இன்று காலையிலேயே எனக்கு புளகாங்கிதம் (ரொம்பவே மகிழ்ச்சிங்கண்ணா) தந்த விஷயங்கள் இரண்டு..
1.பரிசல்காரன் எனக்கு பதிவு தொடரில் (தூயாவின் ஈழம் தொடர்பான தொடர் பதிவுக்கு) இணைந்து கொள்ளுமாறு விடுத்த அழைப்பு.
வந்தியத்தேவன் முதலில் என்னை ஒரு நண்பராக சினிமா தொடர்பான தொடர் பதிவுக்கு அழைத்து என்னை அங்கீகரித்தார்.இப்போது ஒரு மூத்த,பிரபல பதிவர் அங்கீகரித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.(உண்மையிலேயே நல்லா எழுதுரான்னு அழைத்தாரோ அல்லது அவரைப் பின் தொடருபவர்களில் ஒருவர் என்று அன்போடு ஊக்குவிக்க அழைத்தாரோ அவருக்கே வெளிச்சம்..)
எனினும் அவரது பதிவிலே என் பெயர் கண்டதே ரொம்ப சந்தோஷம்..
ஆனால் நான் இன்னும் இலங்கையில் இருக்கிற தமிழன்.ஈழ உணர்வு நிறையவே இருக்கிற ஒருவன். எனது பதிவுகள் அடிக்கடி இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியே பேசுவதால் இந்தத் தொடரில் நான் இணைவது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். நீங்கள் எனக்காக இன்னொருவரை அழைக்கவும்.
அதில் கேட்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நான் என் பதிவுகளில் அடிக்கடி சொல்லி வருகிறேன்.. ஈழம் பற்றி நன்றாக அனுபவப் பட்டிருக்கிறேன்.எனவே இது பற்றி ஒரு சுருக்க வரைவு பின்னர் வரைகிறேன்..
என்று பதில் அளித்திருக்கிறேன்.. இந்தியப் பதிவர்களின் உணர்வுகள் தான் அந்தத் தொடரில் வெளிப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்..
2. நான் பதிவுகள் போட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் பூர்த்தியாக முதலேயே என் தளத்துக்கு 15000க்கு மேற்பட்ட பேர் வருகை தந்திருப்பது(அல்லது வருகைகள்- page loads)..
அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் 900க்கு மேற்பட்ட வருகைகள்(1000 தாண்டி இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்)
இப்ப யாரும் வாசிக்காத தளமாக என் தளம் இல்லை என்பதும் நிச்சயமாகி இருக்கிறது. ;)
இந்த வாரத்தில் என்னை மகிழ்ச்சிப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது..அது பற்றி முடிந்தால் மாலை ஒரு பதிவிடுகிறேன்.