October 04, 2008

சிவாஜி தோற்றது ஏன்?

தமிழகத்தில் 2011இல் முதலமைச்சராக கேப்டன் வருவார் என்ற எதிர்பார்ப்பும்..சிலவேளைகளில் சரத்குமாரும்,கார்த்திக்கும்,விஜய .T.ராஜேந்தரும்,ஏன் சில வேளைகளில் வீரத்தளபதி J.K.ரித்தீஷும் கூட சவால் விடலாம் என்ற நிலையில், இப்போது ரஜினி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப் போகிறார்,அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற பரபரப்பு ஒரு பக்கம், விஜய் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற ஆரூடங்கள் மறுபக்கம் என்று புதிய சினிமா-அரசியல் தொடர்புகள் பூக்கும் நேரம் சிவாஜி என்ற மாபெரும் நடிப்புலக இமயம் அரசியலுடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தது என்பதை என் பார்வையில்(படித்தறிந்து சுவைத்த தகவல்களோடு) தருகிறேன்.
                                   
தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்த சினிமாக் கலைஞர்களைப் பொறுத்த வரையில் M.G.R உட்பட பெரும்,புகழும் பெருகி மக்கள் ஆதரவும்,ரசிகர் கூட்டமும் சேர்ந்த பிறகே அரசியல் பிரவேசம் செய்தனர்.சிலர் தலைவரானார்கள்;சிலர் காணாமல் போயினர்.

  தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு கூடுதலாகப் பாடுபட்டவர் சிவாஜி.ஆனால் அவர் நடிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அரசியலுக்குத் தராத காரணத்தாலேயே அரசியலில் பெரிய இடத்தைப் பெறமுடியாமல் போயிற்று.முன்னர் பட்ட சில கெட்ட அனுபவங்களால் தலைவனாக ஆசைப்படாமல் தொண்டனாகவே இருந்துவிட்டார்.

M.G.R க்கு முதலிலேயே திராவிடர் கழகத்திலும்,அதன் பின்னணியிலும் இணைந்திருந்தவர் சிவாஜி.ஆனால் அவர் சந்தா கட்டி எப்போதும் எந்தத் திராவிடர் இயக்கத்திலும் அங்கத்தவராக இருந்ததில்லை என்கிறார் அவரது நெருங்கிய நண்பரும்,சிவாஜியின் சரிதத்தை எழுதியவருமான எழுத்தாளர் பா.தீனதயாளன்.

1972இல் MGR திமுகவில் இருந்து விலகி அதிமுகவை ஆரம்பித்த வேளையில் அவருக்கு நிகரான பெயரோடும்,புகழோடும்,MGR ஐ விடக் கூடுதலான பண பலத்தோடும் இருந்தவர் சிவாஜி.ஆனால் தானாகத் தன்னை முன்னிறுத்துகிற கெட்டிக்காரத் தனமோ,துணிந்து முடிவெடுக்கும் திடமோ,பல விமர்சகர்களும்,சிவாஜியின் நெருங்கிய நண்பர்களும் சொல்வது போல் தாராளமாக பணத்தை வாரி இறைக்கும்  குணமும் சிவாஜியிடம் இருந்ததில்லை.

சிவாஜி கணேஷனின் சில முக்கிய அரசியல் கட்டங்கள்…..
                        

                             
1956
புயல் நிவாரணத்துக்காக அறிஞர் அண்ணாவின் தலைமையில் நிதி திரட்டல்..விருது நகரில் பராசக்தி திரைப்பட வசனத்தை வீதி ,வீதியாகப் பேசிப் பேசி அதிக வசூலைச் செய்தவர் சிவாஜி.
எனினும்,புயல் நிவாரண வசூல் செய்தவர்களுக்கான பாராட்டு விழாவில் சிவாஜி அழைக்கப்படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சிவாஜியும் அவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங்கும் இது பற்றிக் கலந்து பேசியபின்னர்,பீம்சிங்கின் வற்புறுத்தலில் சிவாஜி அவருடன் திருப்பதி செல்கிறார்.
அடுத்த நாள் மாலை சென்னை திரும்பும் வழியெங்கும் சிவாஜிக்கு எதிராக திமுக கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக சிவாஜியைக் கேவலப்படுத்துகின்றனர்.திமுக கட்சிப் பத்திரிகையும் தான்.

 நாத்திக கணேஷன் ஆத்திகர் ஆனார் .
திருப்பதி கணேஷா கோவிந்தா ..


