நேற்று ஆஸ்ட்ரேலிய வீரர் ஷேன் வோட்சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும்,கையினால் அவரை இடித்தததானாலும் இந்தியத் துடுப்பாட வீரர் கௌதம் கம்பீர் குற்றவாளியாகக் காணப் பட்டு ஒரு டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகியுள்ளார்.எனவே 6ஆம் திகதி நாக்பூரில் இடம்பெறவுள்ள இருத்தி டெஸ்ட் போட்டியில் கம்பீர் விளையாட முடியாது.. சிறப்பாக ஒட்டங்களைக் குவித்து வரும் கௌதம் கம்பீர் தடை செய்யப்பட்டுள்ளமை இந்திய அணிக்குப் பேரிழப்பு என்பது மட்டும் நிச்சயம்.எனினும் வோட்சன் 10 சதவீத தண்டப் பணத்துடன் தப்பித்துக் கொண்டார். இந்திய கிரிக்கெட் தரப்பில் இருந்து இது குறித்து முணுமுணுப்புகள் எழும் என்று கருதப் படுகிறது.
எனினும் கம்பீர் இந்தப் போட்டித் தடைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போட்டித் தீர்ப்பாளர் கிறீஸ் பிரொட் தெரிவித்துள்ளார்.
சில முன்னாள் இந்திய வீரர்கள் ஆங்கிலேயரான பிரோடின் செயல் வீழ்ந்து கிடக்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு உதவும் முயற்சி என்றும்,இந்திய அணி வீரர்களின் மன நிலையை சிதைக்கும் செயல் என்றும் பொங்கி உள்ளனர்..
இப்போதைக்கு இந்த 3 ஆம் டெஸ்ட் போட்டி சமநிலை முடிவை நோக்கியே செல்கிறது என்று நினைக்கிறேன்.. மத்தியு ஹேடனும் அரைச் சதம் பெற்று மீண்டும் formக்கு திரும்பியுள்ளார்.. இந்தியாவுக்கு தலைவலி எல்லா ரூபத்திலும் ஆரம்பமோ?
இப்போ நேரம் இல்லாததால் இன்று மாலை இது பற்றி மேலும் பல விஷயங்களை பதிகிறேன்..
அதுவரை வணக்கம்ம்ம்......