இதுவரையில் வெற்றி TVயில் உள்ளூர்த் தயாரிப்புக்கள் எவையும் ஆரம்பிக்காத காரணத்தால் இதுவரை பார்க்காத, அரிய, அருமையான பல படங்களையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பல தடவைகள் பாதி பார்த்தும் முழுமையாக 'சட்டம்' பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.
80களுக்கே உரிய வழமையான மசாலா படக்கதை.
கமல் - மாதவி ஜோடி
சரத்பாபு கமலின் நண்பனாக
ஜெய்சங்கர் வில்லனாக
கதாநாயகன் பொலிஸ் சி.ஜ.டி & நண்பன் வழக்கறிஞர் – வில்லனுக்காக வாதாடுபவர்
நாயகி மேல் நண்பனின் காதல் - இதனால் கமல் - சரத்பாபு மோதல்
என்ற இலகுவில் ஊகிக்கக்கூடிய திரைக்கதை.
எனினும் அருமையான பாடல்கள்.
இன்று வரை மனதில் நிற்கின்ற 'நண்பனே எனது உயிர் நண்பனே', 'ஒரு நண்பனின் கதை இது', 'அம்மம்மா சரணம் சரணம்'
பொதுவாகவே தமிழ்ப்படங்களில் (முள்ளும் மலரும், சட்டம், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து) சரத்பாபு – கதாநாயகனின் நண்பனாக வந்து எதிரியாக மாறும் கதையமைப்பு காணப்பட்டாலே படம் வெற்றிபெறும் வழமை இருந்திருக்கிறது. (ரஜனி அல்லது கமல் கதாநாயகர்களாக நடித்து)
சரத்பாபுவின் அந்த அதீத கம்பீர குரல் என்னை ஈர்த்த ஒரு விடயம்.
இப்போதும் கமல், ரஜனி நாயகர்கள்.. பாவம் 'நண்பர்' சரத்பாபு. அப்பா, மாமா அல்லது சம்பந்தியாக –
படத்தின் ஒரு காட்சியில் மாதவியும் கமலும் காதலித்து – உரையாடுகிறார்கள்.
காதலுடன் மாதவி கமலிடம் கேட்கிறார் திருமணம் முடிக்கலாமா என்று...
கமல் வேடிக்கையாக – மாதவியை சீண்டுவதற்கு சொல்லும் பதில் ' இப்போ என்ன அவசரம்... 2,3 பிள்ளைகள் பிறக்கட்டும்... அப்புறம் முடிக்கலாம்...'
இந்த living together பற்றி அப்போதே யோசித்தவர் 'நம்மவர்'! திருமணம் செய்யாமல் காதல் மட்டும் செய்துகொண்டே (சமூகத்துக்குப் பயந்து, தயங்கி) மனசுக்குள்ளே ஓரமா ஆசையிருந்தும் இது சரியா தப்பா என்று இப்போதும் 'ரூம் போட்டு' யோசிக்கிறோம் நாம்!
இன்றைய பொலிவூட் கவர்ச்சித்தாரகை பிபாஷா பாசுவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அடிக்கடி முன்னைய நடிகை மாதவியை ஞாபகம் வரும்.
80களில் மாதவி அளவுக்கு கவர்ச்சிக்காட்டிய கதாநாயகி யாரையும் ஞாபகமில்லை.
எனக்கு ஞாபகம் வரும் காலத்திலிருந்து ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகாவுக்குப் பின் கமல், ரஜனி ஆகியோருடன் ஜோடி போட்டவர் மாதவியாகத் தான் இருக்கமுடியும்.
இதோ மாதவி & பிபாஷா பாசு – கண்கள், உதடுகள், உடலமைப்பு எல்லாவற்றையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.
மாதவி
பிபாஷா பாசு – புதிய மாதவிதானே....
என்ன ஒன்று...
பிபாஷா மாதவியை விட பல மடங்கு தாராளம்.
மாதவியின் கவர்ச்சிக்காகவே இருவரும் மாறி மாறி ஒப்பந்தம் செய்தார்கள் என அப்போது நான் விகடனிலோ குமுதத்திலோ வாசித்த ஞாபகம்.
மாதவியின் கண்களில் அப்படியொரு கூர்மையும், போதையும் இருக்கும்.
இதோ போனசாக ஒரு அரிய படம்.. டிக் டிக் டிக் படத்தில் கமலும் மாதவியும் படு கவர்ச்சியாக(அந்தக் காலத்திலேயே) தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போஸ் இது..

18 comments:
மாதவி எனக்கு பிடித்த நடிகை, அந்தக் கால ரம்பா இவர் தான்.
மாதவி ஜீனத் அமனின் பிரதிதானே தல..,
//இப்போதும் கமல், ரஜனி நாயகர்கள்.. பாவம் 'நண்பர்' சரத்பாபு. அப்பா, மாமா அல்லது சம்பந்தியாக –//
இது பரவாயில்லை....
பல கதாநாயகிகள் அம்மாக்களாக மாறிவிட்டார்களே?
மீனா? குழந்தை அளவில்.... கதாநாயகியாக நடித்துவிட்டார்... இன்னும் சிறிது காலத்தில் அம்மா, அக்காவாக நடித்தாலும் அதிசயமில்லை....
//பிபாஷா பாசு – புதிய மாதவிதானே....
//
அப்படித்தான் தெரிகிறது.
வெற்றி TV யில் அழுகை சீரியல்கள் இல்லையாமே? நல்ல விடயம். இலங்கையின் விஜய் TV யாக மாற்றுங்கள். எங்கள் கேபிளில் வெற்றி TV தெரிவதில்லை :(
நல்ல ஒப்பீடு... இருந்தாலும் எனக்கு பிடிச்சது ஸ்ரீதேவி
வெற்றி தொலைகாட்சி எப்போ இணையத்தில் வரும் பாஸ்?
வானொலி தொடர்ந்து கேட்பேன் இணையம் மூலமா.
கடைசிப்படம் செம காமெடியா இருக்கு.. ஹாஹாஹ!
ஐயோ மாலை போட்டவங்க யாராவது கடைசி படத்தை பாத்தா கழற்றிவிடுவார்கள்.
இருந்தமாலும் நல்லாத்தான் இருக்கு.......
ssssshhhhaaaaabbaaaa yeppadi pa ippadi yellam............lol
எனது தமிழ்நெஞ்சம்.ORG க்கு அதிக அளவில் ரெஃபரல் வாசகர்களை அறிமுகப்படுத்தியதில் முக்கியமானவர் நீங்கள்.
உங்கள் தளத்திலிருந்து எனக்கு நிறைய வாசகர்கள் கிடைத்துள்ளனர்.
நன்றியுடன்
த.நெ.
உங்கள் கால நடிகை மாதவியை பற்றி எழுதயிருக்கிறீர்கள், அதை உங்களது கால இன்னொருவர் வந்தி ஜொள்ளுகிறார்.
சட்டம் படத்திலுள்ள அந்த பாடல்கள் எனக்கும் பிடிக்கும்
இப்படி எல்லாம் ஒப்பிடிறீங்க. இனி யார் யார் உங்க கிட்ட மாட்டப் போறாங்களோ தெரியல்ல..? உங்கள் வர்ணனையைப் பார்த்த பின் தோன்றுகிறது... இனி யாரை வர்ணிக்கப் போறீங்க....?
அண்ணா.......
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நம்ம நயன்தாரா அக்கா தான் பிகினியில் தோன்றினார் எண்டு பில்லா வெளிவந்த நேரம் பேச்சு அடிபட்டுதே........ 20 வருசத்துக்கு முதலே அதெல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சே........பிறகு எதுக்கு தேவையில்லாத பொய் பில்டப்பு கொடுக்கினம்???????
மாதவி, பிபாஷா...
தனியக இருக்கும் அவர்களது நிறம்.
:)
இலங்கை தொலைக்காட்சிகளை நீங்கள் உட்பட பலரும் பலமுறை விமர்சனம் செய்தாச்சு. அந்த தொலைக்காட்சிகள் விட்ட தவறை நீங்களும் இனி வரும் காலங்களில் செய்தால் உங்களுக்கும் விமர்சனங்கள் தாராளமாக கிடைக்கும். எம்மவர்களை முன்னுக்கு கொண்டு வாருங்கள். பல இடங்களில் கேபிள் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம். எனவே எம்மவர்கள் திரும்பி பார்க்கணும் எண்டால் எம்மவர்களுக்கு அங்கெ இடம் வேண்டும்...
வித்தியாசமான பதிவு... உங்க டி வி என்பதாலா? அல்லது கமல் படம் என்பதாலா? ஓகே ஓகே ... மானாட மயிலாடவுக்கு நீங்க கிழிச்ச கிழி எனக்கு சந்தோசம். Part 4 கெட்டு குட்டி சுவர போட்டுது....
//வந்தியத்தேவன் said...
மாதவி எனக்கு பிடித்த நடிகை, அந்தக் கால ரம்பா இவர் தான்///
இந்த கால ரம்பா யார்? (அவங்களுக்கு தான் கல்யாணமாமே! )
சிந்தனாவாதிகளே... இங்கயும் ஒருத்தன் அப்படிப் படம் போடுகிறான்... :)
@Subankan
//வெற்றி TV யில் அழுகை சீரியல்கள் இல்லையாமே? நல்ல விடயம்.
உண்மையாகவா....? :P
அய்யோ அய்யோ.... ஜீன்சை மடிச்சுவிட்டு நடங்கடா. ஜொள் வெள்ளத்தில நனையப்போகுது. (நான் விட்ட ஜொள்ளைச் சொன்னேன்)
ரஜினியும், மாதவியும் நடித்த படமொன்றின் பாடலொன்றை நேற்று பார்த்தேன். அப்போதுதான் தாங்களின் மாதவி-பிபாஷா ஒப்பிடு மிகவும் பொருந்தியதாதை பார்க்க முடிந்தது.
ஆனாலும், மாதவியை விட பிபாஷா கொஞ்சம் கறுப்பு என்று நினைக்கிறேன். மற்றப்படி எல்லமே சரிதான். (நான் நடிப்பைச் சொன்னேன்.)
பகிர்வுக்கு நன்றி நண்பா
Post a Comment