண்டுகோளுக்கு இணங்கி பின் தள்ளிப் போட்டது இலங்கைத் தமிழருக்கு தோல்வியா? இல்லையா?
7.தயாநிதி மாறனின் ராஜீனாமாக் கடிதத்தை மீண்டும் கலைஞர் அவரிடமே கொடுப்பாரா?
8.உண்ணாவிரதத்துக்கு அஜித் வந்த பிறகு (வந்தால்...;)) ஐரோப்பிய நாடுகளில் ஏகன் மறுபடி திரையிடப் படுமா?(இலங்கையில் ஏகன் பார்க்க வேண்டாம் என்று SMS பரப்பிய ஒருவரை கைது செய்துள்ளார்களாம்)
9.நாளை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கும்பிலே விளையாடத் தான் போகிறாரா? அமித் மிஷ்ரா விளையாடாமல் கும்பிலே விளையாடுவது அவுஸ்திரேலிய அணிக்கு நல்லதா?
10.அண்மையில் காணாமல் போன அறிவித்தலோடு பலர் தேடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் எங்கே?அவரது இலங்கைத் தமிழர் பற்றிய நிலைப்பாடு என்ன?
11.வைகோ,திருமாவளவன்,அமீர் ஆகியோர் கைத்து செய்யப் பட்ட வேளையில்,வைகோவின் கைது உண்மையில் பேச்சு இந்தியப் பிரிவினை பற்றி அமைந்தததனாலா அல்லது அரசியல் விவகாரமா?(கூட்டணி உடைப்பு?????)
12.விஜய், ரஜினி போன்றோரின் படங்கள் வந்தால் திரௌஸர் கழற்றும் பதிவர்கள் அஜித்தின் 'ஏகன்' பற்றி பரபரப்பு ஏற்படுத்தாதது ஏன்? இலங்கைத் தமிழர் விவகாரம் முன்னிடம் பிடித்ததா அல்லது ?????
13.மாத இறுதி வருகிறது.. (எனக்கு சம்பளம் வெள்ளிக் கிழமை) எல்லோரும் என்னைப் போலவே கிட்டத் தட்ட காலியான wallettஉடன் credit cardsஐ நம்பிக் கொண்டு தான் திரிகின்றனரா?
14.இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நிம்மதியைத் தரும் தீர்வு என்று யாராவது பேசுகையிலேயே புலிகளுக்கு ஆதரவாகத் தான் பேசுகிறோம் என்று நினைப்பவர்கள் (இலங்கையர்கள் - குறிப்பாக குஷியாக வெளிநாடுகளில் குந்தி இருப்போர் தான் இதில் அதிகம்) திருந்தவே மாட்டார்களா?
15.இந்தப் பதிவுக்கு எத்தனை பின்னூட்டம் வரும்? (சும்மா ஒரு நப்பாசை தான்..அதில திட்டி வாராது எத்தனையோ?)
உங்கள்ள யாருக்காவது பதில் தெரிந்தா போற போக்கில பின்னூட்டமா போட்டுட்டு போங்க.. புண்ணியமாப் போவும்.