இலங்கையைத் தனிமைப்படுத்து!- கனடாவில் ஆர்ப்பாட்டம்

ARV Loshan
4
கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள Twenty-20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

நேற்று தொடங்கிய இந்தப் போராட்டத்தில் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் பங்குபற்றினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமையும், நாளை திங்கட்கிழமையும் இந்தப் போட்டிகள் நடைபெறவிருப்பதால் ஆர்ப்பாட்டப் போராட்டமும் தொடர்ந்து இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

டொரோண்டோ நகரில் உள்ள Maple Leaf திடலிலேயே இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடங்கியிருக்கின்றது. நான்கு நாடுகள் இந்த Twenty-20தொடரில் பங்குபற்றி வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அஜந்தா மென்டிஸ் என்ற சிங்களவரும் இடம்பெற்றிருப்பது பலருக்கும் அதிருப்தியை வரவழைக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது. (இவ்வாறு ஏதாவது நடக்கும் என்று தெரிந்து தான் திட்டமிட்டே முரளிதரன் இந்த கனடிய சுற்றுலாவில் இணைந்துகொள்ளவில்லை என்றும் ஒரு பேச்சு முதலில் கிளம்பி இருந்தது.)

"அப்பாவி தமிழ் மக்களை குண்டு வீசியும் பட்டினிச்சாவாலும் பறி கொடுத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை மூடிமறைத்து விளையாட்டுக்களிலும் களியாட்டங்களிலும் சிறந்த தேசம் என தன் தேசத்தை காட்டுமுகமாக தன் கோரமுகத்தை முகத்திரையிட்டு மறைக்க முயற்சிக்கும் சிறிலங்கா அரசின் முகத்திரையை கிழிக்கு முகமாக இந்த திடலின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக" ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான சில காட்சிகள்.








மூன்று நாட்களுக்கும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கனடா வாழ் தமிழ்த் தேசிய உறவுகளையும் பங்கேற்குமாறு கனடா தமிழ் மகளிர் அமைப்பினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற இடம் டொரோண்டோ என்பதும்,வன்னிப் பிரதேசத்தில் இப்போது கண்மூடித் தனமாக இராணுவத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட முக்கியமான காரணங்கள் ஆகும்.
இலங்கையைத் தனிமைப்படுத்து! தமிழர்களைக் காப்பாற்று! நீதியாக விளையாடு! கொலையாளிகளோடு விளையாடாதே! போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கரங்களில் காணப்பட்டன.
ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் இவ்வாறே பல ஆர்ப்பாட்டங்கள் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகள் இடம்பெற்ற போதெல்லாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான சில காட்சிகள்.






புகைப்படங்களுக்கு நன்றி புதினம்.

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*