பகுதி ஒன்று பற்றி பலவாறான கருத்துக்கள்.. பின்னூட்டமிட்டு தெரிவித்த நண்பர்களுக்கெல்லாம் நன்றிகள்.
சஸ்பென்சில் விட்டு விட்டுப் போன ட்விஸ்ட் என்னவென்று அறிந்துகொள்ள பல பேர் தனி மடல், தொலைபேசி அழைப்பு மூலமும் கேட்டிருந்தார்கள்.
இதோ
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2
அந்த ட்விஸ்ட் என்னவென்றால், விமான நிலையத்துக்கு எனது வாகனத்திலேயே போவதாக முடிவெடுத்த பின்னர், விமான நிலையம் வருவதாக அப்பாவும் , என் சின்னவனைக் கூட்டிவர ஆசைப்பட்ட மனைவியும் கூறியதை அடுத்து அயலிலுள்ள தெரிந்த ஓட்டுனர் ஒருவர் ஒருவரை அழைத்திருந்தேன்.
கொஞ்சம் முன்கூட்டியே புறப்படலாம் என்று நினைத்து, (பாதுகாப்பு, வீதி தடைகள், போக்குவரத்து நெரிசல் என்பவற்றைத் தவிர்ப்பதற்காக) புறப்படலாம் என்று பார்த்தால், எங்கள் நிர்வாக இயக்குனர் நிஷாந்த (இவர் நிறுவனத் தலைவரின் மைத்துனரும் கூட) அழைப்பெடுத்து தனது ஓட்டுனர் இல்லையென்றும், தான் என்னுடன் தொற்றிக் கொள்ளப்போவதாகவும் சொன்னார்..
இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை..
அவர் அதுக்குப் பிறகு சொன்னது தான் என்னை பயங்கரமா டென்ஷன் ஆக்கியது..
அப்போது நேரம் எட்டு மணி.. எங்கள் flight இருந்தது 11.50க்கு. எப்படியும் மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது வழக்கமான நியதி.
இவர் அப்போது தான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகிறாராம்.
தான் வீட்டுக்குப் போய் தயாராகி விட்டு சொன்ன பிறகு தன்னை வந்து ஏற்றிக் கொண்டு செல்லுமாறு கேட்டார்..
பாவமாக இருந்தது.. சரியென்று சொல்லிவிட்டேன்.
ஆனாலும் கொஞ்சம் பதற்றம்.
கடைசியில் பம்பலப்பிட்டியிலிருந்து (அவரது வீடு) புறப்படும் நேரம் 9.20.
அதற்கிடையில் நமது Chairman இரண்டு தடவை அழைப்பெடுத்து எங்கே என்று கேட்டு விட்டார்.
வாகனத்தை வேகமாக ஒட்டுங்கள் என்று நான் அழைத்த ஓட்டுனருக்கு சொல்லியும்.. அவர் மணிக்கு 40 தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
வாகனம் ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆளுக்கொரு சைக்கிள் எடுத்தாலே அரை மணி நேரத்தில் விமான நிலையத்துக்குப் போய் விடலாம் போல இருந்தது.
"என்ன அண்ணே, நம்ம வாகனம் ஓட்டக் கஷ்ட்டமா இருக்கா?" என்று கேட்டேன்.
பிறகு கொஞ்ச நேரத்தின் பின் "கொஞ்சம் வேகமா ஓட்டுங்க.. நேரம் ஆகிக் கொண்டிருக்கு" என்றேன்.
அதற்கும் பிறகு பொறுமை எல்லை கடக்க ஆரம்பிக்க, " நானே ஓட்டவா?" என்று கேட்டும் விட்டேன்.
அதற்குப் பிறகு கொஞ்சம் வேகம் எடுத்தது.. எனினும் தாமதமாகி விடும் என்ற டென்ஷனில் இருந்த நிஷாந்த தனக்கு தெரிந்த விமான நிலைய அதிகாரிகளிடம் தனது influenceஐப் பயன்படுத்தி கொஞ்சம் தாமதமாகி வந்தாலும் பொருத்தருள சொல்லி தகவல் கொடுத்து வைத்தார்..
ஒரு மாதிரியாக விமான நிலையத்தை அண்மித்துக் கொண்டிருந்தோம்..
பொதுவாகவே எனது வாகனத்தின் ராசிப்படி எந்தவொரு சோதனை நிலையத்திலும் நிறுத்தப்படாமல் விமான நிலைய பிரதான சோதனை சாவடி (சாவடிக்கிற இடம் ???) வரை வந்தாச்சு..
அப்போது தான் அடுத்த பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது..
(என்னடா இது இன்னமும் விமானமே ஏறல்ல.. அதுக்குள்ளே ட்விஸ்ட் & திருப்பம் என்று போட்டு கொல்றானே என்று யோசிக்காதீங்க.. அதுக்கு தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. பழக்கமில்லை என்று..
இந்த தொடர் பதிவில் சின்ன சின்ன விஷயங்களையும் மிஸ் பண்ணாமல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் .. அது தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்)
(நேரம் கிடைக்கும் போது பகுதி 3 தொடரும்...)
ஆதிரை, நீங்கள் சொன்ன சேடம் இழுக்கும் அதுவும் திங்கள் முதல் தொடரும்.. ;)