பரவாயில்லையே.. ஆரம்பித்து ஒரு மாதம் ஆவதற்குள் என் வலைத்தளத்துக்கு 6000இற்கு மேற்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்..நிறையப் பின்னூட்டங்களும் இட்டிருக்கிறார்கள்.ஏதோ கொஞ்சம் வாசிக்கக் கூடிய மாதிரி எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.
இந்தவார இசை உலகம் சஞ்சிகையிலும் எனது வலைப்பூ பற்றிய பெட்டிச் செய்தியொன்று வந்திருக்கிறது.. இந்த செய்தியை நேற்றைய தினம் இசை உலகம் சஞ்சிகையில் பார்த்த பின் பல இலங்கை நண்பர்கள் என் தளத்திற்கு வந்துள்ளனர். நன்றிகள்...
அதன் ஆசிரியர் மதனுக்கு நன்றிகள். நிறைய விமர்சனங்களைத் தருகிறவர் அவர்.
இப்போது எனது உடனடி இலட்சியம் தூயா அவரது வலைத்தளத்தில் நடத்திய தேர்வில் மீண்டும் பங்கேற்று பதிவுலக தாதா ஆகிவிட்டேனா என்று பார்ப்பது தான். எனது வலைத்தளம் ஆரம்பித்து இரு வாரங்களில் நான் பங்கேற்றபோது இரண்டு புள்ளிகள் மட்டுமே கிடைத்து அடப் போய்யா ரகமே கிடைத்தது..
எப்பிடியாவது தாதா ஆகிடுவேன்..
இசையுலகம் சஞ்சிகையில் எனது வலைத்தளம் பற்றிய செய்தி...