July 13, 2009

பஞ்சராகிப் போன பாகிஸ்தான்..

ஐயோ போச்சே.. பவிளியனுக்கு மறுபடி நடக்க வைக்கிறாங்களே..


இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி புது சரித்திரம் படைக்கப் போகும் அணி என்று பிரகடனம் செய்து வந்திருந்தார் பாகிஸ்தானிய அணியின் தலைவரான யூனிஸ் கான்..

ஒருவேளை பெயரில் காண இருப்பதாலும் இம்ரான் கான் போலவே இவரும் ஒரு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்திருப்பதாலும் உண்மையிலேயே பாகிஸ்தான் அணி புத்துயிர் பெற்று விடுமோ என்று நினைத்தவர்கள் நான் உட்படப் பலர்.


அடுத்த முறை இதை விட நீளமான துடுப்பாக் கொண்டு வரணும்..


அதிலும் ICLஇலிருந்து மன்னிப்பளிக்கப்பட்டு மறுபடி சேர்த்துக் கொள்ளப்பட்ட மொகமட் யூசுப், அப்துர் ரசாக் ஆகியோரும் அணியில் இருப்பதால் பாகிஸ்தான் பலமான அணியாக இருப்பதாகவே நம்பியிருந்தோம்..

காலியில் இடம்பெற்ற முதலாம் டெஸ்ட் போட்டியின் நான்கு நாட்கள் எல்லாம் நல்லாத் தான் நடந்துகொண்டிருந்தது.. ஐந்தாவது நாளில் இருந்து பாகிஸ்தானிய அணி உண்மையில் Record breakersஆக மாறி விட்டது தெளிவாகவே தெரிஞ்சு போச்சு..

இலகுவாக வெற்றிபெறவேண்டிய ஒரு போட்டியை அப்படியே தாரை வார்த்துக்கொடுத்த போதே - இவங்க தானா அவய்ங்க என்பது தெரிந்தது.

அப்பிடியே கண்ணை மூடிட்டு அடிச்சேனா... கழட்டி விட்டுட்டாங்கப்பா.. விக்கெட்டை..

அதிலும் அந்தப்போட்டியில் பெற்ற 117 என்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையே பாகிஸ்தான் இலங்கைக்கெதிராகப் பெற்ற மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக மாறிப்போனது.

இந்த சாதனை இந்தப் பாகிஸ்தான் அணிக்குப் போதவில்லை போலும்!

நேற்று கொழும்பு P.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 90 ஓட்டங்களுக்குள் சுருண்டு மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்கள். (இது பாகிஸ்தானின் டெஸ்ட் வரலாற்றில் 7வது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். )

இந்த சாதனை அணிக்கு இன்னும் ஒரேயொரு சாதனை மிச்சம்....

இதுவரை இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றிருக்கும் பாகிஸ்தான் - இம்முறை அந்த சாதனையையும் முறியடிக்கும் போலத்தெரிகிறது.

யூனிஸ்கானுக்கு அடுத்ததாக புதிய தலைவர் இப்போதே தயாராகிக்கொண்டிருப்பார்.

தனியாளா நின்னு கஷ்டப் படுறேன்.. மறுபடி தலைமைப் பதவி சனியனைத் தலையில எத்தி விட்ட்ருவான்களோ?

உருண்டு புரண்டு சுருண்டுபோன பாகிஸ்தானிய அணியின் துடுப்பாட்ட வீரர்களிலும் ( வீரமா... அப்பிடின்னா? ) ஒருவர் ஒரு சாதனைக்குக் கிட்ட வந்து கிட்டாமலே போயிருந்தார்.

பாகிஸ்தானிய துடுப்பாட்ட வீரர் ஒருவர் கூடிய பந்துகளைச் சந்தித்துப் பெற்ற பூச்சியம் என்ற சாதனையே அது. (Longest duck)

பாகிஸ்தானின் முன்னைய எக்ஸ்பிரஸ் (இப்போது அவர் காத்துப்போன பலூன்) ஸொயிப் அக்தர் இலங்கை அணிக்கெதிராக 42 பந்துகளில் எடுத்த பூஜ்யத்திற்கு நெருங்கி வந்த அப்துர் ரௌஃப் 34வது பந்தில் ஆட்டமிழந்தார்.

எனினும் உலக சாதனை ரொம்ப நீளமானது... 77 பந்துகள் மட்டைபோட்டும் ஓட்டம் ஒன்றைத் தானும் எடுக்கமுடியாது போன பெருமுயற்சியாளர் நியூசிலாந்தின் ஜெஃப் அலொட் (1998 – 99இல் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக )

இனியென்ன இன்று இரண்டாம் நாள் - இலங்கை துடுப்பெடுத்தாடி, துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவிகுவியென்று குவித்த பின் - பாகிஸ்தானை இரண்டாம் இனிங்சில் உருட்டித் தள்ளிவிடும்.

ரொம்ப நல்லவங்களா இருக்க்காங்கடா.. பந்து வீச முதலே ஆட்டமிழக்க தயாராயிடுறாங்க..


இந்த டெஸ்ட் போட்டியையும் மூணு நாளிலேயே முடிச்சிடலாம் போல இருக்குடா.. T 20 போட்டில கூட கொஞ்ச நேரம் அதிகமா bat பண்ணினாங்க இல்ல?

பஞ்சராகிப் போன பாகிஸ்தான் அணி போசாமல் பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளோடு விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை ஞாபகப்படுத்த வேண்டியது தான்!

பேசாமல் அப்ரிடி ஓய்வெடுக்காமல் இலங்கை வந்திருந்தால் அவரது அதிரடிகளையாவது பார்த்திருக்கலாம்..
ஐயோ அம்மா.. இப்படிப் போட்டு தாக்குறாங்களே.. யாராவது வசிமையும் வக்காரையும் மறுபடி கூட்டிட்டு வாங்கப்பா..

மொத்தத்தில் பாகிஸ்தான் அணி – பில்டிங் / பில்டப் Strong!
பேஸ்மென்ட் படு weak !

நேற்றைய நாளில் பாகிஸ்தான் அணியின் நிலையைக் கண்ணாடி போல காட்டிய மைதானத்தில் இலங்கை ரசிகர் வைத்திருந்த பதாதை - “ Todays' Special : Mohammad You - Soup”

விட்ட குறை தொட்ட குறைன்னு இல்லாம இவங்களப் போட்டு தாக்கி சராசரியை ஏத்திக்க வேண்டியது தான்.. இதை விட்ட வேறு யாரும் கிடைக்க மாட்டாங்க..

தகவல் & படங்கள்- நன்றி- cricinfo

பின்னிணைப்பு- நேற்றிரவு நகம் கடித்து, விரல்களைத் துப்புகின்ற அளவுக்கு விறுவிறுப்பை உருவாகிய ஆஷசின் முதல் டெஸ்ட் போட்டி இருக்கிறதே, அது தான் கிரிக்கெட்..
T 20 ஐ எல்லாம் தூர வீசுங்கள்..

டெஸ்ட் போட்டிக்கான அத்தனை விறுவிறுப்பான அம்சங்களும் நிறைந்த தேசத்தின் அற்புதமான பரிணாமம் நேற்றைய Cardiff டெஸ்ட் போட்டி.

8 comments:

Admin said...

இந்த கிரிக்கெட் உங்கள துரத்திக்கொண்டே இருக்குதுபோல.......
அருமை, அருமை..... படங்களுக்கு கொடுத்திருக்கும் விளக்கம்.....

அண்ணா சிங்கப்பூர் சிங்கம் என்ன ஆச்சு.... எப்போ வருமாம்.....

வந்தியத்தேவன் said...

லோஷன் சிங்கம்களும் ஏட்டிக்கு போட்டியாக கட்டைப்போட்டுள்ளார்கள். சங்கா மட்டும் பேட் செய்ய ஏனையவர்கள் வந்தார்கள் சென்றார்கள்.

ஆனாலும் நேற்றைய ஆஷாஸ் சூப்பர் தான் பொண்டிங்கில் முகத்தைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம் தான். கடைசியில் பனேசரும் அன்டர்சனும் போட்ட கட்டையில் ஆஸிக்காரனுக்கு வாழ்க்கையே வெறுத்திருக்கும். ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருக்கும்முன்னரே பொண்டிங் ஆட்டத்தை நிறுத்திவிட்டார்.

Anonymous said...

என்னத்தை கிழிச்சவையள் இலங்கை இண்டைக்கு ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது லோசன் அண்ணே. எப்பயாவது கிரிக்கெட் விளையாடி பழக்கமிருக்கா???

ARV Loshan said...

சந்ரு said...
இந்த கிரிக்கெட் உங்கள துரத்திக்கொண்டே இருக்குதுபோல.......
அருமை, அருமை..... படங்களுக்கு கொடுத்திருக்கும் விளக்கம்.....

அண்ணா சிங்கப்பூர் சிங்கம் என்ன ஆச்சு.... எப்போ வருமாம்.....//

நன்றி சந்த்ரு..

சிங்கம் கர்ச்சித்துக் கொண்டே இருக்கிறது.. வரும் வரும்

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
லோஷன் சிங்கம்களும் ஏட்டிக்கு போட்டியாக கட்டைப்போட்டுள்ளார்கள். சங்கா மட்டும் பேட் செய்ய ஏனையவர்கள் வந்தார்கள் சென்றார்கள். //

ஆமாம் வந்தி.. இன்று சற்றுத் தடுமாறித் தான் போனார்கள்.. எனினும் இந்த 150ஓட்டங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்.


//ஆனாலும் நேற்றைய ஆஷாஸ் சூப்பர் தான் பொண்டிங்கில் முகத்தைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம் தான். கடைசியில் பனேசரும் அன்டர்சனும் போட்ட கட்டையில் ஆஸிக்காரனுக்கு வாழ்க்கையே வெறுத்திருக்கும். ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருக்கும்முன்னரே பொண்டிங் ஆட்டத்தை நிறுத்திவிட்டார்.//

நீங்கள் சொன்னதில் ஒரு சின்னத் திருத்தம் மேலதிக நேரம் இருந்தாலும் கூட நேற்று வீச வேண்டிய ஓவர்கள் முடிந்ததாலேயே பொண்டிங் ஆட்டத்தை நிறுத்த இணங்கினார்.அது தான் விதி சொல்வது.

இல்லேன்னா நல்லாத் தான் விட்டார்கள் ஆஸ்திரேலியர்கள்.

ARV Loshan said...

nonymous said...
என்னத்தை கிழிச்சவையள் இலங்கை இண்டைக்கு ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது லோசன் அண்ணே. எப்பயாவது கிரிக்கெட் விளையாடி பழக்கமிருக்கா???//


பெயரில்லாதவரே.. விளையாட்டுன்னா அப்படித்தான்..
ஏதோ கொஞ்சம் விளையாடி இருக்கிறேன்.

பாடசாலை, கழக அணிகளுக்கு கடின பந்து விளையாடி இருக்கிறேன்.
இப்போதும் அலுவலக அணிக்காகவும், வார இறுதி நாட்களில் நண்பர்களோடும் விளையாடி வருகிறேன்.

வேறு என்ன வேண்டும்?

ஆதாரங்கள் ஏதாவது காட்ட வேண்டுமா?

விளையாட்டு, விதிகள் எல்லாமே விமர்சிக்கும் அளவுக்கு தெரியும் ஐயா..

Admin said...

//Anonymous said...
என்னத்தை கிழிச்சவையள் இலங்கை இண்டைக்கு ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது லோசன் அண்ணே. எப்பயாவது கிரிக்கெட் விளையாடி பழக்கமிருக்கா???//


கிரிக்கெட் விளையாட்டின் நெளிவு சுளிவுகள், அதன் விதிகள் எல்லாம் தெரிந்த ஒருவரை இப்படி சொல்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உமக்கு தெரியவில்லை போலும் அவர் அலுவலக அணிக்காக விளையாடி வருவது.

இன்று கிரிக்கெட் செய்திகளை முந்திக்கொண்டு வழங்க வேண்டும் என்பதற்காக. கிரிக்கெட் தெரியாதவங்களே ஓவர் பில்டப் பண்ணிக்கொண்டு இருப்பதை நீங்கள் காணவில்லை போலும்.

இன்று சந்சிகைகளே கூட அவரது விளையாட்டு செய்திகளை முந்திக்கொண்டு பிரசுரிக்கின்றன. விளையாட்டு செய்திகளை வழங்குவதில் சிறந்த ஒருவர் லோசன் அண்ணா என்பதை எல்லோரும் அறிவர். இதை நீர் அறியாமல் இருப்பது உனது முட்டாள் தனம் என்று நினைக்கிறேன்.

Mugu said...

//இனியென்ன இன்று இரண்டாம் நாள் - இலங்கை துடுப்பெடுத்தாடி, துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவிகுவியென்று குவித்த பின் - பாகிஸ்தானை இரண்டாம் இனிங்சில் உருட்டித் தள்ளிவிடும்.//


:( வர வர எல்லாம் பிழைக்குது போல தான் கிடக்கு...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner