November 17, 2009

கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..


தொடர் பதிவுகள் என்றாலே தொந்தரவு என்று விலகிச்செல்லும் பலநேரம் இருந்தாலும், ஒருசில தொடர் பதிவுகளை வாசிக்கும் போது யாராவது என்னையும் இந்தத்தொடர் பதிவிற்கு அழைக்கமாட்டார்களா என்று ஆசையும் வரும்.

அப்படிப்பட்ட மூன்று தொடர் பதிவுகளை அண்மையில் பல பதிவுகளில் வாசித்திருந்தேன். அதில் ஒன்றுக்கு அன்புத் தம்பி சுபாங்கன் என்னை அழைத்துள்ளார்.

மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறேன்.

மூலப்பதிவிலிருந்து சுவைக்காக ஒரு சில விடயங்களை மட்டும் மாற்றிவிட்டேன்.

இதோ எனக்குப்பிடித்த என்னுடைய கட்சிக்காரர்களும், எதிர்க் கட்சிக்காரர்களும்..

எழுத்தாளர்&கவிஞர்

பிடித்தவர் : சுஜாதா

எழுத்து நடை, சிந்தனைப்போக்கு, காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்ட திறன், எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்திலேயே சிந்தித்தவர் என்று இவர் பற்றி ஏராளம் சொல்லலாம். இவரது எழுத்து சிறுவயது முதலே என்னை கவர்ந்தது. சுஜாதாவின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது.
: வைரமுத்து
சிறுவயது முதலே இவரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும் நேசித்தேன்.

இவர்களிருவரையும் ஏன் பிடிக்கும் என்று எழுதப்போனால் ஒரு தனிப்பதிவே போடலாம்.அநேகமாக இவர்கள் இருவரதும் எல்லா நூல்களுமே நான் வாங்கிவைத்துள்ளேன்.


பிடிக்காதவர்: ஞானி (ஆவி ஞானியே தான்.அதாவது ஆனந்த விகடன் ஞானி), சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.

சிறுகதை என்று சிறுவர்களுக்கான கதைகளும். கவிதை என்று கதைகளை எழுதி வதைப்போரும், தமக்குத்தாமே 'கவிஞர்' மகுடம் ஒட்டிக்கொள்வோரும் கூட எனது பிடிக்காத எழுத்தாளர் பட்டியலில் உள்ளார்கள்.




நடிகர்

பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


பிடிக்காதவர்: விஜய் என்று சொல்வேன் என்று நினைத்தால் தப்பு!
இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது. நினைத்தாலே மனதில் சொல்லொணா எரிச்சல் வருகிற, மூஞ்சியில் மூன்று குத்துவிடலாம் என நினைக்கிற சிலர் – பிரஷாந், மனோஜ், முரளி, விக்ராந்த், 'ஆனந்த தாண்டவம்' ஹீரோ.. பெயரும் ஞாபகம் வருதில்ல

நடிகை

பிடித்தவர் : அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி

பின்னிருவரின் திருமணத்தின் பின்னதான ஓய்வின் பின் அசின் தான் என்னைக் குத்தகை எடுத்துள்ளார்.
மூவரதும் இயல்பான அழகு, ஆபாசமில்லாத நடிப்பு, பாத்திரமுணர்ந்த உணர்வு வெளிப்பாடுகள் இவைமட்டுமன்றி, மூவரின் கண்களும், உதடுகளும் அவர்களது சமகாலத்தவரை பின்தள்ளிவிட்டனர்.


பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா

நடத்தை, நடிப்பு, dressing sense என்று எதுவுமே இவர்களிடம் எனக்கு பிடிப்பதில்லை. ரசித்ததைவிட அருவருத்ததே அதிகம். (த்ரிஷா, ராதிகாவின் வெகுசில படங்கள் பிடித்தவை)


இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம், பாசில், கமல்ஹாசன்

இம்மூவரினது இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் நான் இதுவரை தவறவிட்டதில்லை. அவற்றுள் எந்தவொன்றும் பிடிக்காமல் போனதுமில்லை. என் ரசனைக்குகந்த விஷயங்களை, மேலும் தரமான ரசனையோடு தரும் சிற்பிகள்.


பிடிக்காதவர்: பேரரசு
மொக்கையை கூட ரசிக்கலாம் இது சக்கை.
கொடுமையோ கொடுமை.
இதுல வேற நடித்தும், பாடல் எழுதியும் வேறு கொல்கிறார். இனி இசையமைக்கவும் போறாராம்!
தாங்காது சாமி தாங்காது.

பாடகர்

பிடித்தவர்: எப்போதும் SPB
நடிப்புக்கு கமல் என்றால் பாடலுக்கு பாலு தான்!
திறமைகளும் அவற்றால் வந்த சாதனைகளும் குவிந்திருந்தாலும் தலைக்கனம் ஏறாத ஒரு அன்பு மலை! பண்பும், பணிவும், எந்தப்பாடலையும் ரசிக்க வைக்கும் அந்த ஈடுபாடும், இளையோரை ஊக்குவிக்கும் நல்ல மனதும் பிடிக்கும்.

வித்தியாசமான குரல்வளம் கொண்ட அருண்மொழியும் பிடிக்கும்.


பிடிக்காதவர்: தமிழில் பாடுகிறோம் என்று கொடுமையாகக் காதுகளில் ஈயம் கரைத்து ஊற்றித் தமிழைக்கொலை செய்யும் சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.


பாடகி

பிடித்தவர் : P.சுசீலா

தாய்மையின் கனிவு, காதலின் ஏக்கம், மனைவியின் அன்பு, தமிழின் இனிமை, பெண்மையின் இயல்பு என்ற அத்தனையையும் சம விகிதத்தில் கலந்த இந்தக் குயில் குரலின் பல பாடல்களில் மனதைத் தொலைத்தவன் நான்.

இவர் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றது வாழ்நாளில் மிகப்பெருமையான விஷயம்.

சித்ரா, சுஜாதா அண்மைய புதிய பாடகி ஷ்ரேயா கோஷல், கல்யாணியும் இவரது சாயலுடையவர்கள் என்பதால் பிடிக்கும்.


பிடிக்காதவர் : மதுஸ்ரீ

A.R.ரஹ்மான் தமிழ்த்திரைப்பட பாடல்களுக்குத் தந்த சாபம்! இசைப்புயலின் இசையில் மட்டும் ஓரளவு திருத்தமாகப்பாடி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தமிழை வன் புணர்ச்சி செய்கிறார். இவரது தமிழ்க்கொலை தாங்காமல் இவரது சில பாடல்களை நான் ஒலிபரப்புவதே இல்லை.


இசையமைப்பாளர்

பிடித்தவர் - வித்யாசாகர்

முன்பிருந்தே இவர் மீது ஒரு கிறக்கம்,அனுதாபம்,இவரது மெட்டுக்கள் கேட்டு ஆச்சர்யம்.
இசைஞானி-இசைப்புயல் இருவரையும் ஈடு கொடுக்கக்கூடிய இசை ஞானம்.
பல மிகப் பெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தும் பெரியளவில் பேசப்படவில்லை.
மிகப் பெரும் ஹிட் பாடல்கள் கொடுத்தான் முன்னணி இசையமைப்பாளராக யாரும் ஏற்கிறார்கள் இல்லை என இவர் மீது ஒரு எனக்கு ஒரு இரக்கம் உள்ளது.


பிடிக்காதவர் - கார்த்திக் ராஜா

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா கேட்ட பிறகு பெரிதாக வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்ததோ என்னவோ இவர் மீது கோபமாக உள்ளது.
இவரது மெட்டுக்கள் எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
விதிவிலக்கு - அடியே கிளியே -குடைக்குள் மழை

கிரிக்கெட் வீரர்

பிடித்தவர் -
பலபேர் இருந்தும்.. சட்டென்று மனதில் வருபவர் ரொஷான் மகாநாம. எளிமையான,நல்ல மனிதர். நேர்மையான நேர்த்தியான விளையாட்டுவீரர்.

பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது 'நண்பர்' ஸ்ரீசாந்தும் இருக்கிறார்


அரசியல்வாதி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
காரணம் பிடித்தவராக யாருமே இல்லை. (உயிருடன்)
பிடிக்காதவர் என்று யாரை சொல்வது என்று தெரிவுக் குழப்பம்.

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைக்கும் நால்வர் -





67 comments:

ஆயில்யன் said...

:) வுட்டாச்சா ! ரைட்டு அழைப்பு

பிடிக்கல எனக்கு பிடிக்கல எதுவுமே பிடிக்கலன்னு போஸ்ட மனசு வராம அப்படியே வுட்டு வைச்சிருக்கேன் பாஸ்

நான் அப்படியே இருந்திட்டு போகட்டுமா? :)

அடுத்த தொடர் பதிவுக்கு நீங்க கூப்பிடாமலே எண்ட்ரீ போடறேன் - டீல் ஒ.கே!

என்ன கொடும சார் said...

//ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது 'நண்பர்' ஸ்ரீசாந்தும் இருக்கிறா//

எனக்கும் அந்த ஆசைதான். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டு ஹர்பஜனக்கு நாலு சாத்து சாத்துவோமா?

மனுஷன் ஒரு விக்கட் எடுத்தால் அலறுவதும் ஓடுவதும்.. இந்திய கிரிக்கட்டின் மரியாதையை இல்லாமல் செய்துவிட்டது. ட்ராவிட் விளையாடும் அணியில் இவ்வளவு கேவலம் கெட்டதுகள்.

ARV Loshan said...

என்ன செய்வது.. ஓகே தானே சோழனும்.. ஆனா உங்க நேர்மை பிடிச்சிருக்கு ஆயில்ஸ்,, :)

ஆனா இப்பவே சொல்லிட்டேன்.. அடுத்த தொடர்பதிவு உங்களை மண்டை காய வைக்கும்.. சொல்லிட்டேன்..

Subankan said...

இருவரின் விருப்பங்களும் பல இடங்களில் ஒத்துப் போகின்றனவே!

ஹர்பஜனில் கடுப்போடு பலர் இருக்கிறார்கள் போல. இலங்கைக்கு வருமுன் மூக்கை கழற்றி வைத்துவிட்டு வருவது நலம்.

என்ன கொடும சார் said...

வாலி தொடர்பாக மப்ரூக் உங்களிடம் வாதிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது)

என்.கே.அஷோக்பரன் said...

எனக்கும் கண்ணில காட்ட ஏலாத கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் தான். அவரிடம் ஸ்போட்டிவ்னெஸ் இல்லை...

அரசியல்வாதிகளும் போட்டிருக்கலாம்........;-)

கலையரசன் said...

//பிடிக்காதவர்: ஞானி, சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.//

என் மனதில் உள்ள... விளக்க நினைத்த... விஷயம்! அருமையாய் சொன்னீர்கள் லோஷ்!!

Unknown said...

//பின்னிருவரின் திருமணத்தின் பின்னதான ஓய்வின் பின் அசின் தான் என்னைக் குத்தகை எடுத்துள்ளார். //

ஓம் ஓம்... எடுப்பினம் எடுப்பினம்....

//பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்//

ம்... பிறவிக்கலைஞன் என்ற சொல் அருமை அண்ணா....


//பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா

நடத்தை, நடிப்பு, dressing sense என்று எதுவுமே இவர்களிடம் எனக்கு பிடிப்பதில்லை. ரசித்ததைவிட அருவருத்ததே அதிகம். (த்ரிஷா, ராதிகாவின் வெகுசில படங்கள் பிடித்தவை)//

எனக்கொரு சின்ன சந்தேகம்... அப்ப மற்ற கதாநாயகிகள் எல்லாரின்ர நடத்தையும் நல்லம் எண்டுறியளோ? இல்ல... சும்மா ஒரு சந்தேகம் தான்....


வித்யாசாகர் நல்ல திறமைசாலி என்றாலும் இவருக்கு முன்னணி கதாநாயகர்கள் என்று சொல்கின்றவர்களின் படங்கள் வராதது தான் இவரின் சாபம் அண்ணா.
மனுசன் நல்லாத் தான் இசையமைக்குது, ஆனா அதிர்ஷ்டம் அல்லது திறமைக்கேற்ற பரிசுகள் தான் கிடைக்குதில்ல....

உங்கட எல்லா விருப்பங்களும் பெரும்பாலும் ஒத்துப் போறதால உங்கள எங்கட அப்பாவிகள் சங்கத்தில சேர்க்கிறதா முடிவெடுத்திருக்கிறம்...
வாறியளோ? :P

யோ வொய்ஸ் (யோகா) said...

////எழுத்தாளர்&கவிஞர்

பிடித்தவர் : சுஜாதா, வைரமுத்து////

எனக்கும் சுஜாதா ரொம்ப பிடிக்கும், வைரமுத்து ஒரு காலத்தில் அவரது பைத்தியமாக இருந்தேன் ஆனாலும் எப்போ காக்கா பிடித்து பட்டம் பெற தொடங்கினாரோ அப்போதிலிருந்து அவர் மேல் இருந்த காதல் குறைந்து விட்டது, எனினும் அவரது பல கவிதைகள் இன்னும் எனக்கு மனபாடம்

////பிடிக்காதவர்: ஞானி, சோ////

இவங்க சுப்ரமணிய சுவாமி வகையை சேர்ந்தவர்கள்

////நடிகர் பிடித்தவர் : கமல்ஹாசன்////

இவரை பிடிக்காது என யாராவது சொல்லுவார்களா?

////பிடிக்காதவர்: பிரஷாந், மனோஜ், முரளி, விக்ராந்த், 'ஆனந்த தாண்டவம்' ஹீரோ..
//// இதுல நீங்க நம்ம கட்சி

//// நடிகை
பிடித்தவர் : அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி////

சேம் பிளட்

////பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா//// ராதிகா என்றாலே எனக்கு மெகா சீரியல் நினைவுக்கு பயமுறுத்துகிறார், இப்பொ கொஞ்ச நாளா குஷ்புவும் இந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டார்

////இயக்குனர் பிடித்தவர் : மணிரத்னம், பாசில், கமல்ஹாசன்////

மணிரத்தினம் எப்பவும் எனது பேவரிட்

////பிடிக்காதவர்: பேரரசு//// அவ்வவ்வ்வ்வ்வ், இனி சில பாடல்கள் கேட்கிறப்ப இரத்தம் வழிய போகுது

////பாடகர் பிடித்தவர்: எப்போதும் SPB//// இவரை போன்ற எளிய மனிரை கண்டதில்லை

////பிடிக்காதவர்: சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.//// இவர்களின் சில பாடல்கள் எனக்கு பிடிக்கும்

////பாடகி
பிடித்தவர் : P.சுசீலா//// இவங்க குரலை கேட்டுகிட்டே இருக்கலாம்

////பிடிக்காதவர் : மதுஸ்ரீ//// இசைப்புயலின் படங்களில் முக்கியமாக ஆயுத எழுத்தில் இவரது பாடல் நன்றாக இருக்கும்,

////இசையமைப்பாளர்
பிடித்தவர் - வித்யாசாகர்//// வித்யாசாகரும் ஒரு எளிமை விரும்பி, இவரது கர்ணா பட பாடலான “மலரே மௌனமா” பாடல் தமிழில் மிக சிறந்த மெலடிகளில் ஒன்று, இவர் செய்த பிழை ஆரம்ப காலங்களில் சில ஆங்கில பாடல்களை கொப்பியடித்தது, ஆனாலும் மெலடி என்றால் அது வித்யாசாகர் என்னுமளவிற்கு இசையமைக்கிறார், இவரது இன்னொரு எனக்கு பிடித்த பாடல் “நூறாண்டுக்கு ஒரு முறை”

////பிடிக்காதவர் - கார்த்திக் ராஜா//// எனக்கும் இவரை பிடிக்காது காரணம், ஒரு பேட்டியில் ரகுமானின் பாடல்களை கேட்பதில்லை, கேட்குமளவிற்கு இல்லை என கூறியிருக்கிறார்

////கிரிக்கெட் வீரர்பிடித்தவர் -
ரொஷான் மகாநாம. //// எனக்கும் மகாநாம ரொம்பவே பிடிக்கும்

////பிடிக்காதவர் -ஹர்பஜன் சிங்.. ////
சேம் பிளட், என் கைல மட்டும் கிடைத்தால் அவன என்னா பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.

ரொம்பவே பெரிய பின்னூட்டமோ????

என்ன கொடும சார் said...

விஜயகாந்த், கமல் + பிஜேபி
http://eksaar.blogspot.com/2009/11/blog-post_17.html

Karthikeyan G said...

//பிடிக்காதவர்: ஞானி,//

do you mean இலக்கிய விமர்சகர் 'கோவை ஞானி' or Anandha vikatan fame 'ஞாநி'?

Anonymous said...

////பலபேர் இருந்தும்.. சட்டென்று மனதில் வருபவர் ரொஷான் மகாநாம. எளிமையான,நல்ல மனிதர். நேர்மையான நேர்த்தியான விளையாட்டுவீரர்.//

பலே.. எனக்கும் தான். என்ட அறையில் இவரின்ட போஸ்டர் இருந்தது. ஓய்வு பெற்றது கவலையே.

//பிடித்தவர் - வித்யாசாகர்

முன்பிருந்தே இவர் மீது ஒரு கிறக்கம்,அனுதாபம்,இவரது மெட்டுக்கள் கேட்டு ஆச்சர்யம்.
இசைஞானி-இசைப்புயல் இருவரையும் ஈடு கொடுக்கக்கூடிய இசை ஞானம்.
பல மிகப் பெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தும் பெரியளவில் பேசப்படவில்லை.
மிகப் பெரும் ஹிட் பாடல்கள் கொடுத்தான் முன்னணி இசையமைப்பாளராக யாரும் ஏற்கிறார்கள் இல்லை என இவர் மீது ஒரு எனக்கு ஒரு இரக்கம் உள்ளது.//


Same Blood...

//பிடித்தவர்: எப்போதும் SPB
நடிப்புக்கு கமல் என்றால் பாடலுக்கு பாலு தான்!
திறமைகளும் அவற்றால் வந்த சாதனைகளும் குவிந்திருந்தாலும் தலைக்கனம் ஏறாத ஒரு அன்பு மலை! பண்பும், பணிவும், எந்தப்பாடலையும் ரசிக்க வைக்கும் அந்த ஈடுபாடும், இளையோரை ஊக்குவிக்கும் நல்ல மனதும் பிடிக்கும்.//

SAME HERE....... woohoo :D

//பிடிக்காதவர்: ஞானி, சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.//

//
பிடிக்காதவர்: பேரரசு
மொக்கையை கூட ரசிக்கலாம் இது சக்கை.
கொடுமையோ கொடுமை.
இதுல வேற நடித்தும், பாடல் எழுதியும் வேறு கொல்கிறார். இனி இசையமைக்கவும் போறாராம்!
தாங்காது சாமி தாங்காது.//

அப்படி போடு அரிவாள...

Well Said...

I dont know why I never liked Sujatha. I read almost all of his writings. But, I just didnt find anything interesting. May be I am a serious reader and not interested in light reading.

Abt, Sridevi. Which one. The old one or vijayakumar's daughter. I think the latter one acted well in "Priyamana Thozhi". Unlucky actress though.

மேவி... said...

wow... sujatha ; ennoda all time favorite..... avaroda eluthai yethaiyum naan miss panninathu illai....

ellATHUKKUM thantha vilakkam arumai

balavasakan said...

சுஜாதா, ஸ்ரீதேவி, மணிரத்னம், வைரமுத்து, கமல், spb, எனக்கும் பிடிக்கும்....

ஆனால் நீங்கள் எங்கள் ரஹ்மானை கைவிட்டதை ஏற்கமுடியாது உங்கள் அந்த பதிவு வாசித்தேன் அத்தனை காலமும் ரஹமானின் தீவிர ரசிகனாக இருந்து விட்டு பின்னர் ....இப்படி கடசி மாறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்..

நன்றி மறப்பது நன்றன்று...

sanjeevan said...

fazil is a good director. but lot of people dnt no him.thanks for remind him,am a big fan of him :)

Unknown said...

மாட்டி விட்டாச்சா.... ஆணி புடுங்கல்களிலிருந்து ஓய்வு கிடைத்ததும் முதல் வேலை இதுதான்

புல்லட் said...

எல்லாமே கொமன் மேட்டரா இருந்தாலும் உங்கட எழுத்து சிரிக்க மற்றும் ரசிக்க வைக்குது பாஸ்.. அதிலும் மதுசிறீ வன்புணர்ச்சி செய்த கதை வாசித்தபோது கபீர் குபீர்தான்.. கவனம் மது அடுத்த பதிவில போட்டுடப்போறான்..

தங்க முகுந்தன் said...

பிடிச்சதும் - பிடிக்காததும்! - அன்பாய் இருப்போமே! ...என்று 14ஆந்திகதியே பதிவிட்டுவிட்டேனே!

//பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.//

இன்றைக்குத்தான் தெரியும்!

இல்லாவிட்டால் பல நண்பர்களைப் பார்ப்பதற்காக இலங்கை வரும் இவரை நான் ஒரு தடவை எதிர்பாராத விதமாக விமானத்தில் சந்தித்தேன். அதாவது என்னிடம் இவர் எழுதுவதற்கு பேனை கேட்டார்! நான் கொடுத்தேன். பின்னர் திருப்பித் தரும்போது தான் பேச்சுத் தொடங்கியது! எனக்கு அவராக அறிமுகப் படுத்திய பின்தான் அவரைத் தெரிந்து கொண்டேன். அங்கேயே அப்போதே லோசனுக்காக முகத்தைப் பொத்தி....! எனக்கு யாரையும் அப்படி அடிக்க மனம் வராது.
மன்னிக்கவும் லோசரே!

ARV Loshan said...

Karthikeyan G said...
//பிடிக்காதவர்: ஞானி,//

do you mean இலக்கிய விமர்சகர் 'கோவை ஞானி' or Anandha vikatan fame 'ஞாநி'?//

ஆகா.. தெளிவா சொல்லி இருக்கணுமோ.. இப்பவே மாத்திடுறேன்..
ஆவி ஞானியே தான்.. அதாவது ஆனந்த விகடன் ஞானி..

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
//ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது 'நண்பர்' ஸ்ரீசாந்தும் இருக்கிறா//

எனக்கும் அந்த ஆசைதான். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டு ஹர்பஜனக்கு நாலு சாத்து சாத்துவோமா? //
நானும் ரெடி தான்.. ஆனால் உஷ்.. யாராவது கேட்டிட்டு ஹர்பஜனிடம் சொல்லிட்டா அடுத்தமுறை மனுஷன் இங்கே வராது.. ;)


மனுஷன் ஒரு விக்கட் எடுத்தால் அலறுவதும் ஓடுவதும்.. இந்திய கிரிக்கட்டின் மரியாதையை இல்லாமல் செய்துவிட்டது. ட்ராவிட் விளையாடும் அணியில் இவ்வளவு கேவலம் கெட்டதுகள்.//
உண்மை.. கனவான்கள் பலர் அணியில் இருந்தும் இவர் போன்றவர்களால் இந்திய அணிக்கு Fair play teamஎன்ற பெயர் இல்லை.

ARV Loshan said...

Subankan said...
இருவரின் விருப்பங்களும் பல இடங்களில் ஒத்துப் போகின்றனவே!//
அது தான் நேற்றே சொன்னமில்ல..

ஹர்பஜனில் கடுப்போடு பலர் இருக்கிறார்கள் போல. இலங்கைக்கு வருமுன் மூக்கை கழற்றி வைத்துவிட்டு வருவது நலம்.//
மூக்கைக் கழற்றினால் விடுவோமா?
முதுகு இருக்கில்ல.. குனிய வச்சு மொத்த மாட்டோம்?

=================

என்ன கொடும சார் said...
வாலி தொடர்பாக மப்ரூக் உங்களிடம் வாதிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது)//
அது ஒரு அழகிய காலம்.. :)

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...
எனக்கும் கண்ணில காட்ட ஏலாத கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் தான். அவரிடம் ஸ்போட்டிவ்னெஸ் இல்லை...//
அவரிடம் இப்போ கொஞ்ச நாளா திறமைகளும் இல்லாமல் போய்க் கொண்டிருக்குது போல.. ஐ ஜாலி.. இன்றும் விக்கெட் எதுவும் இல்லை..

அரசியல்வாதிகளும் போட்டிருக்கலாம்........;-)//
இல்லை அசோக்.. நீங்களோ,நானோ அரசியலுக்கு வந்த பிறகு பிடித்தவர் என்று யாரவது ஒருவரைப் போடலாம்.. :)
அதுவரை யாரும் இல்லை.
==================


கலையரசன் said...
//பிடிக்காதவர்: ஞானி, சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.//

என் மனதில் உள்ள... விளக்க நினைத்த... விஷயம்! அருமையாய் சொன்னீர்கள் லோஷ்!!//
நன்றி கலை.. ஒரே சிந்தனை.. :)
மகிழ்ச்சி

ARV Loshan said...

கனககோபி said...

ம்... பிறவிக்கலைஞன் என்ற சொல் அருமை அண்ணா....//
நன்றி.. இந்த சொல்லுக்கு வேறு யாரும் மிகப் பொருத்தமாகத் தெரியவில்லை.. காரணம் எல்லாக் கலைகளும் அடங்கிய ஒரு களஞ்சியம் கமல்.


//பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா

நடத்தை, நடிப்பு, dressing sense என்று எதுவுமே இவர்களிடம் எனக்கு பிடிப்பதில்லை. ரசித்ததைவிட அருவருத்ததே அதிகம். (த்ரிஷா, ராதிகாவின் வெகுசில படங்கள் பிடித்தவை)//

எனக்கொரு சின்ன சந்தேகம்... அப்ப மற்ற கதாநாயகிகள் எல்லாரின்ர நடத்தையும் நல்லம் எண்டுறியளோ? இல்ல... சும்மா ஒரு சந்தேகம் தான்....//
பிறர் எல்லோரது நடத்தைகளையும் விமர்சிக்க நம்மில் யாரும் புனிதர் இல்லையே கோபி..
ஆனால் ஒருவர் நடத்தை பிடிக்கவில்லை என்று சொல்ல எம் எல்லோருக்குமே உரிமை உண்டு.. :)
புரிந்ததா?


வித்யாசாகர் நல்ல திறமைசாலி என்றாலும் இவருக்கு முன்னணி கதாநாயகர்கள் என்று சொல்கின்றவர்களின் படங்கள் வராதது தான் இவரின் சாபம் அண்ணா.
மனுசன் நல்லாத் தான் இசையமைக்குது, ஆனா அதிர்ஷ்டம் அல்லது திறமைக்கேற்ற பரிசுகள் தான் கிடைக்குதில்ல....//

அப்படி சொல்ல முடியாது..
ரஜினி - சந்திரமுகி
கமல் - அன்பே சிவம்
அஜித் - வில்லன்,பரமசிவன்
விஜய் - கில்லி,திருமலை
விக்ரம் - அருள்,தூள்,தில்

ஆனால் பாவம் தன்னை முன்னிறுத்த தெரியாத அப்பாவி இவர்

உங்கட எல்லா விருப்பங்களும் பெரும்பாலும் ஒத்துப் போறதால உங்கள எங்கட அப்பாவிகள் சங்கத்தில சேர்க்கிறதா முடிவெடுத்திருக்கிறம்...
வாறியளோ? :P//
அடடா டூ லேட்.. அகில உலக அப்பாவிகள் சங்கத்தில் என்னை தலைவராக நேற்று தானே தெரிவு செய்தார்கள்..
நேற்று சர்வதேச சகிப்புத் தன்மை நாள்.. ;)
நீங்கள் விரும்பினால் உங்கள் நன்னடத்தை மூலமாக எம் சங்கத்தில் அங்கத்துவம் பெற முயற்சிக்கலாம்..

Subankan said...

அண்ணா, என்னாச்சு உங்களுக்கு? உடம்பு கிடம்பு(??) சரியில்லையா? பதில் பின்னூட்டம் எல்லாம் வருது? அழைத்த அடுத்தநாளே பதிவு வருது? உடம்பைப் பாத்துக்கோங்க

Unknown said...

//பிறர் எல்லோரது நடத்தைகளையும் விமர்சிக்க நம்மில் யாரும் புனிதர் இல்லையே கோபி..
ஆனால் ஒருவர் நடத்தை பிடிக்கவில்லை என்று சொல்ல எம் எல்லோருக்குமே உரிமை உண்டு.. :)
புரிந்ததா? //

நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கிறீங்களே......
இயேசுநாதர் சொன்ன போதனை மாதிரியே இருக்குது....


//ஆனால் பாவம் தன்னை முன்னிறுத்த தெரியாத அப்பாவி இவர் //

உண்மையா எனக்கு வித்யாசாகர் இவ்வளவு படத்துக்கும் இசையமைச்சது ஞாபகம் வரேல...
(தெரியாது எண்டு சொல்ல மாட்டன்.)
முன்னிறுத்தத் தெரியாத மனுசன் தான்....
சில பாடல்கள் இசையின் தரத்துக்கு ஏற்ற மாதிரி பிரபலமாகிறேல எண்டு ஒரு உணர்வு.
உதாரணமா அதைக் கூடவா மறந்துவிட்டாய் எண்ட பாட்டு எனக்கு நிறையப் பிடிச்சிருந்தது.
ஆனா அதின்ர பிரபலம் காணாது.
(பிரபலம் ஆகேல எண்டு சொல்லேல... ஆனா காணாது.)


//அடடா டூ லேட்.. அகில உலக அப்பாவிகள் சங்கத்தில் என்னை தலைவராக நேற்று தானே தெரிவு செய்தார்கள்.. //

நான் இன்னும் ராஜினாமாக் கடிதம் குடுக்கேலயே?
ராஜினாமாக் கடிதம் குடுத்து ராஜினாமா பண்ணினது வேற ஒருத்தர்...
நீங்கள் பிழையா புரிஞ்சு கொண்டிற்றியள் எண்டு நம்பிறன். :P

KANA VARO said...

///பிடிக்காதவர்: விஜய் என்று சொல்வேன் என்று நினைத்தால் தப்பு!
இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது. ///

athu.... ha ha ha ..

KANA VARO said...

//பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்//

enakkum kamalai pidikkum thaan. aanaal michchathaiyum adukki kondu poonaal naaridum...

Lojee said...

anna pidithathu pidikkathathu ellam solliddenga. unga pidiththa model yaaru?????????????

வாகீசன் said...

// தமிழில் பாடுகிறோம் என்று கொடுமையாகக் காதுகளில் ஈயம் கரைத்து ஊற்றித் தமிழைக்கொலை செய்யும் சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.//
இவர்கள் தமிழைக் கொலைசெய்யவில்லை என்று யாராவது கூறமுடியுமா? ஆனால் அவர்கள் சிறந்த பாடகர்கள். அவர்களை உங்களுக்கு பிடிக்காதது வருத்தமே. அதைவிட தமிழ் பாடகர்கள் பலர் ஒரு தனித்துவமில்லாமல் பாடுகிறார்களே? மதுஸ்ரீ போல தமிழைக் கொலைசெய்பவர்களும் இல்லாமல் இல்லை.
எனக்கும் வித்யாசாகர் மிகவும் பிடித்தவர், குறிப்பாக அவரது மெல்லிசைப் பாடலகள், கண்டேன் காதலை படத்தில் நான் மொழியறிந்தேன் என்னைக் கொள்ளைகொண்ட சமீபத்து பாடல்.

வாகீசன் said...

How do you write ஸ்ரீ in unicode? I had to copy it from the article.

அஸ்பர் said...

முரளிய பிடிக்காததுக்கான காரணம் என்ன அண்ணா??????

ஹர்பஜன் ok..
ஸ்ரீஷாந் double ok

http://athirupthikal.blogspot.com

Anonymous said...

நீங்கள் சொன்னவர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...சுஜாதா,கமல்ஹாசன்,அசின்,ஸ்ரீதேவி,மணிரத்னம்,SPB,P.சுசீலா,ரொஷான் மகாநாம...

ஆ.ஞானசேகரன் said...

//ஞானி (ஆவி ஞானியே தான்.அதாவது ஆனந்த விகடன் ஞானி), சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.//

துணிச்சலான உண்மை..... மிக்க நன்றி நண்பா.. இவர்கள் சாதிக்கமாட்டார்கள்...

ஆ.ஞானசேகரன் said...

மனதில் பட்டதை பளிச்சனு சொல்லிவொட்டீர்கள் நண்பா

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது.//

அப்ப விஜயையும் பிடிக்காது.. நல்லது.

//பிடிக்காதவர்: த்ரிஷா

நடத்தை//

அந்த வீடியோவைப் பார்த்து துலைச்சிட்டீங்களா..? அதுக்கு அந்தம்மா என்ன பண்ணமுடியும்? :D

//பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.//

ஹர்பஜனும் பிடித்தவர் பிடிக்காதவர் தொடர்பதிவில பிடிக்காத அறிவிப்பாளர் எண்டு உங்களை போட்டிருக்காராம். அவரும் கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் எண்டு எழுதியிருக்கிறாராம்.. ஹீஹீ

தர்ஷன் said...

வித்தியாசாகர் என்றாலே எனக்கு ஞாபகம் வருவது படங்களில் கட்டாயமாய் இருக்குமே ஒரு இருகுரல் மெலடி பாடல் அதுதான்
மலரே மௌனமா ஆரம்பித்து பல படங்களில், ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அழகூரில் பூத்தவளே, ஆதிப் பட பாடல்கள் தவிர தான் இசையமைத்த விஜய் படங்களில் அவர் அப்படியா இசையமைத்தார். தன திறமையை வெளிக்கொணர முயற்சிக்கவில்லையே மதுர பாடல்கள் கேட்டுப்பாருங்கள்

கார்த்தி said...

கார்த்திக்ராஜாவின் இசையில் வந்த டும் டும் அல்பம் பாடல்கள் அருமையாக இருக்கும். இப்பாடல்களை போல் இவருக்கு மற்ற படங்களிலும் போட முடியாதா என்று எனக்கு கோபம் வருவதுண்டு. வேறு படங்களில் ஒரு சில பாடல்களே கேட்க நன்றாக இருக்கும். நிறைய வாய்ப்புக்கள் கிடைத்தும் சரியாக இவர் அதை அண்ணன் போல் (யுவன்) பயன்படுத்தவில்லை.

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் சுஜாதா ரொம்ப பிடிக்கும், வைரமுத்து ஒரு காலத்தில் அவரது பைத்தியமாக இருந்தேன் ஆனாலும் எப்போ காக்கா பிடித்து பட்டம் பெற தொடங்கினாரோ அப்போதிலிருந்து அவர் மேல் இருந்த காதல் குறைந்து விட்டது, எனினும் அவரது பல கவிதைகள் இன்னும் எனக்கு மனபாடம்//

காக்காவை நான் கவிதைக்குள் குழப்புவதில்லை.. :)
இளையராஜா+வைரமுத்து, ரஹ்மான் +வைரமுத்து பொற்காலங்கள்..
மீண்டும் வருமா என்று ஏக்கமுண்டு..


////பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா//// ராதிகா என்றாலே எனக்கு மெகா சீரியல் நினைவுக்கு பயமுறுத்துகிறார், இப்பொ கொஞ்ச நாளா குஷ்புவும் இந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டார்//
எனக்கு குண்டு சாரி குஷ்புவில் எப்போதும் ஈர்ப்பில்லாததால் நோ ப்ரொப்லெம்.

////பிடிக்காதவர்: சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.//// இவர்களின் சில பாடல்கள் எனக்கு பிடிக்கும்//
உதித் ரஹ்மாண்டியம் பாடிய பாடல்கள்,இவர்களின் ஹிந்திப் பாடல்கள் விதிவில்லக்கு



////பிடிக்காதவர் : மதுஸ்ரீ//// இசைப்புயலின் படங்களில் முக்கியமாக ஆயுத எழுத்தில் இவரது பாடல் நன்றாக இருக்கும்,//
ஆனால் அதே பாடலை சுஜாதாவோ,சித்ராவோ என் சின்மயீயோ பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்..

////இசையமைப்பாளர்
பிடித்தவர் - வித்யாசாகர்//// வித்யாசாகரும் ஒரு எளிமை விரும்பி, இவரது கர்ணா பட பாடலான “மலரே மௌனமா” பாடல் தமிழில் மிக சிறந்த மெலடிகளில் ஒன்று, இவர் செய்த பிழை ஆரம்ப காலங்களில் சில ஆங்கில பாடல்களை கொப்பியடித்தது, ஆனாலும் மெலடி என்றால் அது வித்யாசாகர் என்னுமளவிற்கு இசையமைக்கிறார், இவரது இன்னொரு எனக்கு பிடித்த பாடல் “நூறாண்டுக்கு ஒரு முறை”//

மலரே மௌனமா ஒரு குறிஞ்சிப் பூ.. அண்மையில் வெளிவந்த கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான் பாடல்கள் கூட அருமை..
திருமலை - அழகூரில் பூத்தவளே எனக்கு மிகப் பிடித்தது.. கேட்க

////பிடிக்காதவர் - கார்த்திக் ராஜா//// எனக்கும் இவரை பிடிக்காது காரணம், ஒரு பேட்டியில் ரகுமானின் பாடல்களை கேட்பதில்லை, கேட்குமளவிற்கு இல்லை என கூறியிருக்கிறார்//
அது தான் பொறாமை.. அரசியல் என்றும் சொல்லலாம்

////பிடிக்காதவர் -ஹர்பஜன் சிங்.. ////
சேம் பிளட், என் கைல மட்டும் கிடைத்தால் அவன என்னா பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.//

very good.. நாம எல்லாரும் சேர்ந்து ஹர்பஜன் எதிர்ப்பு சங்கம் ஆரம்பிக்கலாம்.. ஸ்ரீசாந்த் தலைவர், சைமண்ட்ஸ் செயலாளர், நான் மட்டும் பொருளாளர்..
:)

ரொம்பவே பெரிய பின்னூட்டமோ????//
ஹீ ஹீ ஹீ.. அதனாலென்ன பரவாயில்லை..

ARV Loshan said...

Mukilini said...
////பலபேர் இருந்தும்.. சட்டென்று மனதில் வருபவர் ரொஷான் மகாநாம. எளிமையான,நல்ல மனிதர். நேர்மையான நேர்த்தியான விளையாட்டுவீரர்.//

பலே.. எனக்கும் தான். என்ட அறையில் இவரின்ட போஸ்டர் இருந்தது. ஓய்வு பெற்றது கவலையே. //
வெட்டு கொத்துக்கு உட்பட்டு மானம் போகாமல் தானாக விலகி விட்டார். அதுவும் எனக்கு பிடித்தது


//
பிடிக்காதவர்: பேரரசு
மொக்கையை கூட ரசிக்கலாம் இது சக்கை.
கொடுமையோ கொடுமை.
இதுல வேற நடித்தும், பாடல் எழுதியும் வேறு கொல்கிறார். இனி இசையமைக்கவும் போறாராம்!
தாங்காது சாமி தாங்காது.//

அப்படி போடு அரிவாள... //

இப்ப தானே பேரரசு பிடிக்காது என்றேன்.. அரிவாள் என்று மறுபடி ஞாபகப்படுத்துறீங்களே.. நியாயமா?

Well Said...

I dont know why I never liked Sujatha. I read almost all of his writings. But, I just didnt find anything interesting. May be I am a serious reader and not interested in light reading. //
may be. But most of our age ppl, youth like Sujatha.. Their fav author is Sujatha (majority)

Abt, Sridevi. Which one. The old one or vijayakumar's daughter. I think the latter one acted well in "Priyamana Thozhi". Unlucky actress though.//
For me one n only Sridevi is Moondraam pirai, Vaazhve maayam, Johnny Sridevi.. :)

யோ வொய்ஸ் (யோகா) said...

///ஆனால் அதே பாடலை சுஜாதாவோ,சித்ராவோ என் சின்மயீயோ பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்//

என்னா லோஷன் உங்கள் சின்மயியா? சொல்லவேயில்லை

ARV Loshan said...

டம்பி மேவீ said...
wow... sujatha ; ennoda all time favorite..... avaroda eluthai yethaiyum naan miss panninathu illai....

ellATHUKKUM thantha vilakkam arumai//

நன்றி நன்றி நன்றி

===============

Balavasakan said...
சுஜாதா, ஸ்ரீதேவி, மணிரத்னம், வைரமுத்து, கமல், spb, எனக்கும் பிடிக்கும்....

ஆனால் நீங்கள் எங்கள் ரஹ்மானை கைவிட்டதை ஏற்கமுடியாது உங்கள் அந்த பதிவு வாசித்தேன் அத்தனை காலமும் ரஹமானின் தீவிர ரசிகனாக இருந்து விட்டு பின்னர் ....இப்படி கடசி மாறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்..

நன்றி மறப்பது நன்றன்று...//

நீங்கள் வருங்காலத்தில் அரசியல்வாதியாக வரும் எண்ணம் இருக்கோ? அடிக்கடி கண்டிக்கிறீங்க.. ;)

இதுல என்ன நன்றி? ரசனை தானே.. நானே முன்பு ஒரு முறை சொன்னேன்..
80ல் இளையராஜா
90ல் ரஹ்மான்
90ல் இருந்து இப்போதுவரை வித்யாசாகர்..

ரஹ்மானின் பாடல்கள் சில இப்போதும் பிடிக்கும்.. ஆனால் மிகப் பிடித்தவர் ரஹ்மான் இல்லை

ARV Loshan said...

கார்த்தி said...
கார்த்திக்ராஜாவின் இசையில் வந்த டும் டும் அல்பம் பாடல்கள் அருமையாக இருக்கும். இப்பாடல்களை போல் இவருக்கு மற்ற படங்களிலும் போட முடியாதா என்று எனக்கு கோபம் வருவதுண்டு. வேறு படங்களில் ஒரு சில பாடல்களே கேட்க நன்றாக இருக்கும். நிறைய வாய்ப்புக்கள் கிடைத்தும் சரியாக இவர் அதை அண்ணன் போல் (யுவன்) பயன்படுத்தவில்லை.//

ஆமாம்.. டும் டும் டும் பாடல்கள் எனக்கும் பிடித்தன.. நன்றி ஞாபகமூட்டியமைக்கு..
ஆனால் கார்த்திக் ராஜா தான் அண்ணா... யுவன் தம்பி :)

ARV Loshan said...

sanjeevan said...
fazil is a good director. but lot of people dnt no him.thanks for remind him,am a big fan of him :)//

yes.. But his films are more popular than him here.. :)
Who can forget வருஷம் 16 , ஏன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே, காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா... யாரால் மறக்க முடியும்?

=========

Kiruthikan Kumarasamy said...
மாட்டி விட்டாச்சா.... ஆணி புடுங்கல்களிலிருந்து ஓய்வு கிடைத்ததும் முதல் வேலை இதுதான்//
நல்லது.. பார்த்திட்டே இருப்பேன்..

ARV Loshan said...

புல்லட் said...
எல்லாமே கொமன் மேட்டரா இருந்தாலும் உங்கட எழுத்து சிரிக்க மற்றும் ரசிக்க வைக்குது பாஸ்..//
ஆகா ஆகா.. நன்றி.. டுமீலையே சிரிக்க வச்சுட்டேனா? (அடப் பாவி இது நகைச்சுவைப் பதிவுன்னு நக்கல் செய்தாயா?)

அதிலும் மதுசிறீ வன்புணர்ச்சி செய்த கதை வாசித்தபோது கபீர் குபீர்தான்.. கவனம் மது அடுத்த பதிவில போட்டுடப்போறான்..//
ஹீ ஹீ.. 'அப்பிடியான' மேட்டர்னா இப்போது பசுப்பையன் மது தான் ஞாபகம் வருகிறார்.. அப்பிடித்தானே?
இலங்கையின் டொக்டர்.மாத்ருபூதம் மது வாழ்க.. ;)

=============

தங்க முகுந்தன் said...
பிடிச்சதும் - பிடிக்காததும்! - அன்பாய் இருப்போமே! ...என்று 14ஆந்திகதியே பதிவிட்டுவிட்டேனே!//
ஓகோ.. இப்ப தான் பார்த்தேன்.. :)

//பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.//

இன்றைக்குத்தான் தெரியும்!

எனக்கு யாரையும் அப்படி அடிக்க மனம் வராது.
மன்னிக்கவும் லோசரே!//

ஆகா.. நல்ல மனிதர் தங்கர் வாழ்க.. :)
அடுத்தமுறை சந்தித்தால் நான் கேட்டதா சொல்லுங்கோ..

ARV Loshan said...

Subankan said...
அண்ணா, என்னாச்சு உங்களுக்கு? உடம்பு கிடம்பு(??) சரியில்லையா? பதில் பின்னூட்டம் எல்லாம் வருது? அழைத்த அடுத்தநாளே பதிவு வருது? உடம்பைப் பாத்துக்கோங்க//

நக்கல்?
ஒரு மனுஷனை திருந்த விடமாட்டீங்களே..
ஆணி பிடுங்கல், தலை போகிற வேலை இல்லாததால் கொஞ்சம் ரிலாக்ஸா எழுதினாப் பொறுக்காதே..

=================

ARV Loshan said...

கனககோபி said...
//பிறர் எல்லோரது நடத்தைகளையும் விமர்சிக்க நம்மில் யாரும் புனிதர் இல்லையே கோபி..
ஆனால் ஒருவர் நடத்தை பிடிக்கவில்லை என்று சொல்ல எம் எல்லோருக்குமே உரிமை உண்டு.. :)
புரிந்ததா? //

நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கிறீங்களே......
இயேசுநாதர் சொன்ன போதனை மாதிரியே இருக்குது....//

நான் நல்லவனே தான்.. ஆனால் ரொம்ப எல்லாம் இல்லை..
அந்த அப்பாவி மனிதரோடு எல்லாம் ஒப்பிடுறது அவ்வளவு நல்லா இல்லை.. ஆர்ப்பாட்டம் எங்கேயாவது நடக்கும் கவனம்


//ஆனால் பாவம் தன்னை முன்னிறுத்த தெரியாத அப்பாவி இவர் //

உண்மையா எனக்கு வித்யாசாகர் இவ்வளவு படத்துக்கும் இசையமைச்சது ஞாபகம் வரேல...
(தெரியாது எண்டு சொல்ல மாட்டன்.)
முன்னிறுத்தத் தெரியாத மனுசன் தான்....
சில பாடல்கள் இசையின் தரத்துக்கு ஏற்ற மாதிரி பிரபலமாகிறேல எண்டு ஒரு உணர்வு.
உதாரணமா அதைக் கூடவா மறந்துவிட்டாய் எண்ட பாட்டு எனக்கு நிறையப் பிடிச்சிருந்தது.
ஆனா அதின்ர பிரபலம் காணாது.//
ஜெயம் கொண்டான் பாடல்கள் எனக்கும் பிடித்தவை.. நான் வரைந்து வைத்த சூரியன், அடைமழைக் காலமும் கலக்கல்..

(பிரபலம் ஆகேல எண்டு சொல்லேல... ஆனா காணாது.)//
கமல் ரசிகர் என்பது மீண்டும் தெரியுது


//அடடா டூ லேட்.. அகில உலக அப்பாவிகள் சங்கத்தில் என்னை தலைவராக நேற்று தானே தெரிவு செய்தார்கள்.. //

நான் இன்னும் ராஜினாமாக் கடிதம் குடுக்கேலயே?
ராஜினாமாக் கடிதம் குடுத்து ராஜினாமா பண்ணினது வேற ஒருத்தர்...
நீங்கள் பிழையா புரிஞ்சு கொண்டிற்றியள் எண்டு நம்பிறன். :P//

அய்யோ.. இந்த மொக்கை மா மன்னனிடம் மாட்டிக் கொண்டேனே.. யாராவது காப்பாத்த மாட்டீங்களா?

ARV Loshan said...

VARO said...
///பிடிக்காதவர்: விஜய் என்று சொல்வேன் என்று நினைத்தால் தப்பு!
இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது. ///

athu.... ha ha ha ..//

இதென்ன வில்லன் சிரிப்பு? 'இவரை விட' என்று சொன்னேனே தவிர, இவரைப் பிடிக்கும் என்று சொல்லலையே..

=============

VARO said...
//பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்//

enakkum kamalai pidikkum thaan. aanaal michchathaiyum adukki kondu poonaal naaridum...//

உங்கள் மொக்கை ரசிகப் புத்தியைக் காட்டிவிட்டீர்களே..
நீங்கள் விஜயை ரசிக்க மட்டுமே சரி.. :)

ARV Loshan said...

Lojee said...
anna pidithathu pidikkathathu ellam solliddenga. unga pidiththa model yaaru?????????????//

model? இலங்கையிலா? சர்வதேசத்திலா? தெளிவாகக் கேட்கவும்.. ;)

================

வாகீசன் said...
// தமிழில் பாடுகிறோம் என்று கொடுமையாகக் காதுகளில் ஈயம் கரைத்து ஊற்றித் தமிழைக்கொலை செய்யும் சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.//
இவர்கள் தமிழைக் கொலைசெய்யவில்லை என்று யாராவது கூறமுடியுமா? ஆனால் அவர்கள் சிறந்த பாடகர்கள். அவர்களை உங்களுக்கு பிடிக்காதது வருத்தமே.//
கொலை செய்வதால் தான் பிடிக்கவில்லை.. ஆனால் நான் மேலே சொன்னது போல அவர்களின் ஹிந்தி பாடல்கள் பிடிக்கும்.


அதைவிட தமிழ் பாடகர்கள் பலர் ஒரு தனித்துவமில்லாமல் பாடுகிறார்களே? மதுஸ்ரீ போல தமிழைக் கொலைசெய்பவர்களும் இல்லாமல் இல்லை. //
தனித்துவம் என்று நீங்கள் சொல்லவருவது எதை?
அவர்கள் டமில் பாடகிகள்..

எனக்கும் வித்யாசாகர் மிகவும் பிடித்தவர், குறிப்பாக அவரது மெல்லிசைப் பாடலகள், கண்டேன் காதலை படத்தில் நான் மொழியறிந்தேன் என்னைக் கொள்ளைகொண்ட சமீபத்து பாடல்.//
:)

===========

வாகீசன் said...
How do you write ஸ்ரீ in unicode? I had to copy it from the article.//
Type SREE

ARV Loshan said...

அஸ்பர் said...
முரளிய பிடிக்காததுக்கான காரணம் என்ன அண்ணா??????//
முரளியைப் பிடிக்காது என்று சொல்லவில்லையே சகோ.. பிடித்த நிறையப் பேரில் அவரும் இருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வரும் மிகப் பிடித்தவர் மகாநாம தான்

==============

Anjaney said...
நீங்கள் சொன்னவர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...சுஜாதா,கமல்ஹாசன்,அசின்,ஸ்ரீதேவி,மணிரத்னம்,SPB,P.சுசீலா,ரொஷான் மகாநாம...//
நன்றி.. கமல்& ஸ்ரீதேவி பிடிக்கும் என்று முன்பே தெரியும்.. :)

ARV Loshan said...

ஆ.ஞானசேகரன் said...
//ஞானி (ஆவி ஞானியே தான்.அதாவது ஆனந்த விகடன் ஞானி), சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.//

துணிச்சலான உண்மை..... மிக்க நன்றி நண்பா.. இவர்கள் சாதிக்கமாட்டார்கள்...

==================

ஆ.ஞானசேகரன் said...
மனதில் பட்டதை பளிச்சனு சொல்லிவொட்டீர்கள் நண்பா//
நன்றி நண்பா.. :)

========================

ARV Loshan said...

மதுவதனன் மௌ. / cowboymathu said...
//இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது.//

அப்ப விஜயையும் பிடிக்காது.. நல்லது.//
யாருக்கு? ;)

//பிடிக்காதவர்: த்ரிஷா

நடத்தை//

அந்த வீடியோவைப் பார்த்து துலைச்சிட்டீங்களா..? அதுக்கு அந்தம்மா என்ன பண்ணமுடியும்? :D//
அதைப் பார்த்ததால பிடிச்சில்ல இருக்கணும்? ;)
ஹீ ஹீ. so u too? ;)


//பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.//

ஹர்பஜனும் பிடித்தவர் பிடிக்காதவர் தொடர்பதிவில பிடிக்காத அறிவிப்பாளர் எண்டு உங்களை போட்டிருக்காராம். அவரும் கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் எண்டு எழுதியிருக்கிறாராம்.. ஹீஹீ//

நல்ல காலம் எனக்கு பஞ்சாபி /ஹிந்தி வாசிக்க தெரியாது.. முடிஞ்சா ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பிவிட சொல்லுங்கோ :)

=============

தர்ஷன் said...
வித்தியாசாகர் என்றாலே எனக்கு ஞாபகம் வருவது படங்களில் கட்டாயமாய் இருக்குமே ஒரு இருகுரல் மெலடி பாடல் அதுதான்
மலரே மௌனமா ஆரம்பித்து பல படங்களில்,//
ஆமா.. அவருக்கு இப்போது மெலடி கிங் என்று பட்டமும் கொடுத்துள்ளார்களே.. :)

னால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அழகூரில் பூத்தவளே, ஆதிப் பட பாடல்கள் தவிர தான் இசையமைத்த விஜய் படங்களில் அவர் அப்படியா இசையமைத்தார். தன திறமையை வெளிக்கொணர முயற்சிக்கவில்லையே மதுர பாடல்கள் கேட்டுப்பாருங்கள்//

இல்லையே தர்ஷன்.. குருவியில் தேன் தேன்,
மதுரையில் கண்டேன் கண்டேன், இருக்கே... மறந்திட்டீங்களா?

Anonymous said...

//our age ppl, youth//

achum........ nose is irritating....
என்ன நக்கலா? யூத்தாம் யூத்... பல்லிள்ளாத கிழடுகள் யூத் என்டால், பல்லுள்ள குமருகள் நாங்கள் யாராம்...

நாச்சியாதீவு பர்வீன். said...

ஹாய் லோஷன்

உங்கள் பதிவினைப் பார்த்தேன், தமிழின் நவீன திறவுகோலாக சுஜாதாவை குறிப்பிடலாம், வைரமுத்துவை நிறையப் பேருக்கு பிடிக்கும் எனக்கும்தான், அவரது "இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல" அற்புதம், அவ்வாறே "கருவாச்சி காவியம்" நல்ல படைப்பு, எனக்கு பிடித்த கிரிகெட் வீரர்- சங்ககார, பிடிக்காதவர் ஹர்பஜன் & கங்குலி,
பிடித்த நடிகர்கள் சிவாஜி, ரஜனி, விக்ரம், சூர்யா, ........நடிகைகள் மீனா,ஜோதிகா, ப்ரியாமணி & அசின். பிடிக்காதவர்கள்.. கமல், நடிகைகளில்... அப்படி யாருமே ஞாபகத்திற்கு வரவில்லை......... நமக்குள் நிறைய முரண்பாடுகள்.. இருந்தும் நல்ல அறிப்பளர்கள் என்று நான் கருதுவது.. பி.எச்.அப்துல் ஹமீது, எழில் வேந்தன், அஸ்ரப் சிஹாப்தீன்,லோஷன்.. நீங்கதான் ஏன் தெரியுமா மிக,மிக எளிமையானவர்கள், பழக இனிமையானவர்கள்.....வாழ்த்துக்கள் லோஷன்

Unknown said...

//VARO said...
//பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்//

enakkum kamalai pidikkum thaan. aanaal michchathaiyum adukki kondu poonaal naaridum...//

உங்கள் மொக்கை ரசிகப் புத்தியைக் காட்டிவிட்டீர்களே..
நீங்கள் விஜயை ரசிக்க மட்டுமே சரி.. :) //

எங்களிற்ற இருக்கிற பிழை இதுதான் அண்ணா....
கமல எதிர்க்கிற கூட்டம் யாரெண்டா பேரரசு கூட்டம்....
அத அவங்க தெளிவாச் சொல்லலாம் தானே?
எங்களுக்கு ஒரு மனுசன் கஷ்ரப்பட்டு பாவங்களை எல்லாம் வெளிக்காட்டி அற்புதமா நடிக்கிறது பிடிக்காது, எங்களுக்கு 4 குத்துப்பாட்டு, 5 சண்டையுள்ள படம் தான் வேணும் எண்டு?

கொடுமை சேர் இது....

ஒரு மாதிரி சிவாஜி கணேசன கடைவி வரைக்கும் தமிழ் சினிமாவில கெளரவிக்கமாலயே அவர் இறந்து போனார்....
இப்பிடியே கமலுக்கும் நடந்திருமோ?

என்னைப் பொறுத்தவரை தமிழ்சினிமா கமலைக் கெளரவித்ததும், அவரைப் போற்றியதும் போதாது.

இதனால் தான் நிறைய இளைஞர்கள் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு குத்துப்பாட்டு, சண்டைக் காட்சி மட்டுமே இருக்கிற வகைப் படங்களை தெரிவுசெய்யிறாங்கள்....

Unknown said...

//னால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அழகூரில் பூத்தவளே, ஆதிப் பட பாடல்கள் தவிர தான் இசையமைத்த விஜய் படங்களில் அவர் அப்படியா இசையமைத்தார். தன திறமையை வெளிக்கொணர முயற்சிக்கவில்லையே மதுர பாடல்கள் கேட்டுப்பாருங்கள்//

கொடுமை.. விஜய் படத்தில ஒரு பாட்டுக்கு மேல மென்மையான பாடல்கள் வந்தா அது அதிசயமெல்லோ?

கில்லிப் பாடல்கள் மென்மையானவை என்றில்லை என்றாலும் அந்த இசை டப்பாங்குத்து இல்லை.... அந்த வேகமான இசையிலும் ஒரு மென்மை இருந்தது....

(எனக்கு முதல் தெரிவு ரஹ்மான் தான் எண்டாலும் வித்யாசாகர விட்டுக்குடுக்க மாட்டன்....)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//ஹீ ஹீ.. 'அப்பிடியான' மேட்டர்னா இப்போது பசுப்பையன் மது தான் ஞாபகம் வருகிறார்.. அப்பிடித்தானே?
இலங்கையின் டொக்டர்.மாத்ருபூதம் மது வாழ்க.. ;)
//

ஙொய்யாலே... என்னாதிது?.. :-))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எழுதிவிட்டேன் நண்பரே அழைத்ததற்கு மிகவும் நன்றி

KANA VARO said...

LOSHAN said...
// மொக்கை ரசிகப் புத்தியைக் காட்டிவிட்டீர்களே..
நீங்கள் விஜயை ரசிக்க மட்டுமே சரி.. :)//

நான் கமலை பிடிக்காது என்று சொல்லலையே...
நாணயம் என்றால் ரெண்டு பக்கத்தையும் பார்க்க தான் வேணும்
ஆனாலும் உங்களுக்கு விஜய்யை அறவே பிடிக்காதெண்டு தெரியும் தானே... (ஆர்த்தி அக்காடையும் சில விஷயம் கேட்டு தெரிந்து கொண்டேன்)

smith said...

nee eppo sethupova?

ARV Loshan said...

முகிலினி said...
//our age ppl, youth//

achum........ nose is irritating....
என்ன நக்கலா? யூத்தாம் யூத்... பல்லிள்ளாத கிழடுகள் யூத் என்டால், பல்லுள்ள குமருகள் நாங்கள் யாராம்...//

ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்.. இதெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு..
குமராம் குமர்.. வாயில் நல்லா வருது.. ஆனால் நான் சைலன்ட். என் சார்பாக என் தம்பி புல்லட் விரைவில் பதில் கொடுப்பான்..

=====================

ARV Loshan said...

நாச்சியாதீவு பர்வீன். said...
ஹாய் லோஷன்

உங்கள் பதிவினைப் பார்த்தேன், தமிழின் நவீன திறவுகோலாக சுஜாதாவை குறிப்பிடலாம், வைரமுத்துவை நிறையப் பேருக்கு பிடிக்கும் எனக்கும்தான், அவரது "இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல" அற்புதம், அவ்வாறே "கருவாச்சி காவியம்" நல்ல படைப்பு, எனக்கு பிடித்த கிரிகெட் வீரர்- சங்ககார, பிடிக்காதவர் ஹர்பஜன் & கங்குலி,//

கங்குலியை எனக்கும் பிடிக்காவிட்டாலும், அவர் ஒரு தலைவராக அணியை முன்னேற்றிய விதம்,தன்னம்பிக்கை அவரிடம் இருந்த ஒரு விதமான மதர்ப்பு என்னை மிகவும் கவர்ந்திருந்தன..

பிடித்த நடிகர்கள் சிவாஜி, ரஜனி, விக்ரம், சூர்யா, ........நடிகைகள் மீனா,ஜோதிகா, ப்ரியாமணி & அசின். பிடிக்காதவர்கள்.. கமல், நடிகைகளில்... அப்படி யாருமே ஞாபகத்திற்கு வரவில்லை.........//

எல்லாம் சரி.. ஆனால் ப்ரியாமணி??அவரை இப்போது பிடிப்பதில்லை.. பார்த்தாலே ஒருவித எரிச்சலும் சலிப்பும். சொந்தக்குரலில் பருத்திவீரனுக்கு பேசுவது காரணமாக இருக்கலாம்..

நமக்குள் நிறைய முரண்பாடுகள்.. இருந்தும் நல்ல அறிப்பளர்கள் என்று நான் கருதுவது.. பி.எச்.அப்துல் ஹமீது, எழில் வேந்தன், அஸ்ரப் சிஹாப்தீன்,லோஷன்.. நீங்கதான் ஏன் தெரியுமா மிக,மிக எளிமையானவர்கள், பழக இனிமையானவர்கள்.....வாழ்த்துக்கள் லோஷன்//

நன்றி பர்வீன் உங்கள் அன்புக்கு.. :)
நீங்கள் குறிப்பிட்ட ஏனைய பெரியவர்கள் மூவருடனும் பழகும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.. மிக பண்பானவர்கள்..

ARV Loshan said...

கனககோபி said...
எங்களிற்ற இருக்கிற பிழை இதுதான் அண்ணா....
கமல எதிர்க்கிற கூட்டம் யாரெண்டா பேரரசு கூட்டம்....
அத அவங்க தெளிவாச் சொல்லலாம் தானே?
எங்களுக்கு ஒரு மனுசன் கஷ்ரப்பட்டு பாவங்களை எல்லாம் வெளிக்காட்டி அற்புதமா நடிக்கிறது பிடிக்காது, எங்களுக்கு 4 குத்துப்பாட்டு, 5 சண்டையுள்ள படம் தான் வேணும் எண்டு?//

ம்ம்.. திருத்த முடியாது.. சரி விடுவோம்.. ரசனை வேறுபாடு என்று நினைத்துக் கொள்வோம்..

கொடுமை சேர் இது....
ஒரு மாதிரி சிவாஜி கணேசன கடைவி வரைக்கும் தமிழ் சினிமாவில கெளரவிக்கமாலயே அவர் இறந்து போனார்....
இப்பிடியே கமலுக்கும் நடந்திருமோ?

என்னைப் பொறுத்தவரை தமிழ்சினிமா கமலைக் கெளரவித்ததும், அவரைப் போற்றியதும் போதாது.//

இல்லை கோபி.. சிவாஜியை விடக் கமலை கொஞ்சம் கவனிக்கிறார்கள்.
கமல் ஒரு பொக்கிஷம் எனும் உணர்வு சமூகத்திலும் ரசிகர் மத்தியிலும் தானாக ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழனின் பொதுவான குணமே, ஒருவன் இருக்கும் பொது புறக்கணிப்பதும் இறந்தபின்னர் தலையில் தூக்கி போற்றுவதும் தானே..

இதனால் தான் நிறைய இளைஞர்கள் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு குத்துப்பாட்டு, சண்டைக் காட்சி மட்டுமே இருக்கிற வகைப் படங்களை தெரிவுசெய்யிறாங்கள்....//

அது பட்டங்களுக்கும், பணத்துக்கும்,பிரபலத்துக்கும் பின்னர் நாற்காலிக்குமான குறுக்குவழி தானே..



கனககோபி said...
//னால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அழகூரில் பூத்தவளே, ஆதிப் பட பாடல்கள் தவிர தான் இசையமைத்த விஜய் படங்களில் அவர் அப்படியா இசையமைத்தார். தன திறமையை வெளிக்கொணர முயற்சிக்கவில்லையே மதுர பாடல்கள் கேட்டுப்பாருங்கள்//

கொடுமை.. விஜய் படத்தில ஒரு பாட்டுக்கு மேல மென்மையான பாடல்கள் வந்தா அது அதிசயமெல்லோ?

கில்லிப் பாடல்கள் மென்மையானவை என்றில்லை என்றாலும் அந்த இசை டப்பாங்குத்து இல்லை.... அந்த வேகமான இசையிலும் ஒரு மென்மை இருந்தது....

(எனக்கு முதல் தெரிவு ரஹ்மான் தான் எண்டாலும் வித்யாசாகர விட்டுக்குடுக்க மாட்டன்....)//

வித்யாசாகர் இயக்குனரிடம் வலிந்து கெஞ்சி தன விருப்பமாக ஒரு மெல்லிய இசைப் பாடலைப் புகுத்துவாராம்.. அவரே சொன்னார்..

கில்லி படப் பாடல்கள் எனக்கும் பிடித்தன.. காரணம் அப்பிடிப் போடு தவிர ஏனைய எல்லாப் பாடல்களும் கதையோடு இயைந்து போயிருந்தன,,

ARV Loshan said...

மதுவதனன் மௌ. / cowboymathu said...
//ஹீ ஹீ.. 'அப்பிடியான' மேட்டர்னா இப்போது பசுப்பையன் மது தான் ஞாபகம் வருகிறார்.. அப்பிடித்தானே?
இலங்கையின் டொக்டர்.மாத்ருபூதம் மது வாழ்க.. ;)
//

ஙொய்யாலே... என்னாதிது?.. :-))//
பொதுவா மக்கள்(பதிவர்கள்) பேசிக் கொள்றாங்க.. அதை சொன்னேன்.. அதுசரி பாகம் 4 எப்போ?

================

SUREஷ் (பழனியிலிருந்து) said...
எழுதிவிட்டேன் நண்பரே அழைத்ததற்கு மிகவும் நன்றி//

ஆமாம்.. பார்த்தேன்.. ரசித்தேன்.. பின்னூட்டமும் போட்டேன்..

ARV Loshan said...

VARO said...
LOSHAN said...
// மொக்கை ரசிகப் புத்தியைக் காட்டிவிட்டீர்களே..
நீங்கள் விஜயை ரசிக்க மட்டுமே சரி.. :)//

நான் கமலை பிடிக்காது என்று சொல்லலையே...
நாணயம் என்றால் ரெண்டு பக்கத்தையும் பார்க்க தான் வேணும் //
அது நாணயத்துக்கு போய் பாருங்கள்.. ஒரு நடிகனாக கமலை பாருங்கள்.. குறைகள் சொன்னால் கமலும் ஏற்றுக் கொள்வார்.. தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தால் மன்னிக்கவும் அது ஒரு ரசிகனுக்கு இல்லை விமர்சகனுக்கோ அழகில்லை..
அது தான் நான் சொல்கிறேன்..
அப்படி இரு பக்கமும் பார்க்கப் போனால் கமலுக்கு மட்டுமல்ல, வரோவுக்கும் நாறிவிடும் என்பது தான் பெரியோர் சொல்லும் உண்மை..

ஆனாலும் உங்களுக்கு விஜய்யை அறவே பிடிக்காதெண்டு தெரியும் தானே... (ஆர்த்தி அக்காடையும் சில விஷயம் கேட்டு தெரிந்து கொண்டேன்)//
இல்லை நீங்கள் தெரிந்து கொண்ட இதுவும் தப்பு..
எனக்கு விஜய் பிடிக்காது என்று நான் சொல்லவில்லை.. பிடிக்கும்படி அவர் நடித்தால் நல்லா இருக்குமென்று தான் சொல்கிறேன்.. முன்பும் அப்படித் தான் சொல்லி இருந்தேன்..

ARV Loshan said...

smith said...
nee eppo sethupova?

இப்போதைக்கு அப்படியொரு எண்ணம் இல்லை.. அது சரி நீங்கள் எப்போது? சொல்லி அனுப்புங்கள்.. சொந்தப் பெயரையும் சொல்லுங்கள். ;)

Ananth said...

//பிடித்தவர் : அசின்

இயல்பான அழகு, ஆபாசமில்லாத நடிப்பு,

அது போன வருஷம் :D
காமடி பண்ணாதிங்க பாஸ் ஹீ ஹீ
அசின்ட latest படங்கள் பாக்கலயா ?
மும்பைல நைட்டியோட சுத்துறாங்கலாம்.
மனச தேத்திகுங்க பாஸ்.. :P

ம.தி.சுதா said...

/////பிடித்தவர் : அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி

பின்னிருவரின் திருமணத்தின் பின்னதான ஓய்வின் பின் அசின் தான் என்னைக் குத்தகை எடுத்துள்ளார்.
மூவரதும் இயல்பான அழகு, ஆபாசமில்லாத நடிப்பு, பாத்திரமுணர்ந்த உணர்வு வெளிப்பாடுகள் இவைமட்டுமன்றி, மூவரின் கண்களும், உதடுகளும் அவர்களது சமகாலத்தவரை பின்தள்ளிவிட்டனர்.////
பதிவு நல்லாயிருக்கு சகோதரா... மேலே சொன்ன விசயத்தில் ஒர உறுத்தல் சிறீதேவி ஒகே.. மற்ற இருவருக்கும் உடல்வாகு விட்டுக் கொடுக்கவில்லை எனறே நினைக்கிறேன்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner