November 26, 2009

நதியா நதியா நைல் நதியா...



முதலில் எனக்கு கிடைத்த மேல்மாகாண தமிழ் சாகித்திய விருதுக்கு அன்போடு நீங்கள் அனைவரும் வழங்கிய வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்....

அந்த சாகித்திய விழா, என்னுடன் விருது பெற்றோர் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு வரும்.. உண்மையில் விரைவாக வரும்..

என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..

என்னுடைய வலைப்பதிவுப் பக்கமும் நண்பர்களின் வலையுலகப் பக்கமும் முழுமையாக வந்து ஒரு சில நாட்களாகின்றன. கொஞ்சம் அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்தாலும், அது தான் காரணம் என்று சொல்லமாட்டேன்..

எவ்வளவு தான் ஆணி பிடுங்கல் இருந்தாலும் ஆணிகளில் மாட்டி சிக்கி கிழிந்துவிடாமல் பதிவு போடுவது எனக்கு எப்போதுமே வழக்கமானது.

ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..

நன்றாக வேலை செய்துகொண்டிருந்த எனது கணினியை இடம் மாற்றி அழகுபடுத்த அந்த அன்பர் கடந்த ஞாயிறு மேற்கொண்ட அதி தீவிர முயற்சியில் கணினியின் Power supply unit வெடித்து சிதறியுள்ளது.

அதை இதோ செய்கிறேன், இன்றே சரி செய்கிறேன் என்று இழுத்துக் கொண்டே இருக்கும் புண்ணியவானால் அலுவலக நேரத்தில் தனிப்பட்ட வலையுலகப் பயணங்கள் எல்லாம் பாழ்.. அலுவலக,நிகழ்ச்சிப் பணிகளுக்காக மட்டும் எல்லா அறிவிப்பாளருக்குமான பொதுக் கணினியில் கொஞ்ச நேரம் துழாவுவதொடு சரி..

வீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.
அதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்..

அதற்குப் பிறகு கணினியும் நானும் அவன் சொன்னபடி தான்..
அவனுக்கு என்னென்ன , யார் யார் தேவையோ அத்தனையும் கணினித் திரையில் வந்தாக வேண்டும்..
அது டோரா, மிக்கி மவுஸ், டொம் அன்ட் ஜெர்ரி, பன்டா கரடி தொடக்கம் கமல், சூர்யா, தனது படம் இன்னும் பல விஷயங்கள் வரை போகும்..
அவனுக்கு அலுக்கும் வரை அல்லது தூக்கம் வரும் வரை கணினி என் கைகளுக்கு வராது..

பதிவுகள் பல நாள் போடாததால் பதிவுப் பக்கம் புற்று கட்டிவிடும் என்று சக நண்பர் ஒருவர் வேறு பயமுறுத்தி இருக்கிறார்.

இன்று காலை அலுவலகம் வந்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..

எனது மேசையில் எனது அலுவலகக் கணினி பாவனைக்கு தயார் நிலையில் திருத்தப்பட்டு இருக்கிறது..(கொடுத்த வசையும், அனுப்பிய மிகத் தீவிரமான மெமோவும் இவ்வளவு துரிதமாக வேலை செய்துள்ளதா?)

வாழ்க எம் பொறியியலாளர்...

======

பதிவிடப் பல விஷயங்கள் இருக்கின்றன..
கிரிக்கெட் பக்கம் போய்ப் பதிவிடலாம் என்று பார்த்தால் நடக்கும் போட்டிகள் முடியட்டுமே எனத் தோன்றுகிறது..

குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..

இலங்கை அணி அடிப்படியில் மீண்டும் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.

மறுபக்கம் பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை உமர் அக்மல் கன்னி சதம் பெற்றுள்ளார்..
உண்மையில் கிரிக்கெட் கூடிப் போச்சுத்தான்..
======

இலங்கைப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்பாடுகள் மிக மும்முரமாக இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சி..

நல்ல ஒரு குழு சேர்ந்துள்ளார்கள்.. அவர்களின் நிகழ்ச்சி நிரல், ஏற்பாடு விபரங்கள், இடம், நேரம் இதர விஷயங்களை அறிந்துகொள்ள..

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்


பலபேரும் இதுபற்றி அறிவித்தல் பதிவுகள் போட்டுள்ளார்கள்.. சுபாங்கன் தான் முதலில் பதிவு போட்டவர் என்ற அடிப்படையிலும், ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் என்ற அடிப்படையிலும் அவரது சுட்டியைத் தந்துள்ளேன்.

எல்லாரும் இது பற்றி அறிவித்தல் பதிவுகள் போடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால், நான் இப்போதைக்கு இது பற்றி விளம்பரத் தட்டியை என் தளத்தின் மேலே போட்டிருப்பதோடு இப்போதைக்கு விடுகிறேன்.

முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.

=========

இன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..
எனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.
=========

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை என யோசிப்போருக்கு, இன்று எனது காலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பல இனிமையான பாடல்களில் இன்னும் மனதில் நிற்கும் பூமழை பொழியுது திரைப்படப் பாடல் தான் அது..

வரிகள், SPB +சித்ராவின் குரல் இனிமை என்பவற்றையும் விட, R.D.பர்மனின் மெட்டும், பாடலின் வரிகளோடு இணைந்து ஒலிக்கும் மிருதங்க,தபேலா தாளக்கட்டுக்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன.. எனவே தான்..

நதியா நதியா நைல் நதியா...

இதுமட்டுமல்லாமல் நீண்ட தேடலுக்குப் பின்னர் இன்று பாய்மரக்கப்பல் திரைப்படப் பாடலான 'ஈரத் தாமரைப்பூவே' பாடலையும் தேடி என் ஒலிபரப்புக்கு உதவிய தம்பி திஷோவுக்கும் நன்றிகள்..


27 comments:

Think Why Not said...

Congratz Anna...

Subankan said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா

//ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//

அவர் உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரோ? சும்மாதான் கேட்டேன்.

பதிவர் சந்திப்பில் கலக்கலாம்!

ப்ரியா பக்கங்கள் said...

வீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.
அதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்.. //
அப்பரில அவ்வளவு கண் ; பொடியன் தான் வில்லன் உங்களுக்கு .. ஒரு நாளைக்கு !!

இன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..//

UNP தேர்தல் அறிக்கை ??
உயர்தரம் results ?? வந்துட்டாமே

Anonymous said...

அருமையான கலக்கல் மெலோடி பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அழகுபடுத்த கணினியைத் தூக்கி பவர் சப்ளை வெடித்ததுக்கும் பொறியியலாளரின் அதிமேதாவித்தனத்துக்கும் என்ன சம்மந்தம்? :)) அந்தாள் பாவமப்பா..

balavasakan said...

இன்னொரு முறை வாழ்த்துக்கள் அண்ணா .......

//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒரு மாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//


அது சரி நீங்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தீர்கள் இரண்டு முறை கரி பூசப்பட்ட கருப்பு லோசன் அண்ணாவையும் பார்க்க ஆவலாய் உள்ளேன் ......ஹி..ஹி....

யோ வொய்ஸ் (யோகா) said...

wel come back loshan

விருதுக்கு வாழ்த்துக்கள்..

Admin said...

மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல விருதுகள் பெற பிராத்திக்கின்றேன்.



பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.

வந்தியத்தேவன் said...

//என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..//

அன்புக்கு நன்றிகள். மீண்டும் வாழ்த்துக்கள். விருது பெற்றதற்க்கு விருந்து வேண்டும். விருந்திலையே விருதும் இருக்கின்றது கவனிக்கவும்.

//எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//

அவரைத் திட்டாதீர்கள். அவர்களுக்கு என்ன கஸ்டமோ. ஒரு கணணிப் பொறியியலாளரின் மனம் இன்னொரு கணணிப் பொறியியலாளருக்குத் தான் தெரியும். பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்க்குத் தெரியும் போது இதுவும் தெரியலாம்.

//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//

ஹாஹா ஆனாலும் பொடியன் மைதானத்தில் அவ்வளவு அட்டகாசம் பண்ணவில்லை.

வொட்டோரியின் சதம் மிஸ் பண்ணியதையும் எழுதியிருக்கலாம்.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனாலும் நியூட்டனின் 3ஆவது விதியை நான் நம்புகின்றேன்.

நதியா நதியா பாடல் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்.

நதியாவின் பெரிய சைஸ் படம் கிடைக்கவில்லை. கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.

தர்ஷன் said...

ம்ம்
இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் தொடங்கி அதிலும் 3 விக்கெட் போச்சு. நாளக்கி மேட்ச் முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்

ரெஜோலன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள். . .


'ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..
எனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.
========='

ஏதோ சொல்ல வர்ரீங்க ஆனா சொல்லமாட்டேங்கிறீங்க . . .உங்கள் இல்லாத நம்பிக்கை ஏன் மத்தவங்களுக்கு இருக்கு . . . நம்பி ஏமாறுகிற மக்களுக்கு தெளிவு படுத்தலாமே . . .

archchana said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய நாளைய பொழுதுகள் சார்ந்த ஏதாவது பதிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன்.அது பொய்த்துப்போகவில்லை.
ஏனெனில் சக்தியில் இருந்த காலத்தில் சொல்லு தலைவா ....,மற்ற கொடி தொடர்பான ஏனைய பாடல்கள்.....,ராம்கி யின் படபாட்டு ஒன்று புறப்படுவாய் தோழா என்று வரும் உண்மையாகவே நினைவு வரவில்லை ஞாபக சக்தி தொலைந்து விட்டது. . . இவை எல்லாம் கொழும்பு இல் இருந்து ஒலிபரப்ப ஒரு தில் வேணும் என்று வன்னியில் இருந்து ஒரு திரில் உடன் கேட்போம் . ஆனால் இன்று எம் வனப்பினை இழந்தபின் வசந்தம் வந்தால் என்ன வரட்சி வந்தால் என்ன எல்லாமே ஒன்று தான். ஏமாற்றமே வாழ்க்கை எனினும் சின்னதொரு எதிர்பார்ப்பு .................. எந்த ஒரு action இற்கும் ......................

Lojee said...

congratulations again anna.......... meelum pala viruthu pera vaalthukirom

KANA VARO said...

///முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.//

உண்மை தான்
2007 ஆண்டு யாழ்பாணத்தில நானும் நண்பன் ஒருவனும் மணித்தியாலத்துக்கு 150 ரூபாய் கொடுத்து net cafe ல இருந்து blog செய்தம்.
http://thaksan.blogspot.com
கவிதைகள் டிசைன் பண்ணி போட்டம். பிறகு அப்பிடியே விட்டிடன். 1 ஆவது பதிவர் சந்திப்புக்கு கொஞ்ச நாளுக்கு முதல் தான் திருப்ப blog பண்ணினான். இப்ப தொடர்ந்து எழுதுறன் ....

ARV Loshan said...

Thinks Why Not - Wonders How said...
Congratz Anna...//

tx :)

====================

Subankan said...
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா//
நன்றிகள்..

//ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//

அவர் உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரோ? சும்மாதான் கேட்டேன்.//
ஹீ ஹீ.. அப்படி எல்லாம் யோசிக்கப் படாது.. ஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)

பதிவர் சந்திப்பில் கலக்கலாம்!//
கலக்கலாமா? ஆகா.. கண்ணைக் கட்டுதே..

ARV Loshan said...

ப்ரியானந்த சுவாமிகள் said...
வீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.
அதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்.. //
அப்பரில அவ்வளவு கண் ; பொடியன் தான் வில்லன் உங்களுக்கு .. ஒரு நாளைக்கு !!//
;) அவன் அப்படி யோசிக்காவிட்டாலும் நீங்கள் எல்லாம் சேர்ந்து செட் பண்ணி பொது வேட்பாளர் ஆக்கிடுவீங்க போலிருக்கே.. ;)

இன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..//

UNP தேர்தல் அறிக்கை ??
உயர்தரம் results ?? வந்துட்டாமே//

ம்ம்.. அவையும் தான்..
தமிழ் மாணவியும் மாணவனும் கலக்கி இருக்கினம்..

ARV Loshan said...

Covai Ravee said...
அருமையான கலக்கல் மெலோடி பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.//
அவை எப்போதும் பிடித்தவை ரவி.. வருகைக்கு நன்றி..

============


யோ வொய்ஸ் (யோகா) said...
wel come back loshan

விருதுக்கு வாழ்த்துக்கள்..//
நன்றி யோ

==============


சந்ரு said...
மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல விருதுகள் பெற பிராத்திக்கின்றேன். //
மீண்டும் நன்றி சந்ரு



பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.//
:) சந்திப்போம்

வந்தியத்தேவன் said...

// LOSHAN said...
ஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)//

என் ரசிகர்களை நான் என்றைக்கும் ஏமாத்துவதில்லை, அதிலும் என் இனத்தைச் (IT) சேர்ந்தவர் என்பதால் அவருக்காகவே இடையிடையே படப்பதிவுகள் வரும்,

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

Unknown said...

விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

நிறையவே பிந்திப் பின்னூட்டமிடுவதால் மற்றைய விடயங்கள் பழசாகிவிட்டன மற்றவர்களுக்கு என்பதால் என்னத்த சொல்ல....

ARV Loshan said...

மதுவதனன் மௌ. / cowboymathu said...
அழகுபடுத்த கணினியைத் தூக்கி பவர் சப்ளை வெடித்ததுக்கும் பொறியியலாளரின் அதிமேதாவித்தனத்துக்கும் என்ன சம்மந்தம்? :)) அந்தாள் பாவமப்பா..//

நல்ல கதை.. ஒழுங்கா வேலை செய்து கொண்டிருந்த கணினியை இடம் மாற்றி வைக்கப் போகத் தானே இது நடந்தது.. அவனே செய்த படியால் அவனே காரணம் .. :)

===============

Balavasakan said...
இன்னொரு முறை வாழ்த்துக்கள் அண்ணா .......//
இன்னொரு முறை நன்றி தம்பி..

//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒரு மாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//

அது சரி நீங்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தீர்கள் இரண்டு முறை கரி பூசப்பட்ட கருப்பு லோசன் அண்ணாவையும் பார்க்க ஆவலாய் உள்ளேன் ......ஹி..ஹி....//
சொல்லுவீங்க..

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
//என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..//

அன்புக்கு நன்றிகள். மீண்டும் வாழ்த்துக்கள். விருது பெற்றதற்க்கு விருந்து வேண்டும். விருந்திலையே விருதும் இருக்கின்றது கவனிக்கவும்.//

அப்படியா? வைத்தால் போச்சு.. ஆனால் தொடர்ந்து விருந்துகள் மயமாய்க் கிடக்கே..
வரும்..
உடனே விருந்து வைத்து மகிழ்விக்க நாங்கள் என்ன வந்தியா? ;)


//எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//

அவரைத் திட்டாதீர்கள். அவர்களுக்கு என்ன கஸ்டமோ. ஒரு கணணிப் பொறியியலாளரின் மனம் இன்னொரு கணணிப் பொறியியலாளருக்குத் தான் தெரியும். பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்க்குத் தெரியும் போது இதுவும் தெரியலாம்.//

பெண் - மனம்- இரக்கம்.. ம்ம் ஏதோ விளங்குது..


//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//

ஹாஹா ஆனாலும் பொடியன் மைதானத்தில் அவ்வளவு அட்டகாசம் பண்ணவில்லை. //

உண்மை தான்.. இப்படியே தொடர்ந்து நடந்துகொண்டால் நல்ல பையன் ஆகிவிடுவான்..

வொட்டோரியின் சதம் மிஸ் பண்ணியதையும் எழுதியிருக்கலாம்.//
ம்ம் மிஸ் பண்ணிட்டன்

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனாலும் நியூட்டனின் 3ஆவது விதியை நான் நம்புகின்றேன்..//
ஒரு விதியும் இல்லை.. எல்லாம் தலைவிதி.. தமிழனின் தலை விதி..

நதியா நதியா பாடல் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்.

நதியாவின் பெரிய சைஸ் படம் கிடைக்கவில்லை. கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.//
ஆகா. உங்கள் கால ஹீரோயின் இல்லையா? ;)
அடுத்தமுறை இப்படி யாரையாவது பற்றி எழுதினால் மறக்காமல் கேட்கிறேன்..

ARV Loshan said...

தர்ஷன் said...
ம்ம்
இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் தொடங்கி அதிலும் 3 விக்கெட் போச்சு. நாளக்கி மேட்ச் முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்//
அப்படியே நடந்தது..

==============

ரெஜோலன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள். . . //
நன்றி சகோ..


'ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..
எனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.
========='

ஏதோ சொல்ல வர்ரீங்க ஆனா சொல்லமாட்டேங்கிறீங்க . . .உங்கள் இல்லாத நம்பிக்கை ஏன் மத்தவங்களுக்கு இருக்கு . . . நம்பி ஏமாறுகிற மக்களுக்கு தெளிவு படுத்தலாமே . . .//
அது அவரவர் நம்பிக்கை.. நான் தெளிந்துள்ளேன் என்று நினைக்கிறன்.
ஆனால் நம்பிக்கை வேறு விருப்பம் வேறு.. புரிந்ததா?

ARV Loshan said...

archchana said...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய நாளைய பொழுதுகள் சார்ந்த ஏதாவது பதிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன்.அது பொய்த்துப்போகவில்லை.
ஏனெனில் சக்தியில் இருந்த காலத்தில் சொல்லு தலைவா ....,மற்ற கொடி தொடர்பான ஏனைய பாடல்கள்.....,ராம்கி யின் படபாட்டு ஒன்று புறப்படுவாய் தோழா என்று வரும் உண்மையாகவே நினைவு வரவில்லை ஞாபக சக்தி தொலைந்து விட்டது. . . இவை எல்லாம் கொழும்பு இல் இருந்து ஒலிபரப்ப ஒரு தில் வேணும் என்று வன்னியில் இருந்து ஒரு திரில் உடன் கேட்போம் . ஆனால் இன்று எம் வனப்பினை இழந்தபின் வசந்தம் வந்தால் என்ன வரட்சி வந்தால் என்ன எல்லாமே ஒன்று தான். ஏமாற்றமே வாழ்க்கை எனினும் சின்னதொரு எதிர்பார்ப்பு .................. எந்த ஒரு action இற்கும் ......................//

நன்றி அர்ச்சனா.. அருமையான ஞாபக சக்தி..
அது ஒரு காலம்..
ஆனால் எப்போதும் கிடைக்கும் சுதந்திரத்தின் எல்லை வரை (மீறாமல்) செல்லவேண்டும் என்பதே எனது நோக்கம்.. அதை சரியான வழியில் பயன்படுத்துவதில் இன்றுவரை பின்நிற்கவில்லை.

===========
Lojee said...
congratulations again anna.......... meelum pala viruthu pera vaalthukirom

நன்றி Lojee

ARV Loshan said...

VARO said...
///முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.//

உண்மை தான்
2007 ஆண்டு யாழ்பாணத்தில நானும் நண்பன் ஒருவனும் மணித்தியாலத்துக்கு 150 ரூபாய் கொடுத்து net cafe ல இருந்து blog செய்தம்.
http://thaksan.blogspot.com
கவிதைகள் டிசைன் பண்ணி போட்டம். பிறகு அப்பிடியே விட்டிடன். 1 ஆவது பதிவர் சந்திப்புக்கு கொஞ்ச நாளுக்கு முதல் தான் திருப்ப blog பண்ணினான். இப்ப தொடர்ந்து எழுதுறன் ....//
நல்ல விஷயம் வரோ.. பதிவுகளின் மீதான உங்கள் தாகம் தெரிகிறது.. தொடருங்கள்..


VARO said...
வாழ்த்துக்கள்//
நன்றி

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
// LOSHAN said...
ஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)//

என் ரசிகர்களை நான் என்றைக்கும் ஏமாத்துவதில்லை, அதிலும் என் இனத்தைச் (IT) சேர்ந்தவர் என்பதால் அவருக்காகவே இடையிடையே படப்பதிவுகள் வரும்,//

வாழ்க வந்தியத்தேவர்.. மஜாவீரர் மன்னிக்க மகாவீரர் வந்தி வாழ்க... ;)
இத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.. ;)

==============

ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் நண்பா//

நன்றி நண்பா..

============

கனககோபி said...
விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

நிறையவே பிந்திப் பின்னூட்டமிடுவதால் மற்றைய விடயங்கள் பழசாகிவிட்டன மற்றவர்களுக்கு என்பதால் என்னத்த சொல்ல....//

நன்றி..

Author said...

விருது பெற்றமைக்விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
நான் தொடர்பில் இருக்க நினைக்க "ஒரு நண்பனின் அறியாமை வார்த்தைகளில்" நீங்கள் தொடர்பறுத்து விட்டது கவலைக்கிடமானது. என்றாலும் உங்கள் திறமையையும் உங்களையும் மிகவும் மதிக்கிறேன். பாராட்டுக்கள். கு வாழ்த்துக்கள்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner