
நீண்ட கால இளமைத் தேடலின் இனிமையான முடிவாக இந்த சர்க்கரை செய்தி.
இலங்கையின் இனிய பிரபல பதிவருக்கு மங்கல செய்தி வந்துள்ளது.வெகுவிரைவில் இதன் முழு முற்று தெரியவரும்.
அண்ணலுக்கும் அண்ணல் தேடிப் பார்த்த அந்த வங்கியில் பணிபுரியும் அழகிய மங்கைக்கும் இடையே மனப் பொருத்தம் உண்டாகினாலும், இரு வீட்டாரும் இன்னும் முழுமையாக பேச்சுக்களை முடிக்காததால் அண்ணலின் மூன்று முடிப்புக்கான தேதி இன்னும் முற்றாகவில்லை.
திருமணம் வெளிநாட்டில் என்றால் தனக்கு நெருங்கிய சில நண்பருக்கு பயணசீட்டு எடுத்து தருவார் என்று பட்சிகள் கூறுகின்றன.
இந்தப் பிரபல பதிவர் யார்?
இந்த டும் டும் டும் தகவலை எனக்கு தந்தவருக்கு வாக்கு கொடுத்ததற்கு இணங்க இவரது பெயரையோ, ஆளைக் கண்டுபிடிக்கக் கூடிய இலகுவான ஊகிப்புக்களையோ தராமல் சில சவாலான தரவுகள் தருகிறேன்.. முடிந்தால் கண்டுபிடித்துப் பின்னூட்டமிடுங்கள்..
தற்போதைய இருப்பிடம் - இலங்கை
வெகுவிரைவில் இறக்கை முளைத்துப் பறக்க இருக்கிறார்.
எந்நேரமும் இணையத்தில் இருக்கும் இவர் பழகுதற்கு இனியவர்.
தமிழிலும்,இசையிலும்,திரையிலும் தீராப் பற்று..
கலைகள் பல தெரிந்தவர்..அரசவம்சத் தொடர்புண்டு.
மிருதங்க சக்கரவர்த்தி..
பிஞ்சு மனசும், சிநேக சுபாவம், நகைச்சுவை நாட்டம், நாலா பக்கமும் நண்பர்கள்,
நயன்,நமீ என ரசிகர் மன்ற உடன்பிறப்புக்கள்..
மூஞ்சிப் புத்தகம்,மூழ்க வைக்கும் ட்விட்டர்,ஒர்க்குட் என்று ஒன்றுவிடாமல் அத்தனையிலும் சஞ்சரிப்பவர்..
சகலகலாவல்லவர்..
கணினியில் கரை கண்டவர்..
பின்னூட்ட சிகாமணிகளில் ஒருவர்..
இவரது தளமும் அலெக்சாவில் பிரபலமான மூன்று லட்சத்துக்குள் உள்ளது..
சாப்பாட்டுக்கு முன்னர் விருந்தகங்களில் அருந்தக்கூடியதற்கும் இவருக்கும் தொடர்பொன்று உண்டு..
நெருங்கிப் பழகியோருக்கு இவரைக் கடுகதியோடும் தொடர்புபடுத்துவதில் தனிசுகமுண்டு.
பல்துறை வித்தகர் இவருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்களை முதலில் சொல்வதில் எனக்கும் பெருமகிழ்ச்சி..
முந்தி இந்தத் தகவலையும்,இன்று பகல் வேளையில் தனது பிறந்தநாள் விருந்துப் பந்தியும் பரிமாறி சென்ற நண்பன் வந்திக்கு நன்றிகள்..
பி.கு - ஒரு சின்ன ஐடியா எங்கள் இரண்டாவது பதிவர் சந்திப்புக் காலகட்டத்திலே திருமணமும் நடந்தால் இன்னும் கொஞ்சம் களைகட்டும்.. ஜமாய்த்துவிடலாம்..
30 comments:
இவ்வளவு கடுகதியில் ஒரு பதிவா? எனக்கு அவரைத் தெரியும் என்பதால் சுவாரசியம் குறையக்கூடாது என்பதற்காக பதில் போடவில்லை
என்னால் ஊகிக்க முடியவில்லை..
பதிவுலகத்திற்கு புதியவன் என்பதால் நிறையப் பேரின் அந்தரங்கங்கள் தெரியாது...
என்றாலும் அந்தப் பதிவர் அண்ணாவுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்....
தகவலை அளித்த உங்களுக்கும் நன்றிகள் அண்ணா...
bavaananthan.... bavan
தரவுகள் போதாது கண்டுபிடிக்க, மிகவும் குஷ்டமாக உள்ளது...
// ஒரு சின்ன ஐடியா //
திருமணம் வெளிநாட்டில் என்றால் பதிவர் சந்திப்பை திருமணத்தில் வைக்கலாம்.
யாரேன்று புரியல்ல..... ஆனாலும் டும் டும் டும் இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்
ததகவலுக்கு நன்றி லோசன் அண்ணா
பிரபல பதிவர் வந்தியத்தேவன் தான் அது.
கடுகதி வடை போச்சே...
வந்திக்கு வாழ்த்துக்கள்
மு.மயூரன்
வேறுயார்.. சாட்சாட் வந்தியத்தேவன்தான்..
வாழ்த்துக்கள் வந்தியண்ணா..
(யாரப்பா அந்த பாவப்பட்ட அண்ணி)
நமிதாவும் நயனும் பாவமப்பா.. உங்களை missed பண்ணப்போறாங்களே..
@வந்தியத்தேவன்
//இவ்வளவு கடுகதியில் ஒரு பதிவா? எனக்கு அவரைத் தெரியும் என்பதால் சுவாரசியம் குறையக்கூடாது என்பதற்காக பதில் போடவில்லை//
இதுதான் ஓவர் குசும்பு...
அப்போ அடுத்த பதிவர் சந்திப்பு வெளிநாட்டிலா.. வந்தியண்ணாவிடம் கேட்டு நமக்கும் ஒரு air ticket வாங்கிக்கொள்ளவேண்டும்
வந்தி அண்ணா என்று நினைக்கிறேன்.... ம்ம்ம்ம்ம்..... அவரேதான். முன்கூட்டிய வாழ்த்துக்கள்.....
யாரென்று தெரியவில்லை. ஆனால் ஊகித்த இருவரில் ஒருவர்தான். டும் டும் டும் இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்
//வந்தியத்தேவன் said...
இவ்வளவு கடுகதியில் ஒரு பதிவா? எனக்கு அவரைத் தெரியும் என்பதால் சுவாரசியம் குறையக்கூடாது என்பதற்காக பதில் போடவில்லை//
இந்த நக்கல் தானே வேண்டாங்கிறது...
பர்த்டே பார்ட்டி இனும் வைக்கல கவனம்...
//Blogger மருதமூரான். said...
bavaananthan.... bavan//
ஐ நம்மட டுமிலுக்கா.....
ரமா
///சாப்பாட்டுக்கு முன்னர் விருந்தகங்களில் அருந்தக்கூடியதற்கும் இவருக்கும் தொடர்பொன்று உண்டு///
இது ஒன்று போதும் கண்டு பிடிக்க.ஹட் அண்ட் சவர்
சூப் புகழ் வந்தியண்ணா தான்.
இதை நீங்க அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லேக்கையே நான் கண்டு பிடிச்சிட்டன்
சரி சரி.. அவருக்கு தொலைபேசியில முன்கூட்டிய வாழ்த்துக்கள் தெரிவிச்சாச்சு... :))
வாழ்த்துக்கள் வந்தி
எங்களுக்கு தொந்தி விழும் 'டும் டும்' பார்ட்டி கிடைக்குமா :)
வாழ்த்துக்கள் வந்தியாரே
இல்லை இல்லை... புல்லட்டுக்கு வாழ்த்துக்கள்
யாராக இருந்தாலும் என்ன விதி வலியது அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும், துக்கம் தொண்டையை அடைக்குது
//திருமணம் வெளிநாட்டில் என்றால் தனக்கு நெருங்கிய சில நண்பருக்கு பயணசீட்டு எடுத்து தருவார் என்று பட்சிகள் கூறுகின்றன.//
இப்படியெல்லாம் பீதியைக் கிளப்பினால் அவர் திருமணத்தை மறுபரிசீலனை செய்துவிடப் போகிறார்
:)
வந்திக்கு வாழ்த்துகள் !
பந்திக்கு நாங்களும் முந்தி வரவேணும்,,,, எனவே பறக்க எங்களுக்கும் சிறகு வேணும் ஆமா அதுதான் டிக்கெட் தந்தால் நாங்களும் வருவோமில்ல.....
ஓகே ஓகே நடக்கட்டும் டண்டானா டர்ணா.......
பதிவு போட்டவுடனேயே அவசரப்பட்டவடியால்.... இது பெரும்பாலும் வந்தி அண்ணா மாதிரிதான் எனக்கு தெரியுது. யாரா இருந்தா என்ன? ஓசியா சாப்பாடு கிடைக்கும்தானே.???? சோ கலியாணம் இங்கேயே நடாத்தா வேண்டுகிறோம்.
ஹாய் லோசன்
ஒரு சோகமான சங்கதியை எப்படித்தான் உங்களால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடிகிறதோ..இருந்தும் வந்திக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இஞ்ச, சகோதரங்களுக்க குழப்பத்தை கொண்டுவராதீங்கோ..யாருக்கு கலியாணம். வந்தி அண்ணாவுக்கா இல்லாட்டி புல்லட் அண்ணாவுக்கா..
உது மட்டும் உவன் போண்டி அண்ணாவாக மட்டும் இருக்கட்டும், அவன் செத்தான்... நடுவானத்தில பிளேனை சுட்டு விழுத்திப்போடுவம்.. ஓம்... சொல்லிப்போட்டன்...
பாசமலர் அது இது என்டு போல் எனக்கு சொல்லாமல் கலியாணம் கட்டப்போறானாமே... உவனுக்கு இப்ப என்ன வயசு போட்டுது என்டு கலியாணம் கட்ட நிக்கிறான்... இன்னும் ஒரு 5 வருசத்தால தான் உவனுக்கு கலியாணம்.. சொல்லிப்போட்டன்... அதுக்கு முதல் ஏதும் கூத்து நடந்தால் இருக்கு.. பாசமலர்,,, பாம்மலராக சீரி எழுந்திடுவாள்.
//கானா பிரபா
யாராக இருந்தாலும் என்ன விதி வலியது அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும், துக்கம் தொண்டையை அடைக்குது//
அட பாவியளே... என்னமா யோசிக்கிறியள்... புல்லரிக்குது... (பிரகாஷ்ராஜ் ஸ்டைலில் படிக்கவும்)
//நாச்சியாதீவு பர்வீன்.
ஹாய் லோசன்
ஒரு சோகமான சங்கதியை எப்படித்தான் உங்களால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடிகிறதோ..இருந்தும் வந்திக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.//
இது வேறயே...
லோஷன் அண்ணா, அப்படியே சங்கதி.. உங்களின்ட அனுபவத்தை வச்சு சொல்லுங்கோ... உண்மையா இவை இரண்டு பேர் சொன்ன மாதிரி தானே கலியாணம் என்டால்?
அப்படி என்டால் ஒரு நாலு பேரை என்டாலும் கட்டி பேயாட்டம் ஆடப்போறன்... வோஹோ........
நம்மளுக்க ஒண்ணுமே புரியல.. நல்லதே நடந்திருந்தால் இனியாவது எனக்கு அந்த ஆளை அடையாளம் காட்டுங்க...
இவ்வளவ நாள் கடந்த பதிவுக்கு வாக்கிட்ட கூலிக்காவது சொல்லுங்கோ....
Post a Comment