ஒரு சில நாட்களிலேயே சிவாஜியின் போஸ்டர்களைக் கிழிப்பது,சாணி அடிப்பது,சிவாஜியின் கார் மீது திராவகம் வீசுவது என்று திமுக தொண்டர்கள் எல்லை மீற,சிவாஜி காங்கிரசில் காமராஜரோடு இணைந்தார்.“திமுக காரர்களே என்னைத் தூக்கிப் போய் காங்கிரசில் போட்டார்கள்..அந்தவேளையில் எனக்கு ஒரு பக்கபலம்,பாதுகாப்பு தேவைப்பட்டது.எனக்கு ஒரு வழிகாட்டி தேவைப்பட்ட சூழ்நிலையில் தேசியவாதியான நான் காமராஜரைத் தலைவராக ஏற்றுக் கொண்டேன்“என்று சிவாஜி பின்னாளில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆனாலும் பெருந்தலைவர் என்று புகழப்பட்ட காமராஜர் எந்த சூழ்நிலையிலும் சிவாஜியை முன்னிறுத்திக் கட்சி நடத்த விரும்பவில்லை.ஒரு நடிகன் என்றும் ஆட்சியில் முன்னிற்கக் கூடாது என்பதே அவரது கொள்கையாக இருந்தது என்கிறார் அமரர் கல்கி.

காங்கிரஸ் கட்சியில் சிவாஜியை விட அவரது புகழால் சேர்ந்த கூட்டமும்,சிவாஜியின் பணமும் தேவைப்பட்டன.பல இடங்களில் சிவாஜிக்குக் கிடைக்கவேண்டிய பதவிகளைப் பலர் தட்டி சுருட்டிக் கொண்டனர்.

“காங்கிரசில் என்னைப் பயன்படுத்தும் வரை பயன்படுத்திக்கொண்டனர்.ஆனால் கட்சிக்குள் என்னை வளர விடவே இல்லை.என்னைக் காண்பித்து மற்றவர்கள் மாலையும்,பதவியும் வாங்கிக் கொண்டார்கள்.அரசியலால் என் சொந்தப் பணம் வீணானது தான் மிச்சம்.அரசியலால் நான் கண்ட பலன் எதுவும் இல்லை.கேவலப் பட்டது தான் மிச்சம்.மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை.ஒரு நடிகனாக மாத்திரமே பார்க்க விரும்பி இருக்கிறார்கள்.எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.ஆனால் எல்லோரும் தலைவராக முடிந்ததா?நடிகர்கள் அரசியலுக்கு வந்த உரிச்சிருவாங்க(முழு நேர அரசியல்வாதிகளைத் தான் சொல்லி இருக்கிறார்)நடிகர்களை எவ்வாறு தமக்கு சாதகமாகப் பயன் படுத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் குறியாக இருப்பார்கள்”  தினமணி,1997 தீபாவளி மலரில் சிவாஜி.

அதேவேளையில் பேசும்படத்தில் M.G.R  இன் திறமை குறித்தும் சிவாஜி சொல்கிறார்.
“M.G.R ஆரம்பத்திலேயே தன் வழியைத் திட்டமிட்டு விட்டார்.அரசியலில் என்ன செய்தால் பெரிய இடம் பிடிக்கலாம் என்பதை அறிந்து நல்லவனாகத் தோன்றும் பாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்தார்.தன் இமேஜ் கெடாத அளவுக்கே வெளியிலும் வந்தார்(அதாவது அவர் எல்லாப் பக்கத்திலேயும்  நல்லா நடிச்சார் என்கிறார் சிவாஜி). நான் அப்படி அல்ல குடிகாரனாக,பெண் பித்தனாக,ரவுடியாக என்று பலப் பல பாத்திரங்களிலே நடித்தேன்.நடிப்பிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்தியதால் என்னால் அரசியலில் நடிக்க முடியாமல் போனது “
1984 பேசும்படத்தில் சிவாஜி.

நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு இல்லை மறை  காயாக இருந்த நடிகர் திலகம்,1988 இல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தன் சொந்தக் கட்சியை ஆரம்பித்தார்.

1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ,M.G.R இன் மனைவி ஜானகி அம்மாளின் கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டார். மிகப் பெரிய கனவுகளோடு தேர்தலில் ஏணி சின்னத்தில் நின்ற சிவாஜி, தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் 10000 வாக்குகளால் தோல்வியடைந்தார்.

இது மிகுந்த அதிர்ச்சியை சிவாஜிக்கு அளித்தது.அவரது கட்சி போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் தோற்றுப் போனது.சிவாஜி ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில்“அரசியலில் நான் தோற்றதாக நினைக்கவில்லை..ஆனால் ஏமாற்றப் பட்டேன்" என்றார்.

இவ்வளவு நடந்த பிறகும் முன்னாள் இந்தியப் பிரதமர் V.P.சிங்கின் ஜனதா தளம் கட்சியின் தமிழகத் தலைவராக சிவாஜி கணேஷன் சிறிது காலம் இருந்தார்.

சிவாஜியின் அரசியல் அவர் நடித்த திரைப் பாடல் போலவே தான்..

“சட்டி சுட்டதடா கை விட்டதடா….”


        

11 comments:

Anonymous said...

சிவாஜி தோற்றார் என்பதை விட அவர் முயற்சித்தார். அரசியலில் இருந்தார். எந்தவிதத்திலும் இவ்விடயத்தில் தெளிவாக இருந்துள்ளார். அவரது முயற்சியை மதிக்கிறேன். தோல்வியடைவதற்கு கூட தைரியம், களத்தில் நிற்கும் அசாத்திய திறமை வேண்டும்.

அத்திரி said...

திரைப்படத்தில் நடிக்க தெரிந்த அளவுக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை. இதுதான் அவரின் பலவீனம்

Anonymous said...

சினிமாவில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது, அரசியலில் முடியவில்லை- அப்போ நடிக்க தெரிந்தால் தான் அரசியலில் சாதிக்க முடியுமா? அரசியல் வாதிகளெல்லாம் மிக சிறந்த நடிகர்களா?

Anonymous said...

சிவாஜி எம் ஜி யாரை போல் மக்கள் தலைவனாக படங்களின் மூலம் தன்னை நிலை படுத்தி கொண்டதில்லை போனால் போகட்டும் போடா சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று சிவாஜி பாடும் போது எம் ஜி யார் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்றும் உலகம் பிறந்தது எனக்காக என நம்பிக்கை வெளிபடுத்துவார் அதனால்தான் சிவாஜியை நல்ல மகனாக சகோதரனாக பாசமிகு தந்தையாக பார்த்த மக்கள் நல்ல தலைவனாக பார்க்கவில்லை அதுமட்டும் இல்லை எம் ஜி யார் சினிமா துறையின் அணைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்தவர் ஆளுமை பண்பு நிறைய உண்டு
சிவாஜிக்கு நடிப்பை தவிர வேறு ஏதும் தெரியாது

யோ வொய்ஸ் (யோகா) said...

ஹய்யோ லோஷன் நீங்களுமா? சத்தியமா இந்த மாதிரி பதிவை நான் உங்க கிட்ட எதிர் பர்ர்கவில்லை, இந்தியர்கள் தான் நடிகர்களை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் என்றால் நீங்களும் அந்த கூட்டத்துக்குள் போய் விட்டீங்களே! சிவாஜி நல்ல நடிகர் ஆனால் தலைமை தாங்க, நடிக்க தெரிந்திருக்க தேவை இல்லை, இது தான் தமிழ் நாட்டு மக்களின் சாபக்கேடு, நல்ல ஒரு ஆளுமை உள்ள தொலை நோக்குள்ள தலைவர்கள் தமிழ் நாட்டை ஆண்டிருந்தால் எங்கயோ சிங்கப்பூர் ஜப்பான் மாதிரி ஆகியிருப்பங்க ஆனால் இன்னும் சினிமா சினிமா என்று ஓடி கொண்டிருக்கும் தலைவங்க வேண்டுமானால் நல்ல கருத்துள்ள கலை படத்தை கொடுக்கலாம், நாட்டை முன்னேற்ற மாட்டங்க, அதுக்கு நல்ல உதாரணம் காதலில் விழுந்தேன் பட பிரச்சனை. பெங்களூர் அளவுக்கு IT Fieldல சென்னை முன்னேறாததற்கு சினிமா தன் காரணம்

ARV Loshan said...

anonymous,அத்திரி,tamil,vallankai,
yoga
நன்றி உங்கள் வருகை மற்றும் பின்னூட்டங்களுக்கு..


யோகா, சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது..
1.நான் இதைத் தான் எழுதுவேன்,இதைப் பற்றி எழுத மாட்டேன் என்று எனக்கு ஒரு வரையறை இட்டுக்கொள்ள விரும்பவில்லை..
2.சிவாஜியின் அரசியல் வாழ்க்கை பற்றி இன்றைய தலைமுறை(நானும் அதற்குள்ளேயே அடங்குகிறேன்)அறிந்துகொள்ளவேண்டும்.
3.நீங்கள் எதிர்பாராப் பதிவுகளும் இன்னும் பல வாசகர்களை(அல்லது பார்வையாளர்களை)எனக்குப் பெற்றுத் தந்துள்ளன..
4.எனது மனதை எந்த விஷயங்கள் ஒரு குறித்த நேரத்தில் பாதிக்கின்றனவோ அவை பற்றி அன்று பதிவு இடுவேன்..
இந்தப் பதிவு சிவாஜியின் பிறந்த நாளன்று இடவேண்டும் என்று எழுத ஆரம்பித்தது.

Anonymous said...

ஆம் லோஷன். பாவம் சிவாஜி அவருக்கு திரையில் நடிக்கத் தெரிந்த அளவிற்கு அரசியல் வாழ்க்கையில் நடிக்கத் தெரியவில்லை. தோற்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்று குறிப்பிட்ட இடைத்தை நான் மூன்று முறை படித்தேன். அசத்தல்.

என் கருத்து:
எம்.ஜி.ஆர் நடித்ததால் மட்டுமோ அல்லது அனைத்து திரைத்துரையை பற்றி தெரிந்ததால் மட்டுமோ ஜெயிக்கவில்லை. மாறாக இயல்பிலேயே அவர் அவர் ஒரு நல்ல(குணங்கள் அல்ல) தலைவனுக்குரிய குணாதிசையங்களை பெற்றிருந்தார். அவருக்கு ஆளும் திறமை மற்றும் எதைச் செய்தால் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்று தெரிந்து வைத்திருந்தார். அதுவே அவரது வெற்றிக்குக் காரணமாக இந்தப் பொடியன் கருதுகிறேன்.

நல்ல பதிவு.

niresh said...

அசத்தல் இதை vijai அறிந்துகொள்ளவேண்டும்

என்.கே.அஷோக்பரன் said...

most unpredictable field (at least in my opinion) is Politics. I've seen 'good' leaders who've toiled themselves for the society got no appreciation or support from the people.

Kumar Ponnambalam, despite being a vociferous voice of the Tamils' rights and being a 'clean' handed and highly principled politician never won a single election. But today we see narcissistic people, using their media fame and cheat the people with pseudo-policies.

It happens, because that's how the people's mandate works. It's tricky and tough to classify exactly.

Despite being indicted by Sarkaria commission for corruption, DMK retained Karunanidhi as their leader and he became the CM again - does this mean people have accepted their plight? or have forgiven Karunanidhi? I doubt whether this could be put in black & white, but the reality is this is how it works.

May be a 'good' educational enlightenment for all the people will be a 'solution' for these mishaps. But still if the 'majority' believes in a certain 'opinion', nothing can prevent it being 'public opinion'. SO it's we; the people, who decide!

Jayadev Das said...

அரசியல் பண்ணுவது என்பது ஒரு கலை, அது எம்.ஜி.ஆருக்கு இருந்தது, சிவாஜிக்கு இல்லை. சிவாஜி அரசியலுக்கு வந்தது தான் சம்பாதித்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளத்தானே தவிர தொண்டு மக்களுக்கு செய்ய அல்ல. மேலும், //தாராளமாக பணத்தை வாரி இறைக்கும் குணமும் சிவாஜியிடம் இருந்ததில்லை.//
//ஒரு நடிகன் என்றும் ஆட்சியில் முன்னிற்கக் கூடாது என்பதே அவரது கொள்கையாக இருந்தது// அவனுக்கு நடிக்கத் தானே தெரியும், நாட்டை ஆழ வேண்டுமென்றால் காமராஜர் மாதிரி தலைமைப் பண்புகள், சேவை மனப்பான்மை வேண்டுமே! //காங்கிரஸ் கட்சியில் சிவாஜியை விட அவரது புகழால் சேர்ந்த கூட்டமும்,சிவாஜியின் பணமும் தேவைப்பட்டன.// சிவாஜி எங்கேயாச்சும் பிரச்சாரம் பண்ணப் போனால், ஜெயிக்கும் தொகுதி கூட தோற்றுப் போகும் என்று பேசுமளவுக்கு அவரது புகழ் இருந்தது. //அரசியலால் நான் கண்ட பலன் எதுவும் இல்லை.கேவலப் பட்டது தான் மிச்சம்.// எல்லோரையும் போல அதில் பலன்/ஆதாயம் ஏதாவது கிடைக்குமா என்றுதான் ஐவரும் போயிருக்கிறார். தனக்கு வராத ஒன்றை ஏன் வலுக்கட்டாயமாகச் செய்தி வீணாகப் போக வேண்டும்?

Unknown said...

ஆளுமை + உழைப்பு + அதிர்ஷ்டம் + பணம் = இவை சேர்ந்தால் மட்டுமே அரசியலில் ஜெயிக்க முடியும்.

ஒரு நல்ல நடிகனாக வேண்டுமானால் சிவாஜி ஜெயித்து இருக்கிறார். ஆனா, பதவி எனபது முதலில் எவ்வளவு நீங்கள் இழக்கிரீர்களோ அதனை பல மடங்காக திருப்பிக்கொடுக்கும் அட்சய பாத்திரம். இந்த விஷயத்தில் சிவாஜி சரியாக செயல் படவில்லை என்றே கருதுகிறேன்.

இதில் விதி விலக்கு கருணாநிதி - பணத்திற்க்கு பதில் நரிக்குணம் கொண்டது அவரின் தனி பலம்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner