November 16, 2009

இலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்கப்போவது யார்?

இன்று (இதைப் பதிவேற்றும்போது நள்ளிரவு தாண்டிவிட்டதே..) அஹ்மேதாபாத் மைதானத்தில் ஆரம்பமாக உள்ள இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் பற்றிய என் முன்கூட்டிய (ரொம்பவே முன்கூட்டிய )ஆய்வு சனியன்று வெளியான இருக்கிறம் இதழில் வெளியாகி இருக்கிறது.

படங்களைக் கிளிக்கி கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்..


வாசிச்சீங்களா? இந்திய அணி அறிவிக்க முன்பாகவும், இலங்கை அணி இந்தியாவில் கால் பாதிக்கும் முன்பாகவும் ஆராய்ந்து,ஊகித்து எழுதப்பட்ட கட்டுரை இது..
அச்சுக்கு முன்கூட்டியே அனுப்பவேண்டும் என்பதால் அவர்கள் அவசரத்துக்கு நான் எழுதியது..

எனது ஊகங்கள் அனேகமாக பொய்க்கவில்லை.
எனினும் இடையில் நிகழ்ந்த சில விஷயங்கள், சில முக்கிய தகவல்களோடும் மேலும் புதிய விஷயங்களோடும் காலையில் போட்டி ஆரம்பிக்குமுன் விரிவான அலசல்+ஆய்வு பதிவு வரும்..

அழகாக பக்க வடிவமைப்பு செய்துள்ள 'இருக்கிறம்' குழுவினருக்கும், இதனைப் பதிவேற்றும் விதத்தில் அழகாக மாற்றும் உத்தி சொல்லித் தந்த நண்பர் ஆதிரைக்கும் நன்றிகள்.


9 comments:

Atchuthan Srirangan said...

லோஷன் அண்ணா மிக நல்ல பதிவு, இலங்கை அணிக்கு எனது வாழ்துக்கள்.

balavasakan said...

ஐயோ அண்ணா விக்கிற கொஞ்ச புத்தகத்ததுக்கும் ஆப்பா.......இங்க படிச்சா யார் வாங்குவாங்களாம்.........

தர்ஷன் said...

அருமையாக இருக்கிறது
எல்லாம் சரி இலங்கையால் இந்திய மண்ணில் வெல்ல முடியுமென்பதில்தான் ஏனோ நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.

Unknown said...

அதிர்ஷ்ரவசமாக இரண்டாம் இடத்திற்கு வந்தமை என்பது கொங்சம் அதிகம் அண்ணா...
இலங்கை வெளிநாடுகளில் ரெஸ்ற் போட்டிகள் விளையாடாவிட்டாலும் இலங்கையில் நடந்த போட்டிகளில் சிறப்பாகவே விளையாடினார்கள்...
கடந்த ஆண்டு இந்தியாவை 2-1 என்று சுருட்டியது குறிப்பிடத்தக்கது...
இலங்கை அணி இந்தியாவில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்....

ஹேரத் விளையாட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்...
இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர்களில் நல்ல form இல் இருப்பது ஹேரத் தான்....

கண்டம்பிக்கு இடம் கிடைக்குமா?

டில்லி
பரணவிதான
சங்கா
மஹேல
சமர
பிரசன்ன/கெளசால்
அன்ஜலோ
குலா
திலின
ஹேரத்
முரளி

ஆதிரை said...

//இதனைப் பதிவேற்றும் விதத்தில் அழகாக மாற்றும் உத்தி சொல்லித் தந்த நண்பர் ஆதிரைக்கும் நன்றிகள்.

இதற்குப் பரிசெல்லாம் தந்து உற்சாகப்படுத்திய(??) அண்ணனுக்கும் நன்றிகள்

வந்தியத்தேவன் said...

டெஸ்ட் மட்ச் பார்க்கின்ற சகிப்புத் தன்மை எனக்கு இப்போது இல்லை. என்னைப்போன்ற துடிப்பானவர்களுக்கு 20 - 20தான் சரி ஹிஹிஹி.

இலங்கையின் வருங்கால கிரிக்கெட் தெரிவாளர் கனககோபியின் தெரிவுதான் இலங்கை அணியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Unknown said...

// வந்தியத்தேவன் said...
டெஸ்ட் மட்ச் பார்க்கின்ற சகிப்புத் தன்மை எனக்கு இப்போது இல்லை. என்னைப்போன்ற துடிப்பானவர்களுக்கு 20 - 20தான் சரி ஹிஹிஹி.

இலங்கையின் வருங்கால கிரிக்கெட் தெரிவாளர் கனககோபியின் தெரிவுதான் இலங்கை அணியாக இருக்கும் என நினைக்கின்றேன்.//

என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இருபதுக்கு இருபது விளங்குதில்ல...

நான் தேர்வாளரா வாறதுக்கு இன்னும் 50 வருசமாவது காத்திருக்கோணும்...
(அப்ப எனக்கு 56 வயசா இருக்கும்... :P)

யோ வொய்ஸ் (யோகா) said...

////வந்தியத்தேவன்

டெஸ்ட் மட்ச் பார்க்கின்ற சகிப்புத் தன்மை எனக்கு இப்போது இல்லை. என்னைப்போன்ற துடிப்பானவர்களுக்கு 20 - 20தான் சரி ஹிஹிஹி..///

மனுஷன் என்ன 15வயசுன்னு நினைச்சிட்டு இருக்காரோ? யாராவது கும்ம வாறீங்களா?

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner