பூமிக்கு அழிவு?? நாளை மறுதினம் சுனாமி?? வருகிறது நிபிரு??

ARV Loshan
19

இப்போது கொஞ்ச நாளாக யாரைப் பார்த்தாலும்,எங்கே பார்த்தாலும் வருகின்ற 22ஆம் திகதி (நாளை மறுதினம்) வரப்போவதாக சொல்லப்படுகிற சுனாமி பற்றியும், 2012ஆம் ஆண்டு(21st Dec 2012) உலகம் அழியப் போவதாகவும் பரவும் வதந்தி (செய்தி என்றும் சொல்லலாம்) பற்றியுமே பர பர பேச்சும் அரட்டைகளும்.

உலக அழிவு பற்றி பல பதிவுகள் வந்து பயமுறுத்தி இருந்தாலும், நிபிரு (NIBIRU)என்ற பெயரால் உலகுக்கு வர இருக்கின்ற பேரழிவு பற்றி பெரிதாக நாம் யாருமே அறிந்திருக்கவில்லை.. அது பற்றி இந்தப் பதிவிலே சொல்லி இருக்கிறேன்.

வழமை போலவே நான் இது பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.. (எதைத் தான் சட்டை செய்தோம்? )சுனாமி வந்தால் வருகிற நேரம் பார்க்கலாம் என்றும், உலகம் அழிந்தால் அழிந்த பிறகு அடுத்த நாள் யார் எஞ்சுவது என்று பிறகு கதைக்கலாம் என்றும் அடிக்கடி நான் கடிப்பதுண்டு..

ஆனால் இரண்டு மூன்று விஷயங்கள் உண்மையிலேயே சுனாமி வந்துவிடுமோ என்றும், உலகம் அழிந்துவிடுமோ என்றும் இப்போது என்னை அச்சப்பட வைக்கின்றன.

22ஆம் திகதி ஏற்பட இருக்கின்ற முழு சூரிய கிரகணத்தால் புவிக் கீழ் தட்டுக்கள் அசையும் என்றும் அந்த அதிர்வில் உருவாகும் நில அதிர்வால் சுனாமி ஏற்படும் என்று நாசா(NASA) விடுத்துள்ள எச்சரிக்கை தான் முதலாவது விஷயம்.

பொதுவாக நாசாவின் எதிர்வு கூறல்கள் தவறியது மிகக் குறைவு.. (சில நேரம் அவர்கள் எதுவுமே கூறாமல் இருப்பதும் எதிர்வு கூறல்கள் ஆகிவிடுகின்றது.)

நாசா(NASA) என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த ஆண்டில் நிலாவில் (யாருன்னு கேக்காதீங்கப்பா.. சந்திரனை சொன்னேன்) கால் பதித்து நாற்பது பெருமை மிகு ஆண்டுகளைக் கொண்டாடிவரும் வேளையில்,(புளோரிடாவிலிருந்து அப்போல்லோ விண்கலம் சந்திரனுக்கு ஏவப்பட்ட நாற்பதாவது ஆண்டு நிறைவு தினம் கடந்த வியாழன்) நாசாவுடன் சம்பந்தப்பட்டதாக எழுந்துள்ள பரபரப்பு தான் இது.

அடுத்து காலம் தப்பிப் பெய்து வரும் மழையும்.. மணிக்கு மணி மாறிவரும் கால நிலையும்..
எந்த நேரம் மழை பெய்யும் எந்த நேரத்தில் கடும் வெயில் கொழுத்தும் என்று யாராலும் இங்கே சொல்ல முடியாமல் இருக்கிறது.

கடந்த வாரத்தில் அடுத்தடுத்த மூன்று நாட்களில் இலங்கையில் மூன்று வெவ்வேறு இடங்களில் மினி சூறாவளிகள்(இவற்றை குழல் காற்று என்றும் சொல்கிறார்கள்) ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டன.

இவற்றுள் இரண்டு கரையோரப் பிரதேசங்களில்..(சிலாபம், குருநாகல்..) பின்னர் ஏற்பட்டது மலையக நகரான கண்டியில்.

இன்னுமொன்று இப்போது பெய்கின்ற மழையும் வீசுகின்ற காற்றும் அடிக்கடி திசை மாறுவது..

வானில் ஏற்படுகிற வர்ண மாற்றங்கள்.. சில வேலை பகல் வேளையிலேயே இருட்டி பயங்கரமாக இருக்கும்.

இன்னுமொரு காரணம் உலகெங்கிலும் ஏற்படும் வான்வெளி விமான விபத்துக்கள்.. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வானிலை மாற்றங்களும் இதில் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதே..

நாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க.

இவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்... அது தான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லம் போல ...

###

எனினும் இரண்டு தளங்களை நான் பார்வையிட்ட போது இவற்றை எச்சரிக்கை தகவல்களாக உங்களோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று யோசித்தேன்..

முதலாவது சுட்டியை சொடுக்குங்கள்.. நாளை மறுதினம் வருவதாக சொல்லப்படும் சுனாமி பற்றி ஆராய்கிறது.

ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து பதிவு இடுவதற்குள் மூச்சு வாங்கிவிடும்.. எனவே தயவு செய்து ஆங்கிலத்திலேயே படிச்சுங்கப்பா..

சுனாமி வருவதாக இருந்தால் இலங்கை, இந்தியக் கரைகளை எட்டும் நேரம் பிற்பகல் மணி முதல் மணியாக இருக்கலாம்..

எனினும் இடை நடுவே இந்தோனேசிய தீவுக் கூட்டங்கள் இருப்பதால் முழு வேகத்தில் சுனாமி போல வராது என்று நம்பி இருக்கலாம்..

இரண்டாவது சுட்டி..

கொஞ்சம் பயங்கரமான விஷயம் பற்றி ஆராய்கிறது.. 2012இல் ஏற்பட இருப்பதாக சொல்லப்படும் புவிக்கான பேரழிவு/ பூமியின் அழிவு பற்றி விரிவாக ,ஆதாரங்களுடன் விபரிக்கிறது.

பொறுமையாக ஒவ்வொரு இணைப்பையும் தட்டிப் பார்த்து விஷயங்களைக் கிரகியுங்கள்.

அதிர்ந்து போவீர்கள்.. ஆச்சரியப்பட்டும் போவீர்கள்..

பூமியை நோக்கி வருகிற நிபிரு பற்றி நாசா சொல்லி இருப்பது பார்த்த பிறகு எங்களுக்கு எஞ்சி இருக்கும் காலம் பற்றி எண்ண(count) ஆரம்பித்திருப்போம்...

உண்மையோ பொய்யோ.. இப்போதில்லை எனும் வரை ஒரு தற்காலிக ஆறுதல் தானே..

அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..
மற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.


Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*