July 31, 2009

சிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு... பகுதி 7
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி - 7


கடந்த அங்கத்தில் இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளைப் பற்றி சில விஷயங்கள் என்று முடித்தவுடனேயே, பலபேருக்கும் பல கேள்விகள்...

இப்போது பல பதிவுகளில் பரவலாகப் பேசப்படும் தமிழும் ஒலி/ஒளிபரப்பும் பற்றி ஏதாவதா என்றும் சிலபேர் தனி மடலில் என்னிடம் கேட்டிருந்தனர்.

விஷயம் இது தான்...

இத்தனை பிரயோசனமான கண்காட்சியில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து வந்திருந்த ஒலி, ஒளி ஊடகங்கள் மிகச் சொற்பமே...

நான் (வெற்றி FM) , கடந்த வருடம் எமது ஆங்கில ஒலிபரப்பான ரியல் ரேடியோவின் முகாமையாளர் ஜிம்மிடீன், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் (அவர் வந்து இனி ஆகப்போவது தான் என்ன?), நெத்FM என்ற சிங்கள ஒலிபரப்பின் பொறியியலாளர் மட்டுமே வந்திருந்தனர்.

இப்படியான பயனுள்ள விடயங்களை ஏனோ எம்மவர் பயன்படுத்துவது இல்லை!

கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பற்றி கொஞ்சம் விரிவாகவே சொன்னால் பலபேருக்கும் குறிப்பாக ஒலிபரப்பாளர்கள் ஃ தொழிநுட்பவியலாளருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதனால் இந்த அங்கம் முழுதும் நாம் எக்ஸ்போவில் Communic Asia / Broadcast Asiaவில் சுற்றிவரலாம்.

(முழுக்க விரிவாக சொன்னால் நான் தொழிநுட்பப் பதிவராக வேண்டியதுதான்.)

பல கண்காட்சிசாலைகளிலும் இலவசமாக வழங்கப்பட்ட பலவற்றுள் எனக்குப் பயனுடையதாக பல புதிய கருவிகள்/இயக்குநுட்பங்களின் கைநூல்கள் வாய்த்தன.

என்னை வியக்க வைத்த சாலைகளில் ஒன்று கணினி வரைபுகளினாலும், புதிய மென்பொருள்களாலும் விரும்பிய செட்களை உருவாக்கக்கூடிய இந்திய நிறுவனம் ஒன்றின் சாலை. நிமிடங்களில் விரும்பிய செட்களைத் தத்ரூபமாக தொலைக்காட்சித் திரைகளில் காட்டி அனைவரையும் வியக்கவைத்தனர்.

எங்கள் Chairman அசந்து போய் அவர்களுடன் பேரம் பேசி (!) சில நுட்பங்கள், மென்பொருள்களைப் பெறுவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இத்தாலிய நிறுவனமொன்றின் காட்சித்திடலின் கணினி அமைப்பினால் செயற்படுத்தக்கூடிய Virtual DJ என்ற ஒலிபரப்பு இயக்குநுட்பம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. எங்களிடம் இருப்பதை விட கொஞ்சம் சிக்கலானதாகவே தோன்றியது.

அங்கிருந்த இத்தாலிய இளைஞனிடம் சில விஷயங்கள் கேட்டுத்தெரிந்துவிட்டு கொஞ்சம் இயக்கிப்பார்த்தேன். தமிழில் பேசி இத்தாலிய, ஆங்கிலப் பாடல் இசைக்கலவை செய்த முதல் சுது நானாகத்தானிருக்கும்.

“ Mmm… you are pretty good at this… You use this same software back at home? ” ( நல்லாச் செய்றீயே... உங்கள் நாட்டிலும் இதையே தான் பயன்படுத்துகிறீர்களா? )

இல்லையென்றும் எனினும் இது பயன்படுத்துவதற்கு எம்முடையதை விட இருப்பதாக சொன்னதும்,
“What? Our DJs say this is so complicated to operate… Learn Italian and come to Rome...”

(இத்தாலிய DJக்கள் இதை சிரமமானது என்று சொல்கிறார்களே... பேசாமல் நீ இத்தாலிய மொழி படித்துவிட்டு ரோமுக்கு வா) என்று பாராட்டிவிட்டு எனது Visiting cardஐயும் பெற்றுக்கொண்டார்.

(இன்னும் இத்தாலியன் மொழி பேச நான் கற்றுக்கொள்ளவும் இல்லை, இத்தாலியில் இருந்து அழைப்புமில்லை.)

இன்னொரு இத்தாலியக் காட்சிசாலையில் தான் ஒவ்வொரு வருடமும் எமது நிறுவனத்தார் எப்போதும் கருவிகள் இயந்திரங்கள் வாங்குவது வழமை.

இம்முறையும் கிட்டத்தட்ட 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை எமது Chairman கொள்வனவு செய்தார்.

புதிதாய் எமது நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Kiss FM என்ற புதிய ஆங்கில வானொலிக்கே அதிக பொருட்கள்.

அப்போது தான் எங்கள் பெரியவர் சொன்னார் எல்லா வெளிநாட்டவரிலும் இத்தாலியர்கள் தான் நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள் என்றும் நன்றி மறவாதவர்கள் என்றும். பெரியவர் சொன்னதும் உலகிலேயே அழகான பெண்கள் இத்தாலியப் பெண்கள் என்று எங்கேயோ படித்ததும் அதே இத்தாலியக் காட்சித்தளத்திலேயே நிரூபணமானது.

இன்னொரு காட்சித் தளத்திலே எங்கள் குரல் அடர்த்தி / செறிவு (Richness / Depth) போன்றவற்றை அளக்கும் ஒரு நவீன கருவியிருந்தது. என்னுடைய குரல்வளத்தைப் பரிசோதித்த போது சராசரிக்கும் மேலே என்று காட்டியது (அப்படியா, சொல்லவேயில்லை)

இந்தக்கருவி உபயோகப்படுமா என்று பெரியவர் கேட்டபோது, உச்சரிப்பு பற்றி ஆராயும் கருவியொன்றிருந்தால் எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்க வேண்டும் என்றேன். "தமிழிலும் இதே பிரச்சினையா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஓஹோ! அப்படியானால் வீட்டுக்கு வீடு வாசற்படியா?

ஒலிவாங்கிகளின் நுட்பம் குறித்து ஜெர்மனிய நிறுவனமான 'செனஹைசர்'(Senneheiser) நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பல பயனுள்ள விஷயங்கள் கிடைத்தன. ஜெர்மனியர்கள் வீம்புக்காக ஆங்கிலேயருடன் முரண்பட்டு தங்கள் நாட்டில் ஆங்கிலம் பேச மறுத்தாலும் இது போன்ற இடங்களில் என்னமாய் ஆங்கிலம் பேசுகிறார்கள்...

முதல் நாள் Office wear + கழுத்துப்பட்டியுடன் திரிந்தபோது இருந்ததைவிட அடுத்த நாள் டீ ஷேர்ட்டும், டெனிமுமாக உலாவந்தது இலகுவாகவும், களைப்பில்லாமலும் இருந்தது.

இரண்டாம் நாள் நாம் அதிகமாக சுற்றித்திரிந்தது செல்பேசி, செய்ம்மதி, இணையநுட்பங்கள் பற்றிய காட்சித்திடல்களில்...

யாஹு, LG , மோட்டரோலா, பிளக்பெர்ரி, சாம்சுங் போன்ற பல பிரபல நிறுவனங்களின் பிரம்மாண்டமான காட்சித் திடல்கள் அனைவரையும் வாய்பிளக்கச்செய்திருந்தன.

அவை ஒவ்வொன்றிலுமே தங்களது புத்தம் புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தும் களமாக இந்த மாபெரும் கண்காட்சியைப் பயன்படுத்தியதோடு, கண்கவர் லேசர் விளையாட்டுக்கள் அரைகுறை ஆடை மங்கையர் (அந்த ஆடைகள் அரைகுறையிலும் அரைகுறை) ஆளை அசத்தும் நடனங்கள் என்று ஒன்றையொன்று முந்த முயன்றுகொண்டிருந்தன.

அந்தக் கண்காட்சித் திடல்களின் சில படங்கள் கீழே..


இப்போ நம்புறீங்களா? அரை குறை.... ;)


மேலயும் கீழேயும் இருப்பவை புகைப்படக் கருவிகளல்ல.. காமெரா வசதியுள்ள நவீன செல்பேசிகள்..இதில் யாகூ திடலினுள்ளே நுழைந்தபோது நாம் கண்ட காட்சி....

அடுத்த அங்கத்தில்..


பி.கு - ஆதிரை உங்கள் எதிர்வுகூறலை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.
எமது வெற்றி FMஇனால் நடாத்தப்படும் புட்சால்(Futsal) - Vettri FM Futsal challenge 2009 என்ற மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஏற்பாடுகளோடு கொஞ்சம் பிசி.

கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கக் கூட முடியாதளவு வேலை.
இதை இன்று பதிவேற்றமுன்னரே நாக்குத் தள்ளிவிட்டது.
எனினும் பதிவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி விடக் கூடாது என்பதற்காகவே இந்த அங்கம்.

(நேரம் கிடைக்கும் போது பகுதி 8 தொடரும்...)

19 comments:

ப்ரியா பக்கங்கள் said...

///பெரியவர் சொன்னதும் உலகிலேயே அழகான பெண்கள் இத்தாலியப் பெண்கள் என்று எங்கேயோ படித்ததும் அதே இத்தாலியக் காட்சித்தளத்திலேயே நிரூபணமானது.///

உண்மை தான் இத்தாலிய பெண்கள் ரொம்ப ரொம்ப வடிவு
(கண்ணால பார்த்திட்டு வந்த அனுபவம்.. )
ரோமு போங்க தலை , அப்புறம் பயணம் போய் வந்த பதிவில்
"நம்ம நாட்டு கட்டைகள் எல்லாம் எங்காவது" என்று ஒரு வசனம் எழுதுவீங்க பாருங்க!!! ha ha உங்க ரோமு பயண குறிப்பில

யோ வொய்ஸ் (யோகா) said...

இத்தாலி படிக்க வேண்டாம், அப்புறம் உங்கள வந்து அங்க தள்ளி கிட்டு போய்டு வாங்க

எப்படியோ நான் தான் முதல் பின்னூட்டம், மீ த பிரஸ்ட் என்கிறத தமிழில சொன்னேன்

Admin said...

//கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பற்றி கொஞ்சம் விரிவாகவே சொன்னால் பலபேருக்கும் குறிப்பாக ஒலிபரப்பாளர்கள் ஃ தொழிநுட்பவியலாளருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதனால் இந்த அங்கம் முழுதும் நாம் எக்ஸ்போவில் Communic Asia / Broadcast Asiaவில் சுற்றிவரலாம்.//

நல்ல விடயம் அண்ணா...

Admin said...

//அங்கிருந்த இத்தாலிய இளைஞனிடம் சில விஷயங்கள் கேட்டுத்தெரிந்துவிட்டு கொஞ்சம் இயக்கிப்பார்த்தேன். தமிழில் பேசி இத்தாலிய, ஆங்கிலப் பாடல் இசைக்கலவை செய்த முதல் சுது நானாகத்தானிருக்கும்//


அதையும் விட்டு வைக்கவில்லை போலும்... என்கேயும் எப்போது..........

Admin said...

//“ Mmm… you are pretty good at this… You use this same software back at home? ” ( நல்லாச் செய்றீயே... உங்கள் நாட்டிலும் இதையே தான் பயன்படுத்துகிறீர்களா? )//

பொய் சொல்லி இருக்கமாட்டார்...

Admin said...

//(இத்தாலிய DJக்கள் இதை சிரமமானது என்று சொல்கிறார்களே... பேசாமல் நீ இத்தாலிய மொழி படித்துவிட்டு ரோமுக்கு வா) என்று பாராட்டிவிட்டு எனது Visiting cardஐயும் பெற்றுக்கொண்டார்.//


.நல்லவிடயம்தான் அண்ணா நம்ம நேயர்கள் விரும்புவார்களா போவதை...

Admin said...

//என்னுடைய குரல்வளத்தைப் பரிசோதித்த போது சராசரிக்கும் மேலே என்று காட்டியது (அப்படியா, சொல்லவேயில்லை)//


மற்றவங்க இதெல்லாம் சொல்லுவாங்களா...

Admin said...

படங்களிலே இரண்டாவது படம் மட்டுமே பிடிச்சிருக்கு அண்ணா.. ( அரை குகையிலும் அரைகுறை)

மொத்தத்தில் இப்போதான் சிங்கப்பூர் சிங்கம் சூடு பிடிச்சிருக்கு...

வந்தியத்தேவன் said...

லோஷன் இந்த புட்சால் என்றால் என்னவென்பதை விளக்குங்கள் ஈவினிங் ட்ரைவில் அடிக்கடி இந்த விளம்பரம் வந்தது.

சின்னக்குறிப்பு : எனக்கு ஒரு பந்திற்காக 22 பேர் அடிபடுகிறது பிடிக்காது.

அஜுவத் said...

அண்ணா எதுக்கும் இத்தாலி மொழிய கொஞ்சம் படிச்சு வையுங்க..... சில வேள றோமுக்கு போனா உதவியா இருக்கும்(எதயாலும் செட் பண்றத்துக்கு). சும்மா சும்மா.............

Anonymous said...

அண்ணா... பதிவு அசத்தலாய் போகுது.... அது சரி எங்கட பொறாமையை அதிகரிக்கவா அழகழகான உங்க படங்கள பதிவேற்றுறீங்க....

உண்மையில அண்ணா நம்ம நாட்டவர்கள் நல்ல விடயங்களில ஆர்வம் காட்டிறது குறைவுதான்.

/////இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் (அவர் வந்து இனி ஆகப்போவது தான் என்ன?), //////
உண்மைதான்... ஆனாலும் ஒரு தனிமனிதரை நேரடியாக தாக்குவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது..... இருந்தாலும் உண்மையை எப்பவும் சொல்லித்தான் ஆகணும் என்று திருப்திப்பட்டுக்கொள்கிறேன்...

இந்த பதிவில் சொன்ன விடயங்கள் பெரும்பாலானவர்களுக்கு பிரயோசனமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...

பதிவுகள் தொடரட்டும்...
அடுத்த பதிவு விரைவாக வெளிவரட்டும்...
வாழ்த்துக்கள் அண்ணா.....

நன்றி.
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன். தாளம் வானொலி.

என்ன கொடும சார் said...

யோவ்.. அரைகுறையிலும் அரகுறை என்று சொன்னதும் ஆசையாக படத்தை தேடினால் எப்பவும் நீங்களும் நாங்களும் பார்த்து பழகிப்போன MC casual wear தான். மனுசனாயா நீர்.

இருந்தாலும் அந்த photoகளை எடுக்கும்போது உங்களுக்கு இருந்த இருந்த நடுக்கம் photo இல் தெளிவாக தெரியுது சார்.. பாவம்...

கலாச்சார அமைச்சு இதுக்கெல்லாம் ஒரு வருசம் உள்ள போடாது சார்

Media 1st said...

நல்ல விடயம் அண்ணா

ஆ.ஞானசேகரன் said...

சிங்கபூரில் சிங்கம் கலக்குது

வந்தியத்தேவன் said...

வணக்கம் லோஷன்
நேற்று ஒரு ஊடகவியலாளரைச் சந்தித்தேன்(பெயர் வேண்டாமே). உங்கள் பதிவுகள் படிக்கின்றார்.உங்கள் சிங்கை விஜயம் பற்றி ரொம்பவே சிலாகித்துப்பேசினார். //இத்தனை பிரயோசனமான கண்காட்சியில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து வந்திருந்த ஒலி, ஒளி ஊடகங்கள் மிகச் சொற்பமே...//

இந்தவரிகளைப் பற்றிப் பேச்சு வரும்போது. பல ஊடகங்கள் மேல் தன் ஆத்திரத்தைக் கொட்டினார் என்றே கூறவேண்டும். பல கருத்தரங்குகள், கண்காட்சிகளுக்கு சில ஊடகங்களிலிருந்து அவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாத முகாமைத்துவத்திற்க்கு வேண்டப்பட்டவர்கள் மாத்திரம் அனுப்பபடுவதாகவும் போனவர்கள் குடும்பத்திற்க்கு சொப்பிங் செய்தார்களே ஒழிய வந்து தாம் சார்ந்த ஊடகங்களிலோ அல்லது அதில் கற்றவற்றையோ கண்டவற்றையோ ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.

உங்கள் பதிவில் உங்களின் சுவாரஸ்ய அனுபவங்களுடன் அந்த நிகழ்ச்சிகள் பற்றியும் குறிப்பிடுவதைப் பெரிதும் பாராட்டினார். சில பல காரணங்களால் தன்னால் பின்னூட்டம் இடமுடியாது என்றும் கூறியவர். தன் சார்பில் என்னை பின்னூட்டம் இடக்கோரினார்.

பலருக்கு வெளிநாட்டில் உள்நாட்டில் எதாவது ஊடக சம்பந்தமாக நிகழ்வுகள் நடந்தால் அவை பொழுதுபோக்கு நிகழ்வே ஒழிய கற்றல் நிகழ்வாக அவற்றை எடுப்பதில்லை.

Goban said...

அண்ணா நீங்கள் ஒலி 96.8 கேட்டீர்களா? எப்படி இருந்தது? இலங்கை வானொலிக்கும் சிங்கப்பூர் வானொலிக்கும் என்ன வேறுபாடு?

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

Jegatheepan said...

வணக்கம் அண்ணா..... உங்கள் சிங்கப்பூர் பயண பதிவுகள் மிக அருமையாக இருக்கிறது... நிறைய புதிய விஷயங்களை தெரிந்துகொண்டேன்........ வாழ்த்துக்கள் !!!

சி தயாளன் said...

நீங்கள் போட்ட படத்திலும் குறைவான உடையோட பிகர்களை இஞ்ச நடக்கிற மத்த எக்ஸிபிசனில் காணலாம்...:-))

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner