நேற்று இந்தியாவில் மும்பாயில் கோலாகல நிகழ்ச்சியொன்றில் 2011 சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடாத்தப்படவிருக்கின்றன உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான சின்னத்தை (logo) அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இந்த அறிமுக நிகழ்வில் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளின் ஹீரோக்கள் ஜந்து பேரான
க்ளைவ் லொயிட், அரவிந்த டி சில்வா, திலீப் வெங்சார்க்கர், மைக்கல் பேவன், பல்விந்தர் சிங் சந்து ஆகியோரோடு தற்கால ஹீரோக்களான யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதிலே க்ளைவ் லொயிட் 1975, 79 ஆகிய 2 வருடங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு தலைமை தாங்கி உலகக்கிண்ணம் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கையின் அரவிந்த டி சில்வா, 1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளின் இலங்கை வெல்ல முக்கிய தூணாக இருந்தவர். இறுதிப்போட்டியில் இவர் பெற்ற சதம் யாராலும் மறக்க முடியாது.
இந்தியாவின் முன்னாள் அணித்தலைவரும் தலைசிறந்த துடுப்பாட்ட வீரருமான திலீப் வெங்சார்க்கர்
அவுஸ்திரேலியாவின் மைக்கல் இன்று வரை உலகத்திற்கு கிடைத்த தலை சிறந்த ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கணிக்கப்படுகிறார்.
சந்து, 1983ம் ஆண்டு இந்தியா உலகக்கிண்ணம் வென்ற வேளையில் இந்தியாவிற்காக பிரகாசித்தவர்.
இந்த 2011ம் ஆண்டு உலகக்கிண்ண logoவை வடிவமைப்பதில் சர்வதேச ரீதியாக பிரபலமான 12 விளம்பர நிறுவனங்கள் போட்டியிட்டுயிருந்தன.
இதில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய நிறுவனமான WITEKITE. இந்த logoவை நீங்கள் உற்றுப்பார்த்தால் இதிலே போட்டிகளை நடத்துகின்ற 4 ஆசிய நாடுகள் ( பாகிஸ்தான் - தற்போது போட்டி எதனையும் நடத்தாவிட்டாலும் கூட), ஆசியாவின் தனித்துவம் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டின் வேகம் தனித்துவம் அனைத்தும் பல்வேறு வர்ணங்களால் கிரிக்கெட்டின் பந்தின் வடிவத்தாலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
உங்களுக்காக உத்தியோகபூர்வ உலகக்கிண்ண logo
இலவச இணைப்பாக தென்னாபிரிக்கவில் இடம்பெறவுள்ள mini உலகக்கிண்ண logo.