July 22, 2009

நானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதைஇது மீண்டும் விருதுகள் , தொடர்பதிவு சீசன் போலும்..
ஒரு பக்கம் பட்டாம்பூச்சி பரபரப்பு.. சுவாரஸ்ய பதிவர் விருதுகள்.. இன்னொரு பக்கம் 32 கேள்விகள் மற்றும் நடிகரைப் பிடிக்க பத்து விஷயங்கள்..

நான் பாட்டுக்கு இந்த சங்கிலிகளில் மாட்டுப் படாமல் சத்தமில்லாமல் சிங்கப்பூர் பயணம் பற்றியும் கிரிக்கெட் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தால் இந்த வாரம் இரண்டு விருதுகளை நண்பர்கள் வழங்கி என்னையும் விருது வழங்குமாறும் மாட்டி விட்டார்கள்.

விருதுகள் என்று அல்லாமல் இவற்றை அங்கீகாரம் மற்றும் அன்பளிப்பாகவே நான் கருதுகிறேன்.தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விருது கொடுக்கையில் பெற்றுக் கொள்வது பெருமை.. பெறுவதும் வழங்குவதும் பல நேரங்களில் பெருமையும் பெருந்தன்மையும் கூட.

அன்பு நண்பர் செந்தழ்ழ்ல் ரவி ஆரம்பித்து வைத்த இந்த சுவாரஸ்ய பதிவர் விருது வழங்கும் சடங்கு இப்போ களை கட்டித் தொடர்கிறது. அனைவரும் வழங்குக என செந்தழல் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து வழங்கவேண்டும் என்று நான் நினைத்தாலும்.. (இனிவரும் வசனத்தை நடிகர் திலகம் ஸ்டைலில் - நேற்று அவரது நினைவு தினம் வேறு-வாசிக்கவும்) என்ன செய்வேன் என்ன செய்வேன்.. காலம் நேரம் இடம் தரவில்லையே...

ஆனாலும் அன்புக்குரிய சுபானு எனக்கு இந்த விருதை வழங்கிவைத்து அன்பான சிக்கலில் என்னை அழகாக மாட்டிவிட்டார்..

எனினும் அவருக்கு முதற்கண் நன்றிகள்..
பின்னே.. ஒரு நாளைக்கு எத்தனை எத்தனை பதிவுகள் படிக்கிறோம்.. யாரைத் தெரிவு செய்வது? யாரை விடுவது?

இந்த சங்கிலியில் எல்லோருக்கும் மாறி மாறி கொடுபடுவதால், யாரை நாம் தெரிவு செய்வது?

நல்லகாலம் செந்தழல் கொடுத்தவருக்கே மறுபடி கொடுக்கலாம் என அனுமதியளித்தார்.

அப்படி இருந்தாலும் முடியுமானவரை இதுவரை சுவாரஸ்ய விருது பெறாதவர்களாக அறுவரைத் தெரிவு செய்யலாம் என தீர்மானித்து நான் அறிவிக்கும் (!) ஆறு பதிவர்கள்..

நேற்று பட்டாம்பூச்சி விருதுக்கு ஐவரை தேர்வு செய்த நேரமே இவர்களையும் மனதில் இருத்திவிட்டேன்.

நான் மனதில் வைத்திருக்கும் இன்னும் பலர் இருக்கிறார்கள்.. அவர்களில் பலர் விருதுகள் பெற்றும் விட்டார்கள்.

இந்த அறுவரின் பதிவுகளையும் நான் இலேசில் தவற விடுவதில்லை.. எழுத்துநடைகளை,இவர்களின் எண்ணங்களை, நோக்கங்களை,சமூகம் மீதும், மற்றவர் மீதும் என் மீதும் காட்டும் அக்கறையை அன்பை நேசிக்கிறேன்.

இந்த ஆறு அன்பு நெஞ்சங்களும் எனது அன்புப் பரிசான இந்த சுவாரஸ்யப் பதிவர் விருதை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

காலம் வரையும் கோவி கண்ணன்

இவரது எழுத்துக்களின் ஆழமும்,நேர்மையும் கண்டு ஒரு வாசிப்பாளனாக வியந்துள்ளேன்.
ஆழமான அறிவும்,ஆராயவும், மானுடம் மீதான வரையறை கடந்த நேசமும் உடையவர்.
பதிவுலகில் நானும் இன்னும் பலரும் தடம் பதிக்கையில் ஆரம்ப உத்வேகமும்,உற்சாகமும் வழங்கியோரில் இவரும் முக்கியமானவர்.

நேரடியாக அண்மையில் சந்தித்தபோது உண்மையில் இவரது அன்பின் நிஜம் கண்டு மகிழ்ந்தேன்.

இவரது பதிவின் வாசகன் நான் என்பது எனக்கு மகிழ்வளிக்கும் ஒரு விடயம்.சாரல் தரும் சயந்தன்

எனது பதிவுலகின் ஆரம்ப காலத் தயக்கம் மயக்கம் நீக்கிய அருமைத் தோழர்.
இவர் வழங்கிய ஊக்கம் என்றும் என் நினைவில் இருந்து நீங்கா.
இவரது தீவிர, நேர்மையான சிந்தனைகளும், துல்லியமான நெற்றியில் அறைகிற வெப்ப எழுத்துக்களும் அவ்வப்போது நகைச்சுவையாக உண்மையை நாசூக்காக சொல்கிற எழுத்துப் போக்கும் மிகப் பிடித்தவை.

நாட்டு நடப்புக்களை நேர்மையாகத் தன் பாணியில் விமர்சிப்பதில் வல்ல ஒரு பதிவர்.

இவரது பல சிறுகதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.


டுமீல் தரும் புல்லட்

நக்கல்,நையாண்டி என்று தான் பலரும் இவரை நினைத்தவேளை தனக்கே உரிய விதத்தில் அனைவரும் விளங்கக்கூடிய விதத்தில் அறிவியல் விஷயங்களை அநாயசமாகத் தந்து அசத்தி வரும் கில்லாடி.
தனக்கெல்லாம் எதுக்கு போர்த்தேங்காய்? என்று தேங்காயைத் தன் வித்தியாச வழியால் பயன்படுத்துபவர்.
நான் அடிக்கடி வாசித்து ரசித்து சிரிக்கும் ஒரு அருமையான பதிவர். கொஞ்ச நாளாக பதிவுகள் இடுவதில்லை.. படிப்பின் காரணமாக பிசியோ?

இந்த விருதின் மூலமாக மீண்டும் டுமீலிடுவார் என நினைக்கிறேன்.வித்தியாசமான எழுத்துநடை.. அனைத்து விஷயமும் அலசும் ஒரு all rounder.
இவரது துரித கிரிக்கெட் பதிவுகள் ரொம்பப் பிடித்தவை.
இலகு தமிழில் பல விஷயம் எழுதும் தமிழன் எட்வின் பலதும் எழுதுபவர் என்பதே இவர் பலம்.


குசும்பனின் குசும்பு..

மனசு மகிழ்ச்சியடைய இதைவிடப் பதிவுலகில் வேறு இடம் கிடையாது என்பேன்..
யாரை வேண்டுமானுலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிண்டல் கேலி பண்ணிக் காலி பண்ணிவிடும் கை தேர்ந்த ஆசாமி இவர்.

சில நேரம் சிரிப்போடு வியந்து நிற்பதும் உண்டு.. மனிதர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்று,,

இவரது பிறப்பிலேயே ஊறிய சிரிப்பு எங்களைப் போன்ற பலரின் மனதுகளை மலர் வைக்கிறது.
சமயத்தில் கிரிக்கெட் வீரர்களை இவர் வாருவது இவரது ஸ்பெஷாலிடி என்பேன்.நான் அன்போடு நினைக்கின்ற இன்னுமொரு அன்பர். முதலில் எனக்கு அங்கீகாரம் அளித்து தொடர்பதிவுக்கு அழைத்த பிரபலம். வாசிக்கும் காலம் முதல் நேசித்த பதிவர்.

கலவை ரசனையும் பரந்த பார்வையும் கொண்ட ரசனையான மனிதர்.

ஆழமான பதிவுகளும், அலட்டல் இல்லாத அலசல்களும், கனதியான கருத்துப் பகிர்வுகளும் இவர் எங்கள் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் மாயவஸ்துக்கள்.

பந்தா இல்லாத பிரபலம்.என்னை கௌரவப்படுத்திய நண்பர் சுபானுவுக்கும், இந்த ஆரோக்கியமான சங்கிலித் தொடரை ஆரம்பித்துவிட்ட செந்தழல் ரவிக்கும் நன்றிகள்.

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இனி இந்த அறுவரும் தொடர்வார்களாக..


பி.கு - சிங்கப்பூருக்கு நாளை போலாமா? இன்னைக்கு சூரிய கிரகணம் காரணமாக flights எல்லாம் cancelled.11 comments:

Admin said...

wait பண்ணுங்க வாசித்துட்டு வாறன்..

Admin said...

உங்களுக்கும் உங்கள் மூலமாக விருதினைப் பெறுவோருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் மூலம் விருது பெற அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்லவா...

எப்படியோ நாளை சிங்கப்பூர் போனால் சரிதான்....

ரவி said...

வாழ்த்துக்கள் லோஷன்

புல்லட் said...

மிக்க நன்றிகள் அண்ணா.. நிச்சயம் திரும்பி வருவேன்... தற்போது சற்று வேலைப்பளு... வீடு திரும்ப இரவு 8 மணியாகி விடுகிறது... இன்னும் சிறிது நாட்கள்தான்.. பின்பு மீண்டும் சராமாரியாக வெடிக்கத் தொடங்கிவிடுவேன்..

பதிவுலகில் முதலாவது விருது... மறுபடியும் நன்றி...

சயந்தன் said...

நான் சீரியஸ் பதிவர் இல்லை.. இல்லை.. இல்லை.. நம்புங்கப்பா.. நான் காமடிப்பதிவர்தான் காமடிப்பதிவர்தான்.. :)

hamshi said...

Anna congrats.After long time come to your blogger.I think one week i didnt come ur and ur followers bloggers.anyway all the articals super.wish all the best all blogger writers.one week ela evalavu patheva!Oh!keep it up anna,

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

புல்லட் said...

நன்றி சொல்லி ஒரு பெரிய சட்டி நிறைய ஐசும் வைத்து ஒரு பின்னூட்டம் ஒன்றை ஒரு ஊட்டு ஊட்டியிருந்தேன்.. வுழியில் எங்கோ விழுந்து விட்டது போலும்... கிடக்கட்டும்... நன்றியை சிம்பிளாகுவே சொல்லி விட்டேன்.. விரைவில் பதிவுகளுடன் வருவேன்..

சி தயாளன் said...

கிரகணத்துக்கும் சிங்கைக்கும் என்ன சம்மந்தம்..?

:-))

வாழ்த்துகள்..

Da VimCi Code said...

congrats :)

எட்வின் said...

நன்றி லோஷன் அன்பரே... நான் இந்த பதிவை சரியாக கவனிக்கவில்லை.... உங்கள் அன்பிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி. நாங்க எல்லாம் உங்களைப் போன்றோரை பார்த்து வளர்ந்தவர்கள் தான். எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆதரவு தான் எங்களை எழுத செய்கிறது. சில காலமாக அதிகம் எழுத இயலுவதில்லை... நன்றிகள் பல.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner